பொய்யர்கள் பல்கலைக்கழகத்தின

  "போதைப் பொருள் அதிகளவில் கைப்பற்றப்பட்ட டாப் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இல்லவே இல்லை.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"வேதாந்தா நிறுவனம்" திமுகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ளதாக கூறுவது பொய்யான தகவல். வேதாந்தா அளித்த தேர்தல் பத்திர எண்கள் திமுக கட்சியுடன் ஒத்துப்போகவில்லை.எனவே வழங்கவில்லை வேதாந்தா பாஜகவிற்கு ரூ230 கோடியும், காங்கிரசிற்கு 125 கோடியும், பிற கட்சிகள் என மொத்தம் 402 கோடிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்து இருக்கிறது.

மோடியின் தோல்வி உறுதி.!பாஜக படுதோல்வி அடையும்...!தேர்தல் ரிசல்ட் வரும் வரை கூட ...மோடியும், அமீத்ஷாவும் இந்தியாவில் இருப்பது சந்தேகம்.!நாட்டை விட்டு தப்பி ஓடிவிடுவார்கள்.-பிரசாந்த் கிஷோர்.

கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த பிரமோத் என்ற RSS நிர்வாகியின் வீட்டில் இருந்து 770 கிலோ பயங்கர வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் 261 பெரிய ரவுடிகள்.பட்டியல் வெளியிட்டார்முதல்வர்ஸ்டாலின்.

என்கையில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்!

இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்! 

வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்?

எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?

-ஒன்றியஅரசு, தமிழ்நாடுபா.ஜ.கவை விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே பணமதிப்பிழப்பு பயன்பட்டது" - உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா 

பொய்யர்கள் பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் அண்ணாமலை!
பல்லடத்தில் செவ்வாயன்று பாஜக ஊழியர் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியிருக்கிறார். 
 “ஆனைமலை, நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.10ஆயிரம் கோடி வேண்டும். அந்த திட்டத்தை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த வேட்பாளரால் பெற்றுத்தர முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.” என்று கூறியிருக்கிறார்.  
முழுப் பொய்
முதலில் இது, ஏற்கெனவே தமிழகம் - கேரளம் இடையே உள்ள பிஏபி திட்ட ஒப்பந்தப்படி நிறைவேற்ற வேண்டிய துணைத் திட்டம் ஆகும். ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டிய திட்டமல்ல. ஆகவே அண்ணாமலை பேசியது முழுப்பொய்.

 மேலும் ரூ.10 ஆயிரம் கோடியை பெற்றுத் தருவாராம். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழக, கேரள மாநிலங்களுக்குத் தர வேண்டிய வரிப் பங்கீட்டையே முழுமையாக ஒன்றிய அரசு தராதபோது வாய் திறக்காத அண்ணாமலை இப்போது வாயில் வடை சுடுகிறார்.

பல்லடத்தின் நிலைமை தெரியுமா அண்ணாமலைக்கு!
“பல்லடத்தில் யாரெல்லாம் தொழில் செய்யப் போறீங்களோ இரண்டாண்டில் இரட்டிப்பு ஆக போகிறது” என்றும் அண்ணாமலை அளந்து விட்டிருக்கிறார். விசைத்தறி தொழில் மையமான பல்லடம் வட்டாரத்தில் ஜவுளித் தொழில் நலிவடைந்து, தறிகளை பழைய விலைக்கு விற்றால்கூட, கழற்றி லாரியில் ஏற்றி அனுப்புவதற்குச் செலவாகும் என்று, புல்டோசர்களை வைத்து விசைத்தறிகளை உடைத்து அள்ளிப்போட்டு பழைய இரும்புக்கு விற்கும் நிலைதான் உள்ளது. 
இந்த வேதனை நிலையைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சமும் கூசாமல் இரட்டிப்பு ஆக்குவேன் என்று பொய் சொல்கிறார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?