மிரட்டல் நிதி!
நேரடி நிதி, தேர்தல் அறக்கட்டளைகள் போன்ற வழிகளில் பாஜக நடத்தியிருக்கிற வசூல் வேட்டைகள் இவை.
அதாவது தேர்தல் பத்திரம் அல்லாது பெற்ற கைமாறுகள்!
அப்படி வேறு வழிகளில் நிதியளித்த நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களாகவும் அளித்த நிதி குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த லலிதா ஜூவல்லரி நிறு வனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2021 மார்ச்சில் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல நூறு கோடி ரூபாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தனர்.
அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் ரூ.1 கோடியை பாஜகவிற்கு நிதியாக அளித்தது.
இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 2013இல் (அதாவது பாஜக ஆட்சிக்கு வருவதற்குமுன்), ஓர் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ ரெய்டு நடந்தது.
ரூ.25 கோடி அளவுக்குக் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டு, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2014இல் (அதாவது பாஜக ஆட்சிக்கு வந்தபின்!) அந்த விசாரணை யை முடித்துக்கொள்வதாக அறிக்கை அளித்த மத்தியப் புலனாய்வுத்துறை, தவறு எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவித்தது. இது நடந்து 3 ஆண்டுகள் கழித்து, 2017-18இல், ஹிண்டால்கோ நிறுவனம் பாஜகவிற்கு ரூ.6.75 கோடி நிதியளித்தது.
அதே ஆண்டில், ஆதித்ய பிர்லா குழுமம், அதனு டைய ஏபி தேர்தல் அறக்கட்டளை மூலமாக ரூ.13.5 கோடியை பாஜவிற்கு அளித்தது.
(தேர்தல் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட தில் பாஜகவிற்குச் சென்றது மட்டுமே ரூ.13.5 கோடி!)
அடுத்த ஆண்டில் தேர்தல் அறக்கட்டளை வழியாக இந்தக் குழுமம் அளித்த நிதியில் பாஜகவை அடைந்தது ரூ.9 கோடி.
மொத்தத்தில், 2021-22இல் மேலும் ரூ.10 கோடியை பாஜகவிற்கு ஹிண்டால்கோ அளித்தது. 2017-22 காலகட்டத்தில், பாஜகவுக்கு இந்தக் குழுமம் அளித்த நிதி ரூ.60.5 கோடி!
கல்பதரு குழுமம்
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரசைச் சேர்ந்த அசோக் கெலாட்டுக்கு நெருக்க மானதாகக் கூறப்படுவது கல்பதரு குழுமம்.
இக் குழுமத்தைச் சேர்ந்த கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் 2023 ஏப்ரலில் ரூ.10 கோடியும், ஜூலையில் ரூ.10 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு அளிக்கிறது. ஆனாலும், அடுத்த மாதத்தில் அந் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை நடத்தப்படுகிறது. அனேகமாக நிதி கேட்டு மிரட்டப்பட்டு, கொடுத்த நிதி போதாது என்று ரெய்டும் நடத்தப்பட்டிருக்கலாம்.
அக்டோபரில் மேலும் ரூ.5.5 கோடியை அந்நிறுவனம் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களாக அளிக்கிறது.
பசிஃபிக் எக்ஸ்போர்ட்ஸ்
ராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த, பசிஃபிக் இண்டஸ்ட்ரீஸ் என்ற குழுமத்தைச் சேர்ந்தது பசிஃபிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம்.
சுரங்கத் தொழிலில் உள்ள இந்நிறு வனம், 76 ஆயிரம் டன் கனிமங்கள் எடுக்க உரிமம் பெற்றுவிட்டு, 12 லட்சம் டன் கனிமங்களை எடுத்திருந்தது. இதுதொடர்பாக, 2013 நவம்பரில் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனைகள் நடத்தி, வழக்குப் பதிவு செய்தது.
இதே குழுமத்தினால், கீதாஞ்சலி பல்கலைக்கழகம், கீதாஞ்சலி மருத்துவக் கல்லூரி, கீதாஞ்சலி தொழில்நுட்பப் பயிலகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் நடத்தப்படுகின்றன. அந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக 2015இல் வருமான வரித்துறை சோத னைகள் நடத்தப்பட்டன.
வரி செலுத்தவில்லை என்று மீண்டும் 2019இல் சோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றுக்குப்பின், 2021-22இல் இக்குழும நிறுவனங்கள் ரூ.12 கோடியை பாஜகவுக்கு அளிக்கின்றன.
