ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

இளங்கோவன் கனவு

திருவாரூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது,   ‘’தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கொடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் நிற்பார்கள் என்று கலைஞர் சொல்லிவருகிறார்.   எங்களுக்கு 234 தொகுதிகள் வேண்டாம்.  
திமுகவினர் மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.   மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கக்கூடாதா?

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கலைஞர் சொல்லிவருகிறார்.  இது போல தமிழில் எங்களுக்கு
பேசத்தெரியாது.   ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று சொல்லுவோம்.

ஐவர் குழு பேசிக்கொண்டிருக்கிறது.   நல்லபடியாக முடியும்  என்று நம்புகிறோம். 
தமிழக வேலைவாய்ப்புகளில் ஒருவர் கூட காங்கிரஸ்காரர் கிடையாது.   ஓட்டுக்கு மட்டுமே காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  இதற்கு காரணம் காங்கிரஸ் காரனே காங்கிரஸை கண்டுகொள்ளாததுதான்.
எலும்புதுண்டால் போட்டால் வாலாட்டும் காங்கிரஸூக்குள் இருக்கிறார்கள்.  தன்மானம் காக்கப்படும் அளவில்சீட்டுகள் வழங்கப்படவேண்டும்’’என்று கூறினார்.
        அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னாலும் சொன்னார். ஆளாளுக்கு கன்னாபின்னானு கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள்.விஜயகாந்த்,விஜய் இப்போ காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே முதல்வர் கனவுதான் காண்கிறார்கள்.
        234தொகுதி கொடுத்தால் மட்டும் நின்றுவிடுவார்களா? வேட்பாளர்கள் 234பேர்களுக்கு என்ன செய்வார்கள். அதன் பின் ஓட்டு போடவேறு ஆட்கள் வேண்டுமே. 
        தமிழகவேலைவாய்ப்புகளில் ஒருவர்கூட காங்கிரஸ்காரன் இல்லையாம் .இந்தக் கவலை தேவையா? தமிழக காங்’கில் அனைவரும் தலைவர்களாகவும் ,அல்லக்கைகளாகவும் இருக்கையில் வேலைபார்க்கயார் தயார்? என்னவோ சாதி ஒதுக்கீட்டில் கிடைக்காதத் தலைவர் போல் பெசுகிறார்.
        தமிழக மக்களின் இப்போதைய ஆசையே காங்கிரசை தி. மு.க, கழற்றிவிட்டு அவர்கள் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிட்டு பா.ஜ.க வைவிட கேவலமாகத் தோற்க வேண்டும் என்பதுதான். திராவிடக்கட்சிகள் தோளில் ஏறி ஓட்டு வாங்கிவிட்டு இந்த தெனாவட்டு தேவையா?

கசாப் எம்.பி,

சிறை பதிவேட்டின்படி அஜ்மல் கசாபுக்கு 23 வயதாகிறது. அவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள ஃபரித்கோட். கல்வித் தகுதி 4 ம் வகுப்பு. "கசாப் குறித்து சிறையில் எங்களிடம் உள்ள தகவலையும், அவரிடம் நேரில் பேசி பெற்றத் தகவலையும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியிடம் அளித்துள்ளோம் என்று ஆர்தர் சிறை அதிகாரி ஒருவர் கூறினார். 
                     தூக்கில் போட வேண்டியவனை வைத்து அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையில் பாகிஸ்தான்காரனைக் கணெக்கெடுக்க வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது.அதுவும் நம்நாட்டில் தீவிரவாதம் செய்யவந்தவன். நூற்றுக்குமேற்பட்டவர்களை கொன்று குவித்தவன் .அவனை நம் நாட்டு மக்கள் தொகையில் சேர்த்து கணக்கெடுக்க இவர்களுக்கு பைத்தியமா பிடித்துள்ளது. தீவிரவாதிகள் பட்டியல் கணக்கில் அல்லவோ அவனை சேர்க்க வேண்டும். 
                  நம்மவர்கள் அவனுக்கு போகிறபோக்கில் குடும்ப அட்டை,வாக்களர் அட்டையும் தந்துவிடுவார்கள்.
                 கசாப் வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டிகூட போடுவான். அவனுக்கு ஓட்டு போட வும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.வாழ்க இந்திய இறையாண்மை.

சனி, 26 பிப்ரவரி, 2011

இரு நாட்டு அரசுகளின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள் -

இலங்கைப்படையினரால் தமிழகமீனவர்கள் கொல்லப்படுவது,சிறைபிடிக்கப் படுவதில் சில உண்மைகள் மறைந்திருக்கிறது.தமிழக,ஈழ மீனவர்கள்இடையில்மோதலையும், அதன் மூலம் இருநாட்டுத் தமிழர்களிடையேயும் சண்டையும் ,வெறுப்பையும் உருவாக்கவே இதை இந்திய,இலங்கை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக செய்திகள் உலவ ஆரம்பித்துள்ளது.
தமிழகமீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படும் போது கோபமடையாத கனிமொழிக்கு அத்துமீறிய மீனவர்கள் மக்களால் பிடிக்கப்படும் போது ஆவேசம் வருவது காரணமில்லாமல் இருக்க முடியுமா?

கடந்த வாரம் பருத்தித்துறை முனைப் பகுதியில் கடற்கரைக்கு மிக அண்மையில் இழுவைப் படகுகளில் (ட்ரோலர்) வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டு இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அடுத்த நாளில் மாதகல் கடற்பரப்பில் வைத்துப் பிடிக்கப்பட்ட 24 மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளுக்கும் கூட இதுவே நடந்தது.

தமிழ் நாட்டில் கொந்தளிப்பு

மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழக முதல்வரின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது கனிமொழி உட்பட 2,000 பேர் கைதாகினர். இந்தப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகப் பாரதீய ஜனதாக் கட்சியினரும் ஒரு பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் புகுந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பது தொடர்பாகவும் இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து நாசமாக்கி விட்டுச் செல்வது தொடர்பாகவும் இலங்கை மீனவர்கள் நீண்ட காலமாகவே தங்கள் முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் அண்மையில் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறும் முறைப்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்த வந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்விடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்பிரச்சினை தொடர்பாக முறைப்பாடும் செய்திருந்தார்.

சட்டத்தைக் கையில் எடுத்த மீனவர்கள்

இத்தகைய அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த இந்தியாவோ, இலங்கையோ பயனுள்ள நடவடிக்கைகள் எதையும் எடுக்காத நிலையில் இலங்கை மீனவர்கள் தாங்களாகவே நடவடிக்கையில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்தபோர் காரணமாகவும் கடற்படையினரின் கொலைவெறி நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையில் வடக்கு, கிழக்கு வாழ் மீனவர்கள் கடலில் இறங்க முடியாத நிலைமையே நிலவியது. இதன் காரணமாக வறுமையிலும் துன்பத்திலும் உழன்றனர். வறுமை தாங்காது கடலில் இறங்கியோரில் பலர் சடலங்களாகக் கரையொதுங்கியதையும் நாம் மறந்துவிட முடியாது. தற்சமயம் எமது மீனவர்கள் தொண்டு நிறுவனங்களின் உதவி மூலமும் வங்கிக் கடன்கள் பெற்றுத் தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் நிலையிலும் அவர்களின் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. இப்படியான ஒரு நிலையில் எமது மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதும் சேதமாக்கப்படுவதும் அவர்களின் எதிர்காலத்தையே இருளாக்கிவிடும்.இப்படியான ஒரு துன்ப நிலையிலேயே அவர்கள் தவிர்க்க முடியாதபடி சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்தனர்.தாங்களாகவே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இலங்கையில் சில மீன்பிடி முறைகளுக்குத்தடை

இலங்கைக் கடற்பரப்பில் இழுவைப் படகுகளின் பாவனையும் சில குறிப்பிட்ட வகை வலைகளின் பாவனையும் தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தகைய மீன்பிடி முறைமூலம் மன்னார் வளைகுடாவில் காணப்படும் சில அரிய மீன் வகைகளும், மீன்குஞ்சுகளும் கூட அழிவடைந்து எதிர்காலத்தில் இப்பகுதியின் மீன் வளமே அழிந்து விடும் என்பதாலேயே அவை தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள பவளப் பாறைகள் சேதமாக்கப்படுவது மீன்களின் உணவு உறை விடங்களையே நிர்மூலமாக்கும் செயலாகும். இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படும் இருமடி வலைகள் பவளப் பாறைகளையும் சேதப்படுத்துகின்றன. சேதுசமுத்திரத் திட்டத்திற்கே சுற்றுச் சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பதை நினைவு கூரலாம்.இலங்கை மீனவர்களின் சொந்த வாழ்வாதார அடிப்படையிலும் இக்கடல் பகுதியின் வளம் காப்பாற்றப்படும் வகையிலும் இலங்கை, இந்திய அரசுகள் அக்கறை செலுத்தாத நிலையில் இலங்கை மீனவர்கள் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்.ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதி யின் தலைமையிலான திராவிடர் முன்னேற்றக் கழகமும், இந்திய மத்திய அரசும் ஏதோ நடக்கக் கூடாத ஒரு பெருங்கொடுமை நடந்துவிட்டதாகக் கொதிப்படைந்துள்ளனர்.சென்னையில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம், தூதரக முற்றுகை 2,000 பேர் கைது என ஒரு பெரும் திருவிழாவே நடத்தப்பட்டது. அதேவேளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பொதுமக்களும் மீனவர்களும் சட்டத்தைக் கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதற்கும் ஒருபடி மேலே போய் இலங்கை அரசுக்குத் தன் ஆட்சேபனையைக் கடுமையான தொனியில் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

