"நீட்" டு.......
நீட் தேர்வை தி.மு.க ஆட்சிதான் கொண்டு வந்தது என்பதுதான் பழனிசாமியின் பழைய பொய். அவருக்கு நீட் தேர்வைப் பற்றி தலையும் தெரியவில்லை, வாலும் தெரியவில்லை. நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. முதல் தேர்வு நடந்ததே 2016இல்தான். பல்வேறு மாநிலங்கள் எதிர்த்த காரணத்தால் விதிவிலக்கு தரப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனால் 2016 - 17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் விலக்கு கிடைத்தது. ஆனால் அடுத்து வந்த பழனிசாமி அரசாங்கம் ‘நீட்’ தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டது. தானும் எதிர்ப்பது போல காட்டுவதற்காக இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒப்புக்கு அனுப்பினார்கள். அதனை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததுதான் பழனிசாமியின் நாடகங்களில் மகத்தானது. 2011 முதல் தி.மு.க அதிகாரத்தில் இல்லை. நீட் தேர்வை எதிர்த்து 2013 ஆம்ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியே தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி உயிர் கொடு