டாக்டர்களும் ,இன்ஜினியர்களும்
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி அட்மிஷன் பெறுவதற்காக கள்ள சந்தையில் ரூ.12 ஆயிரம் கோடி வரை கருப்பு பணம் புழங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அட்மிஷனுக்கு கள்ள சந்தையில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் புழங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் 422 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 224 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். இந்த கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ள மொத்த மருத்துவ படிப்புக்கான அட்மிஷனில் சுமார் 54 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. தற்போது புரோக்கர்கள், ஏஜென்டுகள், கள்ளச்சந்தையினர் ஆகியோரின் இலக்கில் இந்த இடங்கள்தான் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள், 9 ஆயிரத்திற்கும் அதிகமான முதுகலை மருத்துவ படிப்புகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ...