தினம் ஒரு பொய்

 கெஜ்ரிவால் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு: போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.

தேர்தல் பத்திரம் தடை தீர்ப்புக்கு 3 நாள் முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க மோடி (ஒன்றிய )அரசு அனுமதி.

150 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன திட்டங்கள் செஞ்சீங்க? ஒவ்வொருவரையும் ரூ.1.5 லட்சம் கடனாளி ஆக்கியுள்ளது பாஜ அரசு: பிரியங்கா விளாசல்.

வேட்பு மனுவில் பூர்வீக சொத்து மட்டுமே... ஐபிஎஸ் ஆக இருக்கும்போது சம்பாதித்து வாங்கிய சொத்தை மறைத்தாரா? ஒப்புதல் வாக்குமூலத்தால் சிக்கிய அண்ணாமலை -

தஞ்சை பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது 33 வழக்குகள்.

பாஜக,மற்றும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்: அதிமுக புகார்.

இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,23,33,925.

தங்கம் விலை உயர்ந்துவிட்ட நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுமா? 

”மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின், விலை ரூ.8,552 கோடி மட்டுமே” -சுத்தமானவர்கள்(?) 21 பேர் பெயர்களை வெளியிட்ட காங்கிரஸ் .

   தினமும் ஒரு    பொய் 

சொத்து மதிப்பு உயர்ந்து உள்ளது குறித்துஅண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், ‘எனது சொத்து கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 117 மடங்கு உயர்ந்திருப்பதை காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். 11% மட்டுமே எனது சொத்து உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு மனிதருக்கு நான்கிலிருந்து ஆறு சதவீதம் சொத்து உயரும். 

நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கியுள்ளேன்.

நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார். 

ஆனால், எந்த வேலைக்கு செல்லாமல் முழு நேர அரசியலில் ஈடுபடும் அண்ணாமலைக்கு சொத்து எப்படி உயர்ந்தது என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. 

எப்பவுமே மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கும் அண்ணாமலை அந்த குற்றச்சாட்டு தவறு என்று அவர்கள்தான் நிரூ.பிக்க வேண்டும் என்று அசர வைக்கும் வகையில் பதிலளிப்பார். 

ஆனால், நேற்று நிருபர்கள் கேள்வி கேட்கும் போது, நீங்கள் நிரூ.பியுங்கள் என்று கூறுகிறார். மேலும், நிருபர்கள் படிப்பதே இல்லை என்று எப்போவும்போல் அவர்கள் தலையில் பழியை போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

பொய்யும், அண்ணாமலையும் என்றும் பிரியாது போல… நேற்று பேட்டியளிக்கும் போது, ‘நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கியுள்ளேன்’ என்று கூறி உள்ளார். ஆனால், அண்ணாமலை தாக்கல் செய்ய வேட்புமனுவில் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் பூர்வீக சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சொத்துக்கள் எப்போது வாங்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. 

இந்த சொத்துக்கள் அனைத்தும் அவருடைய தந்தை, தாத்தா பெயரில் உள்ளது. இவர் ஐபிஎஸ் ஆக இருந்த காலத்தில் சொத்துக்கள் வாங்கியதாக எதுவும் கணக்கு காட்டப்படவில்லை.

ஏற்கனவே, இந்த சொத்துக்களின் அரசு வழிக்காட்டி மதிப்பை குறைத்து காட்டி உள்ளது அம்பலமாகி உள்ளது. இவர் காட்டப்பட்ட சொத்துக்கள் மதிப்பு அரசு வழிகாட்டி மதிப்பின்படி ரூ.7.96 கோடி. ஆனால், இவர் காட்டியது வெறும் ரூ.1.12 கோடி. இதேபோல், இவரது மனைவி அகிலாவின் சொத்துக்களும் மறைக்கப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அண்ணாமலை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் மனைவி பெயரில் ரூ.50 லட்சம் சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் ரூ.53 லட்சம் சொத்து கடந்த 2023ம் ஆண்டு வாங்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021ல் காட்டப்பட்ட சொத்துக்கள் இதில் காட்டப்படவில்லை. மேலும், அண்ணாமலை மற்றும் மனைவி இயக்குனர்களாக உள்ள பெங்களூரு நிறுவனத்தின் மூலம் இருவருக்கும் வரும் வருமானமும் காட்டப்படவில்லை. 

இவ்வாறு பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில், பூர்வீக சொத்துதான் தன்னிடம் இருப்பதாக கணக்கு காட்டிவிட்டு ஐபிஎஸ் ஆக இருக்கும் போது சம்பாதித்து வாங்கியது என்று 

தினமும் ஒரு பொய் சொல்வதுபோல் நேற்றும் ஒரு பொய் சொல்லி சிக்கி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?