இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்மஸ்ரீ கமல் ஹாசன்

படம்

சில துளிகள்.

படம்
oசமீபத்தில் மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் நடந்த ஒரு மாநாட்டில், 'புகையில்லா புகையிலையும் பொது சுகாதாரமும்: ஒரு உலகளாவிய பார்வை' என்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.  இதன்படி 70 நாடுகளில் 300 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பான் பீடா, குட்கா, கைனி என்று ஏதாவது ஒரு வடிவத்தில் வாயில் போட்டு அதக்கும் வழக்கமுடையவர்கள்.  oஇந்த புகையிலை அடிமைகளில் இந்தியர் மற்றும் வங்க தேசத்தினரின் பங்கு மட்டும் 80 சதவீதம். இதில் பெரும்பான்மையினர் 13 - 15 வயதினர். கிராமப்புற பெண்களின் பங்கு 1 8.4 சதவீதம் என்பது இன்னும் கொடுமை. பலவித புற்றுநோய்கள் முதல் இதய நோய்கள் வரை வரும் என்பதால் மத்திய அரசு புகையிலையிலிருந்து விடுதலை பெற விரும்புவோருக்கு உதவ, 'க்விட்லைன்' என்ற இலவச தொலைபேசி சேவையை துவங்கவுள்ளது.  புகையிலைப் பழக்கத்தை நிறுத்த உதவும் தொலைபேசி சேவை,  புகையிலை ஏக்கத்திலிருந்து விடுபட உளவியல் ஆதரவாக இருக்கும்.  oஉடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க மரபணுவில் 'பைபா' (பீட்டா அமினோஐசோப்யூடைரிக் ஆசிட்) என்ற“ஸ்விட்ச்” உள்ளது. இதை முடுக்கினால் கொழுப்பை உடல் தானாக கரைக்கும் என்று வி...

<> நிலவேம்பு மகத்துவம்<>

படம்
நிலவேம்பு என்பது 2 அடி வரை வளரும் ஒரு செடி வகை. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரும்.  தாவரவியலில் Andrographis  Paniculata   என்று இந்தச் செடியை அழைக்கிறார்கள்.  நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிலவேம்பு கஷாயம் இந்த செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.  இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள்.  இந்த கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர் என்று சொல்கிறோம்.   கடந்த சில வருடங்களாக விதவிதமான காய்ச்சல்கள் நம் ஊரில் வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும்.  டெங்கு காய்ச்சல், பறவைக்  காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதிய புதிய காய்ச்சல்கள் வரும்போது வழக்கமான மருத்துவ முறைகளால் சமாளிக்க முடியாத சூழ்நிலையை  நிலவேம்பு சாதித்திருக்கிறது. ‘‘திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்த போது நவீன மருத்துவம் இருந்தும் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கமே ஸ்தம்பித்துப்  போனது.  ஒரு பக்கம் அதை பற்றிய பயம், மறுபக்கம் அது என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை, போதுமான பரிசோதனை நிலையங்கள் இல்லாமல்  ம...

இதயமே...இதயமே....,

படம்
நம் உடல் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமானது.   இதயத்தின் வலது புறத்தில் 2, இடதுபுறத்தில் 2 என நான்கு அறைகள் உள்ளன.  இடது பக்க அறைகளில் சுத்த இரத்தமும் வலதுபுற அறைகளில் அசுத்த இரத்தமும் உள்ளன.  அசுத்த இரத்தம் வலது புற அறைகளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்டு இதயத்தின் இடதுபுற அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.  இங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் இரத்தம் சென்றடைகிறது.  இதயம் சுருங்கி விரிவதால் இந்நிகழ்ச்சி நடைக்கிறது. சுத்த இரத்தமும் அசுத்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் அது ஆபத்தானது. மரணத்திற்கே காரணமாகிவிடும்.  தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது நுரையீரல் வேலை செய்யாதிருப்பதால் இரத்தத்தை சுத்தமாக்கும் பணி குழந்தையின் இதயத்தில் நடைபெறுவதில்லை.  எனவே இதயத்தின் இடப்பக்க, வலப்பக்க அறைகளுக்கிடையில் ஒரு இணைப்பு காணப்படும்.  இந்த இணைப்பு இருப்பதால் தாயின் உடலில் இருந்து சுத்த இரத்தம் குழந்தையின் இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின் உடலுக்கு சென்று அசுத்தமடைந்து ...

உள்ளடி சித்துகள்

படம்
======================================================================== அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம் .  இவர் மீது இவரது முன்னாள் சீடர் சவுகான் , பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.  ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்ததாகவும், சவுகான் கூறியுள்ளார். கடவுளை சந்திக்க எவ்வளவு எளிதான வழி. கடைசியில் அவர்கள் கடவுளை சந்தித்தார்களா -இல்லையா?என்று சவுகான் சொல்லவில்லையே? அவர்களின் கடவுள் பின் எதற்கு ஆண்மை என்ற சமாச்சாரத்தை உண்டாக்கினாராம்.? ஒருவேளை தனக்கில்லாதது .தன் சீடர்களுக்கு எதற்கு என்ற  குருமேத் சாமியாரின் பெருந்தன்மையாகக் கூட இருக்கலாம். ==============================================================...

கண்ணான கண்ணா?

படம்
உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண்.  சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.  ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது.  கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். சூரியவணக்கம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும்.  அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியவணக்கம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியவணக்கத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். ...

இளைமைக்கு இனியவை நான்கு, ,

படம்
1. மனதை அமைதி படுத்துங்கள். மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும். புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம். 2. தியானம் .  பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும். 3. உணவு ருசியுங்கள்.  உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்து...

அன்றும் 26 டிசம்பர்தான்

படம்
 , அதிகாலை நேரம் ,  இத்தனை உயிர்கள் ஒரே நேரத்தில் இயற்கை காவு வாங்கியது கொடூர சுனாமி.  விடிகாலை சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கையில்  "இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்" செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் திடீரென  'என்னப்பா இப்படி தரை அதிர்கிறது "என   அதிர்ந்து எழும் காட்சியும் ஒளிபரப்பாகியது. அதன் பின்னர்தான் இந்தோனேசிய நிலா நடுக்கம் தமிழகத்தையும் புரட்டி போடுகிறது என்ற உண்மை உறைத்தது . மெரினாவில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் ,கடல் பசிக்கு உணவானது தெரிந்தது. கடலோர தமிழகம் முழுக்க ஆழிப்பேரலை தாண்டவம். தென் மதுரை ,பூம்புகார் ,கொற்கை முதலிட்ட தமிழரின் லெமுரியா கண்டம் கடற்கோளில் காணாமல்  போனது எப்படி என்று கண்ணெதிரே  காணமுடிந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்திக்க கூட முடியாத ஒரு பெரும் துயரத்தை பல நாடுகள் சந்தித்தன.  சொந்த, பந்தங்கள், உறவுகளை மொத்தமாக இழந்த, ஆதரவற்று நிர்கதியானவர்களும் இன்றும் ஆதரவற்ற முகாம்களில் தங்களின் வாழ்வை கழித்த...

2ஜி ஊழல்

படம்
பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு.                                                                                                                                   -- வினவு கட்டுரை முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்! இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது. ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப்...