நீதி தேவதை கருப்புத்துணியில் ஓட்டைகள் ?

திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளார்.
சஞ்சய் தத் விடுதலை தொடர்பான கோப்பின் முழு நகல் மற்றும் சிறையில் அவரது நடவடிக்கை குறித்த தகவல்களைத் தருமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சஞ்சய் தத் தொடர்புபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனை முடிவடைவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், சஞ்சய் தத் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, “நன்னடத்தை” காரணத்துக்காக விடுவிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
அவருக்கான தண்டனைக் காலத்தை குறைக்கும் முடிவை சிறைக் கண்காணிப்பாளரே எடுத்தார் என்று மராட்டிய அரசு கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்த பின்னணியில் தற்போது தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சஞ்சய் தத் எந்த விதிமுறைகளின் கீழ், யாரால் அவர் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவிக்குமாறு கோரியுள்ளார். 
இதற்கான முடிவை யார் எடுத்தார்கள் என்றும் எந்த விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் என்னென்ன நடைமுறைகள் இதில் கடைபிடிக்கப்பட்டன என்றும் தனக்குத் தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரியிருப்பதாக இந்தத் தகவல் தனது வாழ்க்கை மற்றும் விடுதலையுடன் தொடர்பு கொண்டிருப்பதால, இவற்றை தனக்கு அளிக்குமாறு பேரறிவாளன் கேட்டுள்ளார்.

சஞ்சய்தத் மும்பைக் குண்டுவெடிப்புக்கான வெடிகுண்டுகளை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.தீவிரவாதிகள் பல இடங்களில் மும்பையில் குண்டு வெடிப்புகளை செய்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொலை செய்தனர்.
அதன் பின்னர் அந்த தீவிரவாதிகள் சஞ்சய்தத் வீட்டிலேயே அவரின் பாதுகாப்பில் இருந்து பின்னர் தப்பிச்சென்றனர் என்பதும்,மூன்று இயந்திர துப்பாக்கியை அனுமதியின்றி மறைத்து வைத்திருந்தார் என்பதுமே சஞ்சய் தத் மீதான நிருபனமான குற்றச்சாட்டுகள்.
அதற்கு பலத்த ஆதாரங்கள் இருந்ததால் சஞ்சாய் தத் வெறு வழியின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால் அவர் தனது சிறைக்காலம் முழவதும் பரோலிலே வெளியெ தனது வீட்டில் தங்கி படங்களில் நடித்து கோடிகளை குவித்தார்.
அவரது ஐந்தாண்டு சிறைத்தண்டனயில் அவர் வெறும் மூன்று மாதங்களையே சிறையில் கழித்துள்ளார்.
அதை விட வேடிக்கை அவரின் நன்னடத்தை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியெ வருகிறாராம்.
எப்படியும் அவர் பரோல் என்ற பெயரில் வெளியெ இருந்து நடிக்கத்தான் போகிறார்.இருந்தும் இந்த வேடிக்கை எதற்கு தெரியவில்லை.
சஞ்சய் தத் செய்த பயங்கரவாத நடவடிக்கைகளைப்பார்க்கும் போது பேரறிவாளன் செய்த தவறு ஒரு தூசு.
பக்கத்து வீட்டில் தங்கியிருந்தவர்கள் கடைக்கு போகும் தன்னிடம் பேட்டரி வாங்கி வரச்சொன்னதை செய்ததுதான் வர செய்த குற்றம்.அவர்கள் ராஜீவ் காந்தியை கொள்ளப்போகிறார்கள் என்றும்,அந்த குண்டை வேடிக்கச்செய்யவே பேட்டரி என்பது இவருக்கு தெரியாது.
அவரின் குற்றம் ஒன்றுதான்.இலங்கைத்தமிழராக இருந்ததுதான்.
இதனாலேயே பருத்தி வீரன் படத்தில் கஞ்சா கருப்பை "வெப்பன்ஸ் சப்ளையர்" என்பது போல் ஆக்கி தூக்குக்கே அனுப்பி விட்டது நம் சட்டம்.
உண்மையான நூற்றுக்கணக்கான மக்களை கொலை செய்ய உதவிய வெப்பன் சப்ளையருக்குசஞ்சய் தத்துக்கு  நன்னடத்தை ,விடுதலை.
என்ன சட்டம்,நீதி என்று புலம்பத்தான் வேண்டியிருக்கிறது.
சட்டத்தை மதிக்காதவர்களுக்குத்தான் இந்திய தண்டனை சட்டம் வளைகிறது என்பதை 213 வாய்தா வாங்கிவழக்கை சுயிங்கமாக இழுத்தும்  குற்றவாளி என்று ஆணித்தரமாக நிருபிக்கப்பட்ட ஜெயலலிதா 
வழக்கை உடனே போர்க்கால நடவடிக்கையில் எடுத்து இத்தனை நாட்களுக்குள் நடத்தி விடுவிக்க வேண்டும் என்று உத்திரவிட்ட உச்ச நீதிமன்றம் ,அதே ஜெயலலிதா வெளியானதை எதிர்த்து வந்துள்ள வழக்கை நீதிபதிகளை மாற்றி குழப்பி வருகிறது.