வளாவிருந்த மத்திய, மாநில அரசுகள்

இதுவரை இலங்கை இந்தியக் கடற்பரப்பில் ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயப்படுத்தப்பட்டு வந்தனர். பல படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டன. இவையனைத்தும் இலங்கைக் கடற்படையினராலேயே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இவை தொடர்பாக இந்திய மீனவர்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.இப்படியான சந்தர்ப்பத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு தந்தியோ கடிதமோ அனுப்பிவிடுவார். இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதுடன் அவர் தனது பணியை முடித்துவிடுவார். மத்திய அரசோ முதல்வருக்கு ஒரு பதிலை அனுப்பி வைக்கும். இது தொடர்பாக இந்திய மத்திய அரசோ தமிழக அரசோ பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதில்லை.அண்மையில் அடுத்தடுத்துக் கொல்லப் பட்ட இரு மீனவர்களின் கொலை தொடர் பாக மத்திய அரசு தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் இந்திய வெளியுற வுத் துறைச் செயலர் திருமதி நிருபமா ராவ்வையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தது. இலங்கையோ தனது கடற்படைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் அதை ஒரு மூன்றாம் தரப்பு மேற்கொண்டிருக்கலாம் என்றும் கூறிவிட்டது. எனினும் மீனவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதில்லை என இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.இவை நடந்து ஒரு சில தினங்களுக்கு உள்ளேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.எழும் கேள்விகள்இங்கு சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும். ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்படும் போது தலைவரின் தந்தியுடனும் கடிதங்களுடன் தமது போராட்டங்களை மட்டுப்படுத்திக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இப்போது மட்டும் ஏன் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.ஒன்று, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல். ஏற்கனவே தமிழக அரசு மீனவர்கள் பிரச்சினைகளில் காட்டிய அக்கறையற்ற போக்கு தமிழக மீனவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் தி.மு.க. அரசினதும் அமைச்சர்களினதும் ஊழல்கள், மோசடிகள், அடாவடித்தனங்கள் தி.மு.கவின் செல்வாக்கில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன.இதை ஈடுசெய்ய இப்பிரச்சினையை தி.மு.க. கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் தான் தமிழக மீனவர்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலன் என்ற மாயையை அது ஏற்படுத்த முனைகிறது.இரு அரசுகளின் சதிமற்றது என்றுமே இந்திய அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்குமிடையே நல்லுறவு நிலவுவதை விரும்புவதில்லை. இவ்விடயத்தில் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்குமிடையே எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு நிலவுவதாகவே கருத வேண்டியுள்ளது.இலங்கை இந்தியக் கடல் எல்லையை அண்மித்த பகுதிகளில் சாதாரண படகுகளில் வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் படகுகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன


நன்றி;தேடிப்பார் இணையம்

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டாததன் மூலமும்,இலங்கைமீனவர்களிடம் மீனுக்காகச்சண்டை இடாததன் மூலமே இது போன்ற சதிகளை முறியடிக இயலும்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ராம்[ஜேத்மலானி] கணை


சோனியா குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் கணக்கு உள்ளது

சொன்னவர் ராம்ஜெத்மலானி.இவர் பிரபல வழக்குரைஞர் மட்டுமல்ல,அரசியல்வாதியும்கூட.பா.ஜ.கட்சியில் ஒருவர்.அவ்வப்போது பரபரப்பை உருவாக்குவதில் சுப்பிரமணியசாமிக்கு சளைத்தவர் அல்ல.ஆனால்
சு.சாமியைவிடக் கொஞ்சம் ஆதாரத்துடன் பேசுபவர் இவர்.

சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டு வைக்கப்பட்டுள்ளது என்று பிரபல வழக்குரைஞரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிதி நிலை அறிக்கை தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜேத்மலானி, “சுவிஸ் வங்கிகளில் காந்தி குடும்பத்தார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
“இவர்கள் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்பதை சுவிஸ் பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. கெண்ட் புத்தகம் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியிலிருந்து ராகுல் காந்திக்கு பணம் வந்துகொண்டிருக்கிறது நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் விளம்பரமே வந்துள்ளது” என்றும் ஜேத்மலானி உறுதிபடக் கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கிக் கணக்குப் பட்டியலில் சோனியாவின் பெயரைச் சேர்த்ததற்காக அத்வானி, சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளாரே என்று செய்தியாளர்களிடம் வினவியதற்கு, “அத்வானி மன்னிப்பு கோரவில்லை. இது வரை நீங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததில்லை, இப்போது அப்படி ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளீர்கள் என்று தான் கூறியுள்ளார்” என்று ஜேத்மலானி பதிலளித்துள்ளார்.
ஜேத்மலானி சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

கொக்கோ கோலாவுக்கு ஒரு கடிவாளம்

மென்பான தயாரிப்பாளர்களான கொக்கோ கோலா நிறுவனத்திடம் மக்கள் நட்ட ஈடு கோருவதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கேரள மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
கோயம்புத்தூருக்கு மேற்கே இந்த நிறுவனத்துக்கு மென்பானத்தை பாட்டிலில் அடைக்கும் ஆலை ஒன்று உள்ளது.
அந்த ஆலை, அங்கு சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்று அதனை வரவேற்றுள்ளன.
கொக்கோ கோலா நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், இந்தச் சட்டத்தால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
முன்னதாக இந்தச் ''சுற்றுச்சூழல் பாதிப்பு'' 50 லட்சம் டாலர்களுக்கும் குறைவானது என்று ஒரு குழு மதிப்பிட்டிருந்தது.
கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழி
கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழிஏற்படித்தியுள்ளது கேரளா.தமிழ்நாடும் தனது மண்ணில் கொக்கொ கோலா, பெப்சி வகைறாக்கள்  கணக்கின்றி கொள்ளையடிக்கும் செயலுக்கு முடிவு அல்லது கடிவாளம் போட்டு நிலத்தடி நீர் வளத்தைக்காப்பாற்றி வருங்கால குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி வகைகளைச் செய்ய வேண்டும்.
"அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது."அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
சரத்பவாருக்கு இந்தியாவில் விலைவாசிகுறையக்கூடாது என்பதில் அப்படி என்ன வேண்டுதலோ.


அதிக உற்பத்தி என்றால் பொருட்களின் விலையைக்குறைக்கலாமே? அதைவிடுத்து கட்டுப்பாடின்றி ஏற்றுமதி செய்து சிலமுதலாளிகள் மட்டும் பணம் சேர்க்க, பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் உயர ,,ஏன் இந்த பணமுதலைகள் புத்தி.  முன்பு சீனியை ஏற்றுமதி செய்து விட்டு பின் அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை சரிசெய்தது மறந்து போய் விட்டதா? கிடங்கில் கிடந்து எலிகளால் வீணானாலும் சரி, ஏழைகளுக்கு மலிவுவிலையில் கொடுக்கமாட்டோம் என்ற அரசிடம் இப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான்.
       எப்போதும் மக்கள் விரோத போக்கையும்,பணமுதலைகள் சார்புநடவடிக்கைகளுமே எடுக்கும் சரத் பவார் போன்றோரை மராட்டிய மக்கள் ஓட்டு போட்டு எந்தவகையில்தான் ஒருதலைவராக தேர்ந்தேடுக்கிறார்களோ?

பார்வதி அம்மாளுக்கு சிங்களனின் அஞ்சலி


நேற்றைய தினம் மாலை தகனம் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தாயார் பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் பிணங்களும் அந்தச் சாம்பலில் போடப்பட்டுள்ளன. இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தொடர்பில் மேலும் தெரியவருவது:’ நேற்றைய தினம் மாலை 5மணிக்கு திருமதி பார்வதி அம்மாளின் திருவுடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இரவு பத்துமணிவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு அம்மாளை தகனம் செய்ய பற்றாளர்கள் சிலர் நின்றுள்ளனர்.

குறித்த பற்றாளர்கள் மயானத்தை விட்டு வந்த பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பொழுது அம்மாளின் சாம்பலை காட்டு மிராண்டித்தனமாக கிளறி அவற்றை அள்ளிக் கொண்டு கடலில் எறிந்துள்ளனர். அத்தோடு அந்தப் பகுதியில் நின்ற மூன்று நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில் மர்மமான முறையில் இந்த விடயம் நடைபெற்றிருந்தாலும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது யார் நடத்தியிருப்பார்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது. அத்தோடு பார்வதி அம்மாளின் சாம்பலைப் பார்த்து பயம் கொள்பவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
சிங்களன் பிரபாகரன் தாயார் சாம்பல் மீது கூட பயமா? இவர்கள் இன்னமும் நம் தமிழ் உறவுகளை சகக்குடிமக்களாக  ஏற்று நடத்துவார்கள் என இந்தியாரசு கூறுவதை நம்ப வேண்டுமா?
 

புதன், 23 பிப்ரவரி, 2011

வந்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று இன்று லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ள எதிர்க்கட்சிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கிப் போனது. தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் மிரட்டல் விடுத்தன.

இதையடுத்து லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது ஜேபிசி விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது இதுகுறித்த அறிவிப்பை இன்று பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஜேபிசி விசாரணை கோரிக்கையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால் அதுகுறித்த அறிவிப்பை பிரதமர் இன்று வெளியிட்டார்.

ஜேபிசி கமிட்டியை அமைப்பது தொடர்பான தீர்மானம் நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்மானம் பின்னர் மேலவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும். அதன் பின்னர் ஜேபிசி அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 37 கட்சிகள் இருப்பதால் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் பிரமாண்டமானதாக இந்த ஜேபிசி அமைய வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன.

ஆனால், இந்த கூட்டுக்குழுவில் 21 உறுப்பினர்களை மட்டும் இடம்பெறச் செய்வது என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

கூட்டுக் குழுத் தலைவர் யார்?:

இந் நிலையில் இந்தக் கூட்டுக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி. கிஷோர் சந்திர தேவ், பி.சி. சாக்கோ, கிரிஜா வியாஸ் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அதில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. ஆண்டனி, ப.சிதம்பரம், பவன்குமார் பன்சால் மற்றும் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர். மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் அறிக்கையை அளிக்குமாறு இந்த ஜே.பி.சி குழுவை கேட்டுக் கொள்வது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 எப்படியோ எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வென்றுள்ளது.ஆனால் குழுத்தலைவராக கேரள காங்’ மக்களவை உறுப்பினர் சாக்கோ நியமனம் என்று செய்திகள் வருகிறது. அறிக்கை யும் காங்’ விரும்பியபடியே இருக்குமோ?