ஆனாலும், அந்த நிதியாண்டின் இறுதியில், இவர்களுக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் ஒன்றில், சேர்க்கை, நிதி ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை சோதனைகள் நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில் மேலும் ரூ.6 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
பட்டேல் என்ஜினியரிங்
பட்டேல் என்ஜினியரிங் என்ற நிறுவனம், ஜம்மு காஷ்மீரில் அமைத்துக் கொண்டிருந்த நீர் மின் நிலையத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்தது.
அதன்பின் இந்த நிறுவனம் பாஜகவுக்கு ரூ.6 கோடியை தேர்தல் பத்திரங்களாக அளித்தது.
சலர்ப்புரியா சட்வா
சலர்ப்புரியா சட்வா என்பது, பெங்களூரின் பெரிய கட்டுமான நிறுனங்களில் ஒன்று. பிஜஸ் அகர்வால் என்பவருக்குச் சொந்தமான இதற்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன.
2018இல் இதன் துணை நிறுவனங்களில் ஒன்றான ஹீரா குழுமத்தின்மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து, எஸ்எஸ் குழுமம் முதலீட்டு ஊழலில் ஈடுபட்டி ருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
2020-21இல் இதன் துணை நிறுவனங்கள் எஸ்எல் டெவலப்பர்ஸ் ரூ.3 கோடியும், எஸ்பிபிஎல் டெவலப்பர்ஸ் ரூ.60 லட்சமும் பாஜகவுக்கு நிதியளித்தன. அடுத்த ஆண்டில், மற்றொரு துணை நிறுவனமான சாடர்ன் க்ருக் நிர்மான் மூலமாக ரூ.4 கோடி நிதி பாஜகவுக்கு அளிக்கப்பட்டது.
பிஜய் அகர்வால் பங்குதாரராக இருக்கக்கூடிய ஆர்எல்எம் இன்ஃப்ரா ப்ரமோட்டர்ஸ் நிறுவனமும் ரூ.50 லட்சம் நிதியை பாஜகவுக்கு அளித்தது. நவம்பர் 2022இல் சலர்ப்புரியா சட்வா குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் மேற்கொண்டு, சொத்துகள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை முடக்கியது.
அதைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில், எஸ்எஸ் டெவலப்பர்ஸ் ரூ.4 கோடியும் சாடர்ன் க்ருக் நிர்மாண் ரூ.1.25 கோடியும் பாஜகவுக்கு அளித்தன.
ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம்
கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம், இந்தியாவின் மூன்றாவது பெரிய சிமெண்ட் நிறுவனமாகும். இது, 2021-21, 2021-22 ஆகிய ஆண்டு களில் பாஜகவிற்கு ரூ.12 கோடி நிதி யளித்தது.
அடுத்த ஆண்டில் நிதி அளிக் காத நிலையில், வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு, ரூ.23 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது.
அடுத்த மாதத்தில், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகமும் தன் பங்கிற்கு மற்றொரு சோதனை க்கு உத்தரவிட்டது. இவை பழிவாங்கும் நடவடிக்கை கள் என்று எதிர்க்கட்சிகளால் கண்டிக்கப்பட்டன. ஆனால் உண்மையான நோக்கம் அடுத்த சில வாரங்களில் வெளிப்பட்டது. சங்கி இண்டஸ்ட்ரீஸ் என்பது மற்றொரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தை வாங்க ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் முயற்சித்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த சங்கி இண்டஸ்ட்ரீஸ்மீது, மோடியின் நண்பர் அதானி விருப்பப்பட்டுவிட, அவருக்கு அது கிடைப்பதை உறுதி செய்வதற் காகவே ஸ்ரீ சிமெண்ட்சை விரட்ட இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன என்பது செய்திகளைப் பார்த்தால் புரியும். சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானிக்கு விட்டுக்கொடுத்தாலும், அத்தனை ரெய்டுக்குப் பின்னும் ஸ்ரீ சிமெண்ட்ஸ் எந்த நன்கொடையையும் பாஜகவுக்கு அளிக்கவில்லை.
அதனால்தானோ என்னவோ, இவ்வாண்டு ஜனவரியில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை நடத்தி, ரூ.4 ஆயிரம் கோடி செலுத்தச் சொல்லியிருக்கிறது.
