கடற் கொள்ளையர்.

 நாடு முழுவதும் உள்ள 204 சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கு புதிய மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. `இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசின் தன்னாட்சியை குறைக்கும்' என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிறிய துறைமுகங்களை இந்திய அரசு வளைக்க முயற்சிப்பது ஏன்?

இந்திய அரசின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையின் சார்பில் 18வது கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழு கூட்டம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்ட்ரம், கோவா, தெலங்கானா, ஆந்திரம், ஒடிஷா ஆகிய கடலோர மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இந்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, ``கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழு கூட்டம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்திய துறைமுகங்கள் மசோதாவை அரசியல் பார்வையுடன் அணுகாமல் வளர்ச்சிக்கான விவகாரமாக பாருங்கள். கடலோரங்களில் சிறந்த மேலாண்மை மற்றும் பயன்பாட்டுக்கு இந்திய துறைமுகங்கள் மசோதா துணைபுரியும்" என்றார்.

மேலும், `` ஒருங்கிணைந்த துறைமுகங்கள் மசோதாவை உருவாக்க மாநிலங்களின் கருத்துகளை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

எதிர்ப்பு காட்டிய தமிழ்நாடு.

எ வ வேலு

பட மூலாதாரம்,E.V. VELU FB

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசுகையில், ``1908ஆம் ஆண்டு இந்திய துறைமுகங்கள் சட்டப்படி துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல், வரையறைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. இதில், திருத்திய வரைவு இந்திய துறைமுகச் சட்டம் 2021 மசோதாவானது இந்த அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்கக் கூடியது.

இந்த வரைவின் விதிகளின்படி கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமமானது சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாக செயல்பட உள்ளது. இக்குழுமத்தின் கட்டமைப்பும் ஒன்றிய அரசின் அதிகாரிகளை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன" என்றார்.

முன்னதாக, `இந்திய துறைமுகங்கள் மசோதா 2021' குறித்து குஜராத், மகாராஷ்டிரம் , கோவா, கர்நாடகம் , கேரளம் , ஆந்திரம் , ஒடிஷா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்குக் கடந்த 21ஆம் தேதி மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ``இந்த மசோதாவால் மாநில அரசின் பல அதிகாரங்கள் ஒன்றிய அரசுக்குச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஆனால் புதிய மசோதாவால் சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில் நீண்டகால பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன்மூலம் மாநிலத்தின் தன்னாட்சியை குறைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய துறைமுகங்கள் மசோதா 2021-ஐ ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல்?" என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

து. ரவிக்குமார்
படக்குறிப்பு,

து. ரவிக்குமார்

``மத்திய அரசு நமக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்பட பல்வேறு நிதிகளை சரியாகக் கொடுப்பதில்லை. இந்தநிலையில், சிறிய துறைமுகங்களின் வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இதன்மூலம், மாநில அரசின் அதிகாரம் உள்பட அனைத்திலும் மத்திய அரசு தலையிடுகிறது.

இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையுள்ள மாநிலமாக குஜராத் உள்ளது. ஆனால், மத்திய அரசின் புதிய மசோதாவை குஜராத் நிராகரிக்குமா எனத் தெரியவில்லை. இதேபோல், ஆந்திரம், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒன்பது மாநில முதல்வர்களில், தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு கேரள அரசின் ஆதரவு வேண்டுமானால் கிடைக்கலாம்" என்கிறார்.

ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?

துறைமுகம்

பட மூலாதாரம்

`` தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மூன்று துறைமுகங்கள் உள்ளன. இதுதவிர, 17 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட தேவைகளுக்காக இயங்கக் கூடிய சிறு துறைமுகங்களும் உள்ளன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையின் தேவைக்காக (Captive ports) அந்தத் துறைமுகத்தில் பொருள்களை இறக்குமதி செய்வார்கள். உதாரணமாக, திருக்கடையூரில் உள்ள சிறிய துறைமுகத்தில் நாப்தாவை இறக்குமதி செய்கின்றனர். அங்கு நாப்தா தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்துக்கான துறைமுகமாக இது உள்ளது.

அனல்மின் நிலைய பணிகளுக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. தரங்கம்பாடியில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்துக்காக ஒன்று செயல்படுகிறது. நாகப்பட்டினத்தில் எண்ணெய் எடுப்பதால் அங்கே ஒரு துறைமுகம் உள்ளது. கூடங்குளத்தில் அணுமின் நிலைய பணிகளுக்காக கொடுத்துள்ளனர். மற்றவை எல்லாம் பொதுவான துறைமுகங்களாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையின்கீழ் வருகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி வசம் இந்தத் துறைமுகங்கள் இருந்தன. தற்போது எ.வ.வேலு அமைச்சராக இருக்கிறார். இதற்கென உள்ள போர்டுக்கு தலைவராக மாநில அமைச்சர் இருக்கிறார். தற்போது இந்தச் சிறிய துறைமுகங்களை எல்லாம் மத்திய அரசின்கீழ் கொண்டு வர உள்ளனர். இந்த அமைப்பில் மாநில அமைச்சர்களை உறுப்பினர்களாக நியமிக்க உள்ளனர். அதாவது, தலைவராக இருந்தவர்களையெல்லாம் உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன்பிறகு சிறு துறைமுகங்களை ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பது, வருமானம் என அனைத்தையும் இந்திய அரசே எடுத்துக் கொள்ளும்.

இதன்மூலம் மாநிலத்துக்கான வருமானம் என்பது முழுமையாக போய்விடும். திருக்கடையூரில் உள்ள நாப்தா கம்பெனி துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் மாநில அரசுக்கு வருவாய் வருகிறது. அதேநேரம், சிறிய துறைமுகங்களை மாநில அரசு பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

சில பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகங்கள் செயல்படாமலேயே உள்ளன. நமக்கு மிகப் பெரிய கடல் பரப்பு உள்ளதால், சிறிய துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறோம். இதனை லாபகரமாக மாற்றக் கூடிய முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி இருப்பதால் சிறிய துறைமுகங்கள் மூலம் லாபம் ஈட்ட முடியும்" என்கிறார்.

வருவாய் குறைவுதான்.. ஆனாலும்..

துறைமுகம்

பட மூலாதாரம

தற்போது சிறிய துறைமுகங்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்றோம். ``அது மிகவும் குறைவாகத்தான் உள்ளது. மொத்தமாக 50 கோடி ரூபாய்க்குள் அடங்கும். இதுநாள் வரையில் 100 கோடி ரூபாயைக்கூட வருவாயாக ஈட்டவில்லை. சிறிய துறைமுகங்களுக்கான போக்குவரத்துகளும் குறைவாக உள்ளன.

இந்திய அரசின் முயற்சிக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவாய் ஈட்டுவதிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும். கடலூரில் நாகார்ஜூனா நிறுவனம் தனக்கான துறைமுகத்தைப் பயன்படுத்தாதால், அந்தத் துறைமுகம் அப்படியே கிடப்பில் இருக்கிறது.

அதை வேறு யாராவது பயன்படுத்த விரும்புகிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும், திருக்கடையூரில் ஒரு நிறுவனம் மட்டுமே துறைமுகத்தைப் பயன்படுத்துவதால், வேறு நிறுவனங்களுக்கும் தேவைப்படுமா எனப் பார்க்க வேண்டும்.

மேலும், பாம்பன், குளச்சல் ஆகிய துறைமுகங்கள் எல்லாம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிற தொழிற்சாலைகளை எல்லாம் கடலோரத்தில் உருவாக்கி, கழிவுகளை கடலில் கலக்கவிட்டனர். இந்தத் தொழிற்சாலைகள் செயல்படுவதில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்ததால் புதிய தொழிற்சாலைகள் உருவாகாமல் போய்விட்டன.

சிறிய துறைமுகங்கள் எல்லாம் தொழிற்சாலைகளுடன் தொடர்புடையவை. அவைகள் வளரும்போதுதான் சிறிய துறைமுகங்களும் வளரும். கடலோர ஒழுங்குமுறைச் சட்டங்களால் தொழிற்சாலைகள் அமைப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன" என்கிறார்.

சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி

துறைமுகம்

பட மூலாதாரம்,

``சிறிய துறைமுகங்களால் லாபம் இல்லை என்றால், அதன்மீது இந்திய அரசு ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?" எனக் கேட்டோம். ``அதனை அவர்கள் லாபகரமான ஒன்றாக மாற்றுவார்கள். அதில் லாபம் உள்ளது என்பதால்தான் மசோதாவை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், சாலைப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தாமல் கடல்மார்க்கமான சாலைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து கடலூருக்கு கடல்வழியாகச் சென்றால் எளிதாகச் சென்றுவிடலாம். சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. அடுத்த 30 வருடங்களுக்குப் பிறகு சாலையில் பயணிப்பதால் ஏற்படும் செலவுகளைவிடவும் இது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

சென்னை-மாமல்லபுரம் - பாண்டிச்சேரி எனப் பயணப் பாதையை ஏற்படுத்தினால் மக்களும் விரும்பிப் பயணிப்பார்கள். இதுபோன்று செயல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. மத்திய அரசின் கைகளுக்கு சிறிய துறைமுகங்கள் சென்றுவிட்டால் மாநில அரசுக்கு எந்தவித உரிமைகளும் இருக்காது. எனவே, மாநில அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு நடத்துகிற தாக்குதலாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது" .

மாநிலரசுகளுக்கு வருகின்ற வருமானங்கள் அனைத்தையும் மோடி தலைமை ஒன்றிய அரசு்கொள்ளையடித்து வரும் திட்டம் .

---------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?