புதன், 31 ஆகஸ்ட், 2011

அன்புள்ள கமல்,.


                                         
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ’அன்புள்ள கமல்’ என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றும், இப்படம் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘4 பிரண்ட்ஸ்’ படத்தின், தமிழ் மொழிமாற்றம் என்றும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்படத்தில் கமலஹாசன் கௌரவ வேடத்தில் நடிக்க, அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, போபன் குஞ்சாகோ, மீராஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் நடிகராகவே வருகிறார்.ஜெயராம், ஜெயசூர்யா, போபன் குஞ்சாகோ, மீராஜாஸ்மின் ஆகிய நான்கு பேரும் புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படுகின்றன.
அவர்களை தேற்றி மரணம் நிஜமான ஒன்று. அது வரும்போது வரட்டும். அதற்கு முன்பு வாழ்வதற்கு நிறைய இருக்கிறது என்று தைரியமூட்டுகிற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து இருக்கிறார். இதுதான் இப்படத்தின் கதை. சமூக விழிப்புணர்வுள்ள படம் என்பதால், இப்படத்திற்காக சம்பளம் வாங்காமல் கமலஹாசன் நடித்திருக்கிறார்.
நண்பன் படத்தை அடுத்து கமலை வைத்து இந்தியனின் இரண்டாம் பாகம் படம் தயாரிக்கும் திட்டம் சங்கரிடம் உள்ளதாம்.அதில் கமலுக்கு வேசம் எப்படிப்போடலாம்.?
கீழே உள்ள வேசம் எப்படி இருக்கு.தொப்பிமட்டும் அன்னா கசாரேவிடம் வாக்கிட்டா போதும்.

=========================================================================
கணினியைப் பாதுகாக்க

இன்றைய இணையதளங்களில் எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.


பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.
 

இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.


இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம்.


சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.


இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன். 2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.


அறிக்கையில் மொத்த தளம் குறித்த பாதுகாப்பு தன்மை கூறப்படுகிறது. வர்த்தக ரீதியில் இல்லாத தளம் என்றால் பொதுவான பாதுகாப்பு நிலை தரப்படுகிறது.


அடுத்ததாக, வர்த்தக தளம் எனில் அதனுடன் வர்த்தகம் மேற்கொள்கையில் நமக்கான பாதுகாப்பு எப்படி என்று காட்டப்படுகிறது. அடுத்ததாக பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் உள்ளன.இறுதியாக என்ன என்ன பயமுறுத்தல்களை இந்த தளம் கொண்டுள்ளது என்று அதிலிருந்து அனுப்பப்படும் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.வலது பக்கத்தில் நீங்கள் சோதனை செய்திடும் தளம் சமுதாய கண்ணோட்டத்தில் எப்படிப்பட்டது என்று காட்டப்பட்டு அந்த தளம் குறித்த கருத்துக்களும் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக இந்த தளத்தினை நமக்குக் காட்டும் பொதுவான குறியீடுகள்(tags) தரப்படுகின்றன.


இறுதியாகச் சொல்லப்பட்ட சமுதாயக் கண்ணோட்ட அறிக்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துக்காட்டாக யூடியூப் தளம் குறித்து கேட்டபோது மிக நல்ல தரம் கொண்டது எனக் காட்டப்பட்டது.சமுதாயக் கண்ணோட்ட அறிக்கையில் யூடியூப் தளத்தில் காட்டப்படும் வீடியோ குறித்த தகவல்களில் உள்ள லிங்க்குகள் மோசமான தளத்திற்கு உங்களை எடுத்துச் செல்லலாம் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.


இப்போதெல்லாம் நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று நாம் சிறிது கூட எண்ணிப் பார்க்க இயலாது. எனவே நார்டன் தரும் இந்த தளம் நமக்கு நல்ல பாதுகாப்பினை அளிக்கிறது.


30 விநாடிகளில் முழு பாதுகாப்பு குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அறியாத தளங்களுக்குச் செல்லும் முன் இந்த தளம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லதல்லவா! 30 விநாடிகள் செலவழித்தால் பின்னர் நாம் அறியாமல் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியதில்லையே.நன்றி:euதமிழர்.காம்
________________________________________________________________________________________________________________________திங்கள், 29 ஆகஸ்ட், 2011

காப்பாற்ற மனமில்லையா?

