"எபொல்லா" வைரஸ் சோகமும்- பால் கா[வ]மெடியும்

அமெரிக்காவின் பரிசோதனையா ?

 உலக நாயகன் கமல்ஹாசனின் "தசாவதாரம்" படம்.
கமல்ஹாசன் தான் கதை -வசனம்.
"என்னை போன்ற விஞ்சானி கள் இது போன்ற ஆராய்ச்சிகள் செய்ய புஷ் போன்ற ஆட்கள் பணம் கொடுத்து செய்யச்சொல்லாமல் உங்கள் கடவுள் செய்திருக்கலாமே”?
அதுதான் உண்மை என்பதை இப்போது உலகை அச்சுறுத்தி வரும் ”எபோல்லோ ”நிருபித்து வருகிறது.
எய்ட்ஸ் கிருமி உற்பத்திக்குப் பின்னாள் அமெரிக்கா இருப்பதாக சந்தேகத்துக்குப் பின்னர் இப்போது எபொல்லோ கிருமிகள் உருவாக அமெரிக்காத்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.இந்த குற்ற சாட்டை லைபீரிய அரசு வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
எய்ட்ஸ் கிருமிகளுக்கு ஆப்ரிக்க நாடுகள் அதன் மக்கள் பரிசோதனை களமாக மாறியது போல் எபொல்லோவுக்கும் அவர்கள் பயன் ப்டுத்தப்பட்டுள்ளார்கள்.

தென்னாபிரிக்க நாடான லைபீரியாவில் தான், முதன் முதலாக எபொல்லா வைரஸ் தாக்கம் தொடங்கியது. 
இந்த வைரஸ் இதுவரை காலமும் எங்கே இருந்தது ? 
இதன் தாக்கம் ஏன் முன்னர் ஏற்படவில்லை. ?
அப்படி ஏற்பட்டிருந்தால் முழு மனித குலமும் அழிந்து போய் இருக்கும் அல்லவா ? 
 திடீர் என்று பஞ்சப்பட்ட நாடான லைபீரியாவில் இது திடீர் எனப் பரவியது  ? தற்போது லைபீரிய அரசாங்கம்நேரடியாகவே அமெரிக்க அரசை குற்றஞ்சாட்டியுள்ளது.
 அமெரிக்க விஞ்ஞானிகளால் தயாரிக்கபப்ட்ட இந்த எபொல்லா வைரஸை லைபீரியாவில் சோதனை நடத்திப் பார்த்துள்ளார்கள் என்று லைபீரிய அரசாங்கம் நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளது உலகை அதிரவைத்துள்ளது.

எயிட்ஸ் வைரசையும் அமெரிக்காவே கண்டு பிடித்தது என்று கூறப்படுகிறது. இதேவேளை ஆந்திராக்ஸ் என்று அழைக்கப்படும் பவுடர் போன்ற வைரசையும் அமெரிக்காவே உற்பத்தி செய்தது.
 அமெரிக்க பாதுகாப்பு பிரிவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும், பயோ வெப்பன்( bio weapon) என்னும் திணைக்களம் வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பதிலாக இவ்வாறு புதுவையான வைரஸை தயாரித்து வருகிறது.
 ஒரு வைரசுடன் மற்றுமொரு சக்திவாய்ந்த வைரசை கலந்து அவற்றிற்கு பிறக்கும் பிள்ளையை, மேலும் ஒரு சக்திவாய்ந்த வைரஸோடு ஒன்றினையச் செய்து, இப்படி பல கட்டமாகச் செய்து இறுதியில் பலம்பொருந்திய மற்றும் மனித உடலில் உள்ள வெண்குறுதிக் கலங்களால் அழிக்க முடியாத வைரஸை இவர்கள் ஆய்வு கூடங்களில் உருவாக்குகிறார்கள்.
ஒரு நாட்டை குண்டு போட்டு அழிக்க முடியாது என்று இதுபோன்ற வைரசை பரவிட்டாவது அழிக்க முடியும் அல்லவா ? 
இதனை அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒரு பகுதி நீண்ட நாட்களாகவே செய்து வருகிறது. இது பல தடவை வெளிச்சத்திற்கு வந்த விடையம் ஆகும். இதுபோலவே தற்போது எபொல்லா வைரசையும் அவர்கள் உலாவ விட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த நோய் நன்றாகப் பரவ ஆரம்பித்ததும், அமெரிக்க கம்பெனி ஒன்று தன்னிடம் இதற்கு தடுப்பு மருந்து உள்ளதாக அறிவிக்கும். 
பெரும் மில்லியன் கணக்கான டாலர்களை ஒருவர் நாடுகளும் செலவு செய்து இந்த மருந்தை அமெரிக்க கம்பெனியிடம் இருந்து வாங்க வேண்டி நேரிடும். தற்போது கூட உலகில் மில்லியன் கணக்கான மக்கள் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
இப்போது  இவர்கள் சாப்பிடும் பல மருந்து மாத்திரைகளை அமெரிக்க கம்பெனிகள் தான் தயாரித்து விற்று வருகிறார்கள் என்பது உலகமே அறிந்த து .

