திங்கள், 31 அக்டோபர், 2011

வால்தெருவை கைப்பற்றுவோம்.போராட்ட ’கீதம்’

 

             

மாடி வீட்டு ஏழைகள்.?

 

தில்லியில் உள்ள அரசு குடியிருப்புகளில் அமைச்சர்கள், எம்பிக்கள் குடியிருந்த வகையில் ரூ. 63 லட்சம் வாடகைப்பாக்கி கட்டாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத் தகவல் தெரிவிக்கிறது.
இந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர், ஜி. வெங்கடசாமி, ஜெகன்மோகன் ரெட்டி முக்கியமானவர்கள்.

காங்கிரஸ் எம்பியான ஜி. வெங்கடசாமி 29.4 லட்சம்,ஜெகதீஷ் டைட்லர் 19.1 லட்சம், பாஜக முன்னாள் எம்பி சங்கீதா குமாரி சிங் தேவ் 7.39 லட்சம், ஜெகன்மோகன் ரெட்டி 3 லட்சம், முன்னாள் எம்பி தேவவிரத சிங் 1.74 லட்சம், பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணலால் வால்மிகியின் தந்தை 1.83 லட்சம் வாடகைப்பாக்கி வைத்துள்ளனர்.

இவர்களைத் தவிர சமூக ஆர்வலர் எஸ்.சி. அகர்வால், தேசிய லோக தளம் கட்சி முன்னாள் எம்பி அஜய்சிங் சௌடாலா, காங்கிரஸ் முன்னாள் எம்பி கிரீஷ்குமார் சிங் ஆகியோர் மீது சட்டப்பூர்வமற்ற முறையில் அரசு குடியிருப்புகளில் குடியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வாடகைப்பாக்கி இல்லையென தகவல் அறியும் சட்டம் கூறுகிறது.

இது போன்ற செயலை அமைச்சர்கள் என்ர பெயரில் பதவி பெற்றவர்கள் செய்தது மிகக்கேவலமானது.முன்னாள் மக்களவை உறுப்பினர்களும்,சமுக ஆர்வலர் என தங்களைக்கூறிக்கொள்பவர்களும் கூட அரசு வீடுகளை பொய் சொல்லி சட்டட்தை ஏமாற்றிக்குடியிருந்துள்ளார்கள்.அதிகாரிகள் இதைப்பற்றி தெரியாமலா இருந்தார்கள்?
அமைச்சர்கள் வாடகையைக்கட்டாமல் இருந்தார்கள் என்பது வெட்கமானது.அவர்களின் சம்பளத்தில் வாடகை பிடித்தம் செய்திருக்கலாமே.சாதாரண அரசு ஊழியர் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் இருந்தால் சம்பளத்தில் வாடகையை பிடிக்கிறார்கள்.ஒய்வு பெற்றாலோ,மாறுதலானாலோ மூன்று மாதங்களில் வீட்டை ஒப்படைக்க வைத்து விடுகிறார்கள்.அமைச்சர்களுக்கு மட்டும் அதுவும் முன்னாள் அமைச்சர்கள்,மக்களவை உறுப்பினர்களுக்கு மட்டும் என்ன சலுகை.அவர்களாக வாடகை தந்தால் வாங்கிக்கொள்வது.வீட்டைக்காலி செய்ய மன்றாடுவது.கேவலம்.அவர்கள் என்ன அடுத்தவேளை சாப்பாட்டுக்கு தினறுபவர்களா?10கோடிக்கு கீழே சொத்துள்ளவர்தான் அமைச்சர்களில்,மக்களவை உறுப்பினர்களில் ஏழையாக இருக்கிறார்கள்.[இடதுசாரிகளைத் தவிர]
வீட்டை காலி செய்ய அவர்கள் வீட்டுப்பொருட்களை மற்றவர்கள் போன்று வெளியே எடுத்து வைத்து கதவை மூடி பூட்டுங்கள்.அப்படியாவது அவர்களுக்கு சுரணை வரட்டும்[இருந்தால்]

எடுத்துக்கோ,,எடுத்துக்கோ,,,,,

சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை உயர்நீதிமன்றம் 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால், இந்த நடவடிக்கை முடங்கியது. அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து, தற்போது, இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்த கட்டடங்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப, கண்காணிப்பு குழு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதில், 36 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அறிவிப்புஅனுப்பினர். இதையடுத்து, இந்த வணிக வளாகங்களை சீல் வைக்கும் நடவடிக்கையை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எடுத்திருக்க வேண்டும்.

                                                         
ஆனால், கடந்த மாதம் வரை நடவடிக்கை எடுக்காததால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின் வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இதுதொடர்பான விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம், சி.எம்.டி.ஏ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு,"சீல்' வைக்கும் நடவடிக்கையை இன்று காலை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல கிளைகளை துவக்கியுள்ள பிரபல மெகா கடைகள் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜவுளி சாம்ராஜ்யம், மற்றும் பாத்திர கடல் என வர்ணிக்கப்படும் பல்வேறு நிறுவனங்கள் இதில் அடங்கும். விதி முறை மீறி கட்டப்பட்டு இன்று சீல் வைக்கப்பட்ட கடைகள்:

சரவணா ஸ்டோர்ஸ் ( பாத்திரக்கடை ) , சென்னைசில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ்( 2 கடைகள் ) , குமரன்சில்க்ஸ்( நகைமாளிகை) , ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ( சேலைகளின் சோலை) , காதிம்ஸ் என மொத்தம் 32 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

கடைகள் அடைக்கப்பட்டு கிடப்பதால் வேலைக்குக்கு வந்த ஊழியர்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றனர். குறிப்பாக கடைகளின் நிர்வாகிகள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வியாபார சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

 

 சீல் வைக்கப்பட்ட கடைகளின் சுவரில் அதிகாரிகள் அறிவிப்பு ஒட்டியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: ”விதிமுறை மீறல் காரணமாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை கடை உரிமையாளர்களே இடிக்க வேண்டும். இல்லையேல் சி.எம்.டி.ஏ., சார்பில் இடித்து அதற்குரிய செலவு தொகையை வசூலிக்கும் என்றும் இது வரை கடைக்குள் யாரும் நுழையக்கூடாது, மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் அச்சிடப்பட்டிருந்தது. 