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஏறும் விலைவாசி இறங்கவைக்க முடியாதா?

உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.
உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையில்லா ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.உணவு தானியங்கள் உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில், ஒரு எக்டரில் நெல் உற்பத்தி, 2.20 டன் என்ற அளவில் தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு எக்டரில், 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன் என்ற அளவிலும் நெல் உற்பத்தியாகிறது, இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும், முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், அங்கு மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு தரும் ஆலோசனைகளால் தான் அந்நாடுகளால் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில், 6.21 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்களுக்கான தேவைப்பாடு உள்ளது. ஆனால், இங்கு 5.69 கோடி டன்னுக்கு தான் உற்பத்தி உள்ளது. தமிழகத்தில் 51 லட்சம் எக்டர் நிலத்தில் 19 லட்சம் எக்டரில் தான் பயிர் செய்யப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் சார்ந்திருந்த விவசாய தொழிலை விட்டு, வெளியேறி உள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இந்தியாவில், 2.30 லட்சம் எக்டரில் 1.05 கோடி டன் அளவுக்கு பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, போதியளவிற்கு இல்லாததால், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் அளவுக்கு பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதால், அதன் விலை நிலையில்லாமல் உள்ளது. 118 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 2001ம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருள்கள் விலையும், உயர்ந்து கொண்டே போகிறது.

மத்திய அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, அந்நிறுவனங்களே பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கியது. இதனால், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இழப்பு என்று கூறிக் கொள்ளும், இந்நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கலால், சுங்கம், பங்கு ஈவு தொகை மீதான மற்றும் சேவை வரிகள் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.இதே காலத்தில், மாநில அரசுகளுக்கு, மதிப்பு கூட்டு வரி (ஙஅகூ) மற்றும் "சர்ஜார்ஜ்' எனப்படும் கூடுதல் வரி முதலியவற்றின் மூலம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி ரூபாயை வழங்கியுள்ளன.

இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு, 23 ஆயிரத்து 325 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், இந்நிறுவனங்களால் மத்திய அரசுக்கு 1லட்சத்து 11 ஆயிரத்து 779 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 72 ஆயிரத்து 89 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலத்தில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 288 கோடி ரூபாயை இந்நிறுவனங்கள், தங்கள் ஆண்டறிக்கையில் வருவாயாக காட்டியுள்ளன.

நாம் ஒவ்வொருவரும், ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது, மொத்த தொகையில் 50 சதவீத தொகையை வரியாக செலுத்துகிறோம். பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தாலே, உணவு பொருள்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தலாம். "ஆன்-லைன்' எனப்படும் முன்பேர வர்த்தகத்தில், நம் நாட்டில் 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனங்கள், பொருள்களை கையில் வைக்காமலேயே வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. இவை நிர்ணயிக்கும் விலையைத் தான் வியாபாரிகள் ஏற்க வேண்டும். இந்த முன்பேர வர்த்தக சந்தைகள் வாயிலாக, மத்திய அரசுக்கு சேவை வரி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

சென்ற டிசம்பர் வரை இச்சந்தைகளில், 95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இதில் தனியாவைச் சேர்த்ததன் விளைவாக, 40 ரூபாய்க்கு விற்ற தனியா தற்போது 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை இருந்த போது, இதன் விலை கடுமையாக உயர்ந்தது. பிறகு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை சரிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் சர்க்கரையை இதில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில், டில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், இந்த ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து உணவு தானியங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக, தேவையில்லாத ஏற்றுமதிக்கு அரசு விதித்த தடையை, குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது நீட்டிக்க வேண்டும். நம் நாட்டில், விளையும் உணவு தானியங்கள், இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். சமீப காலமாக, அரசு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், உணவு பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதற்கு சிறந்த உதாரணமாக, வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். உள்நாட்டில் உற்பத்தி குறைந்து போன நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், இதன் விலை கடுமையாக உயர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இதன் உற்பத்தி அதிகரித்ததால், இதன் விலை மிகவும் சரிவடைந்தது. இதையடுத்து, இதன் மீதான ஏற்றுமதி தடை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அரசு தெளிவான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.இதுபோன்ற காரணங்களால் தான், உணவு பொருள்களின் விலை உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதை செய்யக்கூடிய மத்திய அரசோ தனது கையில் மந்திரக்கோல் இல்லையே எனக் கவலை பட்டுக்கொண்டிருக்கிறது.இடதுசாரிகள் சொல்லுவதுபோல் பெட்ரொல் விலயைக்குறைத்தாலே பாதிவிலைவாசிகள் குறைந்து விடும். மேலும் பொருளை உற்பத்தியும் செய்யாமல், முதல் போட்டு வாங்காமலும் ஆன் லைன் மூலம் .கோடி,கோடியாக கொள்ளையடிக்கும் கும்பலை ஒழிக்கவேண்டும்
  அரசு அளிக்கும் வரிச்சலுகைகள் நுகர்வொரை சென்றடைகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.காரணம் அரசு எண்ணை விலைக்குறைய தள்ளுபடி செய்தவரிச்சலுகை எண்ணை உற்பதியாளர்களுக்கு மேலும் லாபமாக அமந்தது. விலைகள் குறைக்கப்படவே இல்லை.இதை கவனிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை. சலுகைகள் மக்களை சென்றடைந்தால்தானே விலைவாசி குறையும்.?
                                                                                                                     நன்றி;தினமலர்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

இன்னும் எத்தனை காலம் ஆகும்?


தாக்குதலின்போது கஸாப்


2008.ல் மும்பை தாக்குதலில் கிட்டதட்ட 110 பேர்களைக் 
கொன்று குவித்தனர் கசாப்பும்,அவனது தீவிரவாதநண்பர்களும் .நமது இந்திய விசாரணை முறைப்படி 2011 ஆகியும் இன்னமும் விசாரிக்கிறார்கள்.
விசாரித்தார்கள்,விசாரிக்கிறார்கள்,விசாரிப்பார்கள்.
        மும்பை நீதிமன்றம் இப்போது தூக்குத்தண்டனையை உறுதி செய்துள்ளது.கூடவே மேல்முறையீடுக்கு உச்சநீதி மன்றத்தை அனுக ஆலோசனையையும் வழங்கியுள்ளது.அது இன்னமும் சில ஆண்டுகள் காலத்தை பின்னுக்கு இழுக்கும். கிட்டத்தட்ட வழக்கு முடிவதற்குள் கசாப் தன்னாலே வயசாகி செத்தும் போய் விடுவான். 
          இதுபோன்ற நமது நீதித்துறை நடவடிக்கைகளால் தான் இந்தியாவில் அதிகமாக தீவிரவாதம் தளைத்தோங்குகிறது. அதுதான் விசாரித்துக்கொண்டே 
இருப்போம் .அவர்களும் பிணையில் வெளியேவந்து சாட்சிகளை கலைக்க வாய்ப்பும் கிடைக்கும். அதன் பின்னும் நாம் சாரித்துக்கொண்டே இருப்போம் அவர்களும் குண்டுகளை வெடித்துக்கொண்டே இருப்பார்கள். 
        மக்களவைக் கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்தோம்.தாவுத் இப்ராகிமை என்ன செய்தோம். போகிறப்போக்கைப்பார்த்தால் நேரம் போகவில்லை என்றால் இந்தியாவில் குண்டுவெடித்து தலைமறைவாகி விளையாட விசா கேட்டு விண்ணப்பிப்பார்கள் போலிருக்கிறது. 
        கடுமையான நடவடிக்கைகள் மூலமே திவிரவாத செயல்களை தடுக்க முடியும் ஆதாரத்துடன் கிடைத்தவனை வைத்து பிரியாணிபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அரசு தீவிரவாதத்தை வளர்ப்பதாக அல்லவாத்
தோன்றுகிறது
         காலிஸ்தா ன் பிந்திரன்வாலே என்னவானான்,இந்திரா கொலை தீவிரவாதத்தால் சீக்கியர்கள் என்ன வானார்கள்,ராஜிவ் கொலையால் விடுதலைப்புலிகளே அழித்தொளிக்கப்பட்டனரே, அதுபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.?
        மத்திய அரசும் ,உச்சநீதிமன்றமும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்.அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கவும் வேண்டும். 
பார்வதியம்மாள் காலமானார்
 
பிரபாகரன் தாயார்
பிரபாகரன் தாயார்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் பார்வதியம்மாள் காலமானதாக வைத்தியசாலைக்குப் பொறுப்பான மருத்துவர் மயிலேறும் பெருமாள் தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களாக பாரிசவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பலநாட்களாக சுயநினைவு இழந்த நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவர் மயிலேறும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
81 வயதான பார்வதியம்மாளுக்கு சில காலம் மலேசியாவில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு அங்கு சிகிச்சையளிப்பதில் எழுந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, மேலதிக சிகிச்சைகளுக்காக இந்தியா அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அனுமதி மறுத்த இந்திய அரசு, அவரை அவர் சென்ற விமான நிலையத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பியது.
பின்னர், அவருக்கு சிகிச்சைக்காக இந்தியா வர அந்நாட்டு அரசு நிபந்தனையடிப்படையில் அனுமதியளிக்க முன்வந்த போதிலும், அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படவில்லை.
அத்தோடு, அன்றைய சூழ்நிலையில் அவர் ஒரு அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.
இந்த நிலையில், பிரபாகரனின் தாயார் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்கையளிக்கப்பட்டு வந்தது.
அங்கு, அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
அங்கு அவரது உடல்நிலை சற்று தேறியதையடுத்து, வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கே அவர் மாற்றப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக சயநினைவு இழந்திருந்த அவர், ஞாயிறு அதிகாலை காலாமானார்.
கனடா, டென்மார்க், இந்தியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் இவரது மூன்று பிள்ளைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது தாயாரைப் பார்ப்பதற்கு வரமுடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பார்வதியம்மாளை பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுபார்வதியம்மாளின் திக்கிரியைகள் யாழ்ப்பாணம் தீவில் மயானத்தில்செவ்வா ய்க்கிழமை நடைபெறும் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
      மாவீரனைப் பெற்றத்தாயின் காலடியில் எங்கள் கண்ணீர்த்துளிகளை
சமர்ப்பிக்கிறோம்.
                                                              -சுரன் குறிப்புகள்,கலாரசிகன். 