                                 
வரும் செப்டம்பர் 9ம்தேதி மரணத்தை எதிர் நோக்கியிருக்கம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில்  தெரிவித்துள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவர் நிராகரித்த மனுவை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.

தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் சட்டப்பேரவையில்  விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
                                         
இவரை தூக்குத்தண்டனையை ரத்து செய்ய யார் கேட்டார்கள்.குடியரசுத்தலைவருக்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியோ,தமிழக மக்களின் முதல்வர் என்ற முறையில் தூக்குத்தண்டனையை நீக்கக் கூறி கடிதமோ குடியரசுத்தலவருக்கு அனுப்பி தூக்கை நிறுத்திட உதவத்தானே கூறுகிறார்கள்.
கருணாநிதி போல் கடிதம் எழுதினாலே போதுமே.இலங்கை போர்க்குற்றவாளியாக அறிவிப்பதில் ஒன்றும் நடக்காததற்கு தீர்மானம் நிறைவேற்றிய இவரால் தூக்குத்தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கூற முடியாதா? அல்லது இவருக்கு மனமில்லையா?
மனமில்லை அதுதான் உண்மை.இடையில் போட்ட ஈழமக்கள் ஆதரவு வெறும் வாக்குகளைப் பொறுக்க மட்டும்தான்.அதற்கு தீர்மானம் போட்டாயிற்று.தனது கடமையும் முடிந்து விட்டது என என்ணி விட்டாரா?
கருணாநிதிக்குத்தான் சட்டம் தெரியாது.சட்ட வல்லுனரான ஜெயலலிதா கவனத்திற்காக கீற்று இனைய தளத்தில் வெளியான கட்டுரையை மீளத்தருகிறோம்.
Picture                                                 

மூவர் விடுதலை - தமக்கு அதிகாரமில்லையென தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல,,,!

பெ.மணியரசன்
அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் அவர்களின் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது சரியல்ல. 

 
அரசமைப்புச் சட்ட விதி 161 மற்றும் 72 உட்பிரிவு (3) ஆகியவை குடியரசுத் தலைவர் நிராகரித்த கருணை மனுக்களை மாநில ஆளுநர் ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை தெளிவுபட உறுதி செய்கின்றன. விதி 72 குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் வழங்குகிறது. அதே விதியின் உள் பிரிவு(3) குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும் மாநில ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் தமக்குள்ள அதிகாரப்படி தனித்த முடிவை எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளது.

இந்த உரிமையை உச்சநீதிமன்றம் தயாசிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கிலும், திரிவேணிசெல் எதிர் குஜராத் மாநில அரசு என்ற வழக்கிலும் உறுதி செய்துள்ளது. இவை குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், குடியுரிமை அமைப்புகளும், சட்ட வல்லுநர்களும், தெளிவாக எடுத்துக் கூறி வந்துள்ளார்கள். பி.யூ.சி.எல். அமைப்பு முதலமைச்சருக்கு தேவையான சட்ட சான்றுகளுடனும், தீர்ப்புகளுடனும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்துள்ளது.

மேலே சொல்லப்பட்ட விவரங்கள் குறித்து உரியவாறு மறுப்பு விளக்கம் எதுவுமில்லாமல் குடியரசுத் தலைவர் நிராகரித்தப்பின், நிராகரித்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லையென்று கூறியுள்ளார். அத்துடன் அரசமைப்புச் சட்ட விதி 257 யும் அதன் உட்பிரிவு(2)யும் காரணம் காட்டி நடுவண் அரசு முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்று கூறியுள்ளார்.

விதி 257 நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 57-ன் உட்பிரிவு(2) நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை, தொடர்வண்டிப்பாதை, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றில் 257-யும் அதன் உட்பிரிவு(2)யும் இந்திய அரசின் அதிகாரம் மாநில அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

இதற்கு மேலே மாநில அரசுக்கென்று உள்ள அதிகாரங்களையோ, மரண தண்டனையை நீக்கி கருணை மனுவை ஏற்கும் ஆளுநரின் அதிகாரத்தையோ, கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசுக்கு விதி 257-ம் அதன் உட்பிரிவுகளும் வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் 1981ஆம் ஆண்டு மாரூர்ராம் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் கருணை மனுவை ஏற்பதில் ஆளுநரின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அது தனித்து செயல்படக்கூடிய அதிகாரம் என்று கூறியுள்ளார் நீதிபதி வீ.ஆர் கிருஷ்ண அய்யர். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தப் பின் தமிழக அரசுக்கு (ஆளுநருக்கு) கருணை மனுவை ஏற்க அதிகாரமில்லை என்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது திரிபுவாதமாகும்.

கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் முதலமைச்சராக இருந்த  இ.எம். எஸ் நம்பூதிரிபாடுஅவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றியாவது பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம். அதை விடுத்து மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென்று மொட்டையாகக் கூறி ஒதுங்கிக்கொள்வது அவருக்கு இந்த சிக்கலில் உள்ள அக்கறையைக் காட்டது.

15 நாட்களுக்கு முன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்று 3-பேர் தூக்குத் தண்டனை நீக்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை பேரவை தலைவரிடம் கொடுத்திருந்தார். அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பிடிவாதமாக மறுத்துவிட்டது தமிழக அரசு. இதிலும் முதலமைச்சரின் அணுகுமுறை சரியானதல்ல.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அறிவிப்பை முதலமைச்சர் செல்வி செயலலிதா இன்று(29.8.2011) சட்டப்பேரவையில் விதி 110-கீழ் வெளியீட்டுள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதிக்கக் கூடாது என்று தடுக்கும் விதியின் கீழ் இந்த அறிவிப்பை செய்துள்ளார். இதுவும் மூன்று தமிழர் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் கையாளப்பட்ட உத்தியல்ல.

ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்கள் மற்றும் பன்னாட்டுத் தமிழர்களின் கோரிக்கையாக மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்கம் உருவாகியுள்ளதை கவனத்தில் கொண்டும், குற்றமிழைக்காத அப்பாவித் தமிழர்களின் உயிரைக் காப்பதில் அக்கறை காட்டியும் தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் தூக்குத் தண்டனையை நீக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி:”கீற்று’-இனையம்,

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மேலும் உயிர்களை இழப்பதா?


மரண தண்டனைபெற்று தூக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கின்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை புரிந்துள்ளார். 27 வயதுடைய செங்கொடி என்ற இளம் பெண் தனது உடலில்  தீ வைத்துஎரிந்து தனது உயிரை இழந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் காஞ்சிபுரம்வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது. 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ இம்மூவரின் உயிரை காப்பாற்றுவ்தில் எந்தவிதமான பதிலௌம் கூறாமல் வாயை இறுக்க மூடிக்கொண்டிருக்கிறார்.
சீமானோ ஜெயலலிதாவிடம் வலியுறுத்திக் கூறாமல் வக்கற்று கருணாந்தி அவர் ஆட்சிக்காலத்தில் காப்பாற்றியிருக்கலாமே என வசை பாடி கொண்டிருக்கிறார்.
நடக்க வேண்டியதை செய்யாமல் கருணாநிதியை இப்போது கண்டித்து என்ன ஆகப்போகிறது.அவர்தான் ஈழப்படுகொலைக்கு துணை போய்விட்டார் என சீமான் கூறுகிறாரே.பின் ஏன் ? 
இப்போது அதிகாரத்தை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை வற்புறுத்தி குடியரசு தலைவருக்கும் ,மத்திய அரசுக்கும் கடிதங்கலை தமிழக அரசு சார்பிலோ-ஜெ தனிப்பட்ட முறையிலோ தூக்கை எதிர்த்து எழுதக்கூறலாமே.
  இன்னும் சில உயிர்கள் தீயில் வெந்து போகும் அளவு காத்துக்கொண்டிருக்க வேண்டுமா?
முதல்வரால் முடியும் என்கிற போது அவரை வற்புறுத்த வைகோ போல் சீமானும் ,பழ.நெடுமாறனும்,சத்தியராஜ்ம் முயற்சிக்க வேண்டும்.வைகோவை சந்திக்கவே மறுக்கும் ஜெயலலிதா அவரின் ஆதரவாளர்களான மூவரையும் நிச்சயம் சந்திப்பார். அதற்கு முயற்சித்து தூக்கை நிறுத்துங்கள்
தேவையற்ற வீர வசனங்களை பிறகு மேடையில் பேசிக் கொள்ளுங்கள்.
செங்கொடி போன்றவர்களுக்கு “உங்கள் தியாகம் தேவையற்ற வழிகளில் வீணடிக்கப் படக்கூடாது.
உங்களைப்போன்றவர்கள் தீக்குளிப்பதால் தூக்கை நிறுத்து அளவு இளகிய மனதுக்காரர்கள் அல்ல அவர்கள்.
கசாப்,அப்சல் போன்றோர் இருக்கையில் இம்மூவருக்கும் தூக்கு அதுவும் 22 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்தப் பிறகும் எனும் போது அவர்களின் உள்மனது தெரியவில்லையா?
மூன்று உயிரகள் போகக்கூடாது என வாதாடும் போது மேலும் நீங்கள் உயிர்களை இழப்பது என்பது முற்றிலும் தவறு. வேதனையை மேலும் தருவது.
இனி வேண்டாம் தீக்குளிப்பு.

