புதன், 24 டிசம்பர், 2014

ஆரோக்கியத்தை பாதிக்கும் மின் படிப்பான்கள்.இ-ரீடர்ஸ் (E-Readers) என்று அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. 
ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா உலக மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. 
எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
ஒருவர் படுத்து உறங்கச்செல்வதற்கு முன்னர் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கம். 
சமீபகாலமாக புத்தகங்களுக்கு பதில் மின்னொளி உமிழும் மின்படிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.
இப்படி அதிகரித்துவரும் மின்படிகளின் பயன்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தற்போது அதிகரித்துவருகின்றன. 
இதன் ஒருபகுதியாக, மனிதர்கள் தூங்குவதற்கு முன்னர் புத்தகம் படிப்பதற்கும் இ-ரீடர்கள் எனப்படும் மின்படிகளைப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஹாவர்ட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
மின்படிகள் படித்தால் ஆழ்ந்த நித்திரைகொள்ள முடியாது.
இந்த ஆய்வின் முடிவில் தூங்கச் செல்வதற்கு முன் மின்படிகளை படிப்பவர்களுக்குத் தூக்கம் வருவதற்கு நீண்டநேரம் பிடிப்பதாகவும், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்றும் இதன் காரணமாக மறுநாள் காலை அவர்கள் களைப்புடனே கண்விழிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
தூங்குவதற்கு முன்னர் ஒருவரின் கண்களில் நேரடியாக படும் ஒளியின் அளவு அவரது தூக்கத்தை பெருமளவு பாதிப்பதாக கவலைகள் அதிகரித்து வருகின்றன. 
இந்த ஆய்வின் முடிவுகள் அந்த கவலையை உறுதிப்படுத்தியிருப்பதோடு அவற்றை அதிகப்படுத்தியிருக்கின்றன.
எனவே மாலை நேரங்களில் கண்களுக்குள் நேரடியாகப்படும் ஒளியின் அளவைக்குறைக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைக்கத் துவங்கியிருக்கின்றனர்.
திரை ஒளிரா மின்படிகளால் பிரச்சனையில்லை
மின்படிகள் என்னும்போது முதன்முதலில் வந்த அமேசானின் கிண்டில் மின்படியில் திரையில் தெரியும் எழுத்துக்களுக்கு பின்னிருந்து எந்த ஒளியும் உமிழும் வசதியிருக்கவில்லை. 
அந்த முதல் தலைமுறை கிண்டில் மின்படியை நீங்கள் படிக்கவேண்டுமானால், மற்ற சாதாரண காகிதப் புத்தகங்களைப்போல சூரிய வெளிச்சம் அல்லது விளக்கு வெளிச்சத்தில் தான் அவற்றைப் படிக்கமுடியும்.
ஆனால் தற்போதைய மின்படிகளின் திரை ஒளிரும் திரையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் போன்களின் திரையைப்போல திரைக்குப் பின்னிருந்து ஒளி உமிழும் தன்மை கொண்டவையாக இவை இருக்கின்றன.
இந்த மாதிரியான ஒளிரும் மின்படிகளின் திரையில் இருந்து வெளிப்படும் கூடுதல் வெளிச்சமானது நேரடியாக கண்களுக்குள் செல்வதால், மனிதர்களின் உடம்பில் இருக்கும் இயற்கை கடிகார சமநிலை பாதிக்கப்படுவதாகவும், அதனால் அவரது தூக்கம் கெடுகிறது.
இதற்கு நேர்மாறாக, புத்தகங்கள் மற்றும் திரை ஒளிரா மின்படிகள் இப்படியான அதிகப்படியான ஒளி எதனையும் கண்களுக்குள் நேரடியாக செலுத்துவதில்லை என்பதால் அவற்றால் ஒருவரின் தூக்கம் கெடுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எனவே ஆழ்ந்த அமைதியான தூக்கம் விரும்புபவர்கள், தாங்கள் தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் இரண்டுமணி நேரத்துக்கு முன்னதாகவே தங்களின் ஸ்மார்ட்போன்கள், ஒளி உமிழும் மின்படிகள் போன்ற கூடுதல் ஒளியை நேரடியாக கண்ணுக்குள் செலுத்தும் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
=================================================================================================================
தந்தை பெரியார் 41 வது நினைவுநாள்.

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு
செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும் வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் - இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;
எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார், இப்போதோ
இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.
                                                                                                                             -கலைஞர்.
எம்.ஜி.ஆர் ,நினைவு நாள் [24-12-2014]

================================================================================
ஆதார் எண் இல்லாதவர்கள்.