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தமிழர் வாழ்ந்த அடையாளம் இருக்காது,

  


தியாகச்செம்மல் 
தமிழீழ கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் முன்னெடுக்க, ஒரு புதிய முயற்சியாக புலம்பெயர்ந்த தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக உள்ள தெற்கு சூடான் நாட்டின் விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் இதன் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பது ஓர் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் பெரியாரியப் பற்றாளருமான பேராசிரியை சரசுவதியிடம் பேசியதிலிருந்து...

இன்றைய உலகமய தாராளமயச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? 

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது ஈழ மண்ணில் தோல்வியடைந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எதற்காக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அதன் தேவை இன்னும் அப்படியேதான் உள்ளது. தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஈழத்தில் இருக்கும் மக்களால் மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது இயலாத ஒன்று. இதனால் ஈழ மக்களின் துயர்போக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள ஈழ ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து ஓர் அரசை உருவாக்குவது என்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டு, அதன் பிரதமராக ருத்ரகுமாரனும், துணை பிரதமராக செல்வராசா செல்வரத்தினமும் ஜனநாயகரீதியில் ஓட்டெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வாக்கெடுப்பை நடத்த முடியாத நாடுகளில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் அவர்களே பிரதிநிதிகளை நியமிக்கிறார்கள். நிச்சயம் தமிழீழ மண்ணில் தனி நாடு மலர்வதற்கான ஓர் அரசியல் தீர்வை முன்னெடுத்துச் செல்லவும் அந்த கோரிக்கையை அடையவும் ஒரு தளமாக, ஸ்தாபனமாக நாடு கடந்த தமிழீழ அரசு செயல்படும்.


அதன் இந்தியசெயல்பாடுகள் பற்றி?

இந்த அரசை உருவாக்கும் முன் அதன் முன்னோடிகள் பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரினர். ஆனால் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் ஆதரவை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தாய்த் தமிழகத்திலிருந்து ஈழத்திற்கான ஆதரவை அதிகம் கோருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தோழமை மையம் என்ற அமைப்பை இங்கு உருவாக்கினோம். அதற்கான கூட்டங்களையும் நடத்தி ஆதரவைத் தெரிவித்தோம்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தும்,சர்வதேச அளவில் ராஜபக்ஷே மீது பெரிய அளவு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையே ?
சர்வதேச அளவில் நடவடிக்கையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. டப்ளினில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை வண்மையாகக் கண்டித்துள்ளது. சேனல் - 4இல் வெளியிடப்பட்ட காட்சிகளைத் தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற கிளர்ச்சியால், அப்போது அங்கு சென்றிருந்த ராஜபக்ஷே விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக தப்பித்துவந்தார். ராஜபக்ஷேவை சர்வதேச அளவில் போர்க் குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கைக்கு உட்படுத்த, நாடு கடந்த தமிழீழ அரசு தனக்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுக்கும்.


தற்போதைய நிலையே தொடர்ந்தால் இலங்கைத் தமிழரின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
இலங்கையில் தமிழர் பகுதிகளில் தீவிர சிங்களக் குடியேற்றம் நடைபெற்றுவருகிறது. தமிழினத்தின் அடையாளங்களை அழித்து ஒழிக்கவும், அங்கே அப்படி ஓர் இனம் இருந்ததற்கான சுவடுகளை அழிக்கவும் சிங்கள அரசு முயற்சித்துவருகிறது. இதே நிலை நீடித்தால் இலங்கை என்ற நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்களே இல்லாமல் போய்விடும்.
                                                                                                       நன்றி; தி சண்டே இந்தியன்

மீனவர்களை பாதுகாக்க,,,,

மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்திய,தமிழக அரசுக்கு தற்காலிக நிம்மதி. ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதும்,கொல்லப்படுவதும்,சிறை பிடிக்கப்படுவதும் அடிக்கடி நடை பெறும் செயலாக மாறியுள்ளது சரியானதல்ல.இடையே இலங்கை அரசு தனது மீனவர்களை “இங்கு தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்து தங்களது வலைகளை நாசம் செய்வதாகவும், மீன்களைக் கொள்ளையடிதுவிட்டு செல்வதாகவும்” அறிக்கைகளை விடச்செய்து தனது செயள்களை நியாயப்படுத்துகிறது.இச்செயல் சரியான சகுனித்தனம்.
                        தமிழகமீனவர்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க
இந்திய அரசு செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் உள்ளது. நமது மீனவர்களுக்கு இந்திய எல்லைக்கட்டுப்பாட்டை வரையறையை சரிவரக்
காண்பிக்கவேண்டும். கடலோரக் காவல்படை என்ற தண்டச்சம்பளப்படையினரை கொஞ்சம் அவ்வப்போது வேலை பார்க்கக் கூறவேண்டும். நமது மீனவர்கள் எல்லை தாண்டும் போது அறிவுறுத்தி
டவும், நமது எல்லையில் வந்தே வாலாட்டும் இலங்கைப்படையினரை அப்புறப்படுத்தவும்  செய்யவேண்டும்.
இதைக் கூட செய்யாத கடலோரக்காவல் படையினர் எதற்கு? தீவிரவாதிகளையும் கடல் வழியே விட்டு விடுகின்றனர்.போதைப் பொருட்களும் கடல் வழியே தாராளமாகவந்து செல்கின்றன.இந்த வேலையாவது செய்யக்கூறவேண்டும்.
  இதன்மூலம் இது போன்ற தாக்குதல்கள் குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
 எல்லாவற்றையும் விட மிகமுக்கியமான ஒன்று.இந்திய அரசு ஏமாளித்தனமாகவோ அல்லது எந்தக்காரணத்திற்காகவோ தாரை வார்த்த கட்சத்தீவை மீண்டும் பெறவேண்டும். அதனை வைத்தே சில சித்து வேலைகளை இலங்கை அரசு செய்து வருகிறது. சீனாவுக்கு குடக்கூலிக்கு கட்சத்தீவை விடப்போவதாக செய்திகள் வருகிறது. அசாம் மூலம் வடகில் இருந்து தலைவலி .கட்சத்தீவு மூலம் தெற்கில் கால் குடைச்சல் தர சீனாவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது.மேலும் வங்கக் கடலில் கட்சத்தீவு அருகே பெட்ரொல் அதிக அளவு இருப்பதாக ஆய்வுகள் கூறுவது மத்திய அரசுக்கு தெரியாதது அல்ல.
       இதை விட மத்திய அரசுக்கு அதாவது காங்கிரசுக்கு ஒரு வேண்டுகோள்.
 நீங்கள் திட்டம் போட்டது போன்று விடுதலைப் புலிகளை மட்டும் அல்ல, ஒரு பழமையான தமிழினப்படுகொலை முடிந்துவிட்டது. இனியாவது இங்கு இந்திய தமிழர்களை ,தமிழகமீனவர்களை வாழ விட வழிவிடலாமே?
     இங்கும் உங்களுக்கு[இன்னமும்] ஓட்டுப்போடும் அப்பாவிகள் அல்லது ஏமாளிகள் இருக்கிறார்கள். அவர்களையாவது கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.

2-ஜி அலைக்கற்றை மீண்டும் சில சந்தேகங்கள்,

-ஆர்.பத்ரி
  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும்.

கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட ‘முத லில் வருபவருக்கு முன்னுரிமை’ என்கிற நடைமுறையைத்தான் பின்பற்றினேன். நான் தவறேதும் இழைக்கவில்லை என சொல் கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. முதலில் வருபவர்க்கு எடுத்துக்கொடுக்க இது என்ன முத்துமாரி அம்மன் கோவில் பிரசாதமா என கேள்வி எழுப்புகின்றனர் எதிர்தரப்பினர். ஆ.ராசா பின்பற்றிய நடைமுறையின் மூலம் அரசிற்கு ரூ.1,76,379 கோடி நஷ்டம் என்கிறார் மத்திய அரசின் தலைமை தணிக்கை அதி காரி. ‘அவர் சொல்வதில் உண்மையில்லை. இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுதான்’ என மறுக்கிறார் தற் போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச் சர் கபில்சிபல். இத்தகைய விவாதங்கள் ஒரு புறம் இருக்க, இப்பிரச்சனைக்கு சற்றும் தொடர்பற்ற முறையில் ‘இது திராவிடர் களுக்கு எதிராக ஆரியர்களால் தொடுக்கப்பட் டிருக்கும் யுத்தம்’ என மக்களை திசை திருப்ப முயன்று தோற்றிருக்கிறார்கள் கலை ஞரும், வீரமணி வகையறாக்களும். உண்மை யில் என்னதான் நடந்திருக்கிறது என்பதை இன்னும் சற்று தெளிவாக அறிந்துகொள்ள ஒரு பிளாஷ்பேக் கதையைப் பார்ப்போம்.

