இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக விவசாயம் செய்வதற்கான விளைநிலங்களின் பரப்பளவு சுருங்கியுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 
நமது நாட்டில் இரண்டு பருவங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடியினை மேற்கொள்கின்றனர். வடமாநிலங்களில் இப்பருவங்கள் முறையே கரீஃப் மற்றும் ரபி என்று அழைக்கப்படுகின்றன. 
தமிழ்நாட்டில் இவை குறுவை மற்றும் சம்பா என்று அழைக்கப்படுகின்றன.
நடப்பு ரபி பருவத்தில் (அக்டோபர் - மார்ச்) இதுவரை கோதுமை சாகுபடி பரப்பளவு 3.7 சதவிகிதம் குறைந்து 242 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது என மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டில் இதே காலத்தில் 251.32 லட்சம் ஹெக்டேர் பரப்பில் கோதுமை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
பருப்பு பயிரிடும் பரப்பளவு 124.78 லட்சம்ஹெக்டேரிலிருந்து 111.13 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. 
எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு 75.33 லட்சம் ஹெக்டேரிலிருந்து 69.91 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 
ராகி, சோளம், கம்பு போன்ற சிறுதானியங் கள் பயிரிடும் பரப்பளவு 50.62 லட்சம் ஹெக் டேரிலிருந்து 46.22 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது. எண்ணெய்வித்துக் கள் பயிரிடும் பரப்பளவு பல ஆண்டுகளாக சரி வடைந்துள்ளதால் இறக்குமதி வாயிலாகவே நமது தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
நமது நாட்டின் மக்கள்தொகையில் 60சதவிகிதம் பேர் விவசாயத் துறையைச் சார்ந்தே உள்ளனர். 

உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு மற்றும் விளை பொருட்களுக்கு கட்டுப்படி விலை கிடைக்காததால் விவசாயத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. 
நிலத்தை நம்பி வாழமுடியாத காரணத்தால் சாகு படிக்கு விடை கொடுத்து விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் அவலம் அரங்கேறுகிறது. பயிரிடப்படாத நிலத்தை விற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உண வளிக்கும் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் பிடிக்குள் சிக்கி விடுகின்றன. நெருக்கடிகளின் கோரத்தாண்டவம் விவசாயிகளை தற் கொலைக்கு தள்ளிவிடுகிறது. 
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளி விவரப்படி 1995 முதல் 2010ம் ஆண்டு வரை நாடுமுழு வதும் 2 லட்சத்து 56 ஆயிரத்து 913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சிறு, குறு விவசாயிகளை விவசாயத் துறையைவிட்டு திட்டமிட்டு விரட்டுவதே அரசின் கொள்கையாக இருந்து வருகிறது.
 இதன்காரணமாகவே சாகுபடி பரப்பளவு குறைந்துவருகிறது. இதுபற்றி காங்கிரஸ் ஆட்சியாளர் களும் கவலைப்படவில்லை;
 வளர்ச்சி பற்றிவாய்ச் சவடால் அடிக்கும் இன்றைய பாஜக ஆட்சியாளர்களுக்கும் கவலை இல்லை. 
நாட்டில் தொழில்துறை உற்பத்தியும் கடந்தமூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2 சதவிகிதமாக பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய மிகப்பெரும் சரிவானது மேலும் வேலைவாய்ப்புகளை பறிப்பதில் கொண்டுபோய் முடியும். 
புதுதிட்டம்:

நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதி நிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம். கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன் & வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? 
இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய். 
படம்:புரட்சி எப்.எம்.
ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா”.?? கூலிக்கு இருக்கும் ஒரு கடை நிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ் விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். 
விவசாயத்துறையை சீரழிப்பதன் மூலம் உணவுத் தேவைக்கு எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும் ,வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களையும் இர்க்குமதி செய்து அந்நிய நாடுகளை  சார்ந்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை ஆட்சியாளர்கள் திட்டமிட்டே உருவாக்கி வரு கிறார்கள்.

மண்ணெண்ணை மானியம் நீக்கப்பட்டு விட்டது.மக்களுக்கு வழங்குவதையும் படிப்படியாக குறைத்து நிறுத்தும் அளவுக்கு வந்தாயிற்று.
சமையல் எரிவாயுவையும் உபயோகிப்பாளர்களுக்கு மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக  கூறி முழு விலையில் வாங்க வைத்தாயிற்று. அனைவரும் வங்கிக்கணக்கு ஆரம்பித்து சில மாதங்களில் பணம் தருவதும் நிறுத்தப்பட போகிறது.
ஆக அமெரிக்கா ,உலக வங்கி சொன்னபடி மானியங்கள் மத்திய அரசால்  
படிப்படியாக நிறுத்தப்படுகின்றன.
மொத்தத்தில்  இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.வளரும் நாடுகளை நோக்கி அல்ல.ஆப்ரிக்கா,தென் அமெரிக்கா பொன்ற மூன்றாம் நாடுகளை நோக்கி
==============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு