தினம்ணியின் தீர்ப்பு,,.!
அரசியல் பக்கம் போக வேண்டாம் என்றாலும் சிலர் எழுதுவதை பார்க்கையில் பேனாவை கை தானாகவே எடுக்கிறது.தினம்ணி.இதை வைத்திய நாதன் ஆசிரியரானதில் இருந்து கொஞ்சம் ,கொஞ்சமாக படிப்பதை நிறுத்தி விட்டேன்.நான் மட்டுமா என்றால் இல்லை.கடைக்காரரே சொன்னார்.10 விற்ற இடத்தில் இப்போது விற்பனை இல்லை.முகவரும் விற்காததை திருமப் வாங்க மாட்டேன் என்பதால் இப்போது 3 அல்லது 2 மட்டுமே வாங்குகிறேன்.அதுவும் ஞாயிறுதான் எல்லாம் விற்கும் என்றார்.
நான் வாங்காதற்கு காரணம்.
நடுனிலை என்பதற்கு உதாரணமாக இருந்த ,இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களை அரசு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த பெருமை கொண்ட தினமணியின் பாஜக,அதிமுக ,ஜெயலலிதா சார்பான செயல்பாடுகள்தான்.
வைத்தியின் ஆசிரியர் பொறுப்புக்கு பின்னர் இலை மறைவு காய மறைவாக ஆரம்பித்து இப்போது நமது எம்ஜிஆரை விட கட்சி பத்திரிக்கையாகி விட்டது.வைத்திய நாதன் பாரதியாரின் மீசையும் ,அவரின் வரிகளை பத்திரிக்கையிலும் வைத்திருக்கிறாரே ஒழிய அவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தியாகவே மாறி விட்டார்.
அது சரி.இப்போ எதற்கு வைத்தியின் தினமணி புகழ்.
02.10.2014 [காந்தி பிறந்த நாளில்தான்]தினமணியில் வெளி வந்த கட்டுரை தான் இப்படி நம்மை உசுப்பேத்தி விட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நான் வாங்காதற்கு காரணம்.
நடுனிலை என்பதற்கு உதாரணமாக இருந்த ,இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களை அரசு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த பெருமை கொண்ட தினமணியின் பாஜக,அதிமுக ,ஜெயலலிதா சார்பான செயல்பாடுகள்தான்.
வைத்தியின் ஆசிரியர் பொறுப்புக்கு பின்னர் இலை மறைவு காய மறைவாக ஆரம்பித்து இப்போது நமது எம்ஜிஆரை விட கட்சி பத்திரிக்கையாகி விட்டது.வைத்திய நாதன் பாரதியாரின் மீசையும் ,அவரின் வரிகளை பத்திரிக்கையிலும் வைத்திருக்கிறாரே ஒழிய அவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தியாகவே மாறி விட்டார்.
அது சரி.இப்போ எதற்கு வைத்தியின் தினமணி புகழ்.
02.10.2014 [காந்தி பிறந்த நாளில்தான்]தினமணியில் வெளி வந்த கட்டுரை தான் இப்படி நம்மை உசுப்பேத்தி விட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தினமணி தலையங்கம் : சட்டமும் சமுதாயமும்
By இரா. சோமசுந்தரம்
First Published : 02 October 2014 01:42 AM IST
By இரா. சோமசுந்தரம்
First Published : 02 October 2014 01:42 AM IST
சில முக்கிய கருத்துக்குவியல் பகுதிகள்
ஒரு குடும்பத்தில் ஒருவர் சிறை செல்லும்போது அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அழுகிறார்கள். மிகப்பெரும் துக்கம் கவிழ்கிறது.
சிறை சென்ற நபர் அடிதடியில் ஈடுபட்டிருக்கலாம். கொலை, திருட்டாக இருக்கலாம். எத்தகையக் குற்றமாக இருந்தாலும், அந்தக் குடும்பம் அந்த நபருக்காக கண்ணீர் சிந்தவும், தண்டனையிலிருந்து அவரை மீட்கவுமே முயலும். நீதிமன்றம் தண்டித்ததற்காக குடும்பமும் அவரை தண்டிப்பதில்லை.
எல்லாமும் எல்லாருக்கும் தெரியும். தலைவர்களின் குறை, நிறைகளோடுதான் மக்கள் ஏற்கிறார்கள். தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்கிறார்கள். சமூகம் ஒருபோதும் அப்பாவித்தனமாக வாக்குகளை அளிப்பதேயில்லை.
ஒரு சமூகம் எந்தெந்தக் குறைகளை பெரிதாகக் கருதவில்லையோ அந்தக் குறைகளை அந்த சமூகம் அதன் தலைவனிடமும் காணாது; பெரிதுபடுத்தாது.
இதே உளவியலைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கிலும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
இதுதான் தமிழ் நாட்டு மக்களின் கண்ணீரா?ஒருவராவது ஜெயலலிதா இல்லாத அமைச்சரவையில் நான் அமைச்சராக மாட்டேன் என்று சொன்னார்களா?எல்லாம் கிளிசரின் கண்ணீர்.யார் ரொம்ப அழுவது என்று போட்டிதான் பதவியேற்பு விழாவில்.. |
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதன் மூலம் அவர் இந்த சமுகத்திற்கு குறிப்பாக நீதிபதிக்கு சொல்லும் கருத்து மிகத்தெளிவாக இருக்கிறது.ஜெயலலிதா கொலையே செய்தாலும் விடுவிக்க வேண்டும்.காரணம் அவர் மக்கள் வாக்குகளைப் பெற்று முத்ல்வராக இருக்கிறார்.
என்ன தெளிவான பார்வை.அப்படி என்றால் ஜெர்மனிய மக்களின் அபிரிதமான செல்வாக்கைப்பெற்ற் ஹிடலர் செயல்கள் நியாயம்,முசொலினி செய்தது நியாயம்.
ஏன் கசாப் மும்பை தாஜ் ஓட்டலில் அப்பாவிகளை கொன்று குவித்தானே.அவனை தூக்கில் போடும் போது அவன் உற்வினர்கள் அழுதார்களே.அவன் ஒன்றும்செய்யவில்லை என்று பாகிஸ்தான் அரசே சொன்னதே.அவனை தூக்கிலிட்டது தவறு.அப்படீத்தானே சோம,சுந்தரம் அவர்களே.
இன்னுமும் சில கேள்விகள்:
ஜெயலலிதா எவ்வளவுதான் மக்கள் சொத்தை கொள்ளையடித்து சொத்துக்களை குவித்தாலும் மக்கள் வாக்களித்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.அப்படி என்றால் இங்கு நீதிமன்றம்,உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் எல்லாம் எதற்கு அரசியலமைப்பு சட்டம் எதற்கு. சோம சுந்தரம் தினமணி கட்டுரை எழுதுவதற்காக சோமாறி சுந்தரமாக மாறியது ஏன்?இதே கருத்தை 2ஜி இழப்பீடு வழக்குக்கும் பொருத்தி பார்க்காமல் ஆ.ராசா நாமா என்று கொட்டை எழுத்தில் தினமணி செய்தி வெளியிட்டது மகா தப்புதானே.உங்கள் தலைவி ஜெயா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி வசமாக மாட்டிக்கொண்டு கணக்கு காண்பிக்க இயலாமல்தான் இந்த வழக்கையே 18 ஆண்டுகள் இழுத்தடித்தார்.கடைசியில் மாட்டிக்கொண்டார்.
ஆனால் 2ஜி யில் இந்த 176 லட்சம் கோடி ஊழல் அல்ல.ஏலம் முறை மாற்றியதால் அரசுக்கு ஏற்பட்டுள்ள் இழப்பீடுதான் என்று தெளிவாக கணக்கு தணிக்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அப்படி நடந்த ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்,நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு பங்கிருக்கிறது.
அவர்களுக்கு தெரிந்து,அவர்கள் வழிகாட்டுதலின் பெயரில்தான் நட்ந்துள்ளது.ஆ.ராசா வெறும் அமைச்சர் ,அம்பு மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.ஆனால் தினமணி உடபட் ஊடகங்கள் திமுக,ஆ.ராசா,கனிமொழி ஆகியோர் மட்டும் இவ்வளவு பணத்தை விழுங்கி விட்ட்தாக எழுதி,எழுதி உண்மையான குற்றவாளியிடமிருந்து மக்களை திசை திருப்பியது எவ்வளவு பெரிய முறை கேடு. இப்போதைய உங்களின் புதிய சூத்திரப்படி ஜெயலலிதாவுக்கு நீங்கள் தரும் வக்காலத்து அப்படியே ஆ.ராசா,கனிமொழி வழக்குக்கும் பொருந்தும் அல்லவா?அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் தானே?அதைவிட முக்கியம் அவர்கள் தங்கள் வழக்குகளை பொய் வழக்கு என்று ஆரம்பம் முதலே சொல்லிவருகிறார்கள்.
வாய்தாக்கள் வாங்கவில்லை.