 நுகர்வோர்கள் மானியத் தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது  அவசியம் என்று இந்தியன் ஆயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 சமையல் எரிவாயு மானியத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இத்திட்டத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொள்ளும் நுகர்வோர், ஆதார் எண்ணை சமையல் கேஸ் நிறுவனம் மற்றும் வங்கியில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 1- ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டம் பல பிரச்சனைகளையும், குழப்பங்களையும் சந்தித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. 
இத்திட்டம் தொடர்பாக இந்தியன் ஆயில் துணைப் பொது மேலாளர் உஜ்ஜல் சட்டோ பாத்யாயா, முதன்மை மேலாளர்கள் வெற்றி செல்வக்குமார், மதிவாணன் (மதுரை வட்டாரம்) ஆகியோர்  கூறியதாவது:-
“சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் ஜனவரி 1 -ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாத நுகர்வோர்கள் மானியத் தொகையை நேரடியாக தங்களது வங்கி கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனைப் பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியம்.

வங்கி கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. 
இம்மூன்று மாத காலத்தில் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். 
இந்த கால அவகாசம் முடிந்த பிறகு மேலும் மூன்று மாத கால இருப்பு அவகாசம் வழங்கப்படுகிறது. 
இந்த மூன்று மாத காலத்தில் அவர்கள் சிலிண்டர்களைச் சந்தை விலையில் வாங்கி கொள்ளலாம். 
இதே நேரத்தில் இம்மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய கியாஸ் சிலிண்டருக்குரிய மானியத்தொகை அவர் களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.
இத்திட்டத்தில் இணைந்த பிறகு முதன்முதலில் ஒரு சிலிண்டருக்கு பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கி கணக்கில் நிரந்தர முன்வைப்பு தொகையாக ரூ.568 செலுத்தப்பட்டு விடும். 
நுகர்வோர் தங்களது முதல் கியாஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன்வைப்புத்தொகை உறுதி செய்கிறது. இதுகுறித்த அறிவிப்பு இத்திட்டத்தில் இணையும் நுகர்வோருக்கு தனியே அறிவிக்கப்படும்.

நவம்பர் 15 முதல் இத்திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இணைந்த பிறகு முதல் சிலிண்டருக்கு பதிவு செய்தவுடன் அறிவித்தபடி நிரந்தர முன்பணம் என்று ஒருமுறை மட்டும் செலுத்தப்பட்டு விடும். 
இதற்கு முன் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்தர முன்பணமாக ரூ.435 பெற்றுள்ளனர். 
அவர்களுக்கு மீண்டும் எந்தவொரு நிரந்தர முன் பணமும் செலுத்தப்பட மாட்டாது. 
மற்றவர்களுக்கு ரூ.568 நிரந்தர முன்பணமாக செலுத்தப்பட்டுவிடும்.

ஜனவரி 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர்ந்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சந்தை விலையில் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி ஆகும். 
அவற்றுக்குரிய மானியத் தொகை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
 இத்திட்டத்தில் இணைந்திடாத எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு கருணை காலமான மூன்று மாதத்தின்போது அதாவது ஜனவரி 1- ம்தேதி முதல் மார்ச் 31 -ம் தேதி வரை தற்போதுள்ளபடியே தொடர்ந்து மானிய விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும்.
திட்டத்தில் இணைந்திடாத எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு நிறுத்திவைப்பு காலமான மூன்று மாதத்தின்போது அதாவது ஏப்ரல் 1 - ம் தேதி முதல் ஜூன் 30 - ம் தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும்.
ஆனால் அவர்களுக்குரிய மானியத் தொகை எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
 இந்த காலகட்டத்திற்குள் அவர்கள் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டால் நிறுத்தப்பட்டிருந்த மானியத் தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். 
இத்திட்டத்தில் சேர்ந்திடாத வாடிக்கையாளர்கள் ஜூலை 1 ம் தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத்தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும்.
====================================================================================================================
எம்.எஸ்.எக்செல்சில குறிப்புகள்.

கணக்கீடு தொடர்பான பணிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவதும், அவசியமானதுமான மென்பொருள் எம்.எஸ்.எக்செல். இம்மென்பொருளைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. 
அவற்றில் சிலவற்றை இந்த வாரம் பார்ப்போம்.எக்செல் டெக்ஸ்டை வேர்டிற்கு காப்பி செய்ய:எக்ஸெல் மென்பொருளில் அமைக்கப்பட்ட டெக்ஸ்ட்டை காப்பி செய்து வேர்ட் தொகுப்பில் பேஸ்ட் செய்யும்போது, டெக்ஸ்ட்டில் பல மாற்றங்களை செய்ய வேண்டிய கஷ்டத்திற்கு பலரும் ஆளாகியிருப்பீர்கள். 
இதனை எவ்வித சிக்கலும் இல்லாமல் எளிதில் காப்பி செய்வதற்கு ஒரு வழி உள்ளது.
நீங்கள் காப்பி செய்யவேண்டிய எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள டெக்ஸ்டை முதலில் காப்பி செய்து கொள்ளுங்கள்.
 பின் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொண்டு, பேஸ்ட் செய்திட வேண்டிய டாகுமெண்ட்டை திறந்து, பேஸ்ட் செய்ய வேண்டிய இடத்திற்குச் செல்லவும். அங்கு வழக்கமாக நாம் செய்திடும் Ctrl+V கொடுத்து பேஸ்ட் செய்வது போல் செய்யக்கூடாது. வேர்டில் எடிட் மெனு திறக்கவும்.
 கீழ் விரியும் மெனுவில் ““Paste Special”” என்ற பிரிவிற்கு செல்லவும்.இங்கு கிளிக் செய்தவுடன் கிடைக்கும் டயலாக் பாக்ஸினைப் பார்க்கவும்.
இதில் Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். டெக்ஸ்ட் எந்தத் தொல்லையுமில்லாமல் பேஸ்ட் ஆகியிருப்பதைப் பார்க்கலாhம்.
 அதனை அளவைக் குறைக்க கூட்டச் செய்வதற்கான ஆப்ஷன்களும் தோன்றும். 
அதனைப் பயன்படுத்தி பணிகளைச் செய்து கொள்ளலாம்.

பல எக்செல் ஒர்க்ஷீட்களை இணைக்க ஆட்-இன்:
ஒரே மாதிரி டேட்டாக்களைக் கொண்ட ஒர்க்ஷீட்கள் பலவற்றை ஒருங்கிணைக்க காப்பி பேஸ்ட் பணிகளை கவனமாக செய்யவேண்டும். இது சிக்கல் நிறைந்த பணி. 
சிறு அளவு கணக்கீடுகள் என்றால் சமாளிக்கலாம். அதுவே பக்கம் பக்கமாக இருந்தால் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். எந்தத் தவறுமின்றி பல ஒர்க்ஷீட்களை ஒன்றிணைக்கக எக்செல் தொகுப்புடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் மென்பொருள் ஒன்று உள்ளது. இம்மென்பொருளை பதிவிறக்கி கிளிக் செய்தால் எக்செல் தொகுப்பின் ரிப்பன் பகுதியில் இணைந்து கொள்ளும்.
ஒர்க்ஷீட்டை ஒருங்கிணைக்கும்போது இந்த ஆட்-இன் புரோகிராமை கிளிக் செய்யவும்.
தோன்றும் விண்டோவில் எந்த ஃபோல்டர் என்பதையும், சேர்க்கப்படவேண்டிய ஒர்க்ஷீட்டின் வகை, காலம் விவரங்கள் ஆகியவற்றைக் கொடுக்கவும். 
அடுத்ததாக காட்டப்படும் செக் பாக்ஸ்களில், டாக்குமெண்ட்டில் உள்ள ஃபார்முலாக்கள் அப்ளை செய்திருந்தால் அதற்கு நேராக டிக் செய்யவும். அடுத்து, வேறு எக்செல் சீட்டுடன் லிங்க் செய்திருந்தால் லிங்க் என்பதை டிக் செய்யவும். இதேபோல மற்ற பகுதிகளையும் நிரப்பி, கடைசியாக உள்ள மெர்ஜ் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
இந்த ஆட்-ஆன் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவேண்டிய தளம்:
http://www.rondebruin.nl/merge.htm
எக்செல் கட்டங்களையும் சேர்த்து பிரிண்ட் செய்யலாம்: எக்செல் ஒர்க்சீட்டில் எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கிரே நிற கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்யவேண்டுமென்றால் அதற்கும் வழிமுறை உள்ளது.
இதற்கு செட்டிங்சில் மாற்றம் செய்யவேண்டும். எப்படியென்றால், முதலில் ஃபைல் மெனுவில் பேஜ் செட் அப் என்பதைத் தேர்வு செய்யவும். .இதில் நடுவே உள்ள பிரிண்ட் என்ற பிரிவில் மற்று Row and Column Headings என்ற வரிகள் உள்ள இடத்தில் செக்பாக்சை டிக் செய்து ஓகே கொடுத்து வெளியேறவும்.இனி நீங்கள் எப்போது எக்செல் சீட்டை பிரிண்ட் செய்தாலும் கோடுகளுடனே பிரிண்ட் ஆகும். ’
இந்த வசதி தேவையில்லையெனில் மீண்டும் மேற்கண்ட முறையில் மெனுவிற்குள் நுழைந்து ‘டிக்’ மார்க்கை எடுத்து விட்டு பிரிண்டு செய்யவும்.
எக்செல் குறுக்குவிசைகள்:
F1 +ALT+SHIFT -
புதிய ஒர்க் ஷீட் திறக்க
F2 +ALT+SHIFT -
செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கை சேவ் செய்ய.
F3 +ALT+SHIFT -
குறுக்கு மற்றும் நெடுக்கு வரிசை லேபிள்களைப் பயன்படுத்தி பெயர்களை உருவாக்க.
F6 +ALT+SHIFT -ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறந்திருந்தால், தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்க உதவும்.
===============================================================================================================