பேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு
கிராமப் புறங்களில், இலவச இணைய இணைப்பு தரும் தன் திட்டத்தின் முதல்
நிலையான 'சோதனை ஓட்டத்தினை' பேஸ்புக் தொடங்கியுள்ளது.
முழுமையான வெற்றி எனச் சோதனையில் தெரிய வந்தால், இதே திட்டம் இந்தியா மட்டுமின்றி, வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்தியாவில், இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணிக்கும் 'ட்ராய்' அமைப்பு, பேஸ்புக்கின் 'Free Basics' திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. பேஸ்புக் இந்த திட்டத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில இணைய சேவை தரும் தளங்களை மட்டுமே இலவசமாகத் தருவதாக அறிவித்தது.
இந்த வரையறையின் காரணமாக, அனைவருக்கும் சமமான இணைய சேவை கிடைக்காது என, பயனாளர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கியதால், 'ட்ராய்' அமைப்பு இதற்குத் தடைவிதித்தது.
உலகின் மிக அதிக இணையப் பயனாளர்களைக் கொண்டு, இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தன் இணைய வலைப் பின்னலைக் கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்ட, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்த தடை ஓர் ஏமாற்றத்தைத் தந்தது எனக் கூறலாம்.
ஆனாலும், தற்போது புதிய ஒரு திட்டத்தினை, கிராமப் புறங்களில் இன்னும் இணைய இணைப்பு கிடைக்காமல், அதனை விரும்புவோருக்குக் கொண்டு செல்ல மார்க் திட்டமிடுகிறார். “இதற்கென மொபைல் சேவை மற்றும் இணைய சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சிப்பதாக” மார்க் கூறியுள்ளார்.
பேஸ்புக் மட்டுமின்றி, கூகுள் நிறுவனமும் இந்தியாவில் இணையப் பயனாளர்களைத் தன் வட்டத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த உலகில், அடுத்த நூறு கோடி இணையப் பயனாளர்களில் பெரும் பகுதியினர், இந்தியாவில் இருந்து தான் வருவார்கள் என்று இரு நிறுவனங்களும் உறுதியாக எதிர்பார்க்கின்றனர். அது உண்மையும் கூட. இவர்கள் மூலம், தங்களின் விளம்பர வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ள இந்த இரு நிறுவனங்களும் முயற்சிக்கின்றன.
இந்நாள் வரை, இந்தியாவில் வாழும் மக்களில் 65% பேர் இணையத்தை இன்னும் பயன்படுத்தாதவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் ஏற்கனவே, இந்திய ரயில்வே நிறுவனத்தின் டிஜிட்டல் நிறுவனப் பிரிவான 'ரெய்ல்டெல்' (RailTel) நிறுவனத்துடன் இணைந்து, 400 ரயில்வே ஸ்டேஷன்களில், 2018க்குள் இலவச இணைய இணைப்பினைத் தரும் திட்டத்தினை நிறைவேற்றி வருகிறது.
இதுவரை 53 நிலையங்களில், இலவச இணைய இணைப்பினைத் தரும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனமும், இதே போன்ற திட்டம் ஒன்றின் மூலம் இலவச இணைய சேவை தர, ரயில்வே அதிகாரிகளிடம் பேசி வருகிறது.
ஆனால், பேஸ்புக் வடிவமைத்துள்ள Express WiFi என்னும் திட்டம் முழுமையாக இலவசமாக மக்களுக்குக் கிடைக்காது. இதனைச் செயல்படுத்தும் நிறுவனத்திற்கு, பயனாளர்கள், இணைய இணைப்பு பெற, மிகக் குறைந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டியதிருக்கும். இணைய இணைப்பு தர கிராமப் புறங்களில், Hot Spot என அழைக்கப்படும் இணைப்புப் புள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
சிறிய நகரங்களில் அமைக்கப்பட்டு, பின்னர், அருகே உள்ள கிராமங்களுக்கு இவை விரிவு படுத்தப்படும். இந்தியாவெங்கும் எத்தனை Hot Spotகள் அமைக்கப்படும் என பேஸ்புக் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த இணைய இணைப்பு புள்ளிகளை (WiFi Hot Spot) அமைப்பதில் ஏற்படும் செலவுகளில் பங்கெடுத்துக் கொண்டு, அதற்கான தொழில்நுட்பத்தினை பேஸ்புக் வழங்கும்.
இவற்றை இயக்குவதில் ஏற்படும் செலவுகளிலும் பங்கெடுக்கும்.
இணைய சேவையினை வழங்கும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, பேஸ்புக் நிறுவனம் Express Wi-Fi திட்டத்தினை சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறது என பேஸ்புக் நிறுவனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதனைப் பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள், தங்களுக்குக் கட்டுபடியாகும் கட்டணத்தில், வேகமாக இணைப்பு தரும் இணைய சேவைத் திட்டத்தினைப் பெறலாம் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
இதே போல, கூகுள் நிறுவனமும், ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக, உணவு விடுதிகள், வர்த்தக வளாகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் தன் இலவச வை பி இணைய இணைப்பினைத் தரும் வகையில் தன் திட்டத்தினை விரிவு படுத்த முயற்சிக்கிறது.
எங்கெல்லாம், கம்பி இணைப்பு மூலம் தற்போது இணைய இணைப்பு சாத்தியமோ, அங்கிருந்து வை பி இணைப்பினைத் தர கூகுள் முயற்சிக்கிறது. ஆனால், இது ரயில் நிலையங்களில் தரப்படுவதைப் போல, முழுமையாகக் கட்டணம் இன்றி இருக்காது. குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதனை கூகுள் நிறுவனமும் இணைய இணைப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பினைக் கொண்டுள்ள இடத்தின் உரிமையாளரும் பகிர்ந்து கொள்வார்கள்.
கூகுள் நிறுவனம், இணைய இணைப்பு இல்லாத, தொலை தூர இடங்களுக்கு இணைப்பு தர, ஏற்கனவே, Project Loon என்னும் திட்டத்தினை சில நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. விரைவில் இந்தியாவிலும் இது தொடங்கப்படும்.
கூகுள் நிறுவனம், Google Fi என்னும் திட்டம் ஒன்றையும் மேற்கொள்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் Express WiFi திட்டத்திலிருந்து மாறுபட்டது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
Google Fi திட்டப் பயனாளர்கள், நேரடியாக கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் கூட்டு நிறுவனங்களான, இணைய சேவை நிறுவனங்களிடமிருந்து இணைப்பினைப் பெற்று பயன்படுத்துவார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது.
இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதித்து வருகிறது.
டெஸ்க்டாப்பில் பேஸ்புக் அப்ளிகேசனை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிங்கில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் நாம் விரும்பிய மொழியில் பேஸ்புக் பதிவுகளை படிக்கலாம். இதற்கு நமது பேஸ்புக்கின் அக்கவுண்ட் செட்டிங்கில் சென்று லாங்வேஜ்-யை கிளிக் செய்து அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக்கொள்ளலாம்.
====================================================
இன்று,
டிசம்பர்-14.

- இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
- ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
- ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
- ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவானது(1946)