கணையத்தை கவனியுங்கள்.
கல்லீரல்,சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை என செரிமான உறுப்புகள் குறித்து ஓரளவுக்கு அறிந்துள்ள நாம்,கணையத்தை மட்டும் கண்டுகொள்வதே இல்லை.
ஆனால் மனித உடலின் மிகப்பெரிய சுரப்பியான கணையமானது,இன்று மனித குலத்தின் மிகப்பெரிய நோயாக பார்க்கப்படும் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கணையத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் .
உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு கணையம் ஆகும்.
இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனை கணையம் சுரக்கிறது.
மேலும் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரப்பதும்,உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட. கணையம் தான்.
கணைய சரிவர செயல்படாவிட்டால் சர்க்கரை நோய்,கணைய அழற்சி, கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும்.
எனவே ஆரோக்கியமான உடல் வேண்டும் என்றால் கணையத்தை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் நண்பன் எனலாம்.
கணைய புற்றுநோய் செல்களை சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அழிக்கின்றன.
பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள்.
சிவப்பு திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் கணைய செல்களை பாதுகாக்கும்.எனவே சிவப்பு திராட்சை பழச்சாறு அருந்துவது கணையத்திற்கு நல்லது.
பெர்ரி வகையை சேர்ந்த பழ வகைகளில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகமாக உள்ளது.எனவே இவற்றை அதிகமாக உட்கொண்டு வர,கணைய புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்றவை கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குறிப்பாக கணைய புற்றுநோய் வராமல் தடுக்கிறது.எனவே அடிக்கடி உணவில் இந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜீரண மண்டலத்தை வலிமைப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு.மேலும் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் பயன்படுத்துவது மேலும் சிறந்த பலனை தரும்.
======================================================================================
இன்று,
ஜூலை-30.
"கமலஹாசன்" 4 வயதிலேயே களத்தூர் கண்ணம்மாவுக்காக தேசிய விருது பெற்றார் .”

- பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
- பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
- முதலாவது உலகக் கோப்பை கால்பந்து உருகுவே வென்றது(1930)
- ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)
"கமலஹாசன்" 4 வயதிலேயே களத்தூர் கண்ணம்மாவுக்காக தேசிய விருது பெற்றார் .”
======================================================================================
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமி லாப்டாப் சந்தையிலும் கால் பதித்துள்ளது.
சியோமி ரெட்மி ப்ரோ கருவியுடன் அந்நிறுவனம் எம்ஐ நோட்புக் ஏர் கருவியையும் அறிமுகம் செய்துள்ளது. மற்ற லாப்டாப்களில் பரவலாக வழங்கப்படாத அம்சமாகத் தனித்துவம் வாய்ந்த கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இது மற்றவற்றை விட வேகமானதாகும்.
பார்க்க அப்படியே ஆப்பிள் மேக்புக் போன்று காட்சியளிக்கும் எம்ஐ நோட்புக் ஏர் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் பங்குதாரரான டியான் எம்ஐ இந்தக் கருவியை வடிவமைத்தது.
பார்க்க அழகாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள எம்ஐ நோட்புக் ஏர் லோகோ கணினியை திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.
12.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே என இரு வித அளவுகளில் எம்ஐ நோட்புக் ஏர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளின் விற்பனை ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் சீனாவில் துவங்குகின்றது.
=======================================================================================
மிளகு
மிளகு
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.
இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.
தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.
இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும்.
மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும்.
பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.
=========================================================================================