தீய கூட்டணி!
பொய்களை மட்டுமே பேசுவேன் என்று சபதமெடுத்து, பிரதமர் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மோடி செயல்படுகிறார்!” -தயாநிதி மாறன் .
சேலம் அக்ரஹாரம் பகுதியில், திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக நடைபயிற்சியின் போதே வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்-பள்ளிக்கல்வித்துறை .
மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம்.இந்திய கம்யூனிஸ் கட்சிக்கும் கோடிகளில் அபராதம்.தேர்தல் நேம் எதிர்கட்சிகளை முடக்க பாஜக வுக்கு ஆதரவாக வருமான வரித்துறை ஒருபக்கச் சார்பு நடவடிக்கை.
மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் தமிழகத்தில் கைகோர்த்துத் தேர்தலைச் சந்திக் கின்றன.
இரு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் சாதி, மத வெறி வேரூன்றியிருக் கிறது. இது தமிழக நலனுக்கு மட்டுமின்றி ஜனநாயகத்திற்கே நல்லதல்ல.
பாமகவின் தேர்தல் அறிக்கையில் “21 வயதுக்குக் கீழான பெண்களின் திரு மணத்திற்குப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாய மாக்க வழி செய்வோம்” எனக் கூறப்பட்டிருக் கிறது.
சாதி அரசியலுக்காகக் காதலை “நாடகக்காதல்” என பாமக நாடக மாடி வருவதை நாடறியும்.
இதே போல் பாஜக மதமறுப்பு காதல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதை யும் கொள்கையாகக் கொண்டிருக்கிறது.
அத னால்தான் “முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறோம் என்ற பெயரில் மத மாற்றம் செய்கின்றனர்” என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன் மூலம் இந்திய அர சியல் சாசனம் வழங்கியிருக்கும் தனிமனித உரிமைகளை பாஜக மறுக்கிறது.
ஆகவே இவர்களை வெறுமனே ஒரு தேர்தல் கூட்டணி என்று மட்டும் ஒதுக்கிவிட முடி யாது; ஆபத்தான சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல் கூட்டணி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சாதி மறுப்பு காதல் திரு மணத்தில் ஆண்கள் விரும்பி செய்தால் அதற்கு பெற்றோர்களின் ஒப்புதல் தேவையில்லை; ஆனால் பெண்கள் விரும்பிச் செய்தால் பெற்றோர் களின் ஒப்புதல் கட்டாயம் என்கிறது பாமக.
இதில் சாதிவெறி மட்டுமல்ல, ஆணாதிக்க வெறி யும் உள்ளடங்கியிருக்கிறது.
சிங்கப்பூர் , பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்குப் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதிமுறை நடை முறையில் உள்ளது என அந்த நாடுகளையும் பாமக தங்களுக்குத் துணைக்கு அழைத்திருக் கிறது.
ஆனால் அந்த நாடுகளில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்வதற்குத் தான் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.
அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர் கள் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ தடை யில்லை. உள்நாட்டில் மட்டுமல்ல அயல் நாட்டி னரையும் திருமணம் செய்ய அந்த நாடுகளில் எந்த தடையும் இல்லை.
இந்தியாவில் ஏற்கனவே 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்யவே சட்டம் தடை விதித்திருக்கிறது. எனவே இத்தகைய கூட்டணியை முற்றாக தோற்கடிப்பதன் மூலம் ஜனநாயகத்தையும், சமூக நீதியையும் பாதுகாப்போம்.