கே.பாலசந்தர்.
பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார்.
அவருக்கு வயது 84 ஆகும்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று[23-12-2014] இரவு 7 மணிக்கு காலமானார்.
நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 80 படங்களை இயக்கியுள்ளார்.
* சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார்.
* சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.
* பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
* துவக்க காலத்தில் நாடக பாணியிலான திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தனது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இதன் பின் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை சிறந்த வெற்றியை பெற்றன.
* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
* ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.
தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.
இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.
பெற்ற விருதுகள்:
1968 - 1993 - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976 - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.
கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ளன .
பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள்:
01.நீர்க்குமிழி
02.நாணல்
03.மேஜர் சந்திரகாந்த்
04.பாமா விஜயம்
05.அனுபவி ராஜா அனுபவி
06.எதிர் நீச்சல்
07. தாமரை நெஞ்சம்
08.பலே கொடலு
09. பூவா தலையா
10.சட்டெகலப்பு சடேயா
11.இரு கோடுகள்
12. பத்தாம்பசலி
13.எதிரொலி
14.நவகிரகம்
15.காவிய தலைவி
16. நான்கு சுவர்கள்
17.நூற்றுக்கு நூறு
18.பொம்மா பொருசு
19.புன்னகை
20.கண்ணா நலமா
21. டெள்ளக டகழா
22.அரங்கேற்றம்
23.சொல்லத்தான் நினைக்கிறேன்
24. அவள் ஒரு தொடர்கதை
25. நான் அவனில்லை
26. அபூர்வ ராகங்கள்
27.மன்மதநீலை
28.அந்துலாணி கதா
29. மூன்று முடிச்சு
30.அவர்கள்
31. பட்டின பரவசம்
32. அயினா
33. நிழல்நிஜமாகிறது
34.மாரோ சரிதரா
35. தப்பு தாளங்கள்
36. தப்பிடா தலா
37. நினைத்தாலே இனிக்கும்
38.அந்தமானிய அனுபவம்
39. நூல் வெலி
40. குப்பெடு மனசு
41.இடி கதா காடு
42.கழகன்
43.வறுமையின் நிறம் சிவப்பு
44. அகாலி ராஜ்யம்
45. அடவாலு மீகு ஜோகர்லு
46.எங்க ஊர் கண்ணகி
47. தொலிகோடி கூடிண்டி
48. தில்லு முல்லு
49. தண்ணீர் தண்ணீர்
50. எத் துஜே கே லியே
51.47 நாட்கள்
52. 47 ரோஜூலு
53.அக்னி சாட்சி
54. பெங்கியாழி அரலிடா ஹூவு
55. பொய்காலி குதிரி
56.ஜாரா சி ஜிங்காடி
57. கோகிலம்மா
58. எக் நாய் பகலி
59.அச்சமில்லை அச்சமில்லை
60. ஈரஐ ரேகேகலு
61. கல்யாண அகதிகள்
62.சிந்து பைரவி
63. முகிலே மலிகே
64. சுந்தர ஸ்வாப்நகலு
65. புன்னகை மன்னன்
66. மனதில் உறுதி வேண்டும்
67. ருத்ரவேணா
68. உன்னால் முடியும் தம்பி
69.புது புது அர்த்தங்கள்
70.ஒரு வீடு இரு வாசல்
71.அழகன்
72. அழகன்
73. வானமே இல்லை
74. திலோன் கா ரிஷ்தா
75. ஜாதி மல்லி
76. டூயட்
77.கல்கி
78. பார்த்தாலே பரவசம்
79. பொய்
பாலச்சந்தர், எம்.ஜி.ஆரை வைத்து எந்த படத்தையும் இயக்கவில்லை.
அது குறித்து அவரிடம் கேட்ட போது,' எம்.ஜி.ஆரை வைத்து நான் படமெடுத்தால் அது எம்.ஜி.ஆர்., படமாகத்தான் இருக்குமே தவிர, பாலச்சந்தர் படமாக இருக்காது. நான் இயக்கும் படம் என் படமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ''என்றார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார்.
பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர்.
அண்ணாமலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியராக பணியை தொடங்கினார்.
ஆசிரியர் பணிக்கு பின் சென்னை மாநில் கணக்காயர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
சென்னையில் பணிபுரிந்த போது நாடகத்துறையில் பாலசந்தர் தடம் பதித்தவர்.
எம்ஜிஆர் அழைப்பை ஏற்று 1965-ல் தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார்.
நீர்க்குமிழி படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக பாலசந்தர் தடம் பதித்தார்.
மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா, விஜயம் படங்களை இயக்கினார். இயக்குநர் சிகரம் என பாலசந்தர் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
இந்திய திரையுலகின் தலைசிறந்த பால்கே விருது பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர் ஆவார்.
1969&ல் இயக்கிய இருகோடுகள் படத்துக்கு முதல் முதலாக தேசிய விருது பெற்றார்.
அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர் உள்பட ஏராளமான படங்கள் விருது பெற்றுள்ளன.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளத்திலும் படங்கள் இயக்கியவர்.
குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசனை இளம் ந ட்சத்திரமாக்கிய வர் ,ரஜினி காந்த்பிரகாஷ்ராஜ், சுஜாதா, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி,விவேக், சரிதாஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் கே.பாலசந்தர் ஆவார்.
65 க்கும் மேற்பட்டோரை இவர் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார்.
அது நடக்கவில்லை .
பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படம் "நினைத்தாலே இனிக்கும் '.
=====================================================================================================================================================================
எளிமைக்கு உதாரணம் "கக்கன்"
நினைவு தினம் -
டிசம்பர் 23
கக்கன் என்கிற அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம்.. .
தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி.
அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.
பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார்.
பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார்.
பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர்.
1932ல் சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.
வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார்.
ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார்.
வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர், காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில்
வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார். !
அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார்.
அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள்.
இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் !
இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார்.
இவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார்.
அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே !
கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.
அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார்.
ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார்.
அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார்.
தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.
சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார்.
விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார்.
முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார்.
யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் இறந்து போனார்.
சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினம் இன்று.
இன்று ஆளுங்கட்சியின் வட்ட செயலாளர் கூட கோடிகளில் சொத்து சேர்த்து மக்கள் பணி செய்யும் போது கக்கன் போன்றவர்களை நினைத்தால் மனது கணக்கிறது.
-பூ.கொ.சரவணன்.
==============================================================================================
|