”மகாத்மாக்கள் “ அபாயம்,,,.


மேலே உள்ளது விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகக் கூறி ஈரோட்டில் அ.தி.மு.க,வினர் கொடுத்துவரும் கைப்பிரதி.
உண்மையில் இதில் காண்பவை இருப்பின் மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுத்து அத்தனை கடத்தல் -கறுப்புப்பணத்தையும் இந்தியாவுக்கு கொணர வேண்டும்.
பட்டியலில் முக்கிய பெயர் விபரங்கள்.                           
  

1.rajeev காந்தி-198000
2.a ராஜா 7800
3.harshad மேத்தா-135800
4.ketan பரேக்-8200
5.hd kumarswamy 14500
6.laluprsd யாதவ்-29800
7.j.mscindia-9000
8.karunanidhi-35000
9.kalanidhi மாறன்-15000
10.sharad pawer-28000
11.chidambaram -32000
12.rajfoundation-189008.-_____________________________________________________________________________
மக்கள் ஆதரவு... மக்கள் ஆதரவு... என்கிறார்கள். இந்த 'மக்கள்' கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல.
        
              

இந்த, 'மக்கள்' பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல.

இந்த 'மக்கள்', 'கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது அதனால், சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும்!' என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப்போன சுவாமி நிகாமானந்த்துக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் மக்களுடன் நிற்பவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல.

ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு பெருகுகிறது என்கிறார்கள்.
உண்மையில் இது வெறும் நாடகப் பிரசாரம்!" என்று காட்டத்தோடு வெடித்திருக்கிறார் அருந்ததி ராய்.

உண்மைதானே. இந்த கோரிக்கைகளை லோக்பாலில் சேர்க்க வேண்டும் என்பதும்.
தான் சொன்னதைத்தான் மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என்பதும் வேறானவைகளதானே.
இன்று அசாரே போராட்டம் ஊழலுக்கு எதிரானது மட்டுமே ஒழிய மற்றைய சீர்கேடுகளுக்கு எந்த தீர்வும் போராட்டமும் இல்லையே?
அருந்ததிராய் வரிசையிட்டுள்ளவைகளுக்கு அன்னா கசரேயை இன்னொரு மகாத்மா என கனவில் வைத்திருப்போரின் பதில் என்ன?
திட்டமிட்டு அன்னாவை ஒரு குறியீடாக்கி பலன் பெற ஒரு பிரிவினர் முயலுகின்றனர்.அதற்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது.ஊழலுக்கு எதிரான மனப்பான்மையுடையோர் ஒன்று திரண்டிருப்பது நல்லவிடயம் .அதற்கு அன்னா உதவியுள்ளார்.ஆனால் அன்னாவின் மற்ற கொள்கைகளை நன்கு பகுத்துணர்ந்து ஆதரியுங்கள்.
நிகாமானந்தாவுக்கும்,வேதாந்தாவுக்கும்,பட்டிணிசாவு விவசாயிகளுக்கும் தராத ஆதரவை-எதிர்ப்பை இங்கு மட்டும் கொட்டுவது சரியல்ல.அது பின்னணியில் உள்ளோரின் நோக்கங்களுக்கு ஆதரவாகி விடும்.
விளைவுகள் நேர்மாறாகிவிடும் அபாயம் உள்ளது.
====================================================================================
    யாகூ திரைப்படம்,.                                     

கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது.
யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

யாகூவின் இந்த புதிய சேவை MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணினியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும். கூகிளின் BoxOffice இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள்.

மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணினியில் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

இங்கே சொடுக்கவும் : யாகூ மூவி பிளக்ஸ்
========================================================================
அடையாள அட்டை தவறுகள் திருத்தப்பட வேண்டும்,
நாடு முழுவதும் இந்திய குடிமகன்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆதார் ப்ராஜக்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் நீல்கேனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதார் அடையாள அட்டைக்காக பொதுமக்களின் கைவிரல் ரேகைகள் மற்றும் விழித்திரைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.                                                                  

இதற்கு கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பயோமெட்ரிக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான அபாயம் இருப்பதால் பல நாடுகளில் இதுபோன்ற திட்டம் அறிமுக நிலையிலேயே ரத்து செய்யப்பட்டதாக அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அச்சுதானந்தன் கூறியபடி இத்திட்டத்தைக்கைவிட்ட நாடுகளுடன்  தொடர்பு கொண்டு அவை கைவிட்டதற்கான காரணத்தைக் கேட்டறிந்து இத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
செவ்வாய் கிரகப் பெண்.
  கீழே உள்ளப் படம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டப் படம்.
http://puthiyaulakam.com/wp-content/uploads/2011/08/mars-girl.jpg
அதில் பாறை மீது கால் நீட்டி ஒரு பெண் ஒருவர் இருப்பது போல் தெரிகிறது.கையை நீட்டி எதையோ காட்டுவது போல் உள்ளது.
இது பாறையின் வடிவம்தான் என்றும் ,பாறை நிழல் கலந்து பெண்போன்ற வடிவத்தைக் காட்டுகிறது எனவும் அறிவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் செவ்வாய் கிரகத்தில் பெண் என்ற பெயரில் இப்படம் வேகமாகப் பரவி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கடைசி ஆசை,,,,கேட்கப்பட்டது,.


வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்பட இருக்கும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் கடிதம்: "என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடைசி ஆசை: மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.

பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐ.ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு : சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் : முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது. சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர். அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர். கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.

ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர். தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

தூக்கு மேடை சீர் செய்ய பூஜை : ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர். தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர்.
25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர். உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
 

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

புலிவேடதாரிகள்

 இது மீள் பதிவு.

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்கள் .
அவலநிலை ஆட்சியாளர்களுக்கு புரியவில்லையா?