”எடுத்துக்கோ,எடுத்துக்கோ “ன்னு விளம்பரம் செய்த்தது தப்போ? இன்றைக்கு மாநகராட்சி எடுத்துக்கிட்டே..!

___________________+++++++_________________+++++++++++++++_______________

...ப் போச்சு....?

                                      

 

திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து வாங்கிய, 800 கிலோ தலைமுடியை, விற்பனை வரி செலுத்தாமல் லாரிகளில் ஏற்றிச் சென்றதால், விற்பனை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருமலையில், பக்தர்கள் பிரார்த்தனையாகச் செலுத்தும் தலைமுடியை, சேகரித்து வைக்கும் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கிடங்கு, அலிபிரி டோல்கேட் அருகே உள்ளது. இக்கிடங்கில் இருந்து, 800 கிலோ எடை கொண்ட, 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள தலைமுடியை, அனந்தபுரம் மாவட்டம் உரவகொண்டா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர், தலைமுடிக்குச் செலுத்த வேண்டிய, 4 சதவீத விற்பனை வரியைச் செலுத்தாமல், லாரிகளில் கொண்டு சென்றார்.

விற்பனை வரித்துறை அதிகாரிகள், தலைமுடியை ஏற்றிச் சென்ற லாரிகளை, திருப்பதி-ரேணிகுண்டா சாலையில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விற்பனை வரி செலுத்தாதல், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

------------===============----------------=============--------------==========-----------------

ஊழல் எதிர்ப்பிலேயே ஊழலா?

             

 

ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரே குழுவில் உள்ள முக்கிய நபர்கள் மீது, சமீபகாலமாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது. பிரசாந்த் பூஷன், காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதற்காக, தாக்குதலுக்கு ஆளானார். 
விமான பயணத்துக்காக அளிக்கப்பட்ட சலுகையை, முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண்பேடி மீது புகார் கூறப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஹசாரே குழுவைச் சேர்ந்த மேதா பட்கர், குமார் விஸ்வாஸ் ஆகியோர், ஹசாரேயின் உயர்மட்டக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹசாரே தரப்பின் உயர்மட்டக் குழு கூட்டம், காஜியாபாத்தில் நேற்று முன்தினம் கூடியது. இதில், உயர்மட்டக் குழுவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என, முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை, மகாராஷ்டிர மாநிலம், ராலேகான் சித்தியில் மவுனவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயிடம் தெரிவிப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று அங்கு சென்றனர்.


சந்திப்புக்கு பின், எழுத்து மூலமாக அளித்த பதிலில் ஹசாரே கூறியதாவது:ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு பலமாக உள்ளது. யாராலும் இந்த அமைப்பை உடைக்க முடியாது. எங்களின் உயர்மட்டக் குழுவை கலைக்கப் போவதாக, தவறான தகவல்கள் வெளியாகின்றன. சிலரின் குற்றச்சாட்டுகளுக்காக, குழுவை கலைத்து விட்டால், ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும். மேலும், எங்கள் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும். எனவே, குற்றச்சாட்டுகளை கண்டு பயப்பட மாட்டோம்.உயர்மட்டக் குழுவில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, சவாலை சந்திப்போம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, எங்களின் போராட்டம் தொடரும். எதிர்காலத்தில், எங்கள் அமைப்புக்காக, சட்ட விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் உருவாக்குவோம். அதன்பின், இந்த குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.


உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் யார், செயற்குழுவில் யார் இடம் பெறுவர் என்பது பற்றிய விவரங்கள், விதிமுறைகளில் இடம் பெற்றிருக்கும். எங்களின் போராட்டம், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல.
லோக்பால் மசோதாவை பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றாவிட்டால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் யாத்திரை நடத்துவேன். ஒரு சிலர், எங்களின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, எங்கள் மீது தவறான புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த புகார்கள், எங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


எங்கள் அமைப்புக்கு வந்த நன்கொடை பற்றிய விவரங்கள் முழுவதும், இணையதளத்தில் வெளியிடப்படும். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. காஷ்மீர் பற்றிய விஷயத்தில், பிரசாந்த் பூஷன், தன் கருத்தை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து, எங்கள் குழுவின் கருத்தாகாது. சுவாமி அக்னிவேஷ் விவகாரம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எங்கள் அமைப்புக்கு, அறிமுகம் இல்லாத வட்டாரத்தில் இருந்து, வங்கி மூலமாக 40 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளது. இதுபோன்ற நிதியை, திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளோம். ராம்லீலாவில் நடந்த போராட்டத்துக்கு பின், நன்கொடை வசூலிப்பதையும், காசோலைகள் பெறுவதையும் நிறுத்தி விட்டோம். இதன்மூலம், நாங்கள் பணத்துக்காக போராட்டம் நடத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

அது எல்லாம் சரி .குழு உறுப்பினர்கள் மீது வெளியாகும் குற்ற சாட்டுகளுக்கு சரியான பதில் இல்லையே.

கிரன்பேடி மீது அரசையும்,விழப்பொறுப்பாளர்களையும் விமான செலவு விடயத்தில் ஏமாற்றியுள்ளாரே.விழாப்பொறுப்பாளர்களிடம் முதல் வகுப்பு டிக்கட் பணத்தை வசூலித்து விட்டு.தனக்கு அளிக்கப்பட்ட 75% கழிவுவிமானக்கட்டணத்தில் பயணம்செய்துள்ளாரே?

 

                      

கேஜ்ரிவால் அரசு செலவில்,சலுகையில் படித்து விட்டு வேலையை விட்டு ஓடிவந்து விட்டாரே.அது மோசடி இல்லையா?80 லட்சம் ரூபாயை சரியாக கணக்கு காட்டாமல் தனது அறக்கட்டளையில் போட்டுக்கொண்டாரே.அதற்கு விளக்கம் என்ன?

சீதையின் மனைவி சந்தேகத்திறகு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற சொலவடை ஆன்மீக வாதியான அன்னா வுக்கு கண்டிப்பாகத்தெரிந்திருக்கும்.

அவர் இது போன்ற குற்ற சாட்டுக்குள்ளானவர்களை வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுவது டான் குவிக்சாட் வீரச்செயலுக்கு ஒப்பானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து பணம் வந்தது இதுவரை கணக்கில் காட்டப்படவில்லையே.தங்கள் ஊழல் தோண்டப்படுகிறது என்ற பின்தானே இத்தகவலே வெளிவருகிறது.?

