அரோகரா ?
அண்ணாமலை நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதில், தன்னிடம் ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் கையில் ரொக்கமாக இருப்பதாகவும், தனது மனைவி அகிலாவிடம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கையில் ரொக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி கணக்கில் ரூ.25,30,492.65 மற்றும் கரூர்-கோவை சாலையில் உள்ள கனரா வங்கி கணக்கில் ரூ.2608 இருப்பதாக கணக்கு காட்டி உள்ளார்.
சென்னை வேளச்சேரி எச்டிஎப்சி வங்கி உள்ள கணக்கில் ‘0’ இருப்பதாக கூறி உள்ளார். இது, தேர்தல் செலவுக்காக தொடங்கப்பட்ட கணக்கு என்று கூறி உள்ளார். அண்ணாமலையின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.25 லட்சத்து 33 ஆயிரத்து 100 ஆக உள்ளது.
அண்ணாமலைக்கு மட்டும் ரூ.36 லட்சத்து 4,100 அசையும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அண்ணாமலையின் மனைவி அகிலாவுக்கு பெங்களூரு கொடிஹள்ளி பழைய ஏர்போர்ட் எச்டிஎப்சி வங்கி கிளையில் உள்ள கணக்கில் ரூ.98,21,740.93 மற்றும் கோவை காளப்பட்டி எச்டிஎப்சி வங்கியில் கிளையில் அகிலா வங்கி கணக்கில் ரூ.51,535.72 உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்கு அண்ணாமலை, அகிலா மற்றும் அர்ஜூன் என்ற பெயரில் கூட்டு கணக்காக உள்ளது. அகிலாவின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.98 லட்சத்து 73 ஆயிரத்து 275 ஆக உள்ளது. இதுதவிர ‘‘CORE TALENT AND LEADERSHIP DEVELOPMENT PRIVATE LIMITED, BANGALORE’’ என்று அண்ணாமலை மற்றும் அவரது மனைவி இயக்குனர்களாக உள்ள நிறுவனத்தில் ரூ.60,000 மதிப்பிலான பங்குகள் வாங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதேபோல் அண்ணாமலையின் மனைவி அகிலா கரூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ரூ.20 லட்சத்து 69 ஆயிரம் முதலீடு செய்து உள்ளார்.
அண்ணாமலையின் மனைவி அகிலாவுக்கு மொத்தம் ரூ.2.03 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை பெயரில் அசையா சொத்தாக ரூ.1.12 கோடி மதிப்பில் பூர்வீக சொத்து இருப்பதாகவும், மனைவி பெயரில் அசையா சொத்தாக ரூ.53 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மை இது இல்லை.
அண்ணாமலை அவருக்கு சொந்தமான காட்டி உள்ள பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.7 கோடி 96 லட்சத்து 87 ஆயிரத்து 680. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள சூடாமணி கிராமத்தில் ரங்கசாமி கவுண்டர் மகன் குப்புசாமி கவுண்டர் என்ற பெயரில் உள்ள சர்வே எண்: 189,172,173,250 ஆகிய இடங்கள் வேளாண் நிலங்கள் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
ஆனால் அரசு இணையதளத்தில் 172,173,250 ஆகிய சர்வே எண்களுக்கான பட்டாவில் ஓட்டு வீடு மற்றும் குடியிருப்பு பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வே எண் 172,173 என்ற இடம் 10.10.2014 அன்றே ஓட்டு வீடு என்று பட்டாவில் கூறப்பட்டுள்ளது. சர்வே எண் 250 என்ற இடம் 3.10.2001 அன்றே குடியிருப்பு பகுதி என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டாவில் மொத்தம் 9.51 ஏக்கர் என்று அரசு இணையதளத்தில் காட்டுகிறது. ஆனால் அண்ணாமலை காட்டி இருப்பது 7.61 ஏக்கர் மட்டுமே.
இதுதவிர குப்பண்ண கவுண்டர் மகன் ரங்கசாமி என்பவர் பெயரில் சர்வே எண் 175,190,191 மற்றும் புஞ்சைக்காள குறிச்சி கிராமம், சின்னதாராபுரத்தில் உள்ள சர்வே எண் 486, 535 ஆகிய பூர்வீக சொத்துக்கள் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
மேற்கண்ட நிலங்களுக்கான அரசு வழிக்காட்டி மதிப்பும் குறைத்து காட்டப்பட்டுள்ளது.
அண்ணாமலை தெரிவித்து உள்ள சொத்துக்கள் விவரங்களை அரசு வழிக்காட்டி மதிப்புப்படி கணக்கிட்டால் மொத்தம் ரூ.7 கோடி 96 லட்சத்து 87 ஆயிரத்து 680 வருகிறது.
ஆனால் அண்ணாமலை கணக்கு காட்டியது ரூ.1.12 கோடி மட்டுமே. இதன் மூலம் அண்ணாமலை ரூ.6.84 கோடி சொத்துக்கள் மறைத்து காட்டி உள்ளது
அம்பலமாகி உள்ளது.
ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, தனது சொந்த வேட்பு மனுவிலேயே இவ்வளவு தில்லாலங்கடி ஊழலை செய்து உள்ளார்.