தொலைபேசித் துறை-

பணம் கொட்டும் அட்சயப் பாத்திரம்

தொலைத்தொடர்பு சேவை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நமது இந்திய நாட்டில், கடந்த 1995ம் ஆண் டில்தான் காங்கிரஸ் ஆட்சியில் தனியார் நிறுவனங்களுக்கு சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு, லைசென்ஸ் வழங்கப்பட் டது. அன்றைக்கு 9 மாநிலங்களில் தொலை பேசி சேவை வழங்க எச்.எப்.சி.எல் என்ற ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டும் ரூ.85,000 கோடி செலுத்துவதாக வாக்குறுதி அளித்து லைசென்ஸ் பெற்றது. ஆனால் சொன்னபடி அரசிற்கு பணமும் கட்டாமல், முழுமையான சேவையும் வழங்காமல் இழுத்தடித்த இந் நிறுவனத்திற்கு ஆதரவாக தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம் செயல்பட்டதும், அவ ருக்கு பின்புலமாக ருனுகோஷ் என்ற பெண் மணி இருந்ததும் நாடறிந்த உண்மை. மேலும் சிபிஐ பரிசோதனையின் போது அவர் வீட் டில் கட்டுக்கட்டாக பணமூட்டைகளும், விலை உயர்ந்த பரிசு பொருட்களும் கண்டுபிடிக்கப் பட்டதை மறந்துவிட முடியுமா...

அடுத்த வந்த பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக ஜக்மோகன் சிங் இருந்தபோது செல்லுலர் சேவை வழங் குவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டண சலுகையால் பத்து ஆண்டுகளில் மத்திய அரசிற்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம் என அப்போதைய அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி பகி ரங்கமாக கருத்தை வெளிப்படுத்தினார். தனி யார் நிறுவனங்களுக்கு ஆதரவான இத்தகைய பேரத்தில் அப்போதைய தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல், புட்டபர்த்தி சாமியார் சாய்பாபா, ஜென்டில்மேன் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோர் ஈடுபட்டிருந்ததை நாடு பார்த்தது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான இம் முறையை அமல்படுத்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜக்மோகன் விரும்பாததா லும், தனியார் நிறுவனங்கள் கொடுத்த நெருக் கடியின் காரணமாகவும் தொலைத்தொடர்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக்மோகன் கழட்டிவிடப்பட்டு, பிரதமர் வாஜ்பாயே நேரடி யாக அத்துறையின் பொறுப்பை ஏற்று இப் பணிகளை செவ்வனே செய்து முடித்தார். அப் போது நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந் திப்பில் ஒரு ஒப்பந்ததாரர் “தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஜக்மோகன் தூக்கியெறியப்படுவார்” என பகிரங்கமாக அறி வித்த சிலமணி நேரங்களிலேயே அவரிட மிருந்து அத்துறை பறிக்கப்பட்டதையும் தற் போது நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு பிறகு இத்துறையின் பொறுப்பை ஏற்ற பிரமோத் மகாஜன் லைசென்ஸ் முறை யை மாற்றி வருவாய் பகிர்வு முறையை கொண்டு வந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கஜானாவை நிரப்ப பெரிதும் உதவினார். இந்த புதிய முறையினால் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களை சுருட்டிய நிறு வனங்கள் டாடாவும், ரிலையன்சும்தான். இம் முறையினால் அரசுக்கு ரூ.64,000 கோடி நஷ் டம் என அப்போதும் கணக்குப்போட்டு சொன்னது மத்திய அரசின் தலைமை தணிக் கைத்துறை. இதற்கு பிரதியுபகாரமாக ரிலை யன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பலகோடி மதிப் புள்ள பங்குகளை பிரமோத் மகாஜனின் பினாமிகளுக்கு வழங்கியது. அதற்கு பிறகு இத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஷோரி ஒருபடி மேலேயே சென்று, ஒருங்கிணைந்த லைசென்ஸ் முறை என் பதை அறிமுகப்படுத்தி, அனைத்து நிறுவ னங்களும் ஒரே லைசென்ஸ் பெற்றுக் கொண்டு அனைத்து சேவைகளையும் வழங்கலாம் என வழியேற்படுத்தி, தனியார் நிறுவனங் களை ஊக்கப்படுத்தி அழகுபார்த்தார்.

ஊழலே நடக்கவில்லை என்ற வாதம் சரியா?

மற்றவர்கள் சொல்வதைப்போல இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என ஆ. ராசாவும், அவரைச் சார்ந்தவர்களும் மறுக் கிறார்களே... அது சரியா, இல்லையா என்பதற்கு பின்வரும் சில உண்மைகளைப் படித்தாலே நமக்கு எளிமையாக புரிந்துவிடும்.

1அலைவரிசை உரிமம் பெற்ற நிறுவனங் களில் யூனிடெக் மற்றும் அலையன்ஸ் 
  இன் பிரா ஆகிய நிறுவனங்கள் கட்டுமான தொழி லில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள். லூப் டெலி காம் என்ற நிறுவனமும் லைசென்ஸ் பெறும் வரை தொலைபேசி சேவையில் ஈடுபடாத நிறுவனமே. இத்தகைய இந்நிறுவனங்க ளுக்கு ஏன் உரிமம் வழங்க வேண்டும்.

2. சொற்பத் தொகைக்கு அலைவரிசை உரிமம் பெற்ற யூனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் ஏன், ஒரு சில நாட்க ளிலேயே மிக மிக அதிகமான தொகைக்கு தங்கள் பங்குகளை விற்க வேண்டும். அரசு எப்படி அதை அனுமதித்தது.

3. அலைவரிசை உரிமம் பெறுவதற்கான இறுதி தேதி அவசர அவசரமாக ஒரு வார காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு இந்நிறு வனங்களுக்கு ஏன் உரிமம் வழங்கப்பட்டது.

4. அலைவரிசை உரிமம் பெற்ற நிறுவனங் கள், லைசென்ஸ் பெற்ற வெறும் 45 நிமிடங் களுக்குள்ளாகவே ரூ.1600 கோடி வங்கி உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்ற விதியை எவ்வாறு நிறைவேற்றினார்கள். பல ஆண்டுகளாக தொழில்களில் ஈடுபட்டிருக் கும் பெரிய பெரிய நிறுவனங்களாலேயே முடி யாதபோது இந்நிறுவனங்களால் அது எப்படி சாத்தியமாயிற்று. எனவே முன் கூட்டியே ஒப் பந்த விதிகள் தனக்கு வேண்டிய இந்நிறுவ னங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம் என் பது உண்மைதானே...

5. 2ஜி அலைவரிசை உரிமம் வழங்குவதற் கான வழிகாட்டுதல்களை டிராய், பிரதமர் அலுவலகம், சட்ட அமைச்சகம், நிதி அமைச் சகம் ஆகியவை தெரிவித்து இருந்தும் இவை அனைத்தும் ஏன் ஒரேயடியாக புறக்கணிக் கப்பட்டன. விடையின்றி தொடரும் கேள்வி கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இதுவரையில் இந்தியாவில் இல்லாத இமா லய ஊழல் தான் இது என்பதை ஊர்ஜிதம் செய்கிறத

, அரசு செய்யவேண்டியது என்ன.. நேர்மையற்ற முறையில் வழங்கப் பட்ஊழல்களை பொறுத்தக்கொள்ள மாட் டோம் என காங்கிரஸ் வீரவசனம் பேசுவது உண்மைட அனைத்து அலைவரிசை உரிமங்க ளையும் முழுவதும் ரத்து செய்துவிட்டு புதி தாக, வெளிப்படையாக ஏலம் விடப்பட வேண் டும். அப்படி செய்ய சட்டத்தில் இடமுண்டா... நிச்சயம் உண்டு... ஒரு ஒப்பந்தத்திலோ அல் லது உரிமம் வழங்கியதிலோ ஊழல் அல்லது முறைகேடு நடந்திருந்தால், இந்திய ஒப்பந்த சட்டம் 1872 பிரிவு 23 மற்றும் 24ன்படி அவற்றை அடியோடு ரத்து செய்ய முடியும்.

அப்படி ஏதும் நடந்திருக்கிறதா.. ஆம்.. உதாரணம் இருக்கிறது... கடந்த 2007ம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு, ஐரோப்பா வின் யூரோகாப்டர் என்ற நிறுவனத்திலிருந்து 197 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறை கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த தால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப் பட்டது. எனவே அரசு தனது சொத்தையான வாதங் களை கைவிட்டு செயலில் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் நம்புவார்கள்.

இவற்றையெல்லாம் விட நாம் குறித்துக் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான கருத்து ஒன்று இருக்கிறது. இத்தகைய ஊழல்கள் என்பது முதலாளித்துவத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளின் வெளிப் பாடுதான். எனவே இத்தகைய நவீன தாராள மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் ஊழல்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது.
                                                                                         நன்றி;தீக்கதிர்

வியாழன், 17 பிப்ரவரி, 2011

ராஜாவே பொறுப்பு


தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மன்மோகன் சிங் கூறியது”கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராஜாவுக்கு கடிதம் எழுதினேன். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து வந்திருந்த புகார்களை மையமாக வைத்து, சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். சட்ட ரீதியிலும், சரியான முறையிலும் வெளிப்படையாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்று இருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராஜாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையான முறையிலேயே நடப்பதாகவும், எந்தத் தவறுக்கும் இடம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், "டிராய் அமைப்பும், தொலைத்தொடர்பு கமிஷனும், ஏலமுறையை பின்பற்ற வேண்டுமென்று கூறவில்லை. ஏல முறையை பின்பற்றினால், ஏற்கனவே உள்ளவர்கள் மட்டுமே வர முடியும், புதிய ஆட்கள் வர முடியாது. கடந்த காலங்களில் ஏலம் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை ஏலம் விடப்பட்டால், அது அனைவரையும் சமமாக நடத்தப்படவில்லை என்பது போலாகிவிடும். நிதியமைச்சகமும், தொலைத் தொடர்பு அமைச்சகமும் ஏலமுறை வேண்டாம் என்பதை ஒப்புக் கொண்டன. எனவே, ஏலமுறையை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது' என்றும், ராஜா கூறியிருந்தார். இதனால்தான், அந்த சமயத்தில் நான் மறுபடியும் அந்த விவகாரத்தில் தலையிட முடியவில்லை.