எந்த கட்சிக்கும் எதிர் அல்ல என்றால் காங்கிரசுக்கு எதிராக தேர்தலில் வாக்கு சேகரித்தது ஏன்?

அட போங்கப்பா.கடைசியில் நீங்களும் அட்டைக்கத்தி வீரர்கள்தானா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                            

 

 

 

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

அணு உலை ஆபத்து.


 கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை துவங்கும் நிலையில் அதன் பணிகளை திடீரென நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
                     நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கும் நிலையில் உள்ளது. ஆனால்  இப்போது திடீரென கூடங்குளம் பகுதி மக்கள் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதியில் மக்கள் போராட்டம் துவக்கி பணியாளர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுத்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகக் காவல்துறையினரும் பணியாளர்கள்,விஞ்ஞானிகளை பணிக்கு செல்ல வேண்டாம்.தங்களால் பாதுகாப்பு தர இயலாது என்றதால் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து விட்டனர்.
மத்திய அரசோ தமிழக அரசிடம் பாதுகாப்பு வழங்கிடக் கோரியும் ஒன்றும் நடக்காததால் செய்வதரியாமல் தவிக்கிறது.ஆய்வுக்குழு அனுப்பி நிலமையை மதிப்பிட செய்து மக்களுக்கு விளக்கிக் கூற முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிபீடுக் குழுவை ஏற்க மறுத்து விட்டனர்.
தற்போது சென்னையில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்திய அணுசக்தி கழக தலைவர் மற்றும் மத்திய அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. அதில், யுரேனியம் நிரப்பப்பட்டு மின் உற்பத்திக்கான ஒத்திகை துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் திடீரென வேலைகளை நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும். இதனால், மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை. அணு உலை பணிக்கு செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது தவறானது. கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.

  மும்பையில் நிருபர்களிடம் தேசிய அணு மின்சக்திக் கழக தலைவர் எஸ்.கே.ஜெயின்பேசும்போது’டாடாவின் நானோக்கார் தொழிற்சாலையை போல் திடீரென அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி விட்டு செல்ல முடியாது. அது மிகவும் ஆபத்தானது. கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம், வென்டிலேசன் சிஸ்டம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எனவே, விஞ்ஞானிகளும், இன்ஜினியர்களும் பணியில் இருந்தாக வேண்டும். அவர்களை பணியாற்ற விடாவிட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். கூடங்குளம் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் 22 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்வில்லை என்றும், குறிப்பிட்ட பிரிவினரே வெளிநாட்டு தூண்டுதலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.10ஆண்டுகள் கட்டுமானப்பணியின் போது இவர்கள் சும்மா இருந்து விட்டு தற்போது உற்பத்தி ஆரம்பிக்கும்போதுபோராட்டம் என்பது நிச்சயம் உள்நோக்கத்துடன் கூடியதுதான் எனத்தெரிகிறது. கூறினார்.                      
---------------================----------------------------=====
 மாபெரும் ஏ.டி.எம்.மோசடி.

               


கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை நவீன கருவிகள் முலம் திருடிபோலி அட்டைகள் தயாரித்து பணம் எடுத்து மோசடிசெய்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 1,800 வெளிநாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், 100 கோடி ரூபாய்மோசடியாகாமல்காப்பாற்றப்பட்டுள்ளது.  தூதரகங்கள் மூலம், வெளி நாட்டு வங்கிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு மற்றும் தனியார் வங்கிகள் என, அனைத்து வங்கிகளுக்கும், ஏ.டி.எம்., வசதி உள்ளது. ஆன்-லைன் வசதி வந்ததும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியும் வந்துவிட்டது. இது, மோசடியாக பணத்தை திருடும் கும்பலுக்கு, மிகுந்த வசதியாக அமைந்துவிட்டது.
 கடந்த, 2009ல், ஸ்கிம்மர் இயந்திரத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் "பங்க்'களில் பணியாற்றுவோர், வாடிக்கையாளர்கள் கார்டு விவரங்களை திருடி, வெளியில் விற்பனை செய்து வந்தனர். இதை கொண்டு, புதிய கார்டு தயாரித்த, மகேஷ், உமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய மூன்று கும்பல் பிடிபட்டது. இதில், உமேஷ், ஒரே மாதத்தில் ஜாமினில் வெளிவந்துள்ளான். அவ்வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும், உமேஷ் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
               
 கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்களை, ஏ.டி.எம்., மையம், வர்த்தக நிறுவனம், பெட்ரோல் பங்க், கூரியர் மூலம் திருடுகின்றனர். இப்படி திருடப்படும் விவரங்களை, ஸ்கிம்மரில் இருந்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, என் கோடர் இயந்திரங்களுக்கு மாற்றுகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட காலி கார்டுகளை, என் கோர்டர் இயந்திரத்தில் வைத்து, அதில் பதிவு செய்கின்றனர். இந்த கார்டுகளை, எம்போசர் இயந்திரத்தில் வைத்து, பெயர் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் பதிவு செய்து, புதிய கார்டு தயாரிக்கின்றனர்.
வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டதை அறிந்து, ஒவ்வொருவராக புகார் கொடுக்க ஆரம்பித்தனர். போலீசார், முதலில், பெட்ரோல் "பங்க்'கள் மூலம் விவரங்களை திருடிய, இலங்கையைச் சேர்ந்த ஜாட்டி உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். மேலும், உமேஷ் உள்ளிட்ட ஐவரையும், விக்னேஷ் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர். இதில், வினோத்குமார் உள்ளிட்ட சிலரை, தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, தினமும், 10க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம், 22 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதில், உலக வங்கி அதிகாரி ஒருவரும் அடக்கம். அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. முன்னதாக, 110 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
மோசடி செய்யப்பட்டதாக வாடிக்கையாளர்கள், போலீசில் புகார் அளித்த பின்பே, வங்கிகள் பணத்தை திரும்ப அளிக்கின்றன. இதனால், புகார் கொடுப்பவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, மூன்று கோடி ரூபாய் வரை, மோசடிதாரர்கள் எடுத்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உமேஷ் கும்பலிடமிருந்து இரண்டு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்ததில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளின், 1,800 வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில், அமெரிக்காவின் பெடரல் உள்ளிட்ட வங்கிகளின், 1,010 வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களும் அடக்கம். மோசடி கும்பல் இதை பயன்படுத்தியிருந்தால், வாடிக்கையாளர்கள் பணம், 100 கோடி ரூபாய் வரை பறிபோயிருக்கும் என, கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இதுபோன்ற கும்பல்கள் அதிகளவில் இருப்பதால், தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நெட்-ஒர்க், எங்கு வரை செயல்படுகிறது என்பதை, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சிக்கியுள்ள, 1,800 கார்டு விவரங்களை, அந்தந்த நாடுகளின் தூதரகம் மூலம், வங்கிகளுக்கு அனுப்பி, அவர்களை எச்சரிக்கும் முயற்சியில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர்.
 வங்கி ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் பொருத்திய விவகாரத்தில், கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்தே, அதிகளவில் விவரங்கள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றில், ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கொண்டே, உமேஷ் கும்பல் பிடிபட்டது. இதையடுத்து, வங்கிகளிடம், ஏ.டி.எம்., இயந்திரம் உள்ள பகுதியில், பாதுகாப்பை பலப்படுத்த, போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
 தற்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது, மோசடி, கூட்டுச் சதி, பிறரது கார்டை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் அனைத்தும், ஒரே எப்.ஐ.ஆர்.,ராக பதிவு செய்யப்படுகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஏழு முதல், 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என, கூறப்படுகிறது.
மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஜான் ரோஸ் கூறியதாவது: கிரெடிட், டெபிட் கார்டு மோசடியில் இதுவரை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்களுக்கு வரும் புகார்கள் தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஏ.டி.எம்., இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை குறித்தும், வங்கிகளின் நடவடிக்கை குறித்தும், பல ஆலோசனைகளை, பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம்.
ஏ.டி.எம்., மையங்களில் காவலாளி இல்லாதது குறித்து, கனரா வங்கிக்கு அறிவுறுத்தியதன் பேரில், இதுவரை 28 மையங்களில், வசதிகளை ஏற்படுத்திவிட்டனர். அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மோசடி தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் பிடிபட்டால், வெளிநாட்டு தொடர்பு குறித்த தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு ஜான் ரோஸ் கூறினார்.
                   ஏ.டி.எம்., மூலம் கார்டு விவரங்களை திருடும் தொழில்நுட்பம், தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் செயல்படுகிறது. இப்பிரச்னையை போக்க, வெளிநாடுகளில் பலவற்றில், "ஜிட்டர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
வங்கி ஏ.டி.எம்.,களில் கார்டு நுழைக்கும் பகுதியில் அடிப்படையில் உள்ள இயந்திரத்துடன், இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, "சிப்' பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம், ஏ.டி.எம்., இயந்திரங்களில், வேறு கருவிகளை யாராவது பொருத்தினால், அந்த வங்கியின் தலைமையகத்தில், அலாரம் அடிக்கும்; சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாடும் முடங்கிவிடும்.
இந்த தொழில்நுட்பத்தை, தமிழகத்திலும் பயன்படுத்தும்படிதமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார், வங்கிகளுக்கு பரிந்துரைசெய்துள்ளனர். வங்கிகள், கூடிய விரைவில் இதை செயல்படுத்தினால் ஏ.டி.எம்.மோசடி தடுக்கப்படும்.அப்பாவிகள் பணம் காப்பாற்றப்படும்.
               

சனி, 29 அக்டோபர், 2011

மக்களும்-போராட்டங்களூம்

இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி.
                 
 உலகைப்பொறுத்தவரையில் இந்தியாவில் மக்கள் பிறப்புவிகிதம் அதிகம்.இந்தியாவிலோஉ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளார்கள்.வரும் 31ம் தேதி 700கோடியை மக்கள் தொகை தொடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் அன்றே விழா கொண்டாடப்படும்.
_______________________________________________________

கனடா டொரன்டோவில் ‘பொங்கு தமிழ்’விழா! 

                  

பொங்கு தமிழ் என்று சங்கே முழங்கு!

கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன. காலமும் நேரமும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாயினும், எங்கே நடைபெறும் என்பதை அப்போது அறிவிக்கப்படாததால், இது எங்கே நடைபெறுகின்றது என்ற கேள்வி தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழும்பியிருந்தது.

வாராவாரம் வித்தியாசமான சுவரொட்டிகளை வௌ;வேறு இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆர்வமுள்ள பல தொழிலதிபர்கள் தாமே முன்வந்து இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்கள்.

2004ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், கனடாவின் முதலாவது பொங்கு தமிழ் எந்த இடத்தில் நடைபெற்றதோ, அதே குயின்ஸ் பார்க் திடலில் (ஒன்ராறியோ மாகாண அரசின் கட்டடத்துக்கு முன்னால்) இந்த மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை சரியாக பகல் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கு தமிழ் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்குக் கட்டியம் கூறுவதுபோல இங்குள்ள சமூக வர்த்தகர்கள் பொங்கு தமிழ் பொறிக்கப்பட்ட மஞ்சள்-சிவப்பு வர்ணத்தினாலான பிளாஸ்டிக் பைகளில் தமது விற்பனைப் பொருட்களை வழங்கி தங்களுடைய தார்மீக ஆதரவைக் காட்டினர்.

இந்த வாரத்தில் வௌ;வேறு விதமான துண்டுப் பிரசுரங்களை சமூக நிறுவனங்கள் பிரசுரித்து விநியோகம் செய்தன.

முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின்னர் ‘நாம் தோற்றுப் போனோமோ’ என்ற கவலையில் துயருற்றிருந்த கனடியத் தமிழர்கள் பொங்கு தமிழ் அறிவிப்புக் கண்டு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இதனை ஏற்பாடு செய்துள்ள கனடியத் தமிழர் சமூகத்துக்கும் தமிழ் இளையோர் சமூகத்துக்கும் இங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள் என்பன ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
                                     
போக்குவரவு ஏற்பாடுகளை இந்நிகழ்வு ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில் நடைபெறுவதால், பொதுப்போக்குவரவுச் சேவையையே அனைவரும் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனாலும், முதியோர், நடமாட்ட வசதி குறைந்தவர்கள் சேர்ந்து வருவதற்கு உதவியற்றவர்களின் வசதி கருதி ரொறன்ரோ பெரு பெருநகரில் ஐந்து மையங்களிலிருந்து விசேட போக்குவரவு ஏற்பாடுகளை சமூக வர்த்தகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மல்வேர்ன் சென்டர், ஜீ.ரி.ஏ. ஸ்குயார், எஸ்.பி.இம்போட்டர்ஸ் மற்றும் இரா.சுப்பர் மார்க்கட் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிக்க விரும்புபவர்கள் 416 450 9661 என்ற இலக்கத்துடனும், மிசிசாகாவில் டன்டாஸ்-ஹியுரொன்ராறியோ (ர்றல 10) பகுதியிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிக்க விரும்புவர்கள் 905 290 3000 என்ற இலக்கத்தை அழைக்கவும்.
                               

மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளில் வருவதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. சமூக வர்த்தகர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளனர்.

பொங்கு தமிழ் நிகழ்வை முழுமையாக வெற்றியடையச் செய்வதற்காக பெரும்பாலான தமிழர் வர்த்தக நிறுவனங்களும் அன்று நண்பகலுடன் மூடப்படுமென உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மொன்றியலில் இருந்து பொங்கு தமிழுக்கு வருகை தருவதற்கு பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
1 514 558 4235 அல்லது 1 514 605 9870 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.

கனடா பொங்கு தமிழ் சிறப்பாக நிகழ்வதற்கு கனடிய தேசிய மட்டத்திலான 180இற்கும் அதிகமான பொது அமைப்புகளை உள்ளடக்கிய கனடிய சமாதானப் பேரவை தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் இதனை வாழ்த்தி வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தங்கள் அரசியல் கட்சியின் சார்பில் வாழ்த்தினை வழங்கியுள்ளார். 2001ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வேளையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த கஜேந்திரனே அதன் பிரதான ஏற்பாட்டாளராக இருந்தவர்.

பொங்கு தமிழில் கலந்துகொள்பவர்கள் வழமையான நடைமுறைகளை பின்பற்ற முடியும். இதில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுமக்கள் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கு எந்தத் தடையும் இருக்காது. எனவே, தவறான முறையில் சிலர் தெரிவிக்கும் விடயங்களை நம்ப வேண்டாம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மிகப் பெருந் தொகையான மக்கள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கான வேண்டிய வசதிகளும் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கு தமிழ் எங்கும் தங்கட்டும்
பொங்கு தமிழ் என்றும் நிலைக்கட்டும்.
பதிவு தளத்தில் இருந்து,
+++++++++++++++++++++====================+++++++++++++++++++++++++++++++++++============++++++++

தூக்கிட ஆட்சேபனை இல்லை.தமிழக அரசு மனு.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.தூக்கிடுவது மத்திய அரசின் முடிவு என தமிழக அரசு
தெரிவித்துவிட்டது.              
மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்த பிறகு, அவர்கள் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் மனுக்களை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு தற்காலிக தடைஉத்தரவு பிறப்பித்திருக்கிறது.தங்களின் கருணை மனுக்கள் மீதான இறுதி முடிவை எடுப்பதில் இந்திய ஜனாதிபதி காட்டிய பல ஆண்டுகால தாமதத்தை காரணம் காட்டி இவர்கள் தங்களின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்கள்.
இந்த பின்னணியில் இவர்களின் மனுக்களை எதிர்த்திருக்கும் இந்திய நடுவணரசு, இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இவர்களை மற்ற குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட முடியாது என்றுவழக்குரைஞர்சந்திரசேகரன்வாதாடினார்.
அதேசமயம்,” தமிழக அரசு இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசுக்கே இருப்பதாகவும், தமிழக அரசுக்கு இதில் முடிவெடுக்க தனக்கு இல்லை அதிகாரமில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்திருப்பதா”கவும் அவர் கூறினார்.
 மூவரின் மரணதண்டனைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் தமிழக அரசு நீதிமன்றத்தில் இப்படியான மனுவை தாக்கல் செய்திருப்பது நம்பிக்கைத் துரோகம்.
மத்திய அரசுக்குத்தான் முடிவான அதிகாரம் இருக்கிறது அவர்கள் இறுதி முடிவெடுத்து தூக்கை நிறைவேற்றிக்கொள்ளலாம்.தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதுதானே அர்த்தமாகிறது.
                
ஜெயலலிதா ஈழத்தமிழருக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் என்றுமே ஆதரவானவர் அல்ல.தேர்தலுக்காக ஆதரவாக இருப்பதாக காண்பித்துக்கொண்டார்.
அது சரி ஜெயலலிதா ஜால்ராக்கள் சீமான்,நெடுமாறன் என்ன சொல்லப்போகிறார்கள்.?
_________________________0000000_________________________-000000___________________________
 ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை 
கடந்த ஆண்டில் (2010) மட்டும் சுமார் ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் பேர் (1,34,599) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.

            .

தற்கொலை செய்து கொண்டவர்களில் 41 சதவீதத்தினர் சுயதொழில் செய்தவர்கள். கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவில்உள்ள 35 பெரு நகரங்களில் பெருநகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரில் அதிக அளவாக 1778 பேரும், அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,325 பேரும் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்., கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு 14,424 பேரும் 2010 ஆம் ஆண்டு 16,561 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
_____________________________________________________________________________________________
பாக் , ஏவுகணை,,,,,,,,,,
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, குறிப்பிட்ட இலக்கை தாக்கவல்ல 'ஹத்ஃப்-7' என்ற ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளது.
         
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
             
இந்த ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் படைத்தது., இந்தியாவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் படைத்தது. 

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
________________________________________________________________________________________
கைப்பற்றுவோம் போராட்டங்கள்--   புதிய பரிமாணம்   எடுக்கிறது முதலாளித்துவ அமைப்புக்கான  எதிர்ப்பு! 
காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பொது வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அறிவித்

துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் தரப்பில் பேசிய கேட் புரூக்ஸ், அடக்குமுறை மிகவும் கொடூரமானது. அதனால் அடுத்த கட்டமாக வேலைநிறுத்தம் செய்யப் போகிறோம். யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஒட்டுமொத்த நகரமே வெறிச்சோடிக் கிடக்கும் என்று கூறுகிறார். அடுத்த வாரத்தில் இந்த வேலை நிறுத்தம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓக்லாந்து நகரின் நகர்மன்றத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதை சீர்குலைக்க முடிவெடுத்த காவல்துறை கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அனைவரையும் வெளியேற்றும் முயற்சியில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடி விழுந்தது. 85 பேரைக் கைது செய்துள் ளனர். கண்ணீர்ப் புகைக் குண்டு களை காவல் துறையினர் வீசினர். ஸ்காட் ஓல்சன் என்ற முன்னாள் ராணுவ வீரரைத் தலையில் தாக்கிக் காயப்படுத்தினர். மண்டை ஓட்டில் கீறல் விழும் அளவுக்கு அந்தக் காயம் இருப்பதாக ஓல்சனின் நண்பரும், போராட்டக்களத்தில் நிற்பவருமான கெய்த் ஷன்னோன் கூறுகிறார்.

