வெள்ளி, 19 டிசம்பர், 2014

சில எச்சரிக்கைகள்..!உலகம் ஆண்டிபயாடிக்ஸ் (antibiotics) எனப்படும்  வலி நிவாரணி,நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது 
இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை உருவாகி வருகிறது..
சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடமிருந்தும் கூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும், இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதார நிறுவனம், நோய் எதிர்ப்பு மருந்துகளின் செயலற்றுப் போகும் நிலை குறித்து வெளியிட்டுள்ள முதல் உலகளாவிய அறிக்கையில் கூறுகிறது.
இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கதிகமாக பரிந்துரைப்பதும், நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற, வைகளும் இதற்குக் காரணம்.
இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்று கூறுகிறது.
இன்றைய மூட்டைப் பூச்சிகள்,கொசு போன்றவற்றை அழிக்க நாம் பயன்படுத்தும்  மருந்துகள் தரும் அழிவை தாங்கி மூட்டைப்பூச்சிகள்,கொசுக்கள்,கரப்பான் பூச்சிகள் வாழும் அளவிற்கு அவைகள் தங்களின் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொண்டுள்ளது.இவை தற்போது ஆய்வுகள் மூலம் தெரிகிறது.அதேபோல் நம் உடலில் இந்த ஆண்டிபாயடிக்ஸ் மருந்துக்களை ஒன்றும் இல்லாமல் ஆக்குமளவு கிருமிகள் பலம் பெற்று வருகின்றன.
தற்போது உலகை பயமுறுத்தும் எபோலாவிற்கு மருந்துகள் இல்லை என்பதுதான் உண்மை நிலை.மருந்துகளின் வீரியம் நோய் கிருமிகள் முன் வலிவற்றதாகி உள்ளன.
===================================================================================================
வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவத்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம் .

 கொசுவத்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையானது நுரையீரல்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை,

 இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

புகையில்லாத கொசுவத்தி சுருள்களிலும் அதிக அளவில் கார்பன் மோனாக்ஸ்டு கலக்கப்பட்டுள்ளது.

கொசுவத்தி சுருளை பயன்படுத்தும் போது கொசு மீண்டும் உள்ளே வந்து விடும் 
என்று அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது கொசு வத்தி புகை தரும் அபாயத்தை அதிகரிக்கும்.
===============================================================================================
+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து  அதனை எடுக்காதீர்கள் .பேசாதீர்கள்.
அல்லது மிஸ்ட் கால் இருப்பதை பார்த்து அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். 
அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் கணக்கில் கழிக்கப்படும், 
அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்யப்படும்.அவர்களிடமும் இதே போல் கொள்ளையடிக்கப்படும் 
அது மட்டுமல்ல உங்கள் அலைபேசியில்  வங்கி கணக்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை இந்த அழைப்பில் நீங்கள் பேசி விட்டதன் மூலம் தவறாக கொள்ள முடியும். 
ஆகையால் +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம்,
அடிக்கடி வரும் மிஸ்ட்கால்  பார்த்து அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு வேண்டாம். அது வம்பை விலை கொடுத்து வாங்குவதாகும்.
==============================================================================
“ஆயுதங்களை வெளிநாடுகளில் விற்க அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்கின்றன” என்று சர்வதேச அமைதி நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. 
இந்த ஆய்வு முடிவுகளை இந்த நிறுவனம் புதன்கிழமை பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்சில் அறிக்கையாக வெளியிட்டது. 
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்றுள்ளன.
இதில் அமெரிக்கா முதலிடமும், இங்கிலாந்து 2-வது இடமும் பெறுகின்றன. 
இத்தாலியும் அதிக அளவு ஆயுதங்களை விற்று உள்ளது. 
கடந்த ஆண்டு மொத்தம் 325 பில்லியன் யூரோஸ் மதிப்புள்ள ஆயுதங்கள் விற்கப்பட்டு உள்ளன. 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 40 சதவிகிதம் அதிகமாகும். 
இந்த ஆயுத விற்பனையில் வெளிப்படை தன்மை இல்லை. ஆயுத உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆயுத விற்பனையில் வாங்கும் நாடுகளின் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் அளவு லஞ்சம் கொடுத்து விற்பனை செய்கின்றன.
லஞ்சம் கொடுத்து ஆயதங்கள் விற்பனை செய்வதில் அமெரிக்கா, இங்கிலாந்து நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 16 பில்லியன் யூரோஸ் லஞ்சமாக கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எந்த நாட்டுக்கும், எந்த நிலையிலும் ஆயுதங்களை விற்று வருகின்றன. 
இதனால் பல நாடுகள் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை விற்று வருகிறது. 
இதேபோல் மனித உரிமைகளை மீறி தாக்குதல் நடத்தும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற்று வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
=========================================================================================================================