சில நிறுவனங்கள் மட்டும் பலன் பெறும் வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்நோக்கத்துடன் நடந்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே இருந்த கொள்கை முடிவையே தானும் தொடர்வதாக ராஜா கூறினார். மற்றபடி ஸ்பெக்ட்ரத்தை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்தோ அல்லது முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்திய விதம் பற்றியே, என்னிடமோ அல்லது மத்திய அமைச்சரவையிடமோ, ராஜா எந்தவொரு ஆலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. அந்த முடிவுகள் அனைக்குமே ராஜாவே பொறுப்பு.தவிர, உரிமங்கள் பெற்ற இரண்டு நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கும் வகையில், தங்களது நிறுவன பங்குகளை விற்றுள்ளன. ஒரு நிறுவனம், தனது நிறுவன லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை அது. அந்த நிறுவனங்களின் விருப்பம் அது. இது போன்ற விஷயங்களில் எல்லாம் நான் தலையிட இயலாது.

 கூட்டணி அரசு என்று வரும்போது, ஒரு சில சமரசங்களும் உடன் வருவது இயல்பே. யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் நான் சில கருத்துக்களை கூறலாமே தவிர, இறுதி முடிவெடுக்க வேண்டியது கூட்டணிக் கட்சி தலைவரே. அந்த விவகாரத்தில் நான் தலையிட முடியாது. அதில் தவறேதும் இல்லை. தி.மு.க., தரப்பில் எனக்கு அளிக்கப்பட்டது ராஜாவின் பெயர்தான். 2009 மே மாதம் இரண்டாம் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் நேரத்தில், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சில புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் மிகவும் வலுவானதாக இருப்பதாக எனக்கு தென்படவில்லை. எனவேதான் ராஜாவின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும் எனது மனதை தயார் செய்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டேன். ராஜாவை மீண்டும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கினேன்.ஸ்பெக்ட்ரம் உட்பட எந்த பிரச்னைகள் குறித்தும் விளக்கமான பதில்களை அளிக்க தயாராக உள்ளேன்.

சீசரின் மனைவியைப் போல, பிரதமர் என்ற பதவியில் உள்ள நானும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவே ஆசைப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்டின் பொதுக்கணக்குழு விசாரணை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்தான் அக்குழுவின் தலைவராக உள்ளார். அந்த குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க தயார் என, ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டேன். பொதுக்கணக்கு குழு என்றுதான் இல்லை. ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு உட்பட எந்த குழு முன்னரும் ஆஜராக தயார். இவ்விஷயத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை.

 ஊழலை மட்டும் பெரிது படுத்தி நாட்டின் கவுரவத்தை குலைக்காமல், மற்ற சாதக விஷயங்களையும்,ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மொத்தம் 70 நிமிடங்கள் நடந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும் மூன்றரை ஆண்டுகளுக்கு கூட்டணி அரசு தொடரும் என்ற அவர்
* அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

* "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மோசடி, ஐ.எஸ்.ஆர்.ஓ., ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் என, அனைத்து ஊழல்களிலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவர்.

* எனது அரசு இயலாத அரசு அல்ல, அதே போல், நானும் இயலாத பிரதமர் அல்ல. அரசை நடத்திச் செல்வதில் சில பலவீனங்கள் உள்ளன. அரசாட்சியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

* நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை எனக் கூறவில்லை. ஆனால், எல்லாரும் வர்ணிப்பது போல, நான் ஒன்றும் பெரிய குற்றவாளியும் அல்ல.

* கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்ட போது, என்ன நிகழ்ந்தது என்பதை நான் வெளிப்படுத்த முடியாது. நாங்கள் கூட்டணி அரசை நடத்துகிறோம். கூட்டணி அரசில், நாங்கள் சில யோசனைகளை மட்டுமே கூற முடியும். ஆனால், யார் அமைச்சராக வேண்டியது என்பதை கூட்டணி கட்சியின் தலைவர்தான் முடிவு செய்வார்.

* பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்”
                     என்றும் மன்மோகன்சிங் கூறினார். மொத்தத்தி அவர் பேட்டி
 விலாங்குமீன் தனமாகவும், வழமையானத்தனமாகவுமே இருந்தது. அவர் என்ன செய்வார் பாவம்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பார்த்தாலே ,,,,,,,,,,,,

 
ஊசி போடும் தருணம்

ஒருவர் தன்னுடைய உடலில் எந்தப் பாகத்தில் வலிக்கிறதோ அந்தப் பாகத்தை அத்தருணத்தில் பார்த்துக்கொண்டிருந்தால், அவர் உணருகின்ற வலியின் அளவு குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவர் ஊசி போடும் தருணம் என்பது சிறுவர்களுக்கும் சரி, வெளியே சொல்லாவிட்டாலும் பெரியவர்களுக்கும் சரி சற்று சங்கடமான நேரம்தான்.
ஊசி குத்துவதால் ஏற்படும் வலியைவிட வலிக்குமே என்ற பயம்தான் அதிகமாக இருக்கும்.
கண்ணை மூடிக் கொள்வது, மருத்துவர் ஊசியைக் குத்துவதைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண்டு வேறு எதையாவது பார்ப்பது போன்றவற்றைச் செய்து அதிகம் வலி தெரியாமல் இருக்க பலர் முயலுவார்கள்.
ஆனால் தற்போது இது சம்பந்தமாக பிரிட்டனில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியில், அந்த பாகத்தையே மேலும் பெரிதுபடுத்தி பார்த்துக்கொண்டிருந்தால் வலியின் அளவு மேலும் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
யுனிவர்சிட்டி காலெஜ் லண்டன் என்ற பல்கலைக்கழகமும், இத்தாலியில் உள்ள மிலான் - பிகோக்கா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையமும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியை நடத்தியிருந்தனர்.

வேண்டிய அளவில் சூட்டை வெளிப்படுத்தக்கூடிய கம்பி ஒன்றைக் கொண்ட கருவி இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சியில் பங்குபெறுபவரின் ஒரு கையில் இந்தக் கம்பியை வைத்து அதன் சூட்டை அதிகரித்துக்கொண்டே போகும்போது, சரியாக என்ன வெப்பத்தில் அவரால் சூட்டைத் தாங்கமுடியாமல் போக ஆரம்பிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் குறித்துக்கொண்டனர்.
பின்னர் முகம்பார்க்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி, அந்நபர் தனது மற்ற கையைப் பார்க்கும்போது, அவர் தனது வலி ஏற்படும் கையைப் பார்ப்பதுபோன்ற பிம்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உண்டு பண்ணினர்.
அதன் பிறகு இதே செய்முறையை மீண்டும் செய்தபோது, அந்த நபர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு அதிகமானது.
அதுவே அவரது கையை இயல்புக்கும் பெரிதாக இருக்கும்படியான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கும்போது, அவர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு மேலும் அதிகமானது.
ஆனால் தனது கைகளை அல்லாது வேறு பொருட்களை அந்நேரம் பார்ப்பாரேயானால், அந்நபர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு குறைந்துபோனது.
ஆக வலி ஏற்படும்போது வேறு இடங்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் வலிக்கக்கூடிய இடத்தைப் பார்த்தால், நாம் உணரக்கூடிய வலியின் அளவு குறைகிறது என்பது நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்துகொள்ளும் பாடம் எனலாம்.
இந்த கண்டுபிடிப்பின் விளைவாக சிகிச்சைகளின்போது நோயாளிகளின் வலி உணர்வை குறைக்கக்கூடிய புதிய உத்திகளை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 
பார்த்தால் பசி குறைகிறதோ இல்லையோ,வலி குறையும் என்று இப்போது
 இவர்கள் கூறுகிறார்கள்.

உளவு புத்த பிட்சுகள்

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை பக்சே அரசு இப்போது மற்றொரு கேடுவிளைவிகும் செயலில் இறங்கி உள்ளது.
                                                                                                                       
அது மதத்தை வளர்ப்பதோடு, மக்களை,குறிப்பாகத் தம                                                       தமிழர்களை உளவு பார்க்க புத்த துறவிகளை களம்  இறக்கியிருக்கிறது.
 
இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளின் முகவர்களாக, உளவாளிகளாக புத்த துறவிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
அவர்கள் புத்த துறவிகளின் வேடம் தரித்தபடி உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமக்குக் கிடைக்கும் தகவல்களை புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணியாகும்.
பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள புத்த துறவிகளே  இனம் காணப்பட்டு அவ்வாறு புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் சிலகாவல் துறையினரும்புத்த துறவி வேடம் தரித்து புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் குறித்து தகவல்களைத் திரட்டுதல், எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ள செல்வந்தர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்த தகவல்களைத் திரட்டி உளவுத்துறையிடம்
அளித்தல், பொதுமக்கள் மத்தியில் புத்த மதத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்துக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ளல் என்பன அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணிகளாகும்.
அவ்வாறு போலியாக புத்த துறவி வேடம் தரிப்பவர்களை வழிநடத்துவதும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும்புத்த துறவிகளின்மற்றொரு பணியாகும்.
அவ்வாறாக புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் துறவிகள் மற்றும் போலித் துறவிகளுக்கு மாதமொன்றுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையானசம்பளம் வழங்கப்படுவதா
கவும் தகவல்.புத்தம் சரணம்,கச்[போலி]சாமி,,,,,,,,
                                                                                                                      -தகவல்;நியு இந்தியா நியுஸ்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய புரட்சி,.


