வியாழன், 28 ஜூலை, 2016

எண்ணைக் குளியல்மற்ற எண்ணெய்கள் போல் இல்லை .நல்லெண்ணை க்கு என்று சிறப்பு தன்மை உண்டு. 
உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பது தான் இதன் தனிச்சிறப்பு. 
கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணை , ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியது. 
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. 
எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. 
அதனால் சருமம் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும்  திகழம்.
ஆனால் இன்று கடைகளில் கிடைக்கும் நல்லெண்ணைகள் கலப்படம் மிகுந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது.
முடிந்தவரை சுத்தமான நல்லெண்ணை கிடைக்குமிடங்களில் வாங்கலாம்.செக்கெண்ணை என்றால் மிக நல்லது.
செக்கு மூலம் எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப்பொருளாகவும், மருந்துபொருளாகவும் பயன்படுகிறது.

நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகறது. 
உடல் வெப்பத்தை தணிக்கிறது. 
ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 

நல்லெண்ணெய்யை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று தாராளமாக சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்கு காரணம். 
நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, விழிகளுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது.

கண்நோய், தலைக்கொதிப்பு, சொரி சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது. 
நல்லெண்ணெயை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். 

கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். 
நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் கண் சிவப்பு, கண் வலி, கண்களில் நீர் வடிதல் மண்டைக்குத்தல், போன்றவை நீங்கும் .

நல்லெண்ணை யில், சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது; எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இருதயத்துக்கு, சரியான பாதுகாப்பை அளித்து, இருதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதை தடுக்கிறது.
ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. 
இது, எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.
 எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணை யையும் சாப்பிடுவது நல்லது. பெண்கள், போதியளவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. 
இதிலிருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவி புரிகிறது. 
அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணை யை சாப்பிடுவது நல்ல பலன் தரும். 
காலையில் எழுந்து  இதயம் நல்லெண்ணை என்றில்லை.எந்த நல்ல நல்லெண்ணை யாலு ம்  வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும். 
உடல் சூட்டை தணித்து, குளிச்சியை ஏற்படுத்த, நல்லெண்ணையில் குளிக்கும் வழக்கம், பழங்காலத்தில் அதிகமாக இருந்தது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை  ஓட்டத்தில், இதற்கெல்லாமல்  நேரம் கிடைக்காது என்று  இதன் பலன்களை அறியாமல் அனுபவிக்க முடியாமல் இருப்போர் பலர்.
ஆனால் அவர்கள் எண்ணையை தேய்த்துக்கொண்டு தொலைக்காட்சியை,அலைபேசியை பார்த்துக்கொண்டிருக்கலாமே.
உடல் சூடால், பல்வேறு உபாதைகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் உண்டாகும் வியாதிகளை போக்க  நீங்கள் பல்வேறு மருந்துகளையும் எடுத்துக் கொண்டு  பணத்தை செலவிட்டும்  பலனில்லாத நிலையே ஏற்படுகிறது. 
உடல் சூடு அதனால் உண்டாகும் நோய்களுக்கு   எண்ணை  குளியல்தான் கைகண்ட  சிறந்த மருத்துவமாக இருக்கிறது. 
வாரம் ஒருமுறை, எண்ணை  குளியல் எடுப்பது மிகவும் நல்லது 
பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும், நல்லெண்ணை  குளியல் எடுப்பது, உடல் நலத்துக்கு நல்லது  என்று சிலர் கூறினாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் தொடர்வதே நமக்கு இயலும் . 
இக்குளியலின் மூலம், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
வாரம் ஒருமுறை, தலையில் மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். 
நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 
உடலில் தேய்த்து குளித்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். 
பொடுகுத் தொல்லை இருந்தால், விரைவில் காணாமல் போகும். தூக்கம் இன்மையால் அவதிப்படுவோர், இம்முறையை கையாண்டால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 
எண்ணைக்  குளியல் முடித்ததும் உடல் சோர்வாக உணருவீர்கள் அதற்காக அந்த பகலிலேயே  தூங்கக் கூடாது. 
அதுபோல் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வகைகளுக்கு அன்று தடை போட வேண்டும்.உணவில்  மிளகு ரசம் சேர்த்துக்கொள்வது நல்லது.தயிர் போன்ற அதிக குளிர்ச்சி பொருள் சேர்க்க வேண்டாம்.அது எண்ணைக்குளியலால் குறைந்துள்ள  உடல் வெப்பத்தை மேலும் குறைத்து எதிர் விளைவை உண்டாக்கி விடும்.
நம் முன்னோர்களிடம் பழங்காலம் தொட்டு இருந்து வரும் மருத்துவ முறைகள், மனிதர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்று தெரிந்திருந்தும், நாம் அதை தொடர  தயக்கம் காட்டுவதால்தான் இளம் வயதிலேயே பலர் ஏதாவது நோய் தாக்கத்தில் அழைக்கின்றனர்.
ஒரு முக்கியமான உண்மை .இந்த எண்ணைக் குளியல்  ஒரு முறை அனுபவித்து அதன் பலனை கண்டுகொண்டால்   அடுத்தடுத்து  வரும் வாரங்கள்  முழுவதும், முறையாக  நீங்களே கையாளத் தொடங்கி விடுவீர்கள் .
=======================================================================================
இன்று,
ஜூலை-28.
  • உலக கல்லீரல் நோய் தினம்
  • முதல் முறையாக பிரிட்டனில் உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது(1586)
  • பெரு விடுதலை தினம்(1821)
  • முதல் உலகப் போர் ஆரம்பமானது(1914)
  • சீனாவில் உள்ள டங்ஷானில் நிலநடுக்கம்.2.5 லட்சம் பேர் பலி (1976   )

