ஜெயலலிதாவின் முக்கிய பினாமி

தாது மணல் கொள்ளையன்  வைகுண்டராஜன் 

நீதிபதி குன்ஹா தீர்ப்பின் பின்னணியில் வெளியாகும் புதிய தகவல்கள்

மைக்கேல் டி.குன்ஹாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலமாக "ஜெயலலிதாவின் ஒரு மிகப் பெரிய பினாமியாக, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள எஸ்.வைகுண்டராஜன் உள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவு செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

'பெங்களூரு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்து குவிக்க 32 பினாமி நிறுவனங்களை உபயோகித்ததுஉறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது ரிவேர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் ஆகும். 
இந்தநிறுவனம் மூலம் ஜெயலலிதா1190 ஏக்கர் நிலங்களை தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டங்களில் 1994ம் வருடம் வாங்கியுள்ளார். ஜெயலலிதா தனது ஊழல்பணத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலமாக வாங்கப்பட்டது என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.
மேலும் ஜெயா தொலைக்காட்சியிலும் வைகுண்டராஜனுக்கு பெரும்பான்மையான பங்கு உண்டு.
அவர் தற்போது சானல் 7 என்ற பெயரிலும் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த 1190 ஏக்கர் நிலம் மற்றும் இப்படிசட்டவிரோதமாக வாங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசுடைமையாக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் வெளியுலகத்திற்கு தெரியாத உண்மை என்னவென்றால் இந்த ரிவேர்வே அக்ரோ நிறுவனத்தின் இயக்குநராக 2003 முதல் இன்று வரை இருப்பவர் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் எஸ்.வைகுண்டராஜன் என்பதுதான்

அவர் தான் இந்த 1190 ஏக்கர்நிலத்தை பாதுகாத்து வந்தவர்
.இந்தப் பின்னணியில் தான்ஜெயலலிதா, வைகுண்டராஜனையும், அவரது நிறுவனமான வி.வி.மினரல்சையும் காப்பாற்ற கடந்த ஒரு வருடமாக முயற்சித்து வருகிறார். 
வி.வி ,மினரல்ஸ் நிறுவனத்தின் மணல் கொள்ளையை கட்டுப்படுத்திய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார்  இதானால்தான் உடனே மாற்றம் செய்யப்பட்டார்.அந்த முறைகேடு அப்படியே ஊத்தி மூ டப்பட்டது.


சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தைசட்டவிரோதமாக நடைபெறும் தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளைபற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.


ஆனால், வைகுண்டராஜனை காப்பாற்றவே ஜெயலலிதாஅரசு இந்த நியமனத்தை ரத்துசெய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்தமனுவை ஏற்கவில்லை. 

இதையெல்லாம் பார்க்கும்போது, தாதுமணல் கொள்ளையில் ஜெயலலிதாவிற்கும் பங்கு உண்டா?என்ற கேள்வி எழுகிறது. 


தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தாதுமணல்களின் மதிப்பு 2ஜிஊழலை விட 720 மடங்குஅதிகம் என கணக்கிடப்பட்டது 
இங்கே குறிப்பிடத்தக்கது.'

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தமிழக ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 

அவர்களுக்கும் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குற்றச்சாட்டில்

 சிக்கியிருக்கும வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கும் உள்ள வியாபார

 தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்து அதை அனைத்து மாநில மற்றும்

 தேசிய பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களை சந்தித்து இது தொடர்பான 

விளக்கங்களையும் அளித்தது. 

ஆனால் இந்த செய்தியை முற்றிலும் புறக்கணித்து தமிழ் தினசரிகள்.தின

 தந்தி,தினமணி,தினமலர்.தமிழ் இந்து,தினகரன் .இந்த நாளேடுகள்தான் 

ஜனநாயகத்தின் நான்காவது தூணின் இன்றைய நிலையை நமக்கு 

உணர்த்தியது.



இந்த செய்தியை வெளியிட்டது  கேப்டன் டிவி .








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய