பதில் சொல்லுங்கள் மோடி
500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெரும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திரமோடி வெள்ளியன்று நாட்டு மக்கள் முன்பு நாடகமாடினார். ஆனால் இந்த பண மதிப்பிழப்பினால் மக்கள் அடைந்த துன்பங்கள்,இறப்புகளுக்கு ,குளறுபடிகளை பதில் கேட்டு எழுப்பப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் - சந்தேகத்திற்கும் பதிலளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மற்றும் ஏழை, எளிய மக்களின் மனக்குமுறலுக்கும் அவர் விடை சொல்லவில்லை. மக்களின் துயரம் குறித்து 16 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் சொல்ல தயாரா என பிரதமர் நரேந்திரமோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்விக்கணைகள் தொடுத்திருந்தது. அந்த கேள்விகளுக்கு பிரதமர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் , கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கை வருமாறு:பணம் மதிப்பு நீக்கம் தொடர்பான பிரச்சனையில் டிசம்பர் 30க்குப் பிறகு புதிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப் போவதாக பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால் வெளியே,பாஜக கட்சி கூட்டங்களில் வாய் கிழிய ...