இளங்கோவன் கனவு
திருவாரூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘’தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கொடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் நிற்பார்கள் என்று கலைஞர் சொல்லிவருகிறார். எங்களுக்கு 234 தொகுதிகள் வேண்டாம்.
திமுகவினர் மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கக்கூடாதா?
ஐவர் குழு பேசிக்கொண்டிருக்கிறது. நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம்.
தமிழக வேலைவாய்ப்புகளில் ஒருவர் கூட காங்கிரஸ்காரர் கிடையாது. ஓட்டுக்கு மட்டுமே காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதற்கு காரணம் காங்கிரஸ் காரனே காங்கிரஸை கண்டுகொள்ளாததுதான்.
எலும்புதுண்டால் போட்டால் வாலாட்டும் காங்கிரஸூக்குள் இருக்கிறார்கள். தன்மானம் காக்கப்படும் அளவில்சீட்டுகள் வழங்கப்படவேண்டும்’’என்று கூறினார்.
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னாலும் சொன்னார். ஆளாளுக்கு கன்னாபின்னானு கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள்.விஜயகாந்த்,விஜய் இப்போ காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே முதல்வர் கனவுதான் காண்கிறார்கள்.
234தொகுதி கொடுத்தால் மட்டும் நின்றுவிடுவார்களா? வேட்பாளர்கள் 234பேர்களுக்கு என்ன செய்வார்கள். அதன் பின் ஓட்டு போடவேறு ஆட்கள் வேண்டுமே.
தமிழகவேலைவாய்ப்புகளில் ஒருவர்கூட காங்கிரஸ்காரன் இல்லையாம் .இந்தக் கவலை தேவையா? தமிழக காங்’கில் அனைவரும் தலைவர்களாகவும் ,அல்லக்கைகளாகவும் இருக்கையில் வேலைபார்க்கயார் தயார்? என்னவோ சாதி ஒதுக்கீட்டில் கிடைக்காதத் தலைவர் போல் பெசுகிறார்.
தமிழக மக்களின் இப்போதைய ஆசையே காங்கிரசை தி. மு.க, கழற்றிவிட்டு அவர்கள் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிட்டு பா.ஜ.க வைவிட கேவலமாகத் தோற்க வேண்டும் என்பதுதான். திராவிடக்கட்சிகள் தோளில் ஏறி ஓட்டு வாங்கிவிட்டு இந்த தெனாவட்டு தேவையா?