கொக்கேசியாவினைச் சேர்ந்த முதிவயர் போல தன்னை உருமாற்றிக்கொண்ட கனடாவிற்குள் நுழைந்த சீன இளைஞனை விடுவிக்குமாறு உத்திரவிடப்பட்டிருக்கிறது.
வாராந்தம் கனேடிய எல்லைச் சேவைகள் நிறுவனத்திடம் வந்து பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 5,000 டொலர் பிணையில் இந்த இளைஞனை விடுவிக்குமாறு குடிவரவு மற்றும் அகதிகள் சபையினைச் சேர்ந்த நீதியாளர் அனிற்றா மேராய் ஸ்வேட்ஸ் வியாழனன்று உத்திரவிட்டிருக்கிறார்.
தனது பெற்றோர்களிடமிருந்து கிடைத்த பணத்தினைப் பயன்படுத்தியே இந்தச் சீன இளைஞர் கனடாவிற்குள் நுழைந்திருக்கிறார்.
குறிப்பிட்ட இந்த இளைஞனைக் கனடாவிற்குள் உருமாற்றி அனுப்புவதற்குத் துணைபோன குற்றத்திற்காக கொங்கொங்கினைச் சேர்ந்த எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கனடாவில் வசித்து வரும் சீனர்கள் இந்த இளைஞனுக்கு ரொறன்ரோவில் தங்குமிடத்தினை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக இந்த இளைஞனின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் டானியல் மைக் டோட் குறிப்பிட்டார்.
இந்தச் சீனர் கனடாவிற்குள் நுழைவதற்குக் கைக்கொண்ட உத்தியின் அடிப்படையில் நோக்குமிடத்து இவர் எப்போதுமே கனேடியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவார் எனக் கனேடிய எல்லைச் சேவைகள் அமைப்பினது வழக்கறிஞர் வாதிட்டார்.
கனேடியச் சட்டத்திற்கு அமைய கனடாவிற்குள் சட்டவிரோமாக நுழைந்த ஒருவர் அகதி அந்தஸ்தினைக் கோருமிடத்து, சட்டவிரோதமாக நுழைந்தமைக்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
இந்த இளைஞரது சட்டவாளரின் தகவலின்படி அடுத்த வாரமளவில் இவர் ரொறன்ரோ நகரில் குடியேறுவார் எனத் தெரிகிறது.படத்தில் அவர் கிழவர் வேடம் மிக நன்றாக உள்ளது. நம்ம ஊர் சினிமா ஒப்பனையாளர்கள் அவரிடம் பாடம் படிக்கவேண்டும்.
நன்றி;தேடிப்பார்