இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 12 டிசம்பர், 2016

அதிமுக:"வேறு வழி இல்லை."


 

சசிகலாவை அதிமுக தலைமைக்கு அழைப்பது காலங்காலமாக கட்சிக்காக உழைத்து வந்த தொண்டர்களுக்கு மட்டுமல்ல அவரை தேர்ந்தெடுத்தவர்களுக்குமே அதிர்சசியான ஒரு செயல்தான் ஆனால் அதை விட்டால் வேறு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
மற்ற கடசிகள்போல் இரண்டாம் கட்டத்த்தலைவர் யாருமே அதிமுகவில் கிடையாது.
இருமுறை பன்னிர்செல்வம் செல்வம் ஒப்புக்கு முதல்வராக இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது.
அப்படி செல்வாக்கிருந்திருந்தால் அதிகாரத்தை அவருக்கு ஜெயலலிதா கொடுத்திருக்க மாட்டார்.அது அவருக்கு ஆபத்தை அல்லவா உண்டாக்கி விடும்.
எப்பவும் ஜெயலலிதா தன்னைக்கு பின் யார் என்று கையை கட்டவும் இல்லை.அவருக்குப் பின் தலைமைக்கு யாரை தேர்தெடுக்கலாம் என்ற அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர் யாரையும் வளர விடவில்லை.
யாரை எப்போது பதவியில் ஊடக வைப்பார்,அவரை எப்போது புழுதியில் தள்ளி விடுவார் என்று அவருக்கே தெரியாது.
தேர்தல்களில் முதலில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து விட்டு அவர் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஊர்வலமாக கிளம்பி வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்னர் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிப்பது ஜெயலலிதாவின் வாடிக்கைதான்.
இப்போது ஓரளவுக்கு சசிகலாவை தேர்ந்தெடுத்ததில் சில சரிகளும் உள்ளது.
இன்றைய அமைசர்கள்,சட்டமன்ற,மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்கள் ,மாவட்ட,வட்ட செயலாளர்கள் 90%சசிகலா உதவியை கேட்டு வந்தவர்கள்தான்.
அதனால் அவர்கள் அவரை கொண்டாடுவதில் தப்பில்லை.சசிகலாவும் அவர்களுக்கு சும்மா உதவிடவும் இல்லை.
அது போக ரெண்டாம் கட்டத்தலைவர் யாரும் இல்லாத அதிமுகவில் முதல்வர்,கட்சி பொதுசெயலாளர் என்று யாரையும் தேர்ந்தெடுக்க தொண்டர்களுக்கும் தெளிவான விடையில்லா குழப்பம்தான்.
இது போன்ற நிலையில் சசிகலா போன்ற ஜெயலலிதா இருக்கையிலேயே அதிகார மய்யமாக வலம் வந்த ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான் அதிமுகவின் தொண்டனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.வேறு வழி இல்லை.
பன்னிர்செல்வத்தையோ,நத்தம் விசுவநாதனையோ,எடப்பாடி பழனிசாமியையோ ,செங்கோட்டையனையோ தேர்ந்தெடுத்தால் எந்த அதிமுக தொண்டனுக்கும் ஒத்துப்போனாலும் அதிகார மட்டங்களில் இருக்கும் அதிமுகவினருக்கும் சம்மதமே இருக்காது.