தூக்கு கயிறை எதிர்பார்த்திருக்கும் பேரறிவாளன் உட்பட மூன்று பேர்கள் வழக்கை நத்தையை விட வேகமாக நடத்தி வருகிறது.பிணை,பரோல் ஒன்றும் கிடையாது.
மானைக்கொன்று தின்று ஏப்பமிட்ட,சாலையோர மக்களை காரை ஏற்றிக்கொன்ற ,அதற்கு சாட்சி சொன்ன காவலரை வேலையை விட்டு நீக்கி  கொடுமைப்படுத்தி கடைசியில் சாகவைத்த சல்மான் கானுக்கு உத்தர் பட்டம் கொடுத்து விடுதலை.என்று நம் சட்டம் தறுதலையாக உள்ளது.
சட்டப்புத்தகங்களில் இருக்கும் பக்கங்களை விட செல்வாக்கு கரையான் அரித்த ஓட்டைகள்தான் அதிகமாக உள்ளது.
அதை வெளிக்கொண்டுவர பேரறிவாளனின் இந்த முயற்சி உதவட்டும்.நீதி தேவதையின் கண்ணை மறைத்துள்ள கருப்புத்துணியில் அரசியல்,பணம் போட்டுள்ள  ஓட்டைகளை மக்களிடம் காட்டட்டும்.
==================================================================================================
சுருக்கெழுத்து கலை மறைந்து விடுமா?
.தகவல்களை மிகவிரைவாக குறித்துக்கொள்ள பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்து  முறை, பண்டைய ரோமானிய பேரரசு காலத்தில் இருந்து நடைமுறையில் இருப்பதாகத் தெரிகிறது.
மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் குறிப்பெடுப்பதற்கு, 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக, மக்கள் சுருக்கெழுத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள், நிமிடத்திற்கு 200 க்கும் அதிகமான சொற்களை குறிப்பெடுத்துக் கொள்ள இந்த கலை வழிசெய்கிறது.
மின்னணு தொழில்நுட்பத்துடன் குரலை பதிவு செய்வது, மற்றும் நிகழ்வுகளை ட்டுவீட் செய்யும் இந்தக் யுகத்தில், சுருக்கெழுத்திற்கான தேவை குறைந்து, அதன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஆனாலும் சில சில தொழில்துறைகளில் சுருக்கெழுத்துக்கு இன்னம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
பத்திரிரைக்துறை முதல் நீதித்துறை வரை, சுருக்கெழுத்தின் அவசியம் இன்றும் உள்ளது .
இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் சுருக்கெழுத்து கலையை கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை, பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக, பிரித்தானியாவில் தொழில்முறை கல்வியை வழங்கும் 'சிட்டி அன்ட் கில்ட்ஸ்’ தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் குரலை பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு தட்டச்சு செய்து கொள்வதை விட சுருக்கெழுத்து முறைமூலம் சேகரித்த தகவல்களை தட்டச்சு செய்து கொள்வது மூன்று தடவைகள் விரைவானதாகும் என பிரிட்டனில் உள்ள சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பவர்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக தொழில்துறையில் சுருக்கெழுத்து ஒரு தொழில்தகமையாக உள்ளதுடன் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் சுருக்கெழுத்து என்ற பாராம்பரிய கலை அதன் தேவையை என்றுமே இழந்துவிடாது என்ற கருதை வல்லுனர்கள் எடுத்துக் கூறுகின்றனர். 
===============================================================================================
இன்று,
ஜனவரி-18.
  • தாய்லாந்து ராணுவ தினம்
  • லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)
  • எக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)
  • ஹாக்கி கழகத்துடன் நவீன ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)
"தோழர்  ஜீவா"

சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார்.
"சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.
ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
உலகத் தமிழ் மாநாட்டு மலரில் எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.ஆனால் அவரின் கட்சி இன்றைய நிலை?
பொது வாழ்வின் இலக்கணம் தோழர்  ஜீவா நினைவு நாள் இன்று !
===============================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?