ஓக்லாந்தில் மட்டுமல்ல!புதிய, புதிய பிரிவினர் போராட்டங்களில் கலந்து கொள்ளத் துவங்கியுள்ளனர். இத்தனைகும் காவல்துறையினரின் அடக்குமுறைகளைத் தாண்டி மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. ஓக்லாந்து மாகாணத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் அனைத்து நகரங்களிலுமே நிர்வாகம் மற்றும் காவல்துறைஆகியவை அடக்குமுறையையே கையில் எடுத்துள்ளன. ஆர்ப்பாட்டம் துவங்கிய வால் ஸ்டிரீட்டில் புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓக்லாந்தில் தாக்கப்பட்ட ஓல்சனுக்கு ஆதரவு தெரிவித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

அரசியல் ரீதியான மாற்றங்களை இந்த மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்தாது என்று பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்களைச் செய்தியாக்காமல் இருகும் அவர்களது முயற்சி தோல்வியுற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக போராட்டத்தின் வீச் சைக் குறைத்து மதிப்பிடும் வேலையில் இறங்கியுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் ஏற்கெனவே இந்த அம்சம் விவாதப் பொருளாகியுள்ளது. இரு பெரும் கட்சிகளுமே முதலாளித்துவத்தைக் கைவிட முன்வராது என்பதை அவர்கள் உணர்ந்தேயுள்ளனர். இருந்தாலும், மக்களின் கருத்தை நீண்ட நாளைக்கு அவர்களால் புறக்கணிக்க முடியாது என்ற நம்பிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.
கல்வியும்,மருத்துவம் அரசின் பொறுப்பே!

நாட்டின் மருத்துவத்துறை முழுவதும் வால்ஸ்டிரீட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அடையாளமாக வாஸ்டிரீட்டில் உள்ள வெல்பாய்ண்ட் என்ற மருத்துவக்காப்பீட்டு நிறுவனத்தின் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். மெடிகேர் மற்றும் மெடிகெய்டு போன்ற திட்டங்களில் வெல்கேர் போன்ற பகாசுர நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களைக் கொள்ளையடித்தன. இந்த மோசடிகள் அம்பலமாகி, விசாரணைகள் நடைபெறுவதாகச் சொல்லப்பட்டாலும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விடுதலைச் சதுக்கத்தில் தங்கள் ஊர்வலத்தைத் துவக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், திவாலானதாகச் சொல்லி இழுத்து மூடப்பட்ட செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை வாயில் வரை சென்றனர். மனிதத் தேவையை முன்னிறுத்தும் மருத்துவத்திட்டமே நாட்டிற்குத் தேவை. மேலும் அரசே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
 ஒக்லாந்து போராட்டக்காணொளி கீழே தனியே உள்ளது.பார்வையிட்டுக்கொள்ளுங்கள்.


வெள்ளி, 28 அக்டோபர், 2011

அணு [கூடங்] குளம்

                      


0    கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தொடர்பாக பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அமைப்புகளோடு கிறிஸ்தவ பாதிரியார்களையும் சந்தித்துள்ளார் பிரதமர்.கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையைத் தவிர மற்ற கிராமங்களில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் இடிந்தகரையில் மட்டும் எதிர்ப்பு? அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகுஎன்ற கேள்வ்க்கு” இதற்கு பின்னணியில் கிறிஸ்தவ அமைப்புகள் இருப்பதாக” உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதனால் சமீபத்தில் ஆர்ச் பிஷப்பை சந்தித்தார் பிரதமர். விரைவில் திருச்சியில் பாதிரியார்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, கூடங்குளம் விவகாரம் தொடர்பாக பாதிரியார்களோடு பேச, ஒரு மத்திய அமைச்சர் திருச்சி வந்து பாதிரியார்களுடன் பேச உள்ளார். ஆர்ச் பிஷப்பிற்கு கூடங்குளம் விவகாரத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாத நிலையில், ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை தூண்டிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. எப்படியாவது இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என, பாதிரியார்களிடம் அந்த அமைச்சர் வேண்டுகோள் விடுப்பார் என தெரிகிறது.
__________________________________________________
சட்டத்தை பாதுகாப்பவர்கள்.?
 
2010-ம் ஆண்டுக்கான அசையா சொத்தின் வருமான வரிக் கணக்கை நாடு முழுவதும் 864 ஐபிஎஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2010-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா, உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் பிரிஜ்லால், பஞ்சாப் காவல்துறை தலைவர் பி.எஸ்.கில், குஜராத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 335 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 92 அதிகாரிகள் அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
பிகாரில் 152 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 92 பேர் அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
ஆர்வம்... ஆனால் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் வருமான வரிக் கணக்கை ஆர்வமுடன் தாக்கல் செய்துள்ளனர். மொத்தமுள்ள 185 பேரில் 7 பேர் மட்டுமே அசையா சொத்துக்கணக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
2010-ம் ஆண்டுக்கான அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஐபிஎஸ் அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஆனால் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை பெரும்பாலான ஐபிஎஸ் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
அப்போதும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து அக்டோபர் 10-ம் தேதி வரை மேலும் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது உள்துறை அமைச்சகம்.
அப்போதும் ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து 17 நாளுக்கு மேல் ஆனநிலையில் இன்னும் 864 ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது பற்றி கவலையே படவில்லை.
அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்.இவர்களை  கண்காணிக்க வேண்டிய உள்துறை அமைச்சகமோ இது பற்றி கட்டளையிடாமல் அமைதியாக இருந்து வருகிறது.
இவர்கள்தான் சட்டத்தைப்பாதுகாக்கப்போகிறவர்கள். 
    