சோக செய்திக்குப்பின் ஒரு நகைப்பு செய்தி.
பால் காவடி கூத்து.
ஜெயலலிதா விடுதலைக்காக[?] மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கா[வ] ம டி திருவிழா நடத்தினார்.
இப்படி காவடி எடுத்தால் குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றால் எல்லோரும் எடுத்து வெளி வந்து விடுவார்களே?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு குற்றவாளியாக தற்போது பெங்களூரில் சிறையில் இருக்கிறார்.
 தங்களது செல்வாக்கை மக்களிடம் காட்ட வேண்டு என்பதற்காகவும், சிறையிலிருக்கும் ஜெயலலிதா, தங்களுடைய விசுவாசத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இதில் பல்வேறு காரணங்களுக்காக இறந்தவர்களை அவர்களின் குடும்பத்துக்கு பணம்கொடுத்து சரிக்கட்டி ஜெயலலிதா சிறைக்காக செத்து தொலைத்தவர்களாக செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.ஜெயா சிறை சென்று பத்து நாட்களுக்கு மேலாகிய நிலையில் நேற்று ஒருவர் அதிர்ச்சியில் மாரடைத்து செத்ததாக கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளார்.இந்த செத்த பட்டியல் 154 வரை வந்துள்ளது.இதில் விபத்தில்,கொலையில் செத்தவர்களை கொண்டுவர முடியாத சோகத்தில் அதிமுகவினர் உள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்காக பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. 
அதிகாலையில் சிம்மக்கல் வைகையாற்றில் ஆயிரக்கணக்கான பெண்களை வாகனங்களில் அழைத்து வந்து இலவசமாக சில்வர் குடத்தில் ஒரு பாக்கெட் பால், தேங்காய், நுறு ரூபாய் சகிதம் கொடுத்து ஊர்வலத்தை நடத்தினார்.
மேலும், மொட்டை போடுகிறவர்களுக்கு 500 ரூபாய், வேல் குத்துகிரவர்களுக்கு 2 ஆயிரம், பறவை காவடி எடுப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று பட்டுவாடா செய்து மதுரை சிம்மக்கல் அருகில் இருந்து வியாபார நிறுவனங்கள் அதிகமிருக்கும் மேலமாசி வீதி வரைக்கும் சாலைகளை அடைத்து அல்லோகல படுத்திவிட்டார்.
இதற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?
இதில் இன்னொரு கொடுமையாக, அதிகாலையிலிருந்து காத்திருந்த பல பெண்களுக்கு பால் குடங்கள் வழங்கப்படாததால் அமைச்சரை திட்டி தீர்த்து விட்டு சென்றனர். 
சில பெண்கள் குடங்களையும்,பணம்,பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு இன்னும்  ஊர்வலத்தில் செல்லாமல் குறுக்கு வழியில் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
அமைச்சர் நடத்திய இந்த நிகழ்ச்சியால் திபாவளிக்கு பொருட்கள் வாங்க மதுரைக்கு வந்த தென்மாவட்ட மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள்.குடம் ,பணம் கிடைக்காதவர்கள் மட்டுமல்ல,தீபாவளி துணி,மணி மற்றும் பொருட்களை வாங்க வந்து போக்குவரத்தில் சிக்கித்தவித்த பொது மக்களும் அமைச்சரையும்,அதிமுகவினரையும் திட்டி தீர்த்தபடி இருந்தனர்.மொத்தத்தில் பால் காவடி மக்களிடம் கோபத்தை தான் உண்டாக்கி விட்டது.அது எப்படியும் போகட்டும் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு காவடி செய்தி போனால் போதும் என்பதே இப்போதைக்கு செல்லூர் ராஜுவின் பிரார்த்தனை.
comedy_kavady (1)
அலகில் வேல்.இவருக்கு 2000.
comedy_kavady (2)
குடம்,பால்,500.
comedy_kavady (3)
comedy_kavady (4)
பறவைக்காவடி 10000.[தீப வளி சிறப்புதான்]

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?