                                         
செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள். சிறைவாசம் அனுபவித்த 26 பேரில்இ பல ஆண்டுகளின் பின்னர் 19 பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகவும், நாலு பேருக்கு மரண தண்டனையாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் தாய் நளினி கருணை மனுவின் அடிப்படையில் ஆயுட்தண்டனைக் கைதியாக மாற்றப்பட்டார். தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியவர்கள், தமது மரண தண்டனையை விலக்கக்கோரி இந்திய ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் கருணை மனுக்களை விண்ணப்பித்திருந்தார்கள். தற்போதுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் குறித்த மனுக்களை நிராகரித்துள்ளார். இதனையடுத்து குறித்த மூவரையும் தூக்கிலிடத் தமிழக ஆளுநரின் உத்தரவு எதிர்பார்க்கப்படுவதாக தமிழக காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு கிடைக்கப்பெற்று ஒரு வார காலத்திற்குள் குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று கூறுகிறார்கள் சிறை அதிகாரிகள். இந்திய நடுவன் அரசின் பூரண ஆசியுடன் நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் போரின் போது 40,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பலர் சொல்லொனாத் துயரை அனுபவிக்க நேர்ந்தது. உலகத்திற்கு அகிம்சையைக் கற்றுக்கொடுத்த காந்தி வாழ்ந்த இந்திய தேசம், கருணையற்ற முறையில் நடந்து கொள்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்திய தேசம் தமிழினத்தின் மீதே தனது வக்கிரத்தை காட்ட முயலுகிறது என்பதைக் காட்டுகிறது. இளமை கரைந்து, வசந்தம் தொலைந்து சிறைக் கம்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த தமிழர்களின் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளன.
ஈழத்தமிழர் அழிவைக் கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவேன் என்று சவால் விட்டுச் செயற்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலையிட்டால் மூன்று பேரையும் காப்பாற்றலாம். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று பாராமுகமாக ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்துவிட்டால் மூன்று பேரை தமிழினம் இழப்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழினத்திற்கே தலைகுனிவையே இது ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இதனை மனதில் வைத்தாவது தமிழக முதல்வர் செயற்படுவார் என்று உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஏன் இந்தத் திடீர் முடிவு?
1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. ஒரிசா ஆந்திரா வழியாக அவர் சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறிபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் விடுதலைப்புலிகளைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும் பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மே 21-ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என இந்திய புலனாய்வுத்துறை அறிவித்தது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே விடுதலைப்புலிகள்தான் இந்தப் படுகொலையை செய்தார்கள் என அறிவித்தார்கள் இந்திய உயர் அதிகாரிகள். அரசியல் ஆதிக்கம் இல்லாமல் சட்டத்தை மதிக்கும் எந்தவொரு நிகழ்வையும் பார்ப்போமேயானால் ஒரு கொலைகாரனையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னர் ஒருபோதும் குற்றவாளி என்ற பதத்தை பாவிக்கக்கூடாது. மாறாக அந்த நபரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். ஆனால் குற்ற விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே புலிகள்தான் குற்றவாளிகள் என்று அறிவித்த பின்னர் விசாரணை குழுவை நியமித்து குற்றவாளிகளை இனம்காணுவதென்பது இந்த விசாரணை குழு வெறுமனே அரசியல் காரணங்களுக்காகவே நியமிக்கப்பட்ட குழுவாகவேதான் பார்க்கவேண்டும். காரணம் ஏற்கனவே புலிகள்தான் கொலைகாரர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த விசாரணைக் குழுவினர் புலிகள்தான் கொலைகாரர்கள் என்ற கண்ணோட்டத்துடனேதான் விசாரணையை தொடங்கும். ஆகவே விசாரணையின் முடிவில் எப்படியாவது புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவதற்கு தேவையான ஆதாரங்களை திரட்டத்தான் இந்த குழு உதவுமே தவிர�� உண்மையான கொலைகாரர்களை கண்டுபிடிக்க ஒரு பொழுதும் முனையாது.
1993-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள் 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள் 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத்துறையின் இந்த விசாரணைகள் அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில்தான் நடந்தது. ஏறத்தாள 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளவர்கள் மீது எதற்காக இப்படியான திடீர் முடிவை இந்திய ஜனாதிபதி எடுத்தார் என்பது வெறும் அரசியல் காரணங்களுக்காகவேதான் என்று கூறுகிறார்கள் சட்ட ஆய்வாளர்கள். தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய அடுத்த கணமே குறித்த கருணை மனுவை நிராகரித்துள்ளார் இந்திய ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஆதரவுடன் இடம்பெற்ற தமிழின படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவேன் என்று அறைகூவல் விட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்திய நடுவன் அரசிற்கும் தொடர்ந்தும் தனது அழுத்தங்களை பிரயோகிக்கிறார் ஜெயலலிதா. இவைகள் அனைத்தையும் மழுங்கடிக்க ஏதேனும் ஒரு துருப்புச்சீட்டு இந்திய நடுவன் அரசிற்கு உடனடியாகவே தேவைப்பட்டது. அத்துடன் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இவ்வேளையில் குறித்த கருணை மனு நிராகரிப்பானது முக்கியத்துவம் பெறுகிறது. சோனியா காந்தி அரவர்கள் உலகத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லையெனில் சோனியா காந்தி இல்லாத சமயத்தில் செய்தால் சோனியா காந்தி மீது பழி வராது என்று இந்திய நடுவன் அரசும் ஜனாதிபதி அவர்களும் கருதி உள்ளார்கள் போலும். எது என்னவாக இருப்பினும் குறித்த திடீர் முடிவானது இந்திய நடுவன் அரசின் திட்டமிட்ட செயலாகவேதான் கருதப்படுகிறது.
