ராம்[ஜேத்மலானி] கணை


சோனியா குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் கணக்கு உள்ளது

சொன்னவர் ராம்ஜெத்மலானி.இவர் பிரபல வழக்குரைஞர் மட்டுமல்ல,அரசியல்வாதியும்கூட.பா.ஜ.கட்சியில் ஒருவர்.அவ்வப்போது பரபரப்பை உருவாக்குவதில் சுப்பிரமணியசாமிக்கு சளைத்தவர் அல்ல.ஆனால்
சு.சாமியைவிடக் கொஞ்சம் ஆதாரத்துடன் பேசுபவர் இவர்.

சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டு வைக்கப்பட்டுள்ளது என்று பிரபல வழக்குரைஞரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிதி நிலை அறிக்கை தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜேத்மலானி, “சுவிஸ் வங்கிகளில் காந்தி குடும்பத்தார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
“இவர்கள் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்பதை சுவிஸ் பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. கெண்ட் புத்தகம் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியிலிருந்து ராகுல் காந்திக்கு பணம் வந்துகொண்டிருக்கிறது நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் விளம்பரமே வந்துள்ளது” என்றும் ஜேத்மலானி உறுதிபடக் கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கிக் கணக்குப் பட்டியலில் சோனியாவின் பெயரைச் சேர்த்ததற்காக அத்வானி, சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளாரே என்று செய்தியாளர்களிடம் வினவியதற்கு, “அத்வானி மன்னிப்பு கோரவில்லை. இது வரை நீங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததில்லை, இப்போது அப்படி ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளீர்கள் என்று தான் கூறியுள்ளார்” என்று ஜேத்மலானி பதிலளித்துள்ளார்.
ஜேத்மலானி சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?