தேர்தல் சீர்திருத்தங்கள் ,
விகிதாச்சார பிரதிநிதித்துவம். நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நமது நாட்டின் தேர்தல்களில் பணநாயகம் ஆற்றும் முக்கியப் பங்கை மீண்டும் வெளிச்சப்படுத்தியுள்ளன. பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒரு நாட்டில், அந்த ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து அதிகப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பின்கீழ் செயல்படும் நாட்டில், தேர்தல்கள் எப்பொழுதுமே ஜனநாயகத்தை பொறுத்தவரையில் குறைபாடுகள் நிறைந்ததாகத்தான் இருக்க முடியும். பணபலத்தின் பங்கை முழுமையாக தடுப்பது என்பது இத்தகைய சூழலில் மிகவும் கடினமானது தான். எனினும், நமது தேர்தல் செயல்முறைகளிலும் விதிமுறைகளிலும் பெரும் மாற்றங்கள் செய்தால் சற்று கூடுதல் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர முடியும். தேர்தலில் பணநாயகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக்கட்சிகளாலும் மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெறக்கூடாது போன்ற அம்சங்கள் அஜெண்டாவில் வரவேண்டும். இன்னும் பல விஷயங்கள் தேர்தல் சீர்திருத்தம் என்ற பேசுபொருளில் வ...