அன்றும் 26 டிசம்பர்தான்
, அதிகாலை நேரம் ,
இத்தனை உயிர்கள் ஒரே நேரத்தில் இயற்கை காவு வாங்கியது கொடூர சுனாமி.
விடிகாலை சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கையில்
"இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்"
செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் திடீரென 'என்னப்பா இப்படி தரை அதிர்கிறது "என அதிர்ந்து எழும் காட்சியும் ஒளிபரப்பாகியது.
அதன் பின்னர்தான் இந்தோனேசிய நிலா நடுக்கம் தமிழகத்தையும் புரட்டி போடுகிறது என்ற உண்மை உறைத்தது .
மெரினாவில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் ,கடல் பசிக்கு உணவானது தெரிந்தது.
கடலோர தமிழகம் முழுக்க ஆழிப்பேரலை தாண்டவம்.
தென் மதுரை ,பூம்புகார் ,கொற்கை முதலிட்ட தமிழரின் லெமுரியா கண்டம் கடற்கோளில் காணாமல் போனது எப்படி என்று கண்ணெதிரே காணமுடிந்தது.
இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்திக்க கூட முடியாத ஒரு பெரும் துயரத்தை பல நாடுகள் சந்தித்தன.
சொந்த, பந்தங்கள், உறவுகளை மொத்தமாக இழந்த, ஆதரவற்று நிர்கதியானவர்களும் இன்றும் ஆதரவற்ற முகாம்களில் தங்களின் வாழ்வை கழித்து வரும் வேதனைக்கு வழி வகுத்தது .
2004 டிச., 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இந்திய கடல் மற்றும் அதனை யொட்டிய குட்டி தீவுகளை ஒரு பதம் பார்த்தது.
இந்தியா, தாய்லாந்து , இலங்கை, இந்தோனேஷியா ஆகியவை சுனாமியால் கடும் பாதிப்பை சந்தித்தன.
ராட்சத அலைகள் 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை எழும்பி அனைவரையும் மிரட்டி , சுருட்டிக் கொண்டது.
2 லட்சத்து 28 , 000 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடலூர், நாகை கன்னியாகுமரி, குளச்சல் , சென்னை மெரீனா, புதுச்சேரி, என கடலோர பகுதி முழுவதும் காது பொறுக்க முடியாத ஓலம் எழும்பியது.
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.
தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சுனாமி என்பது ஜப்பானிய சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது.
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன.
இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது.
இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.
சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள்.
சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும்.
கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும்.
சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.
பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப்பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன.
மலைப்பகுதியில் ஏற்படும்போது, எரிமலை உருவாகிறது.
கடலில் பூகம்பம் ஏற்படும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலை உருவாகின்றன. ஆழிப்பேரலையின் வேகம், ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும்.
சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமி அன்று அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளும் சக்தி படைத்தது.
=====================================================================================================