ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மம்தாவை அலைக்கழிக்கும் சாரதா.மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வரானது முதல் அடாவடி அரசியல் தான் நடத்திவந்தார்.

இடது சாரி கட்சியினரை திரினாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் பார்க்கக்கூடாது,பேசக் கூடாது,திருமணத் தொடர்புகலை வைத்துக்கொள்ளக் கூடாது என்ற அளவில் தனது கட்சினருக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார்.

கிட்டத்தட்ட இங்குள்ள அ.தி.மு.கபோன்று.
கட்சிக்காரர்களோ மம்தாவை விட அதிகமாக உணர்ச்சிவசப்பட்டனர்.கம்யூனிஸ்ட்கள் வீட்டு பெண்களை கற்பழிப்போம் என்று கூட ஒரு தி.மு.காங்கிரஸ் எம்.பி.பேசி இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஊட்டினார்.
மம்தா கிட்டத்தட்ட சர்வாதிகாரி போல் ஆட்சியை நடத்த்னார்.
இப்போது தமிழ் நாடு முன்னாள் முதல்வர் போல் வசமாக ஊழலில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் மிழிக்கிறார்.
சாரதா குழும ஊழலில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முழுக்க தி.முல் காங்கிரசுக்காரர்கள்தான்.
அதில் எம்பி.க்கள்,ச.ம.உறுப்பினர்கள் என எல்லா தரப்பினரும் உண்டு.அதில்  இரு எம்.பிக்கள் தங்களுக்கு தொடர்பில்லை.மாம்தா பானர்ஜிக்குத்தான் பங்கு உண்டு.அவரை கைது செய்யுங்கள்.விசாரியுங்கள் என்று வாக்கு மூலமே சிபிஐயிடம் கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதா போலவே கட்சி,ஆட்சி நடத்தி கடைசியில் ஊழலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.ஜெயலலிதாவுக்கு ஒரு வைகுண்டராஜன்.மம்தாவுக்கு சுதிதாப் சென்.இங்கு வைகுண்டராஜன் ஜெயா டிவி நடத்தியது போல் அங்கு சுதிதாப் சென் டிவி,பத்திரிக்கைகள் என்று மம்தா ஆதர்வாக நடத்தினார். அவ்வளவுதான்.
இனி சாரதா குழும முறைகேட்டினைப் பார்ப்போம்.
சாரதா குழும வளர்ச்சியும், வீழ்ச்சி...

சுமார் 17 லட்சம் பேரிடமிருந்து ரூ.3,500 கோடி ரூபாய் வரை முதலீடாகப் பெறப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சாரதா குழுமத்துக்கு மொத்தமாக ரூ.34 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 சுமார் 200 சிறிய நிறுவனங்களைக் கொண்ட சாரதா குழுமம் கொண்டு வந்த முதலீட்டு திட்டம்தான் பொன்சி முதலீட்டு திட்டம். 
சாரதா குழுமத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 
ஒரு சாதாரண மனிதராக இருந்த சுதிப்தா சென், இந்த மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, அரசியலும், பல்வேறு தொழில்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். 
ஆனால் மிக விரைவில் அதில் மிகப் பெரிய சரிவையும் சந்தித்துள்ளார். இந்த நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சுதிப்தா சென். கடந்த 1990களில் ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்கிய இவர், தனது இளம் வயதில் நக்சலைட் அமைப்பில் செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு உருவான சாரதா குழுமம் இதுவரை பெற்ற முதலீடுகளில் 95 சதவீத முதலீடு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பெற்றதாகும். 
பணம் கொட்டத் தொடங்கியதும், சாரதா குழுமத்தின் செயல்பாடுகளும் விரிவடைந்தன. பல்வேறு நலிந்த தொழில்களை குறைந்த விலைக்கு வாங்கினர்.
 ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் அளிப்பது, மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம், பத்திரிகைகள், டி.வி.க்கள், சினிமா என சென்னின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருந்தது. 
பல்வேறு அரசியல் கட்சியினர், குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் ஆதரவு இவருக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறைந்தது. 

செலவுகள் அதிகரித்தன. ஒருபுறம் விசாரணையும் தொடங்கியது. 
இவை அனைத்தும் சேர்ந்து மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியது. 
முதலீடு செய்த பொதுமக்களும், ஏஜெண்ட்களும் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். தங்களுடைய பணத்தை மீட்டுத் தரும்படி அரசுக்கும் நெருக்கடி கொடுத்தனர். 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதினார் சுதிப்தா சென். அதில் தான் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல்வேறு தரப்பினருக்கு பணம் கொடுத்ததாகக் கூறியுள்ளார். 
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணையை மேற்கொண்டது.
சாரதா குழுமம்.
200 தனியார் நிறுவனங்கள் சாரதா குழுமத்தின்கீழ் இருந்தன.

ரூ.3500 கோடி அளவு க்கு மக்களிடம் இருந்து பெறப்பட்ட மற்றும் மோசடி செய்யப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை என கணக்கிடப்பட்டுள்ளது.

17 லட்சம் பேர் முதலீட்டாளர்களாக இருந்துள்ளனர்.

14 பேர் தற்கொலை செய்து கொண்டனர். முதலீடு செய்த பணம் மோசடி செய்யப்பட்டதாக அறிந்ததும் அவர்கள் எடுத்த இந்த தற்கொலை முடிவால் சாரதா நிறுவன ஊழல் பூதாகரமானது

33 லட்சம் பேர் மேற்கு வங்கத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.34 ஆயிரம் கோடிக்கு மேல் குழுமத்தின் மொத்த நஷ்டம் இருக்கும் என முதல்கட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன.

இதுவரை கைதானவர்கள்.
* சாரதா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதிப்தா சென்.
* குழுமத்தின் செயல் இயக்குநர் தேப்ஜானி முகர்ஜி.
* திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், சாரதா குழுமத்தின் பத்திரிகைகள் பிரிவின் தலைமை செயல் தலைவராக இருந்த குணால் கோஸ்.
* முன்னாள் டிஜிபியும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரஜத் மஜூம்தார்.
* திரிணமூல் எம்.பி. சிரின்ஜோய் போஸ்
* கிழக்கு பெங்கால் கிளப் அதிகாரி தேபபத்ர சர்கார்
* தொழிலதிபர் சதானந்த் கோகாய்
* சுதிப்தா சென்னின் சட்ட ஆலோசகர் நரேஷ் பலோடியா
* பங்கு தரகர்கள் தர்மேந்திர போத்ரா, தீபக் பரேக்.
* திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர் மதன் மித்ரா
மம்தா பானர்ஜி நிலை .

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசை நிலைகுலையச் செய்துள்ள சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு, மாநிலத்தில் புதிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. 
கடந்த 2011ம் ஆண்டில் மிகப் பெரிய வெற்றியின் மூலம் மாநிலத்தில் 34 ஆண்டுகள் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகக் கூறினார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி. 
இந்நிலையில் நாட்டையே, குறிப்பாக மேற்கு வங்கத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவே.
அந்த கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு கொல்கத்தா மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் மற்றும் 2016ல் மாநில சட்டப் பேரவைக்கு நடைபெறும் தேர்தல் ஆகியவற்றை குறி வைத்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  களமிறங்கியுள்ளது. 
அரசியல் காரணங்களுக்காக தனது கட்சியினர் மீது பொய் புகார்கள் கூறப்பட்டு கைது செய்யப்படுவதாகக் கூறி தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. 
இந்த மோசடி வழக்கை முன்னிலைபடுத்தி தொடர் பிரசாரங்களில் ஈடுபட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. 
 சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு, மேற்கு வங்க அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் .

===============================================================================================================