மாடி வீட்டு ஏழைகள்.?
தில்லியில் உள்ள அரசு குடியிருப்புகளில் அமைச்சர்கள், எம்பிக்கள் குடியிருந்த வகையில் ரூ. 63 லட்சம் வாடகைப்பாக்கி கட்டாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத் தகவல் தெரிவிக்கிறது.
இந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர், ஜி. வெங்கடசாமி, ஜெகன்மோகன் ரெட்டி முக்கியமானவர்கள்.
காங்கிரஸ் எம்பியான ஜி. வெங்கடசாமி 29.4 லட்சம்,ஜெகதீஷ் டைட்லர் 19.1 லட்சம், பாஜக முன்னாள் எம்பி சங்கீதா குமாரி சிங் தேவ் 7.39 லட்சம், ஜெகன்மோகன் ரெட்டி 3 லட்சம், முன்னாள் எம்பி தேவவிரத சிங் 1.74 லட்சம், பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணலால் வால்மிகியின் தந்தை 1.83 லட்சம் வாடகைப்பாக்கி வைத்துள்ளனர்.
இவர்களைத் தவிர சமூக ஆர்வலர் எஸ்.சி. அகர்வால், தேசிய லோக தளம் கட்சி முன்னாள் எம்பி அஜய்சிங் சௌடாலா, காங்கிரஸ் முன்னாள் எம்பி கிரீஷ்குமார் சிங் ஆகியோர் மீது சட்டப்பூர்வமற்ற முறையில் அரசு குடியிருப்புகளில் குடியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வாடகைப்பாக்கி இல்லையென தகவல் அறியும் சட்டம் கூறுகிறது.
இது போன்ற செயலை அமைச்சர்கள் என்ர பெயரில் பதவி பெற்றவர்கள் செய்தது மிகக்கேவலமானது.முன்னாள் மக்களவை உறுப்பினர்களும்,சமுக ஆர்வலர் என தங்களைக்கூறிக்கொள்பவர்களும் கூட அரசு வீடுகளை பொய் சொல்லி சட்டட்தை ஏமாற்றிக்குடியிருந்துள்ளார்கள்.அதிகாரிகள் இதைப்பற்றி தெரியாமலா இருந்தார்கள்?
அமைச்சர்கள் வாடகையைக்கட்டாமல் இருந்தார்கள் என்பது வெட்கமானது.அவர்களின் சம்பளத்தில் வாடகை பிடித்தம் செய்திருக்கலாமே.சாதாரண அரசு ஊழியர் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் இருந்தால் சம்பளத்தில் வாடகையை பிடிக்கிறார்கள்.ஒய்வு பெற்றாலோ,மாறுதலானாலோ மூன்று மாதங்களில் வீட்டை ஒப்படைக்க வைத்து விடுகிறார்கள்.அமைச்சர்களுக்கு மட்டும் அதுவும் முன்னாள் அமைச்சர்கள்,மக்களவை உறுப்பினர்களுக்கு மட்டும் என்ன சலுகை.அவர்களாக வாடகை தந்தால் வாங்கிக்கொள்வது.வீட்டைக்காலி செய்ய மன்றாடுவது.கேவலம்.அவர்கள் என்ன அடுத்தவேளை சாப்பாட்டுக்கு தினறுபவர்களா?10கோடிக்கு கீழே சொத்துள்ளவர்தான் அமைச்சர்களில்,மக்களவை உறுப்பினர்களில் ஏழையாக இருக்கிறார்கள்.[இடதுசாரிகளைத் தவிர]
வீட்டை காலி செய்ய அவர்கள் வீட்டுப்பொருட்களை மற்றவர்கள் போன்று வெளியே எடுத்து வைத்து கதவை மூடி பூட்டுங்கள்.அப்படியாவது அவர்களுக்கு சுரணை வரட்டும்[இருந்தால்]