வழி நடத்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள். அந்த லட்சியக் கனவு நிறைவேறுவதற்கான வழிவகை என்ன? என்பதை நன்கு தீர்மானித்துச் செயல்படுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் அடைய வேண்டிய பத்து லட்சியங்களைக் குறித்து வைத்துக்கொண்டு, அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முயலுங்கள்.
நீங்கள் உங்களைச் சுயதொழில் முனைவோராக நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும் நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக, சிறப்பாகச் செய்ய முயலுங்கள். தொழில்நுட்பம் பற்றிச் சிந்தித்தால் இன்னும் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச் சற்றேனும் இடம் தராதீர்கள்.
தொடர்ந்து முன்னேற்றத்தின் ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள். மேன்மேலும் அந்தத் தொழிலை எப்படித் திறம்பட வளர்த்துக் கொள்வது என்பதை அறிந்து செயல்படுங்கள். மேன்மேலும் கற்றுக்கொள்பவராக, அதில் முழுமையாக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். தினமும் ஒருமணி நேரமாவது உங்கள் துறை சம்பந்தப்பட்டவரைப் பற்றி படியுங்கள். அது சம்பந்தமான பலப்பல விஷயங்களையும், யுக்திகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் சேமியுங்கள்.
உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின் முழுநுணுக்கங்களையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இதுபோட்டிகள் நிறைந்த உலகம். போட்டியைச் சமாளிப்பதற்கேற்ப உங்கள் தொழில் அல்லது வியாபார யுக்தியை அவ்வப்போது அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்குச் சேவை செய்ய முயலுங்கள். வாடிக்கையாளர்களது தேவை பற்றிய கவனம் என்பது மிகமிக அவசியம். வாடிக்கையாளர் திருப்தி தான் உங்களுக்கு வரப்பிரசாதம். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த இன்னும் ஏதேனும் செய்ய முடியுமா என்பதைக் கவனித்துச் செயல்படுங்கள். இதுவே உங்கள் வளர்ச்சியின் தாரக மந்திரம்.
உங்களது தொழில் வளர்ச்சியில் தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும் என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களைப்போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
ஒரு உயரத்திலிருந்து அடுத்த உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். சுழற்சியையும், போக்கையும், மாற்றங்களையும் அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.
உடன் பிறந்த கற்பனைத் திறனை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் எப்படி சரி செய்வது, இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.
எப்போதும் உங்களைச் சுற்றிலும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சூழ வாழுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் வெற்றியாளர் சூழ வாழுங்கள்.
உடல் நலமுடன் இருந்தால்தானே உங்களால் எதையும் சாதிக்க முடியும். ஆகவே, உங்கள் உடல் நலனில், ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்.
பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள். கவலையும், அச்சமும் தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த முறைகளை நீங்கள் சரியாகப் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்.
======================================================================== வன்முறை அணுக்கள்...! ===================
மனிதனின் குறிப்பிட்ட இரண்டு மரபணுக்கள் அவனுடைய வன்முறைக் குற்றங்களுக்குகாரணமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஃபின்லாந்தில் வன்முறை மிக்க குற்றங்களைச் செய்ததாக கண்டறியப்பட்டவர்கள் தொள்ளாயிரம் பேரின் மரபணுக்களை ஆராய்ந்தபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த இரண்டு மரபணுக்கள் ஒருவருக்கு இருக்குமாயின், அவர்கள் தமது வாழ்நாளில் திரும்பத் திரும்ப வன்முறையில் ஈடுபட்டிருந்ததற்கான வாய்ப்பு 13 மடங்கு அதிகமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
MAOA என்ற மரபணுவும், CDH13 என்ற மரபணுவின் குறிப்பிட்ட ஒரு வகையுமே வன்முறையோடு தொடர்புடைய மரபணுக்களாக தெரியவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
MAOA மரபணுவானது நமது மூளையில் டோபமைன், செரடோனின் போன்ற அவசியமான இரசாயணங்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
CDH13 மரபணு, ஒருவர் போதை மருந்துக்கு அடிமையாக ஆகக்கூடியவர்களிடம் காணப்படுகின்ற ஒரு மரபணு என்று ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.