நீதிபதி முன் தாங்களே வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவாளிகள் என்று தீர்ப்பு வரும் முன்னரே திகார் சிறையில் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல சிங்கிகளே.ஜெயலலிதா வீட்டில் அள்ளியது போல் கணக்கில் வராத பணம்,நகைகள்,செருப்புகள்,கைக்கடிகாரங்கள் சொத்து ஆவணங்கள் மூட்டை,மூட்டையாக அள்ளப்படவில்லை.இப்போது இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த வினோத் ராய் மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் இருவருக்கும் தெரிந்து அவர்கள் கூறியபடிதான் ஆ.ராசா செயல்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாக புத்தகமே வெளியிட்டுள்ளார்.இப்போது ஊடகங்கள் ஊதி பெரிசாக்கிய ,திமுகவை குர்றவாளியாக்கிய 2ஜி வழக்கே திசை மாறி தடுமாறிக்கொண்டிருக்கிறது.இது பத்திரிகையாளர்களான் உங்களுக்கு தெரியாததா?தெரிந்தே மன சாட்சியின்றி இனவெறியுடன் செயல்படுகிறீர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டம் படுகிறீர்கள். ஆ.ராசா வீட்டில்,அவரது நண்பர்கள்,உறவினர்கள் வீடெல்லாம் சோதனையிட்டும் ஒன்றும் பிடிபடவில்லை.ஒரு குற்றமும்செய்யாமல் திகாரில் அடைக்கப்பட்ட ஆராசா வும் அவர் குடும்பமும் உங்கள் கருத்துப்படி ரொம்பவும் மகிழ்ச்சியாக வா இருந்தார்கள்.அவர்கள் வேதனை உங்களை சும்மா விடுமா?உங்கள் தலைவி மாட்ட அதுவே காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் நம்பும் ஊழ்வினைப் பயனை நாங்கள் நம்பாவிட்டாலும் உங்கள் நம்பிக்கைக்காக சுட்டிக்காடுகிறோம். 2011இல் ஆட்சிக்கு வந்த உடன் ஜெயலலிதாவால் முதலில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு பின்னர் யாரிடமாவது முன் தேதியிட்டு புகார் வாங்கி நில அபகரிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதே.அப்போது அவர்களின் குடும்பத்தினர என்ன பட்டாசு வெடித்து அல்வா வாங்கி வழங்கினார்களா?அழத்தானே செய்தனர்.அவரை தங்கள் குடும்பத்தலைவராகத்தானே வைத்திருந்தார்கள் உங்கள் சூத்திரப்படி அவர் குர்றவாளியா?இல்லையா?
சிறையில் அடைத்தது தவறா?இல்லையா?
ஜெயா சிறையில் அடைத்தவர்களில் 99 சதவிகிதம் பேர் குர்றவாளி இல்லை என்று வெளியே வந்து விட்டார்களே அது தினமணிக்கு தெரியுமா?
அது எப்படி கொஞ்சமும் வெட்கமின்றி ஒரு குற்றவாளி என்று 18 ஆண்டுகால விசாரணைக்குப்பிறகு சிறை தண்டனை அளிக்கப் பட்ட வருக்கு ஆதரவாக எழுத முடிகிறது.
கொஞ்சம் கூட மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா.
அப்படி மனசாட்சியே இல்லாத நீங்கள் ஊடகத் துறையில் இருப்பதும் தினமணி என்ற பாரம்பரிய மிக்க இதழில் எழுதுவதும் வேதனையான கால்ம்.தினமணி,இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இதழ்கள் எத்தனை பெரிய ஊழல்களை,ஆட்சியாளர்களின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.தினமணி செய்திகள் உண்மையானவை.
அதை படிப்பது மட்டுமல்ல கையில் ஏந்தி செல்வதே பெருமை என்றிருந்த காலம் உண்டு.
அது ரொம்ப முன்பு கூட அல்ல.
தில்லானா மோகனம்பாள் வைத்தி கதாபத்திரத்தையே வெட்கச்செய்யும் வைத்திய நாதன் வருவதற்கு முன்புள்ள காலம்தான்.
.பாரதியின் வரிகளை மேலே எழுதியும் அவரை போல் மீசையும் வைத்துக் கொண்டு கோயபல்ஸ் பணியை செய்வது ..வேறென்ன சொல்ல ..?
காலத்தின் கட்டாயம்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே அம்பத்திரெண்டு அருவாளாம்.அல்லது பினைவாங்க முடியாதவருக்கு ஐநூறு வக்கீல்களாம். |
இதோ நியாயமான விகடன் தலையங்கம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காமெடி கண்ணீர் கலாட்டா..?