ஓம் மெட்டல்ஸ் இன்ஃப்ரா
ஓம் மெட்டல்ஸ் இன்ஃப்ரா என்பது ஓம் கோத்தாரி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பனாஸ் ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டுவதற்கான ரூ.615 கோடி ஒப்பந்தம், அப்போதைய அம்மாநில காங்கிரஸ் அரசால் இந்த நிறுவனத்துக்கு 2018இல் வழங்கப்படுகிறது.
2019 ஏப்ரலில் இந்த நிறுவனம் பாஜகவுக்கு ரூ.1.5 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அளிக்கிறது. இவ்வளவு பெரிய அணை கட்டும் ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனம் தங்களுக்கு நிதியளிக்கவில்லை என்று மிரட்டி நிதி வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால், அது போதாது என்று ரெய்டு நடத்தப்பட்டதைப் போல, இந்நிறுவனத்துக்குச் சொந்தமான பல இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட்டுக்கு வேண்டியவர்களின் நிறுவனம் என்பதால், பழிவாங்கும் நடவடிக்கை யாக சோதனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன. அடுத்த ஆண்டில், பாஜகவிற்கு இந்த நிறுவனம் ரூ.5 கோடி நிதியளிக்கிறது.
ஹெட்டிரோ ஃபார்மா குழுமம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெட்டிரோ ஃபார்மா குழுமம் என்பது ஹெட்டிரோ ட்ரக்ஸ், ஹெட்டிரோ லேப்ஸ் ஆகிய நிறுவனங் களை உள்ளடக்கியது.
இந்த நிறுவனம் 2014-20 காலகட்டத்தில் பாஜகவிற்கு வெறும் ரூ.77 லட்சம் நிதியளித்துள்ளது. ஆனால், 2021 அக்டோபரில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்குப்பின் ரூ.1 கோடி நிதியளித்துள்ளது.
அதுமட்டுமல்ல, பெரும்பகுதி நிதியை பாஜகவிற்கு அளிக்கக்கூடிய ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு 2022 பிப்ரவரியில் ரூ.5 கோடியும், அடுத்த ஆண்டில் ரூ.5.25 கோடியும் இந்நிறுவனம் அளித்துள்ளது. மேலும் ரூ.4.2 கோடி நிதியை ஹெட்டிரோ லேப்ஸ் அவ்வாண்டிலேயே அளித்துள்ளது. 2023 அக்டோபரில் ஹெட்டிரோ ட்ரக்ஸ் ரூ.5 கோடியும், ஹெட்டிரோ லேப்ஸ் ரூ.5 கோடியும் தேர்தல் பத்திரங்களாக பாஜகவிற்கு அளித்துள்ளன.
இந்த மருந்தைத் தயாரித்த நிறு வனங்களில் ஹெட்டிரோ லேப்ஸ் அண்ட் ஹெட்டிரோ ஹெல்த்கேர் நிறுவனமும் ஒன்று. அது தயாரித்த இந்த மருந்துகள், தெளிவான நிறமற்ற திரவமாக இருப்பதற்கு பதிலாக மஞ்சள் நிறமாக இருந்தது, மருந்தின் அளவு சிகிச்சைக்குத் தேவையானதைவிடக் குறைவாக இருந்தது, தரமற்றதாக இருந்தது போன்ற குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டும், எச்சரித்தும் ஆறு முறை அறிவிப்புகள் தரப்பட்டுள்ளன.
மக்களின் உயிரோடு விளையாடுகிற ஒரு நிறுவனம், அதைக் கண்டுகொள்ளாமலிருக்க அளித்த லஞ்சம்தான் இந்த நன்கொடைகள். வாக்களித்த மக்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன, எங்களுக்குக் காசுதான் வேண்டும் என்று பாஜக கொள்ளையடித்திருக்கிறது.
பாரிக் எண்டர்ப்ரைசஸ்
பாரிக் எண்டர்ப்ரைசஸ் என்பது, சென்னையில் குப்பைகளை மறு சுழற்சி செய்கிற நிறுவனமாக, ஏப்ரல் 2020இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு செய்யப்பட்ட முதலீடு வெறும் ரூ.1 லட்சம்தான்.