* ஆடு, மாடு வளர்ப்பவருக்கு ரூ.20 லட்சம் வருமானமா?சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அண்ணாமலை வசித்து வருகிறார்.
இதற்கு ரூ.6 லட்சம் வாடகையை நண்பர்கள் கொடுப்பதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
மேலும் வீட்டு செலவு மற்றும் காருக்கான டீசல் எல்லாம் தனக்கு ஓசியில் வருவதாக சொன்னார். தற்போது பிரமாண பத்திரத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் ‘‘CORE TALENT AND LEADERSHIP DEVELOPMENT PRIVATE LIMITED, BANGALORE’’ என்ற நிறுவனத்தின் இயக்குனர், ‘‘WE THE LEADERS FOUNDATION’’ என்ற டிரஸ்டில் மேனேஜிங் டிரஸ்டி என்று கூறி உள்ளார்.
ஆனால், இந்த நிறுவனங்கள் மூலம் அண்ணாமலைக்கு வரும் வருமானத்தை காட்டவில்லை.
ஆனால், 2022-23ம் ஆண்டில் ரூ.20 லட்சத்து 51 ஆயிரத்து 740 என்று வருமானம் வருவதாக காட்டி உள்ளார்.
அப்படி பார்த்தால் ஆடு, மாடு வளர்ப்பதன் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.
முழுநேர அரசியலில் இருக்கும் என கூறும் அண்ணாமலைக்கு எப்படி ரூ.20 லட்சம் வருமானம் வருகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
வேலையே இல்லாமல் நண்பர்கள் உதவியுடன் வாழும் அண்ணாமலைக்கு சொத்துக்கள் மட்டும் உயர்ந்து உள்ளது. இதையும் ஓசியில் நண்பர்கள் கொடுத்திருப்பார்களோ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
* அண்ணாமலை மீது 24 வழக்குகள்அண்ணாமலை மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 2 தனிப்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
* மனைவியிடம் ரூ.20 லட்சத்தில் தங்கம் அண்ணாமலையிடம் ஒரு கிராம் கூட இல்லையாம்அண்ணாமலை தனது பிரமாண பத்திரத்தில் மனைவி அகிலாவிடம், ரூ.20,48,000 மதிப்பில் 320 கிராம் தங்க இருப்பதாக கூறி உள்ளார். அவரிடம் ஒரு கிராம் தங்க கூட இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
* மனைவி சொத்துக்களும் மறைப்பு வருமானம் ரூ.6 லட்சமாம்.. கடன் கொடுத்தது ரூ.30 லட்சமாம்…
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டபோது, அவருக்கு அசையும் சொத்து ரூ.46.13 லட்சமும், அசையா சொத்தாக 76 ஏக்கர் நிலம் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மட்டுமே இருந்ததாக கூறி உள்ளார்.
ஆனால், தற்போது அசையும் சொத்துக்கள் 36 லட்சம் என்றும், அசையா சொத்துக்கள் ரூ.1.12 கோடி என்று கூறி உள்ளார்.
ரூ.12 லட்சம் அசையா சொத்துக்கள் மட்டுமே உயர்ந்து உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார்.
அண்ணாமலை மனைவி பெயரில் ரூ.94 லட்சம் அசையும் சொத்துக்கள் இருந்ததாகவும், ரூ.50 லட்சம் அசையா சொத்துக்கள் இருந்ததாக 2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் காட்டி உள்ளார்.
ஆனால் தற்போது அசையும் சொத்துக்கள் ரூ.1,51,66,425 என்றும், அசையா சொத்துக்கள் ரூ.53,00,000 என்றும் கூறப்பட்டுள்ளது. மனைவி பெயரில் உள்ள அசையா சொத்து 21.10.23 அன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய மதிப்பு ரூ.48 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படி என்றால் 2021ல் காட்டப்பட்ட ரூ.50 லட்சம் சொத்து எங்கே போனது? இதை கணக்கில் காட்டாமல் அண்ணாமலை மறைத்தாரா?
என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இதேபோல், அண்ணாமலை மனைவி அகிலா நடத்தும் நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சம் கடன் அளித்து உள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்று காட்டவில்லை.
அதேபோல் அகிலா தனக்கு 2018-2019ல் 17 லட்சம் வருமானம் இருந்ததாகவும் 2022-23ல் ரூ.6.08 லட்சமாக குறைந்துவிட்டதாகவும் கூறி உள்ளார். ரூ.6 லட்சம்தான் வருமானம் வருவதாக கூறும் அண்ணாமலை எப்படி ரூ.30 லட்சம் கடன் கொடுத்தார் என்பது புரியதா புதிராக உள்ளது.
*ரூ.5 லட்சத்தில் ஒரே ஒரு கார்தான் இருக்காம்…அண்ணாமலை தனக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ஒரே ஒரு ஹோண்டா சிட்டி கார் மட்டும் இருப்பதாக கூறி உள்ளார்.
இதுவும் 2016ல் வாங்கப்பட்டதாக கூறி உள்ளார்.
பல நிறுவனங்களை வைத்து நடத்தும் மனைவிக்கு கார் இல்லை என்று கூறி உள்ளார்.