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து. 
---------------------------------------------------------------------
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து இப்படத்தை விண்கலம் மூலம் 
நாசா எடுத்து வெளியிட்டுள்ளது.[23-10-11]

                    

வியாழன், 27 அக்டோபர், 2011


சீன படை ஊடுறுவல்.
        
இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்த தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது.
இந்தியாவில் அதிகமான தீவுக்கூட்டங்ளை கொண்டுள்ள அந்தமானில் நிறைய தீவுகள் மக்கள் வசிக்காத இடங்களாக இருப்பதால், அந்தமான் மீது சீனாவுக்கு அதிகமான ஆர்வம். மேலும் இந்தியாவிற்கு ஏதாவது ஆபத்தை விளைவிக்க வேண்டுமென்றால் அந்தமானை கடந்துதான் செல்லவேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது.
தற்பொழுது தனது பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா இறங்கியுள்ளதையடுத்து அங்கு 6 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். இது தற்போது அங்கிருக்கும் வீரர்களை விட 3 மடங்கு அதிகம்.
மேலும் ஒரு டஜன் போர் விமானங்களும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதுகுறித்து இந்திய ராணுவ பிரிகேடியர் பல்விந்தர் சிங் கூறுகையில், அந்தமான் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன.
இவற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரித்த அவர் அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவர் என்றும் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் சீனாவின் ஆதிக்கம் இப்பகுதியில் பரவாமல் இருக்க மேலும் பல யுக்திகளை இந்தியா மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------

 

2008 அதிகம் தேடப்பட்ட "தசாவதாரம்"

தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது. 
கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில். 

Most Popular Movies

1. Jodha Akbar
2. Dasavatharam
3. Singh Is King
4. Jaane Tu Ya Jaane Na
5. Jannat
6. Tashan
7. Ganesha
8. Fashion
9. Rock On
10. Race

--------------------------------------------------------------------------------------

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியல்களை அவ்வப்போது  வெளியிட்டுவருகிறது. அதன்படி, தற்போது, இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 5ம் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து முகேஷ் அம்பானி    முதலிடத்திலேயே இருக்கிறார். 

                        
அனில் அம்பானி, 10ம் இடத்தில் இருந்த இவர் 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போதைய இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் லட்சுமி மிட்டல் 2ம் இடத்திலும், விப்ரோ நிறுவனர் அஜிம் பிரேம்ஜி 3ம் இடத்திலும் உள்ளனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ராகுல் பாட்டியா, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட 14 புதிய முகங்கள் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர். ராகுல் பாட்டியா 51வது இடம்    
பிடித்துள்ளார்.

உலகின் பணக்கார அம்மாக்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும் ஆசிய அளவில் முதலிடத்தையும் சாவித்ரி ஜின்டால் பிடித்துள்ளார். ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலராகும் (ரூ. 55 ஆயிரம் கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.

பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தாய்மார்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதை ஒட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952-ல் உருவாக்கினார். 2005-ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார். ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.

பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம்பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர். இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரோலிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.

பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான விதவைத் தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.

வால்மார்ட் சங்கிலித் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250  கோடி டாலராகும்.

உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோ ரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட்  ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸôரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 
________________________________________________________________________________________________________
கிரண் பேடி ' அறக்கட்டளை நிர்வாகி விலகியுள்ளார்.
                                 
      0 கிரண் பேடி நடத்தி வரும் "இந்தியா விஷன் ஃபவுண்டேஷன்' அறக்கட்டளையில் அதன் முக்கிய நிர்வாகி அனில் பால் விலகியுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கிரண் பேடி கூடுதலாகப் பயணக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக அனில் பால் தெரிவித்துள்ளார்.

"இந்த விவகாரத்தால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அறக்கட்டளை நிர்வாகி பொறுப்பை உடனடியாக ராஜிநாமா செய்கிறேன். கிரண் பேடியின் பயணத் திட்டங்களுக்கு வேறு நிறுவனத்தை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டிய தொகையை எவ்வித பாக்கியும் இன்றி காசோலையாக அளித்து விட்டேன். அறக்கட்டளைக்கும், எனக்கும் இனிமேல் தொடர்பு இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.

          கிரண் பேடிக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் 4 பேர் அவதூறு பிரசாரம் செய்வதாக அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி மீது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியூருக்கு விமானங்களில் பயணம் செய்யும் போது, எகானமி கிளாசில் பயணம் செய்துவிட்டு பிசினஸ் கிளாசுக்கான கட்டணத்தை அவர் விழா அமைப்பாளர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார். அதிலும், ஏர் விமானத்தில் பயணம் செய்யும்போது குறைந்த வகுப்பு கட்டணத்திலும், 

வீரதீர செயல்களுக்கான விருது பெற்றதால் கிடைக்கும் 75 சதவீத கட்டண சலுகையையும் பெற்றிருக்கிறார். அந்த பணத்தை தான் நடத்தும் சேவை அமைப்புக்கு கொடுத்ததாக முதலில் விளக்கம் அளித்த கிரண் பேடி, பின்னர் கூடுதலாக பெற்ற தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி தருவதாக அறிவித்தார். இந்நிலையில், அன்னா ஹசாரே தனது இணைய தளத்தில் எழுதியிருப்பதாவது:

ஜன் லோக்பால் மசோதாவுக்காக போராட்டம் நடத்திய என் ஆதரவாளர்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. விமானப் பயணத்துக்காக கூடுதலாக பெற்ற தொகையை கிரண்பேடி தனக்காக பயன்படுத்தவில்லை. அப்படி அவர் பயன்படுத்தி இருந்தால், அது பற்றி விசாரணை நடத்தி கிரண் பேடி மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். 

ஆனால், என் குழுவினரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த 4 மத்திய அமைச்சர்கள் செயல்படுகின்றனர். அந்த கும்பல்தான் இப்போது, கிரண்பேடிக்கு எதிராக நடக்கும் அவதூறு பிரசாரத்துக்கு பின்னணியில் இருக்கின்றனர். ஜன்லோக்பால் அமைந்தால் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்று அந்த அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். மத்திய அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ஜன் லோக்பாலை ஆதரிக்கின்றனர்.

