ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க....?
‘ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்கலாம். கட்டான உடலைப் பெறலாம்’ என உணவுகளையும், உபகரணங்களையும் விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைக்க களம் இறங்கியிருக்கின்றன சில நிறுவனங்கள். இவையெல்லாம் உடல் எடையைக் குறைத்து விடுமா? இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் உண்மையிலே உடலை இளைக்க வைக்க முடியுமா? எடையை குறைக்கும் பெல்ட்.? டெலி ஷாப்பிங் நிறுவனங்கள் சில மாடல்களைக் காண்பித்து இந்தப் பெல்ட்டை நீங்கள் நிற்கும் போதோ, உட்காரும் போதோ அரை மணி நேரம் வயிற்றில் கட்டி கொண்டாலே போதும். தொப்பை குறைந்து 3 வாரங்களிலே அழகான இடையைப் பெறலாம் என்கிறது. நம் உடலில் பல்வேறு இடங்களில் கொழுப்புத் தேங்கியிருக்கும். அதை மொத்தமாகக் குறைக்க முடியுமே தவிர, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெல்ட் அணிந்து கொழுப்பை குறைக்க முடியும் என்பதில் உண்மை இல்லை. வயிற்றைச் சுற்றி கட்டியிருப்பதால் உடல் சூடாவதன் மூலம் வியர்க்குமே தவிரக் கலோரிகளை எரிக்காது. இதனால் உடல் சூடு, சூடு கட்டிகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள்தான் வரும். கொழுப்பு நீங்காது. பிரசவித்த பெண்களுக்கு இடுப்புக்குக் கீழ் க...