மூளையின் கொள்ளளவு

முன்பு அறிவியலார்கள் குறிப்பிட்டிருந்ததை விட  மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
 நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. தற்போது அறிவியலாளர்கள் இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர்.

சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.

ஒரு பெடாபைட் என்பது சுமார் 20 மில்லியன் நான்கு டிராயரில் ஃபில்லிங் காபினெட்டுகள் முழுவதும் உரையால் நிரப்பப்படுவது போல அல்லது 13.3 ஆண்டுகள் எச்டி-டிவி பதிவுகளுக்கு சமம். இது நியூரோ சயின்ஸ் துறையில் ஒரு உண்மையான அதிர்ச்சி தகவல் ஆகும் என்று கூறியுள்ளனர். 

மூளைப் பின்மேட்டில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்த சக்தியை கொண்டு எப்படி உயர் கணக்கீட்டு ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்ற வடிவமைப்பு கோட்பாட்டை  கண்டுபிடித்துள்ளனர் . மின்சாரம் மற்றும் இரசாயன நடவடிக்கைகளின் வடிவங்களாக நம்முடைய மூளையில் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் வெளிப்படுகின்றன. 

மின் கம்பி போன்று காணப்படும் நரம்பு கிளைகள் சில சந்திப்புக்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு முக்கிய செயல்பாடு நடப்பதை சினாப்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. 
ஒரு நரம்பரிலிருந்து ஒரு வெளியீடு, 'கம்பி' (ஒரு நரம்பிழை (axon)) இரண்டாவது நரம்பரிலிருந்து ஒரு உள்ளீடு 'கம்பி' -ஐ (ஒரு சிறு நரம்பு இழை (dendrite)) இணைக்கிறது.

சிக்னல்கள் சினாப்ஸிஸ் வழியாக பயணிக்கும்போது ரசாயனங்கள் என்று அழைக்கப்படும் நரம்பியக்கடத்திகள், மற்ற நியூரான்களுக்கு ஒரு எலக்ட்ரிக்கல் சிக்னலை தெரிவிக்க வேண்டும் என்பதை, சிக்னல்களை பெறும் நியூரான்கள் சொல்லும். ஒவ்வொரு நியூரானும் ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களை கொண்ட ஆயிரக்கணக்கான சினாப்ஸிஸ்/ஐ கொண்டுள்ளது.  

===========================================================================================
பிரபல நடிகையும் பிஜேபி MPயும்மான ஹேமா மாலினிக்கு  50 கோடி ரூபாய் நிலத்தை, . சதுர மீட்டர் வெறும் 35 ரூபாய்  என்று கணக்கிட்டு வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு அளித்துள்ளது ஆளும்  பாரதீய ஜனதா அரசு...…ஏற்கனவே  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானியம் அமிதாப் பச்சன்,அபிஷேக் பச்சன்,என அமிதாப் குடும்பம்  தலா 10000/-வாங்கி தங்கள் வறுமையை போக்கியுள்ளனர் .இப்போது அடுத்த மாடி வீட்டு ஏழைக்கு பாஜக மோடி அரசு உதவியுள்ளது.
=====================================================================================================
இன்று,
ஜனவரி-30,

  • உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
  • இந்திய தியாகிகள் தினம்
  •  காந்தி இறந்த தினம்(1948)
  • பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
  • ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)
=====================================================================================================
29 ஆண்டு ஆய்வின் முடிவு?
1983-85 காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1983 கடைசியில் ராபின் மொயின் உள்ளிட்ட பலர் 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் போலியான வாகன சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 56 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த கா. காளிமுத்து இந்தக் கடன்களுக்கு சிபாரிசு செய்துள்ளார்.
இது தொடர்பாக 1987ஆம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் ராபின்மெயின், சூரியகுமார், சாகுல்அமீது, சோமசுந்தரம், பெசில்சாம், சுப்பிரமணியன், நடராஜன்,  அமைச்சர் காளிமுத்து உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதா அரசில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த  காளிமுத்து உள்ளிட்ட 16 பேர் இறந்துபோயினர்.
முக்கியக் குற்றவாளியான ராபின் மொயின் பெயரை வைத்து, "ராபின் மொயின்" வழக்கு என்றே இந்த வழக்கு அழைக்கப்பட்டு எம்ஜிஆர ஆட்சிக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.காளி முத்து மறைவுக்குப்பின்னர் மக்கள் மனதில் இருந்தே மறைந்து போன இவ்வழக்கின் தீர்ப்பு 29ஆண்டுகள் கழித்து வந்துள்ளது. .
வழக்கின் முடிவில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளியான ராபின்மெயினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
29ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராபின் மொயினுக்கு தற்போது 72 வயது.
========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?