மத்திய கிழக்கில் தற்போது கிளர்ச்சிகள் வெடித்திருப்பதற்கும் டுனீசியத் தலைவர் அபிடின் பென் அலியின் வீழ்ச்சிக்கும் தனது இணையத்தளமான விக்கிலீக்ஸ் கணிசமான அளவு செல்வாக்கைச் செலுத்தியதாக அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
டுனீசியத் தலைவருக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு தொடர்பாக விக்கிலீக்ஸ் கேள்வி எழுப்பியிருந்ததாகவும்.அது எழுச்சிக்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் எழுப்பியிருந்ததாகவும் அதேபோன்று சூழவுள்ள நாடுகளிலும் இந்த விவகாரங்கள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதாகவும் அசெஞ் கூறியுள்ளார்.பத்திரிகை ஊடாக அந்த விடயங்களை நாங்கள்  வெளியிட்டிருந்தோம். அல் அக்பர் என்ற அந்தப் பத்திரிகை டுனீசியாவில் என்ன நடந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது என்று எஸ்.பி.எஸ்.நிகழ்ச்சியில் அசெஞ் கூறியுள்ளார். எகிப்து, யேமன், ஜோர்தான் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு டுனீசியா உதாரணமாகத் திகழ்ந்தது என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் டுனீசியா பூராவும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள்அதிகளவில் இடம்பெற்றன. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அந்தப் போராட்டம்தீவிரமடைந்தது. இதன் விளைவாக பென் அலி பதவி நீக்கப்பட்டார். அதேபோன்று கெய்ரோவில் 18 நாட்கள் இடம்பெற்ற கிளர்ச்சியானது ஹொஸ்னி முபாரக்கின் 30 வருட சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் யேமனில் இடம்பெறுகின்றன. அதேவேளை ஜோர்தானிலும் அமைதியீனம் ஏற்பட்டிருக்கிறது.
சர்வாதிகார ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அதிருப்தியீனங்கள் தீவிரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அசெஞ் கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சுவீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவாரா இல்லையா என்பது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் அசெஞ் லண்டனிலிருந்தவாறு’ இந்தக் குழப்பங்களையெல்லாம் நான் பார்த்து வருகிறேன். இது சகல இடங்களிலும் இடம்பெற்றுவருவதை பார்க்கவேண்டியுள்ளது’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்கஅரசுவின் இராஜதந்திரக் கேபிள்களை இரகசியமாகப் பெற்று அவற்றை வெளியிட்டதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பையும் அமெரிக்காவிற்கு கடும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும் அசெஞ் பிரிட்டிஷ் பத்திரிகையான த கார்டியனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தங்களுக்கு அறிவிக்காமல் சகலவற்றையும் அப் பத்திரிகை பிரசுரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவில் தமக்கு பலமான ஆதரவிருப்பதாக நம்புவதாகக் கூறும் அசெஞ் அதேவேளை அங்குள்ள தொழிற்கட்சி அரசாங்கமானது அமெரிக்காவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாகச் சாடியுள்ளார். விக்கிலீக்ஸுக்கு எதிராக ஆஸ்திரேலியா விசாரணை செய்வதைக் கைவிட்டிருக்கின்ற போதிலும் அமெரிக்காவிற்கு உதவி வழங்குவதாக அவர் சாடியிருக்கிறார். தான் தாய்நாட்டிற்குத் திரும்பினால் கான்பரா தன்னை நாடு கடத்தும் என்ற அச்சத்தை அவர் கொண்டிருக்கிறார்.
உலகளாவியஅளவில் அமெரிக்க இராஜதந்திரிகள் நிலை கொண்டிருக்கும் இடங்களிலிருந்துஅமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட கேபிள்களை இரகசியமாகப் பெற்று தமது இணையத்தளமான விக்கிலீக்ஸ் மூலம் அசெஞ் வெளியிட்டு வருகிறார். ஈராக், ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடக்கம் இலங்கை, இந்தியா, உட்பட பல நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜதந்திரிகள் தமது நாட்டிற்கு அனுப்பிய ஆவணங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த நடவடிக்கையானது சிலருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால்,மற்றவர்கள் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்படவேண்டுமெனக் கூறுகின்றனர்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உலக[ஊழல்]மயம்

-அசோகன் முத்துசாமி
1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக் கும் பிரதமருக்கும் சம்பந்தமில்லை என் றார்கள். ஆம், சம்பந்தமில்லைதான். ஏனெனில் அவர் இவ்வளவு சின்னத் தொகையிலெல்லாம் கை வைக்க மாட் டார். எதுவாக இருந்தாலும் 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் எஸ்- பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல். (எஸ்- பேண்ட் என்பது மிக உயர்ந்த வகை அதிவேக அலைக்கற்றை).

நேரடியாக மன்மோகன் சிங்கின் கட் டுப்பாட்டின் கீழ் வரும் விண்வெளித் துறையின் கீழ் இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்ஓ) வரு கின்றது. அதன் வர்த்தகப் பிரிவு ‘ஆன்ட் ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற தனி யார் நிறுவனத்திற்கும் இடையில் 2005ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்படுகின் றது. அதன்படி அந்த தனியார் நிறுவனத் திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற் றையை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட லாம் என்று மத்திய தணிக்கைத் துறை மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின் றன. எப்படி?

வெறும் 15 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை மட்டுமே 3ஜி ஏலத்தில் விற்கப்பட் டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் சுமார் 67,719 கோடி ரூபாய். தேவாஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட விருந்ததோ 70 மெகா ஹெர்ட்ஸ். நான்கு மடங்குக்கும் மேல். ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு.

மேலும், இதே வகை அலைக்கற்றை 20 மெகா ஹெர்ட்ஸ் அளவு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பயன்படுத்த அனு மதிக்கப்பட்டது. அதற்கு வாங்கப்பட்ட கட்டணம் வெறும் 12,847 கோடி ரூபாய். மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எப்போதும் மக்களுக்கும், பொதுத்துறைக் கும் எதிரானவையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மக்களின் சுருக்குப் பைகளிலிருந்து கொள்ளையடித்து, முதலாளித்துவ திமிங் கலங்களுக்கு தீனி போடுவார்.

இந்த செய்தி ‘தி ஹிந்து’ குழும நாளி தழ்களில் வெளிவந்தவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு மறுப்பு வெளி யிடப்படுகின்றது. மேற்கண்ட நிறுவனத் திற்கு எஸ்-பேண்ட் அறைக்கற்றை ஒதுக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்ற கேள் வியே இல்லை என்பது அந்த மறுப்பின் சாராம்சம்.

ஆனால், ஒப்பந்தம் போட்டிருக்கின் றீர்களே திருவாளர் பரிசுத்தம் அவர் களே? ஏன், ஒப்பந்தம் போட்டீர்கள்? இப் படி ஒரு விவகாரம் நடந்திருப்பதே இது நாள் வரை மக்களுக்குத் தெரியாது. இப் போது அந்த பத்திரிகைகள் அம்பலப் படுத்தவில்லை என்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு இதே பிச்சைக் காசுக்கு நாட்டின் இயற்கை வளத்தை விற்றிருப்பீர் கள் இல்லையா? விற்றிருக்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. ஏனெனில், 2007லிருந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்த மாக புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. அதாவது அலைக்கற்றைகள் ஒதுக்கப் படுவதற்கு முன்பாகவே புகார்கள். ஆனால், அந்த புகார்கள் எதையும் பொருட்படுத்தாமல், நீங்கள் முடிவு செய்தபடியே அலைக்கற்றைகள் ஒதுக்கி னீர்கள். எதிர்ப்பு வந்தபோதே அப்படிச் செய்த நீங்கள், விஷயமே வெளியில் தெரி யாமல் இருந்திருந்தால் இந்த ஊழலை யும் செய்யாமலா இருந்திருப்பீர்கள்?

பொதுத் தணிக்கைக் குழு இந்த ஒப் பந்தத்தை இன்னும் ஆராய்ந்து கொண் டிருப்பதாகக் கூறுகின்றது. அது இழப்பு குறித்து இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றது உண்மைதானே? அப்படி விற்க ஒப்புக் கொண்டதே ஊழல்தானே? பிஎஸ்என்எல்லிடமும் எம்டிஎன்எல் லிடமும் வாங்கப்பட்ட கட்டணத்தைக் கணக்கிட்டாலே ரூ.40,000 கோடிக்கு மேல் வருகின்றது.

பொய்களுக்கு அளவேயில்லை. அலைக்கற்றை எதுவும் ஒதுக்கப்பட வில்லை என்கிறார் பிரதமர் (அலுவலகம்). ஆனால், அந்த தனியார் நிறுவனம் தன் னுடைய அகண்ட அலை வரிசை சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு தொலைத்தொடர்புத் துறை அலைக் கற்றை ஒதுக்கியிருக்கின்றது. அதை இப்போது அந்த துறை திரும்பப் பெறப் போவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, தேவாஸ் நிறுவனத்திற்கு விற் பது என்பதை திட்டவட்டமாக முடிவு செய்து விட்டார்கள். இல்லை என்றால், எதற்கு அந்நிறுவனம் தன்னுடைய சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அலைக்கற்றை வழங்க வேண்டும்?

இந்த ஒதுக்கீட்டுக்கு முன்னர் அதற் கான பொது அறிவிப்போ, ஏலமோ, டெண் டரோ விடப்படவில்லை. 2ஜி ஒதுக்கீட் டிற்கு ஏலம் விடுங்கள் என்று மன்மோகன் சிங் அமைச்சர் ராசாவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், ராசா அதையும் மீறி தன்னிஷ்டம் போல் ஒதுக்கீடு செய்தார் என்று சிலர் எழுதி வருகின்றனர். அதா வது, பிரதமர் நல்லவர், ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதைப் போல. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் ‘முதலில் வந்தவ ருக்கு முன்னுரிமை’ என்பது கூட கடைப்பிடிக்கப்படவில்லை. அப்படியா னால் மன்மோகன் சிங்கை என்ன செய்ய வேண்டும்?

ஏன் ஏலமோ டெண்டரோ விடப்பட வில்லை என்கிற கேள்விக்கு இஸ்ரோ வின் இந்நாள் தலைவர் ராதாகிருஷ்ண னும், முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்க னும், ‘2003ல் தேவாஸ் மல்டிமீடியாவு டன் பேச்சு வார்த்தை துவங்கியபோது... வேறு நிறுவனங்கள் எதுவும் இருக்க வில்லை’ என்று பதிலளித்திருக்கின்ற னர். வேறு நிறுவனங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது பொது அறிவிப்பு வெளியிட்டால்தானே தெரியும்? அதைச் செய்யாமலேயே வேறு யாரும் இல்லை என்று முடிவிற்கு வருவது எப்படி சரி யாகும்?

