தப்புக் கணக்கு
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இதற்கு அந்த நீதிமன்றத்தின் நீதிபதி குமாரசாமி போட்ட தப்புக் கணக்குதான் காரணம் என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடகாவில் நடைபெற்றதால் தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசுதான்மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது.இந்த மனு இம்மாதம் 8ஆம் தேதி விசாரணைக்கு வருமா என்பதே சந்தேகமாக இருந்தது.
பின்னர் விசாரணை நீதிபதிகளில் ஒருவரை மாற்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 8-ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது வழக்கில் தொடர்புடைய நான்கு தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த 19ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எவ்வாறெல்லாம் தப்புக் கணக்கு போட்டிருக்கிறார் என்ற விவரங்கள் முழுமையாக அதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தவறுகள் காரணமாகவே ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே அந்தத் தீர்ப்பை ரத்து செய்து விசாரணை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்தத் தவறுகள் காரணமாகவே ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே அந்தத் தீர்ப்பை ரத்து செய்து விசாரணை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜனவரி 21இல் தாக்கல் செய்த மனுவில் கர்நாடக அரசு தமிழகஅரசின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு முழுக்க முழுக்க தமிழக அரசு சம்பந்தப்பட்டது என்றும் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கோ மற்ற தரப்பினருக்கோ உரிமை இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாதங்களை எல்லாம் கடந்து உச்சநீதி மன்றத்தால் வழக்கு விசாரணை கர்நாடகாவில் தனி நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
அதன் மீதான மேல்முறையீடு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசுதான் மேல்முறையீடு செய்ய முடியும்என்ற நடைமுறை வழக்கமானது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை விடுதலை செய்தபோது
அவர் மீதுவழக்குதொடுத்த தமிழக அரசு, அதனை எதிர்த்துமேல்முறையீடு செய்யவில்லை.
காரணமாக ஜெயலலிதா கூறியது "வழக்குவிசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தால் புதுச்சேரி பிரதேச அரசுதான் மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்துதான் அப்படியே காஞ்சி மடத்தலைவர் விடுதலையானார்..
ஆனால் இப்போது மட்டும் கர்நாடக அரசுக்கு மேல்முறையீட்டுக்கு உரிமை இல்லை என்பது என்ன சட்ட நியாயம்?
மேலும், வருவாய்க்கு அதிகமான சொத்துக் குவிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் உச்சநீதிமன்றத்தில் புதிதாக விசாரணை நடைபெறப்போவ தில்லை.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறைகள்எடுத்துரைக்கப்பட்டு சட்டப்படியான தண்டனையைக் கோருவதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் குறுக்குசால் ஓட்டி நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்போடு வழக்கை முடித்துவிடலாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தவறான கணக்கு போடுகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வழக்கு விசாரணையை மேலும் இழுத்தடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் ஊழல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு முடிக்கப்படவேண்டும்.
உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா தனது சிறைத்தண்டனையை நீக்கக் கூறி மேல் முறையீடு செய்த போது எவ்வாளவு அவசரம்,அவசரமாக அவ் வழக்கை எடுத்து தினசரி நடத்தி ,குமாரசாமி விசாரித்து தீர்ப்புக்கூற காலம் நிர்ணயம் செய்ததோ அதே அவசரத்தில் பாதியாவது காட்ட வேண்டும்.அப்படி செய்தாலே ஒருமாதத்தில் வழக்கை முடித்து தீர்ப்புக் கூறி விடலாம்.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் இதுவரை நடந்துகொண்ட முறை விசாரணையை இழுக்க ஆதரவாக உள்ளது போல் தெரிகிறது.
காரணம் ஒரு நாளை குறிப்பிட்டு பின்னர் அதை தவிர்த்து ஆணையிட்டு,பின்னர் அதே நாளில் நடக்கும் என்று குழப்பியது.
வழக்கை ஆரம்பிக்கும் நாளில் அமர்வு நீதிபதிகளில் கண்டிப்புக்கு பெயர் போன நீதிபதி ஒருவரை நீக்கி வேறொருவரை நியமித்தது.
ஆக ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது .ஆனால் நீதியரசர் குமாரசாமி தப்புக்கணக்கு தீர்ப்பை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதற்கு அவகாசமோ என்றே எண்ணத்தூண்டுகிறது.காரணம் மூட்டி அரசும் அருண்ஜெட்லியும் ஜெயலலிதா மீது வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டும் போதெல்லாம் வந்து சந்தித்து அளவளாவிச்செல்வதுதான்.அவர்கள் வருகை தீர்ப்புகளையே திருத்தப்படலாம் என்ற நிலையை உண்டாக்கி விடுகிறது.
ஆனால் அவர்களின் எண்ணம் குமாரசாமியை விடத்தப்புக்கணக்காக அமைந்து விடும் நிலையே இன்றைய நிலை.
ஜெயலலிதா ஊழல் தவறில்லை என்ற தீர்ப்பு,விடுதலை எவ்வாளவு தவறானது என்பதற்கு ஆணித்தரமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுகவினரைத்தவிர மக்கள் மனதிலும் குமாரசாமி தீர்ப்பு கிண்டலையும் நீதித்துறைமீதே அவநம்பிக்கையையும் உண்டாக்கி விட்டது.
அதை சஞ்சய் தத்,சல்மான்கான் தீர்ப்புகளும் வழி மொழிந்துள்ளது.வலியோர்க்கே இங்கு நீதி வளையும் என்றாகி விட்டது.
==========================================================================================
==========================================================================================
தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்ப்பில் மிகப் பெரிய மோசடி நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது வாக்காளர் பட்டியல் மூலம் வெளி வந்திருக்கும் புள்ளி விவரங்களிலிருந்தும், இந்தப் புள்ளி விவரங்களை, மக்கள் தொகை புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் தெரிகிறது.
"டைம்ஸ் ஆப் இந்தியா"" (21-1-2016) - "2016இல் தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் நான்காண்டுகளில் அதாவது 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, தற்போது 2016 ஜனவரியில் 22 சதவிகித வாக்காளர்கள் அதிகமாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில் தற்போது 20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது 75.56 சதவிகிதம் பேர். இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.
2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 23.4 சதவிகிதம் பேர். 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 6 சதவிகிதம் பேர். எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள் 23.4 + 6 = 29.4 சதவிகிதம் பேர். மக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40 சதவிகிதத்தினரே, வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56 சதவிகிதம் பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. இதிலிருந்து 5.16 சதவிகிதம் பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாதவர்கள் அதாவது போலி வாக்காளர்கள், வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், சுமார் 40 இலட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது டைம்ஸ் ஆப் இந்தியா தந்துள்ள விவரம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தந்துள்ள விவரப்படி - தேர்தல் ஆணையம் மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 71.16 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்தது. அந்தக் கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, தேர்தல் ஆணையம் அனுமானித்ததை விட 4 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி பார்த்தால், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 31 இலட்சமாகும்.
இதேபோன்று வெயில் காலத்தில் உடலில் கட்டிகள் தோன்றும், இதற்கு, சிறிய வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி பசு நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.
==========================================================================================
இன்று,
ஜனவரி-23.
==========================================================================================