காரணம் எல்லாரும் ஓர் நிலை, அதுதான் ஜெயலலிதா அவர்களை வைத்திருந்த நிலை.
சசிகலாவை தேர்ந்தெடுப்பதிலேயே இரண்டு நாட்கள் குழப்பம் .இந்த முறை ஜெயலலிதாவை ஆட்ச்சிக்கட்டிலில் ஏற்றியதே கொங்கு மண்டலம்தான்.அங்குதான் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு கிடைத்துள்ளனர்.அதனால் செங்கோட்டையன் கொஞ்சம் தலைமைக்கு உரிமை காட்டியுள்ளார்.
ஆனால் மற்ற மண்டல,சாதி வாரி உறுப்பினர்கள் எதிர்ப்பு எழுந்ததாலே உரிமைக்குரல் அடங்கி விட்டது.
ஆனாலும் தேவர்,கவுண்டர்,வன்னியர் என்று முப்பெரும் குழு உண்டாகி விட்டது.
அவர்களை எல்லாம் வெங்கய்ய நாயுடு மூலமாக பாஜக,மோடி கொடுத்திருந்த அறிவுரை,ஒப்புதல் கடிதத்தில் கையொப்பம் வாங்கி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
"கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு இந்த ஐந்தாண்டுகளில் பயன்படுத்திக்கொள்ள(?) வேண்டும்.சண்டையிட்டோ,திமுகவுக்கு செல்வதின் மூலமோ ஆடசி மாற்றம் உண்டானால்,அதற்கு பாஜக மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது.குழப்பம் உண்டானால் நேரடியாக ஆட்சி கலைப்பு ,அத்துடன் இரட்டை இலை சின்னம் முடக்கம்.இதுதான் மத்திய அரசின் நடவடிக்கையாக இருக்கும்.
பின் இப்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் மீண்டும் வெல்வதோ அமைசராவதோ நடக்கப்போவதே கிடையாது.
இப்போது பொறுமை காத்தால் அனைவருக்கும் பதவி சுகம் மட்டுமல்ல வசூல் பலனும் கிடைக்கும்.மேலும் அவர்கள் மீதுள்ள குற்ற சாட்டுகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் கடத்தப்படும்."என்ற அறிவுரையும்,அதிமுக பெரும் புள்ளிகள் மீதுள்ள அளவுக்கு அதிகமான வருமான விபரங்கள் பாஜக கையில் இருப்பதையும் செல்லமாக நினைவூட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதன் பலன்தான் சசிகலா ஆதரவு விளம்பரங்கள் வேண்டா வெறுப்பாக கொடுக்கப்பட்டு வருவது.
ஆனால் திமுக சும்மா இருக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது பலருக்கும்.
திமுக தற்போதைய நிலையில் அதிமுக உட் கட்சி விவகாரங்களில் தலையிட விரும்ப வில்லை.
ஜெயலலிதா நிலை மோசமானதில் இருந்து நடப்பது அதிமுக ஆட்சி அல்ல.பாஜக ஆளுநர் மூலம் நடத்தும் ஆட்சி என்பது திமுகவின் கணக்கு.
சசிகலா கைப்பிடி மத்திய அரசிடம் சொத்துக்குவிப்பு வழக்கு,கண்டெய்னர்,பணமாற்றம் என்று சிக்கியிருப்பதாலும் பாஜக அதற்கு பல உதவிகள் செய்து வருவதாலும் பாஜக சொல்லியபடி ஆடுவதை தவிர சசிகலா உட்ப்பட்ட அமைசர்கள்,அதிமுக தலைகளுக்கு வேறு வழி தற்போதில்லை என்பதையும் திமுக தலைமை உணர்ந்தே இருக்கிறது.
சசிகலா வைத்து பாஜக நடத்தும் ஆட்டம் திமுகவுக்கு சாதகமாக மாறும் நிலை வரும் ,அதுவரை காத்திருக்க முடிவு செய்து விட்டார்கள்.அதிமுக தொண்டர்கள் ஆதி முதலே திமுக எதிர்ப்பு கள்ளிப்பால் கொடுத்தே வளர்க்கப்பட்டுள்ளார்கள்.காரணமே இல்லாமல் கலைஞர் ,திமுக என்றாலே ரத்தக்கொதிப்பு ஏறும் நிலையிலே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையிலும் திமுக,கலைஞர் எது செய்தாலும் தவறுதான்,மக்கள் விரோத செயல்தான்.அந்த மனநிலை அடுத்தடுத்து அதிமுகவில் நடக்கும் கூத்துக்கள் மூலம் மாறும்.
எப்படியும் சிலகாலம் கழித்து குழப்பம் உண்டாகும் அப்போது குழம்பிய அதிமுக குட்டையில் மீன் பிடிப்பது எளிதாக இருக்கும்.ஆனால் அதை திமுக விரும்பவில்லை.காரணம் பாஜக ஆதரவுடன் கடசி,அதிகாரம் கைப்பற்றும் சசிகலாவே அதிமுகவை ஓரளவு கரைத்து விடுவார்.ஜெயலலிதாபோல் பொது மக்கள் ஆதரவு இராது என்பது கணக்கு.
மேலும் இப்போது மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் பாஜக நேரடியாக காலத்தில் இறங்கினால் பாஜக வளர்சசிக்கு அது உறுதுணையாக இருந்து விடும்.
அதற்கு இப்போதைய ஆட்சி,அதிகார அனுபவத்தை வைத்திருக்கும் அதிமுக தலைகள் அதை இழக்காமல் இருக்க பாஜக வலையில் விழுவார்கள்.கரணம் அவர்கள் பிடி பாஜக விதம் சிக்கியுள்ளது.மேலும் அடுத்த தேர்தலில் தாங்கள் ஜெயலலிதா  இல்லாமல் வெல்வது கடினம் என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள்.
அதுவல்லாமல் ஜெயலலிதா அன்னான் மகன் தீபக் சசிகலாவிடம் விலை போய் விட்டார்.
ஆனால் அண்ணன் ஜெயராமன் மகள் தீபா சசிகலாவிடம் அடங்க மாட்டேன் என்கிறார்.இதே காரணத்தால்தான் சசிகலா போயஸ் தோட்டத்தில் அத்தை ஜெயாவுடன் இருந்த தீபாவை தனது சாணக்கியத்தால் அங்கிருந்து விரட்டியடித்தார்.
ஜெயலலிதாவுக்கோ அவர் ஜெயாவை திட்டி விட்டு வெளியேறி விட்டதாக கூறி தீபா மீது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தார் சசி.
இப்போது தீபா சசிகலாவுக்கு எதிராக சொத்திலும்,கட்சியிலும் உரிமை கோரி இயங்குகிறார்.
பல அடிமட்டத்தொண்டர்கள்,ஜெயலலிதாவுக்கு இதுவரை வந்த கெட்டப்பெயர்கள்,சொத்து குவிப்புக்கு எல்லாம் காரணம் சசிகலா,மன்னார் குடி குடும்பம்தான் என்ற எண்ணம் உள்ளவர்கள் எல்லாம் தீபாவை ஜெயலலிதா ரத்த சொந்தம்,உருவ அமைப்பிலும் ஜெயாவோடு ஒத்துப்போகிறவர் என்ற காரணத்தால் ஆதரிக்கிறார்கள்.
ஆனால் அவரிடம் சசிகலாவை எதிர்க்கும் அளவு அதிகார ,பணபலம் போன்றவை இல்லை.
அதனால் அவர்   சசிகலாவை சமாளித்து கட்சியை கைப்பற்றுவர் என்பது கேள்விக்குறிதான்.
மேலும் சசிகலாவுக்கு மோடி,பாஜக மத்திய அரசின் முழு ஆதரவும்,ஆசியும் இருக்கிறது.
மொத்தத்தில் அதிமுக கட்சி சசிகலா விடம் போயஸ் தோட்டம் போல் அடைக்கலம் ஆகிறது.அதை அதன் போக்கிலே விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.வேறு வழி...?

====================================================
ன்று ,
டிசம்பர்-12. 
கென்யா விடுதலை தினம்(1963) 
இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)
 பெடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)

===================================================