ஆனால், இந்த நிறுவனம் 2021- 22இல் 10 தவணைகளாக பாஜகவிற்கு அளித்துள்ள நிதி ரூ.2.79 கோடி. இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள சென்னை முகவரியில் அலுவலகம் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, பெயர்ப்பலகைகூட இல்லை. அது மட்டுமல்ல, செயல்படா நிறுவனங் களை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டிய லிலிருந்து நீக்கும் நடைமுறையின்படி, நிறு வனங்கள் பதிவாளர் மார்ச் 2023இல் நீக்கியும் விட்ட தால், இப்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை.
ரூ.1 லட்சம் முதலீடு போட்டு, பாஜகவுக்கு ரூ.2.79 கோடி நிதியை அளிக்கிற பணியை மட்டும் செய்து விட்டு, ஒரு நிறுவனம் காணாமலும் போய் விட்டது என்றால், அந்த நிறுவனம் தொடங்கப் பட்டதே அந்த நிதியை ‘சட்டப்பூர்வமாக’ அளிப்ப தற்காக மட்டும்தான் என்றுதான் பொருள்.
அதாவது, கருப்புப் பணம், கள்ளக்கடத்தல் பணம், முறைகேடான வழியில் வந்த பணம் போன்ற ஏதோவொன்று, பாரிக் எண்டர்ப்ரைசஸ் என்ற பெயரில் பாஜகவால் வெள்ளையாக்கப்பட்டுள் ளது. அ
ந்த பாஜகவை விட்டுவிட்டு, அரசு உதவித் தொகை பெறுகிற ஏழை விவசாயிகள்மீது வழக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது அமலாக்கத் துறை!
மைக்ரோ லேப்ஸ்
டோலோ 650 மாத்திரை களை உற்பத்தி செய்கிற நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த மைக்ரோ லேப்ஸ். இது 2015-16இல் பாஜகவுக்கு ரூ.21 லட்சம் நிதியளித்துள் ளது. 2017-18 ஆண்டில் இந்த நிதி 43 மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.9 கோடி அளித்துள்ளது. அடுத்த இரு ஆண்டு களில் (2018-19) ரூ.3 கோடியும், (2019-20) ரூ.50 லட்சமும் அளித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின்போது, இந்நிறு வனத்தின் டோலோ 650 மாத்திரைகள் ஏராளமாக விற்பனையானதில், ரூ.400 கோடி வருவாய் ஈட்டி யது. ஆனாலும், 2020-21, 2021-22 ஆண்டு களில் இந்நிறுவனம் பாஜகவுக்கு நிதி எதுவும் அளிக்கவில்லை.
ஜூலை 2022இல் இந்நிறு வனத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வரு மான வரித்துறை சோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும், இவர்களின் மருந்துகளைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிற்குப் பரிசுகள் வழங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
பிறகு என்ன...?
இரண்டு ஆண்டு களாக பாஜகவுக்கு நிதியளிக்காத அந்த நிறுவனம் ரூ.2 கோடியை (முதல் தவணையாக!) அளித்தது. 2022 செப்டெம்பரில், இந்நிறுவன த்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கை விடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
அடுத்த மாதத்தில் மேலும் ரூ.6 கோடியை பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களாக அளித்தது இந்த நிறுவனம்!
டீல் ....ஓவர்,....!
தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் தலைமறைவான பிரதமர் மோடி !
தோல்வி உறுதி என்ற உளவுத்துறை அறிக்கை காரணமா ?
உளவுத்துறை தகவலின் படி, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு என எந்த நல்ல திட்டங்களையும் பாஜக கொண்டுவராததால் தேர்தலில் வெல்ல ராமர் கோவிலை பாஜக கையில் எடுத்தது.
இதற்கு ஆரம்பத்தில் வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு நிலவிய சூழலில், இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கொக்கரித்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஊழல் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது.
மேலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை, வருமானத்துறையை வைத்து எதிர்கட்சி தலைவர்களை பாஜக கைது செய்தது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்து நாடு முழுவதும் வலுவுடன் திகழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஆரம்பத்தில் ஆர்வமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கே செல்லாமல் தலைமறைவாகியுள்ளார். தோல்வி உறுதி என்பதால் பாஜகவின் முக்கிய தலைவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக ஒன்றிய அரசின் உளவுத்துறை அமைப்புகள் அளித்த அறிக்கையே காரணமாக கூறப்படுகிறது. உளவுத்துறை அளித்த தகவலின் படி, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது என்றும், இதனால் தென்மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சனிக்கும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.