4ஜி 11 லட்சம் கோடி ஊழல்.?
2G யில் இழப்பு என்று கோர்டில் PIL வழக்கை தாக்கல் செய்ததை, விசாரணை இல்லாமல் பெரும் ஊழல் என்று திமுக மந்திரி ராஜா கைதும் செய்யப்பட்டார்,
ஆனால் இப்பொழுது 4G ஸ்பெக்ட்ரத்தைமோடி அரசு, அம்பானியின்ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக அளித்தால் சுமார் 11 லட்சம் கோடி இழப்பு என்று PIL வழக்கை சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்துள்ளதே ,
எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?
2ஜியில் இந்தியா மட்டுமில்லாமல் உலகையே திரும்பிப்பார்க்கும் படி கூச்சல் போட்ட ஆங்கில ,இந்தி ஊடகங்கள் எங்கே ?
அம்பானி பணமுதலை .கட்சிகளுக்கு நிதியை அள்ளி தருவார் என்பதாலா?
அல்லதுராஜா திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதாலா?
அம்பானி கைது செய்யப்படுவாரா?
மோடி ,அவரது தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கைது செய்யப்படுவார்களா?
2ஜி முறைகேடு என்று கூவி, கூவி பரபரப்பை ஏற்படுத்திய , ஊடகங்கள் அரசியவியாதிகளை, இடது சாரிகள் எல்லாம் காணோமே .
லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் பின்னாள் பொடவீண்டும் என்று கணக்கெடுத்து பரபரப்பை அதிகப்படுத்திய தினமணி,தினமலர் நடுநிலை [?]நாளிதழ்கள் இப்போது வெளிவருகிறதா?அப்படியெனில் ஏன் பெட்டிச்செய்தி கூட போடவில்லை?
எங்கே ஆத்தாவுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கிறார்கள்??
================================================================================================
சாதனையா? வேதனையா?
==========================================================================================

தேர்தல் நெருங்குகிற போதுதான் அதிமுக தொண்டர்கள் மீது மட்டுமல்ல, தமிழக மக்கள் மீதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அன்பு பொங்கி வழியும்.
இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அடிக்கடி அவர் மடல் எழுதி வருகிறார்.
அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்எழுதியுள்ள மடலில் தமிழக மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண் டுள்ளதாகவும், தம்முடைய அரசு தமிழக மக்களுக்கு ஆற்றியிருக்கும் தொண்டை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறும் கூறியுள்ளார்.
மேலும் முன்புபெற்றதை விட சிறப்பான வெற்றியை பெற தேர்தல் பணியை இப்போதே தொடங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்பு ஆற்றியதைவிட சிறப்பான வெற்றியை பெறும் வகையில் தேர்தல் பணி என்று சொல்லும் போது சாத்தான்குளம், திருவரங்கம், ஆர்.கே.நகர்போன்ற தொகுதிகளில் அதிமுகவினர் ஆற்றிய பணி நினைவுக்கு வருகிறது.
மக்களிடம் சாதனை களைச் சொல்லி வாக்குக் கேட்பதற்குப் பதிலாக அதிகார துஷ்பிரயோகம் செய்வது பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது என்பதுதான் அதிமுகவின் பிரதானமான தேர்தல் பணியாக உள்ளது.
தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்பு கள் கொண்டுவந்த வெள்ள நிவாரணப் பொருட்களில் கூட வளைத்து, வளைத்து அம்மா பட ஸ்டிக் கரை ஒட்டியதுதான் அதிமுகவினர் அண்மையில் ஆற்றிய மகத்தான பணி. கழுத்தளவு வெள்ளத்தில் மக்கள் நின்றுகொண்டிருந்த போதும் அவர்களை வாக்காளர்களே என்று அழைத்ததன் மூலம் தேர்தல்பணியை முதல்வர் ஜெயலலிதா எப்போதோ துவங்கிவிட்டார்.
வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதில் கூட ஆளுங்கட்சியினர் பாரபட்சமாக நடந்து கொள் கின்றனர் என்று தகவல்கள் வருகின்றன.
துயரத்திலும் கூட தேர்தல் ஆதாயம் தேடுவது என்ன வகையான அரசியல் என்று தெரியவில்லை.
அதிமுக ஆட்சியின் சாதனையாக தொண்டர்கள் எதனைச் சொல்வார்கள் என்று தெரியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு வகைகளில் ரூ.1.57 லட்சம் கோடி அள வுக்கு மக்களிடம் பறித்ததைச் சொல்ல முடியுமா? சட்டமன்றத்தை பஜனை மடமாக மாற்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்ததை எடுத்துரைக்க முடியுமா?
மக்களாட்சியில் அமைச் சரவை என்பது கூட்டு பொறுப்பு என்ற நிலையை மாற்றி அனைத்தும் ஒருவரே என்ற மன்னராட்சி கால நிலையை ஏற்படுத்தியதைச் சொல்ல முடியுமா?
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி உரிய காலத்தில் திறந்துவிடப்படாமல் ஏற்பட்ட பேரழிவை எடுத்துச் சொல்ல முடியுமா?
அரசு பணி நியமனங்களில் துணைவேந்தர் பதவி துவங்கி சத்துணவு ஆயா வரை பணம்பாய்ந்து வருவதையும், இதற்கு இணங்காத அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதையும் எடுத்துச்சொல்ல முடியுமா?
மதுவினால் தமிழகத்திற்கு ஏற்பட் டுள்ள பெரும் கேட்டையும், மதுக்கடைகளுக்கு பாது காப்பு தரும் போலீசார் எதிர்த்துப் போராடுபவர்களை அடித்து நொறுக்குவதை எடுத்துரைக்க முடியுமா?
அவதூறு வழக்கு போடுவதில் கின்னஸ் சாதனை ஏற்படுத்தியதையும், உச்சநீதிமன்றமே இதை மறைமுகமாக கண்டித்ததையும் மக்களிடம் எடுத்துச்சொல்ல முடியுமா?
அதிமுக ஆட்சியில் சாதனை என்று எதுவும் இல்லை.
மக்கள் கண்டது வேதனைதான்.
இதை தேர்தலில் மக்கள் வாக்குகள் மூலம் எடுத்துச் சொல்லும்போது அதிமுகவுக்கு கிடைப்பது வேதனைதான் .
வானதி திருநாவுக்கரசு மறைவு
தமிழின் முன்னணி பதிப்பாளர் வானதி திருநாவுக்கரசு அவர்கள் தனது 88 வயதில் இயற்கை அடைந்துள்ளார்.
இவர் 1955ல் பதிப்புத் தொழிலுக்கு வந்தவர். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரத்திரங்களில் ஒன்றான ‘வானதி’யின் பெயரையே தனது பதிப்பகத்திற்குச் சூட்டினார்.
எல்லா வாசகர்களுக்குமான நூல்களை வெளியிடுவதையே குறிக்கோளாகக் கொண்டு ஏராளமான நூல்களை வெளியிட்டு வந்தார்.
குறிப்பாக, கல்கி, கண்ணதாசன், ராஜாஜி, குன்றக்குடி அடிகளார், சாண்டில்யன், எம்.எஸ்.உதயமூர்த்தி, காஞ்சிப் பெரியவர், கிருபானந்த வாரியார், பி.சி.கணேசன் மற்றும் சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற சகல தரப்பட்ட துறைசார்ந்த நூல்களையும்,ஏராளமான பிரபலங்களின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி தானே ஓர் எழுத்தாளராக பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் முக்கியமானது அவரது ‘வெற்றிப் படிகட்டுகள்’ எனும் வாழ்க்கை வரலாற்று நூலாகும்.
இவருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.
இவரது பதிப்புப் பணியை இவரது மகன் திரு. இராமநாதன் அவர்கள் ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். சிறிது காலமாக உடல் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
=============================================================================================