தற்போது அதன் ஒரு குறிப்பிட்ட வடிவம் வன்ம குணாம்சத்துடன் தொடர்புகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பின்லாந்தில் நடந்துள்ள வன்முறைமிக்க குற்றங்களில் குறைந்தது 4 முதல் 10 சதவீதம் வரையிலானவற்றை குறிப்பிட்ட இந்த மரபணுக்களை உடையவர்கள்தான் செய்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளதாகமாலிக்குலர் சைக்கியாட்ரிஎன்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த மரபணு ஒருவருக்கு இருப்பதை வைத்து அவர் குற்றம்செய்தவராக இருப்பார் என்றோ, ஒருவருக்கு இந்த மரபணு இல்லை என்பதை வைத்து அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்றோ கருத ஆரம்பித்துவிடக்கூடாது ஆரம்பித்துவிடக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த இரண்டு மரபணுக்கள்தான் என்றில்லை, வன்முறைக்கும் வேறு பல மரபணுக்களுக்கும் இடையிலும் தொடர்பு இருக்கலாம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒருவர் வன்முறையை நாடுவதற்கு சூழ்நிலையும் பெரிய காரணமாக அமைந்துள்ளது என்பதும் நாம் ஏற்கனவே நிரூபித்துள்ள அறிவியல் உண்மை என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
விஞ்ஞானிகளின் கருத்து இப்படி இருந்தாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் மரபணு விவரங்களை எடுத்துச் சொல்லி, அவருக்கான தண்டனையை குறைக்க வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் முயன்ற சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன.
இத்தாலியிலும், அமெரிக்காவிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.
=========================================
காசு+
பணம்+
துட்டு+
= போராட்டம்!
ஜெயலலிதாவுக்கு இப்போது ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் அவர் சிறையில் இருந்தபோது 'மக்களின் முதல்வருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக’ உண்ணாவிரதங்கள், பால்குடம், பறவைக் காவடி, மொட்டை அடித்தல் என விதவிதமாக தூள்பரத்தினார்கள். ஆனால் இவை எல்லாமே தானாகச் சேர்ந்த கூட்டம் அல்ல; காசு கொடுத்துச் சேர்த்த கூட்டம் என்பதுதான் ஹைலைட்டே. எந்தெந்தப் போராட்டங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கப்பட்டது என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இவை...
1000 மட்டுமல்ல ஒத்திகை பயிற்சியும் உண்டு.
அதிக அட்ராசிட்டி செய்தது மதுரைக்காரர்கள்தான். உள்ளூர் அரசியல் புள்ளிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மொட்டை அடிக்க ஆட்களைத் தேடியிருக்கிறார்கள். மொட்டை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் 500 முதல் 1,000 ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறதாம். பால்குடம் எடுக்கும் தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் புதிய குடம், அதில் நிரப்ப அரை லிட்டர் பால், ஒரு தேங்காய், சுமந்து வருவதற்குக் கூலியாக 1,000 ரூபாய் என அறிவிக்க, மதுரை வீதியெங்கும் மஞ்சள் வீதியாகியிருக்கிறது. தவிர, இந்த 'அறப்போராட்டத்தில்’ கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மொட்டை, பால்குடம் தாண்டி அலகு குத்துவதில் ஆர்வமாய் இருந்திருக்கிறார்கள் பலர். காரணம், அலகு குத்துபவர்களுக்கு 1,000 ரூபாய். குத்தும் வேலின் அளவைப் பொறுத்து விலை மாறுபட்டிருக்கிறது. அதிகபட்சமாக வழங்கப்பட்ட தொகை 5,000 ரூபாய். இருப்பதிலேயே 'காஸ்ட்லி’யான போராட்டம் பறவைக் காவடி எடுத்ததுதான். 10,000 ரூபாய். 'இதெல்லாம் செட் ஆகாது. ஏதாவது சில்லரை வேலை...’ என இழுத்தவர்களுக்கு கோவில்களில் நடைபெற்ற பிரார்த்தனைகள், யாகங்களில் கலந்துகொள்ளவைத்திருக்கிறார்கள். ஆளுக்கு 100 ரூபாய் பணமும், காலை உணவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோட்டை இருக்கும் இடம் என்பதால், 'சென்னைக்கு விசில்’ போடவைத்திருக்கிறார்கள். ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. இதில் பங்குபெறும் பெண்களுக்கு மஞ்சள் நிற சேலை, குடம், 1,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதங்களில் பங்கேற்பவர்களுக்கு 200 ரூபாய், இரண்டு வேளை சாப்பாடு வழங்கப்பட்டதாம். (உண்ணாம இருக்கிறதுக்குப் பேர்தானே உண்ணாவிரதம்?). மனிதச் சங்கிலி போன்ற சாதாரண போராட்டங்களுக்கு 200 ரூபாயும் காலை உணவும். முக்கியமான விஷயம். மாரில் அடித்துக்கொண்டு அழுவதற்கு 1,000 ரூபாயாம். தவிர, இதில் அதிகமாக பெர்ஃபார்ம் செய்யும் பெண்களுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜும் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தானா வந்த கூட்டமல்ல.நானா காசு கொடுத்து வந்த கூட்டம்.
'மொட்டை’தான் டேக் இட் ஈஸி என்பதால் மொட்டை அடிப்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் திருச்சி அ.தி.மு.கவினர். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அ.தி.மு.க புள்ளி ஒருவர் இதற்காகவே தினசரி காலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக வண்டியை எடுத்துக் கிளம்பிவிடுகிறார். சிறியவர்களுக்கு 100 ரூபாயும் பெரியவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. 'தலை தீபாவளி’ குஷியோடு வளைத்து வளைத்து தலையை வழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தன் பங்குக்கு 'பவர்’ காட்டியிருக்கிறது கொங்குமண்டலம். உண்ணா விரதத்தில் கலந்துகொள்பவர்களுக்கு 300 ரூபாயும் இரண்டு வேளை உணவும் வழங்கப்பட்டிருக்கிறது. கோஷம் போடுபவர்களுக்கு 200 ரூபாய், மொட்டை அடித்துக்கொள்ள அதிகபட்சமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரம் கோஷம் போடுவதற்கு 100 ரூபாய், மனிதச் சங்கிலியில் கலந்துகொண்டவர்களுக்கு 100 ரூபாய். எல்லாப் போராட்டங்களிலும் பெண்களுக்கு 'ஒரு சேலை’ என்பது சிறப்புச் சலுகை. தவிர, சில கொடுமையான விஷயங்களும் நடந்திருக்கின்றன. சிங்காநல்லூர் பகுதியில் இயற்கை மரணமாக இருந்தாலும் 'ஜெயலலிதாவிற்காகவே இறந்தேன்’ என எழுதிக்கொடுத்தால், அதற்காக ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என விலை பேசியிருக்கிறார்கள் அம்மாவின் விசுவாசிகள்.
ஜெயலலிதா சிறையில் இருந்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தினமும் ஜெயலலிதாவைச் சந்திக்க மனு கொடுக்கவே கூலிக்கு ஆளை நியமித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனுவுக்கும் 500 ரூபாய் வழங்கப்பட்டதாம். தவிர, அங்கே ஒப்பாரி வைக்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி படுக்கவும் ஒரு விலை உண்டு.
இதில் புரட்சி, போராட்டம் எனப் பொங்காமல் அடக்கி வாசித்திருக்கும் இரண்டு மாவட்டங்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி. நெல்லையில் ஒருநாள் உண்ணாவிரதம் நடந்திருக்கிறது. மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மொட்டை அடிக்கப்பட்ட ஆட்களும் இங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தானாம். தூத்துக்குடி பகுதியில் அதிகபட்சமாக நடந்தது 'மொட்டை’தான். சிறிய அளவில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்களுக்கு 200 ரூபாயும், மொட்டை அடித்துக்கொண்டவர்களுக்கு 500 ரூபாயும் கொடுத்திருக்கிறார்கள்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...