  • =======================================================================================

தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை மண்டல பதிவு வரிசை எண்கள்.
TN-01 சென்னை மத்தி (அயனாவரம்)
TN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்)
TN-03 சென்னை வட கிழக்கு (தண்டயார்பேட்டை)
TN-04 சென்னை கிழக்கு (பேசின் பிரிட்ஜ்)
TN-05 சென்னை வடக்கு (வியாசர்பாடி)
TN-06 சென்னை தென் கிழக்கு (மந்தவெளி)
TN-07 சென்னை தென் (திருவான்மியூர்)
TN-09 சென்னை மேற்கு (கே.கே. நகர் )
TN-10 சென்னை தென் மேற்கு (வளசரவாக்கம்)
TN-11 தாம்பரம்
TN-16 திண்டிவனம்
TN-18 செங்குன்றம்
TN-19 செங்கல்பட்டு
TN-20 திருவள்ளூர்
TN-21 காஞ்சிபுரம்
TN-22 மீனம்பாக்கம்
TN-23 வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி
TN-25 திருவண்ணாமலை
TN-28 நாமக்கல்
TN-29 தர்மபுரி
TN-30 சேலம் (மேற்கு)
TN-31 கடலூர்
TN-32 விழுப்புரம்
TN-33 ஈரோடு
TN-34 திருசெங்கோடு
TN-36 கோபிசெட்டிபாளையம்
TN-37 கோயம்புத்தூர் (தெற்கு)
TN-38 கோயம்புத்தூர் (வடக்கு)
TN-39 திருப்பூர் (வடக்கு)
TN-40 மேட்டுபாளையம்
TN-41 பொள்ளாச்சி
TN-42 திருப்பூர் (தெற்கு)
TN-43 உதகமண்டலம்
TN-45 திருச்சிராப்பள்ளி
TN-46 பெரம்பலூர்
TN-47 கரூர்
TN-48 ஸ்ரீரங்கம்
TN-49 தஞ்சாவூர்
TN-50 திருவாரூர்
TN-51 நாகப்பட்டினம்
TN-52 சங்ககிரி
TN-54 சேலம் (கிழக்கு)
TN-55 புதுகோட்டை
TN-56 பெருந்துறை
TN-57 திண்டுக்கல்
TN-58 மதுரை (தெற்கு)
TN-59 மதுரை (வடக்கு)
TN-60 தேனீ
TN-61 அரியலூர்
TN-63 சிவகங்கை
TN-64 மதுரை (மத்திl)
TN-65 ராமநாதபுரம்
TN-66 கோயம்புத்தூர் (மத்தி)
TN-67 விருதுநகர்
TN-68 கும்பகோணம்
TN-69 தூத்துக்குடி
TN-70 ஓசூர்
TN-72 திருநெல்வேலி
TN-73 ராணிபேட்
TN-74 நாகர்கோயில்
TN-75 மார்த்தாண்டம்
TN-76 தென்காசி
TN-77 ஆத்தூர்
TN-78 தாராபுரம்