இதுபோன்ற சிலர் மட்டும் எதிர்க்கின்றனர். ஒன்றிரண்டு குண்டர்கள் இருந்து கொண்டு, கிராம மக்களை மிரட்டுவதுபோல், ஒரு சில முரட்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக மற்ற அமைச்சர்கள் வாய் திறக்கமுடியவில்லை. தீய செயலில் ஈடுபட்டுள்ள இந்த அமைச்சர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். 
இவ்வாறு அன்னா ஹசாரே எழுதியுள்ளார்.
இது பற்றி, டுவிட்டர் இணைய தளத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், கிரண் பேடிக்கு ஆதரவாக அன்னா ஹசாரே குரல் கொடுத்துள்ளார். 4 பேர் கும்பல் என்று குறிப்பிட்டு சாடியுள்ளார். யார் அந்த அதிர்ஷ்டகாரர்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்Õ என்று கூறியுள்ளார். 

"பிளைவெல் டிராவல்ஸ்' உரிமையாளரான அனில் பால், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியின் பயணத் திட்டங்களை கவனித்து வந்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

"கூடுதல் கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பித் தரும்படி எனது பயணத்துக்கு ஏற்பாடு செய்த டிராவல் ஏஜெண்டுக்கு அறக்கட்டளை நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்' என்று கிரண்பேடி தெரிவித்திருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததைத் தொடர்ந்து அனில் பால் அறக்கட்டளையிலிருந்து விலகியுள்ளார்.

___________________________________________________________

 பாகிஸ்தான்_தலிபான் உறவு,,,!

தலிபான் கிளர்ச்சியாளர்கள்
தலிபான் கிளர்ச்சியாளர்கள்

பாகிஸ்தான், தன் எல்லைக்குள் இருந்து கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகம் தன்னால் செய்ய முடியும் என்று கடந்த வாரம்தான் ஒப்புக்கொண்டது.

"தாலிபானுக்குப் பணம், பயிற்சி தந்த பாகிஸ்தான்"
வெளிப்படையாக அமெரிக்காவின் கூட்டாளி போல நடித்துகொண்டு , உண்மையில் பாகிஸ்தான் தாலிபானை ரகசியமாக ஆதரித்து வருகிறது என்ற இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று கூறுகிறார் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆற்றிய பங்கு குறித்து ஆராய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சி.ஐ.ஏ அதிகாரி ப்ரூஸ் ரெய்டல்.
“ எங்களுக்கு கிடைத்த உளவுத்தகவல்கள் குழப்பமற்றதாகவே இருந்தன. ஆப்கானிஸ்தானில் நடந்த கிளர்ச்சிக்கு பாகிஸ்தானிய ராணுவமும் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐயும் தீவிர ஆதரவளித்ததை நாங்கள் கண்டோம். பாகிஸ்தான் தாலிபானுக்காகப் பணம் திரட்டியது, தாலிபானுக்கு பயிற்சி தந்தது, நேட்டோ படைகள் மீது தாக்குதல்களை நடத்த தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் வல்லுநர்களையும் அனுப்பியது” என்றார் ரெய்டல்
'பாகிஸ்தானே தலிபான்களுக்கு உதவுகிறது'
'பாகிஸ்தானே தலிபான்களுக்கு உதவுகிறது'
2008ம் ஆண்டில், இந்தியாவின் மும்பை மாநகரில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் துவம்சத் தாக்குதல் நடத்தியபோது,அவர்கள் பாகிஸ்தானின் உத்தரவுப்படிதான் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்தது. மேலும் அதற்கடுத்த ஆண்டு, அமெரிக்கா பாகிஸ்தானின் ஆப்கன் எல்லைக் கிராமங்களில் நடத்தப்போகும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல் தருவதை நிறுத்திய பின்னர்தான், இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நடந்தன.
“ முதலில் இந்த ட்ரொன் விமான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல்கள் தெரிவிப்போம். அப்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் , நாங்கள் தாக்கவிருந்த இலக்கு தப்பிவிடும். இதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒன்றும் பெரிய துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸாக இருக்கவேண்டியதில்லை” என்றார் ப்ரூஸ் ரெய்டல்
தாலிபான் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவுவதை தடுக்க அமெரிக்கப் படைகள் எடுத்த முயற்சிகளை எல்லாம் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தடுத்து வந்தது என்கிறார் அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் மைக் வால்ட்ஸ்.
“ பாகிஸ்தான ராணுவச் சாவடிகளுக்கு அருகே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்த போதெல்லம்,ராணுவத்தினர், டார்ச் விளக்குகளை அணைத்தும், ஒளிர வைத்தும் சமிக்ஞைகள் கொடுப்பதை பார்த்தோம். ஒரு தொடர் விளக்கு சமிக்ஞை போல, ஒரு முகட்டிலிருந்து மற்றொரு முகட்டுக்கு இந்த சமிக்ஞைகள் தொடரும் . பிறகு இந்த சமிக்ஞைகளால், எங்களது இலக்குகள் எல்லாம் ஓடிப்போனதைக் கண்டோம்”, என்றார் வால்ட்ஸ்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாகிஸ்தான் ராணுவம் மறுக்கிறது. அவர்களது எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் ராணுவமே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு போரை நடத்தி வருவதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தாலிபானை தாங்கள் ஆதரிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் ராணுவத்துக்காகப் பேசவல்ல ஜெனரல் அத்தர் அப்பாஸ் மறுக்கிறார்.
ஆனால் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் ஹமித் குல், பாகிஸ்தான் தனது நீண்ட காலப் பாதுகாப்புக்கு ஆப்கானிஸ்தானில் அதற்குள்ள தொடர்புகளைப் பேணுவது அவசியம் என்கிறார்.
“ எங்கள் கொல்லைப்புறத்தில் ஒரு விரோதப்போக்குடைய ஆப்கானிஸ்தானை நாங்கள் வைத்திருக்கமுடியுமா ? முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த விவேகமும், தாலிபானுடன் நல்ல தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்பது அவசியம் என்றுதான் கூறுகிறது. அதுதான் பாகிஸ்தானின் தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று எல்லோருக்கும் தெரியும்”,என்றார் குல்
 இந்த தகவல்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகளுக்கு மேலும் சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த இரு நாடுகளுமே, பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்யும் நாடுகள். பாகிஸ்தானை இரு நாடுகளுமே ஒரு கூட்டாளியாகத்தான் இதுவரை பார்த்து வருகின்றன.