மீனவர்களை பாதுகாக்க,,,,

மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்திய,தமிழக அரசுக்கு தற்காலிக நிம்மதி. ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதும்,கொல்லப்படுவதும்,சிறை பிடிக்கப்படுவதும் அடிக்கடி நடை பெறும் செயலாக மாறியுள்ளது சரியானதல்ல.இடையே இலங்கை அரசு தனது மீனவர்களை “இங்கு தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்து தங்களது வலைகளை நாசம் செய்வதாகவும், மீன்களைக் கொள்ளையடிதுவிட்டு செல்வதாகவும்” அறிக்கைகளை விடச்செய்து தனது செயள்களை நியாயப்படுத்துகிறது.இச்செயல் சரியான சகுனித்தனம்.
                        தமிழகமீனவர்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க
இந்திய அரசு செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் உள்ளது. நமது மீனவர்களுக்கு இந்திய எல்லைக்கட்டுப்பாட்டை வரையறையை சரிவரக்
காண்பிக்கவேண்டும். கடலோரக் காவல்படை என்ற தண்டச்சம்பளப்படையினரை கொஞ்சம் அவ்வப்போது வேலை பார்க்கக் கூறவேண்டும். நமது மீனவர்கள் எல்லை தாண்டும் போது அறிவுறுத்தி
டவும், நமது எல்லையில் வந்தே வாலாட்டும் இலங்கைப்படையினரை அப்புறப்படுத்தவும்  செய்யவேண்டும்.
இதைக் கூட செய்யாத கடலோரக்காவல் படையினர் எதற்கு? தீவிரவாதிகளையும் கடல் வழியே விட்டு விடுகின்றனர்.போதைப் பொருட்களும் கடல் வழியே தாராளமாகவந்து செல்கின்றன.இந்த வேலையாவது செய்யக்கூறவேண்டும்.
  இதன்மூலம் இது போன்ற தாக்குதல்கள் குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
 எல்லாவற்றையும் விட மிகமுக்கியமான ஒன்று.இந்திய அரசு ஏமாளித்தனமாகவோ அல்லது எந்தக்காரணத்திற்காகவோ தாரை வார்த்த கட்சத்தீவை மீண்டும் பெறவேண்டும். அதனை வைத்தே சில சித்து வேலைகளை இலங்கை அரசு செய்து வருகிறது. சீனாவுக்கு குடக்கூலிக்கு கட்சத்தீவை விடப்போவதாக செய்திகள் வருகிறது. அசாம் மூலம் வடகில் இருந்து தலைவலி .கட்சத்தீவு மூலம் தெற்கில் கால் குடைச்சல் தர சீனாவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது.மேலும் வங்கக் கடலில் கட்சத்தீவு அருகே பெட்ரொல் அதிக அளவு இருப்பதாக ஆய்வுகள் கூறுவது மத்திய அரசுக்கு தெரியாதது அல்ல.
       இதை விட மத்திய அரசுக்கு அதாவது காங்கிரசுக்கு ஒரு வேண்டுகோள்.
 நீங்கள் திட்டம் போட்டது போன்று விடுதலைப் புலிகளை மட்டும் அல்ல, ஒரு பழமையான தமிழினப்படுகொலை முடிந்துவிட்டது. இனியாவது இங்கு இந்திய தமிழர்களை ,தமிழகமீனவர்களை வாழ விட வழிவிடலாமே?
     இங்கும் உங்களுக்கு[இன்னமும்] ஓட்டுப்போடும் அப்பாவிகள் அல்லது ஏமாளிகள் இருக்கிறார்கள். அவர்களையாவது கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?