அணு [கூடங்] குளம்

                      


0    கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தொடர்பாக பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அமைப்புகளோடு கிறிஸ்தவ பாதிரியார்களையும் சந்தித்துள்ளார் பிரதமர்.கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையைத் தவிர மற்ற கிராமங்களில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் இடிந்தகரையில் மட்டும் எதிர்ப்பு? அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகுஎன்ற கேள்வ்க்கு” இதற்கு பின்னணியில் கிறிஸ்தவ அமைப்புகள் இருப்பதாக” உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதனால் சமீபத்தில் ஆர்ச் பிஷப்பை சந்தித்தார் பிரதமர். விரைவில் திருச்சியில் பாதிரியார்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, கூடங்குளம் விவகாரம் தொடர்பாக பாதிரியார்களோடு பேச, ஒரு மத்திய அமைச்சர் திருச்சி வந்து பாதிரியார்களுடன் பேச உள்ளார். ஆர்ச் பிஷப்பிற்கு கூடங்குளம் விவகாரத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாத நிலையில், ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை தூண்டிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. எப்படியாவது இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என, பாதிரியார்களிடம் அந்த அமைச்சர் வேண்டுகோள் விடுப்பார் என தெரிகிறது.
__________________________________________________
சட்டத்தை பாதுகாப்பவர்கள்.?
 
2010-ம் ஆண்டுக்கான அசையா சொத்தின் வருமான வரிக் கணக்கை நாடு முழுவதும் 864 ஐபிஎஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2010-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா, உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் பிரிஜ்லால், பஞ்சாப் காவல்துறை தலைவர் பி.எஸ்.கில், குஜராத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 335 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 92 அதிகாரிகள் அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
பிகாரில் 152 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 92 பேர் அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
ஆர்வம்... ஆனால் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் வருமான வரிக் கணக்கை ஆர்வமுடன் தாக்கல் செய்துள்ளனர். மொத்தமுள்ள 185 பேரில் 7 பேர் மட்டுமே அசையா சொத்துக்கணக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
2010-ம் ஆண்டுக்கான அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஐபிஎஸ் அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஆனால் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை பெரும்பாலான ஐபிஎஸ் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
அப்போதும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து அக்டோபர் 10-ம் தேதி வரை மேலும் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது உள்துறை அமைச்சகம்.
அப்போதும் ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து 17 நாளுக்கு மேல் ஆனநிலையில் இன்னும் 864 ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது அசையா சொத்துக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது பற்றி கவலையே படவில்லை.
அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்.இவர்களை  கண்காணிக்க வேண்டிய உள்துறை அமைச்சகமோ இது பற்றி கட்டளையிடாமல் அமைதியாக இருந்து வருகிறது.
இவர்கள்தான் சட்டத்தைப்பாதுகாக்கப்போகிறவர்கள். 
    
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து. 
---------------------------------------------------------------------
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து இப்படத்தை விண்கலம் மூலம் 
நாசா எடுத்து வெளியிட்டுள்ளது.[23-10-11]

                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?