பார்வதி அம்மாளுக்கு சிங்களனின் அஞ்சலி
இந்தத் தொடர்பில் மேலும் தெரியவருவது:’ நேற்றைய தினம் மாலை 5மணிக்கு திருமதி பார்வதி அம்மாளின் திருவுடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இரவு பத்துமணிவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு அம்மாளை தகனம் செய்ய பற்றாளர்கள் சிலர் நின்றுள்ளனர்.
குறித்த பற்றாளர்கள் மயானத்தை விட்டு வந்த பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பொழுது அம்மாளின் சாம்பலை காட்டு மிராண்டித்தனமாக கிளறி அவற்றை அள்ளிக் கொண்டு கடலில் எறிந்துள்ளனர். அத்தோடு அந்தப் பகுதியில் நின்ற மூன்று நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில் மர்மமான முறையில் இந்த விடயம் நடைபெற்றிருந்தாலும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது யார் நடத்தியிருப்பார்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது. அத்தோடு பார்வதி அம்மாளின் சாம்பலைப் பார்த்து பயம் கொள்பவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
சிங்களன் பிரபாகரன் தாயார் சாம்பல் மீது கூட பயமா? இவர்கள் இன்னமும் நம் தமிழ் உறவுகளை சகக்குடிமக்களாக ஏற்று நடத்துவார்கள் என இந்தியாரசு கூறுவதை நம்ப வேண்டுமா?