மிரட்டல் நிதி!
நேரடி நிதி, தேர்தல் அறக்கட்டளைகள் போன்ற வழிகளில் பாஜக நடத்தியிருக்கிற வசூல் வேட்டைகள் இவை. அதாவது தேர்தல் பத்திரம் அல்லாது பெற்ற கைமாறுகள்! அப்படி வேறு வழிகளில் நிதியளித்த நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களாகவும் அளித்த நிதி குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரி சென்னையைச் சேர்ந்த லலிதா ஜூவல்லரி நிறு வனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2021 மார்ச்சில் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல நூறு கோடி ரூபாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தனர். அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் ரூ.1 கோடியை பாஜகவிற்கு நிதியாக அளித்தது. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 2013இல் (அதாவது பாஜக ஆட்சிக்கு வருவதற்குமுன்), ஓர் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ ரெய்டு நடந்தது. ரூ.25 கோடி அளவுக்குக் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டு, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2014இல் (அதாவது பாஜக ஆட்சிக்கு வந்தபின்!) அந்த விசாரணை யை முடித்துக்கொள்வதாக அறிக்கை ...