இந்த ஒப்பந்தம் பற்றி பிரதமருக்கே தெரியாது என்கிறார்கள். நாங்கள் அரசாங் கத்திற்கே தெரிவிக்கவில்லை என்கிறார் கள். அவர்களது கூற்றுப்படியே இந்த விஷயம் விண்வெளி ஆணையம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தில் அமைச்சரவைச் செய லாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை யின் ராஜாங்க அமைச்சர் (இத்துறைக்கு பிரதமர்தான் காபினட் அமைச்சர்) ஆகி யோர் உறுப்பினர்கள். இணை அமைச் சருக்கும், அமைச்சரவைச் செயலாளருக் கும் தெரிந்த விஷயம் பிரதமருக்குத் தெரி யாது என்றால் யாராவது நம்புவார்களா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய் சொல்கிறார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“2005ல் மத்திய அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள் ளது. ஆகவே, ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்ரோவுடனான எங்களது ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பின்னர்தான் செயற்கைக்கோள் மூலமாக இணையதள சேவை வழங்கும் எங்களது திட்டத்தை வளர்க்கத் துவங்கினோம்’’ என்று தேவாஸ் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் விஸ்வநாதன் ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு (ஆகஸ்ட் 23, 2010) பேட்டியளித்துள்ளார். (தி ஹிந்து. 9.2.11). அப்படியெனில், பிரதமருக்குத் தெரியாது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அல்லவா?

ஊழல் மேல் ஊழல் நடந்து கொண்டி ருக்கின்றது. அடுத்தடுத்து ஒவ்வொன் றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் போல் வேறெப்போதும் இவ்வளவு ஊழல்கள் நடந்ததில்லை. ஆனால், மன்மோகன்சிங் மீது குற்றம் எதுவும் இல்லை என்று சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து பிதற்றி வருகின்றார்கள். நற்சான்றிதழ் கொடுப்ப வர்களின் யோக்கியதையைப் பார்த்தாலே மன்மோகன் சிங்கின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக, 1980களில் நிதி வருவாய் தொடர்பான ஊழல்கள் வெறும் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1991-96 கால கட்டத்தில் மட்டும் 26 ஊழல்கள் நடந் தன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டு காலத்தில் சிறுநாடு களின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அள விற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010).

இன்னும் எத்தனை ஊழல் நடந்திருக் கின்றதோ நமக்கு இப்போது தெரியாது. ஆனால், இவை அனைத்தும் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர் தான் இவ்வளவு பெரிதாகவும், இவ்வளவு அடிக்கடியும் நடந்து கொண்டிருக்கின் றன என்பது மட்டும் நிச்சயம்
                                                                                                                      நன்றி;தீக்கதிர்

சனி, 12 பிப்ரவரி, 2011


கொக்கேசியாவினைச் சேர்ந்த முதிவயர் போல தன்னை உருமாற்றிக்கொண்ட கனடாவிற்குள் நுழைந்த சீன இளைஞனை விடுவிக்குமாறு உத்திரவிடப்பட்டிருக்கிறது. 
வாராந்தம் கனேடிய எல்லைச் சேவைகள் நிறுவனத்திடம் வந்து பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 5,000 டொலர் பிணையில் இந்த இளைஞனை விடுவிக்குமாறு குடிவரவு மற்றும் அகதிகள் சபையினைச் சேர்ந்த நீதியாளர் அனிற்றா மேராய் ஸ்வேட்ஸ் வியாழனன்று உத்திரவிட்டிருக்கிறார். 
தனது பெற்றோர்களிடமிருந்து கிடைத்த பணத்தினைப் பயன்படுத்தியே இந்தச் சீன இளைஞர் கனடாவிற்குள் நுழைந்திருக்கிறார்.
குறிப்பிட்ட இந்த இளைஞனைக் கனடாவிற்குள் உருமாற்றி அனுப்புவதற்குத் துணைபோன குற்றத்திற்காக கொங்கொங்கினைச் சேர்ந்த எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 
கனடாவில் வசித்து வரும் சீனர்கள் இந்த இளைஞனுக்கு ரொறன்ரோவில் தங்குமிடத்தினை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக இந்த இளைஞனின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் டானியல் மைக் டோட் குறிப்பிட்டார்.
 இந்தச் சீனர் கனடாவிற்குள் நுழைவதற்குக் கைக்கொண்ட உத்தியின் அடிப்படையில் நோக்குமிடத்து இவர் எப்போதுமே கனேடியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவார் எனக் கனேடிய எல்லைச் சேவைகள் அமைப்பினது வழக்கறிஞர் வாதிட்டார். 
கனேடியச் சட்டத்திற்கு அமைய கனடாவிற்குள் சட்டவிரோமாக நுழைந்த ஒருவர் அகதி அந்தஸ்தினைக் கோருமிடத்து, சட்டவிரோதமாக நுழைந்தமைக்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது. 
இந்த இளைஞரது சட்டவாளரின் தகவலின்படி அடுத்த வாரமளவில் இவர் ரொறன்ரோ நகரில் குடியேறுவார் எனத் தெரிகிறது.
படத்தில் அவர் கிழவர் வேடம் மிக நன்றாக உள்ளது. நம்ம ஊர் சினிமா ஒப்பனையாளர்கள் அவரிடம் பாடம் படிக்கவேண்டும். 
                                                                                                                                                                                    நன்றி;தேடிப்பார்
 கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள் 

இந்தியா, சீனா, ரஸ்யா கடும்போட்டி.
  

 
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ளவதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கடையில் கடும் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டுத் துண்டங்களாகப் பிரித்துள்ளது.
இவற்றில் இரண்டு துண்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்திய அரச நிறுவனமான ‘கெய்ன் இந்தியா‘ என்ற நிறுவனத்துக்கே இந்த துண்டம் ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சீனாவுக்கும் ஒரு துண்டம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.
ஏனைய ஐந்து துண்டங்களையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஸ்யா சென்றிருந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு ரஸ்ய அரச நிறுவனம் இணங்கியிருந்தது.
இந்தநிலையில், மன்னார் கடற்படுக்கையில் எஞ்சியுள்ள ஐந்து எண்ணெய் அகழ்வுத் துண்டங்களுக்கு அனைத்துலக அளவில் கேள்விபத்திரம் கோரும் போது இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகள் கடும் போட்டியில் இறங்கவுள்ளன.
இதற்கிடையே இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட துண்டத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபடவுள்ளன.
இதற்கென ஆழ்துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அது சார்ந்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்து.
இப்போதாவது தெரிகிறதா கச்சத்தீவின் முக்கியத்துவம்.

வாரிசு இலங்கையிலும்


மக்களுடன் நாமல் ராஜபக்ஷ
நாமல் ராஜபக்ஷவுக்கு சிறு வயதிலேயே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தாரின் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் மேலோங்கி வருவதாகத் தெரிகிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் மூத்த மகன், ஜனாதிபதியின் சகோதரர்கள் இருவர், ஜனாதிபதியின் சகோதரி ஆகியோரும் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கு 23 வயதுதான் ஆகிறது என்றாலும், பெரிய அரசியல் பொறுப்புகளுக்காக அவர் தயார் செய்யப்படுகிறார் போலத் தெரிகிறது.

தன் மகனைக் காட்டி 'இவர்தான் எதிர்காலம்' என்று கூறுவது போல கட்டவுட்டாக நிற்கிறார் ஜனாதிபதி மஹிந்த.

கடந்த அரசாங்கத்திலேயே கூட ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்கள் அதி முக்கிய அரசு பதவிகளில் வீற்றிருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சென்ற வருடம் கிடைத்த வெற்றியின் விளைவாக ராஜபக்ஷ குடும்பத்தார், அதிலும் குறிப்பாக ஜனாதிபதியும் அவரது சகோதரரான பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும், இலங்கையில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளனர்.

அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் இலங்கை அரசியலில் புதிய விடயம் இல்லை என்றாலும், தற்போதைய இலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ஷ குடும்பம்தான் என்கிற ஒரு நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றப்பட்ட யுத்த வெற்றி சிங்கள பெரும்பான்மை சமூகத்தினரிடையே ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பின்னர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை தடுத்து வைத்தது கூட அந்த செல்வாக்கில் பெரிதாக பாதிப்பு எதையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

குற்றச்சாட்டு

தென்னிலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ஷ குடும்பத்தாரின் போஸ்டர்களைத்தான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

"ஜனாதிபதியின் மனைவி, சகோதரர்கள், மகன்கள், அத்தைகள் என்று எல்லோரும் அவர்களாகவே ஆதிக்கம் செலுத்துகிறர்கள். வேறு யாரும் அரசியலில் முன்னுக்கு வருவதற்கு அவர்கள் இடம் தருவதே இல்லை." என்று எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரான திலிப் வெடஆராச்சி கூறினார்.

வாரிசு அரசியல் இல்லை என்கிறார் நாமல்

தெற்காசியாவில் வழமையாக காணப்படும் வாரிசு அரசியல் செய்யும் குடும்பங்களில் ஒன்றுதான் தனது குடும்பமும் அதன் ஒரு பகுதிதான் தானும் என்று கூறப்படுவதை நாமல் ராஜபக்ஷ மறுக்கிறார்.


யார் நீங்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதுதான் முக்கியம்.

நாமல் ராஜபக்ஷ

"இது இருபத்தோராம் நூற்றாண்டு. இப்போதுள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். இனிமேலெல்லாம் குடும்ப அரசியல் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மக்களோடு இருக்கிறீர்கள், மக்களுக்காக உழைக்கிறீர்கள், நாட்டை நேசிக்கிறீர்கள் என்கிற வரைதான் உங்களால் வெற்றி பெற முடியும்." என்றும் அவர் கூறுகிறார்.

அரசியலில் நெடுங்காலம் பயணிக்க ஆயத்தமாகிறார் நாமல் ராஜபக்ஷ என்றே தெரிகிறது.
                                                                                                                                                                  
                                                                                                                                                                                              நன்றி;பி.பி.சி