மானிடத் தர்மத்திற்கே முரணானது:
கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கருவியாயகவேதான் மரண தண்டனையைப் பார்க்க முடியும். அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு எதிரானது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் கருத்தின்படி "மரண தண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரண தண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டும". மிகவும் தெட்டத்தெளிவாக இக்கருத்தை உலக அரங்கில் கூறி வருகிறது குறித்த மன்னிப்புச் சபை.
ஐக்கிய நாடுகள் சபை கூட மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமென உலக நாடுகளின் அரசுகளைக் கோரி வருகிறது. உலக நாடுகள் 193-இல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும்இ 58 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. சர்வாதிகார நாடுகளும் பல இஸ்லாமிய மதத்தைத் தழுவும் நாடுகளுமே மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை இந்திய அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது.
அரசியல் அவதானிகளின் கருத்தின்படி ராஜீவ் கொலை வழக்கில் மூன்று தளங்களில் குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும். தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும். இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு - ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவிட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும்.
காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993-இல் தீர்ப்பளித்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும். உலகத்தமிழர்களின் உணர்வுகளையும்இ உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ்விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என பல தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்துள்ளன. பல தரப்பினர் தங்களால் இயன்ற வகையில் போராட்டங்களையும் நடத்திவருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய ஏகாதிபத்திய சட்ட மரபுகளை பின்பற்றும் நாடுகளின் சட்ட யாப்பின்படி குறித்த ஒரு தீர்ப்புக்கு ஒத்ததாக பிறிதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமேயானால் குறித்த தீர்ப்பின்படி இத்தீர்ப்பையும் மாற்ற முடியும். அவ்வகையில் ஏற்கனவே 1974-ஆம் ஆண்டு கவிஞர் கலியப்பெருமாள் வழக்கில் கேரளாவை சேர்ந்த பாலன் என்பவருக்கு அந்த மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் காரணமாக மன்னிப்பு வழங்கபட்டது. இதை உதாரணமாக வைத்து குறித்த மூன்று பேரையும் காப்பாற்ற முடியும்.
தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று தமிழர்களின் அவலக்குரலையாவது ஆட்சியாளர்கள் செவிமடுப்பார்களா என்பதே இப்போது எழும் கேள்வி. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தால் ஆளுநரினால் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலமாக மூன்று தமிழ் இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்கிற குரலுக்கு பக்கத் துணையாக இருக்கும் காந்தி பிறந்த தேசம் மரண தண்டனைக்கே உயிர் வடிவம் கொடுத்தால் மாபெரும் தவறை இந்திய தேசம் செய்கிறது என்றே அர்த்தப்படும். வரலாற்றுத் தவறுகளை செய்யாமல் மானிடத் தர்மத்தின் பக்கம் இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் இவ்வுலகில் வாழும் பல கோடி மக்களின் நம்பிக்கையை இந்தியா பொய்ப்பிக்காது என்று நம்புவோமாக.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
nithiskumaaran@yahoo.com
அனலை நிதிஸ் ச. குமாரன்
நன்றி:செய்தி இனைய தளம்
ஈழத்தமிழர்களின் நலவாழ்வுக்கு பாடுபடும் அல்லது அவ்வாறு சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இம்மூவரின் தூக்குத்தண்டணைக்கு எதிராக எவ்வளவோ வேண்டுகோள்கள் விடப்பட்டும் சிறு தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லையே.100வது நாள் விழா கொண்டாடும் அவருக்கு இதற்கு நேரம் கிடைக்கவில்லையா.கருணாநிதி போல் தனிப்பட்ட முறையில் ஒரு அறிக்கை கூடவா வெளியிட முடியவில்லை.
சீமான்,பழ.நெடுமாறன் போன்ற ஜெயலலிதா ஆதரவாளர்கள் அவ்ரை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வைக்க முடியவில்லையா? ஏன்வாய் மூடி மடந்தைகளாக இருக்கின்றனர். தூக்குக்கான ஆணையும் சிறைக்கு அனுப்பப்பட்டு விட்டதே?
இவர்களின் [தினமலர் கூறுவது போல்]புலி வேசம் என்ன ஆயிற்று? ஜெயலலிதா ஆதரவு முன் கரைந்து நிர்வாண மாகி விட்டார்களா/எந்த சத்த்மும் இல்லையே இதே இடத்தில் கருணாநிதி இருந்த போது இந்த இருவர் வந்த வரத்து இப்போது என்ன ஆயிற்று? மூவரும் செய்யா குர்றத்திற்கு மரணத்தை அனுபவிக்கத்தான்  வேண்டுமா?
________________________________________________________________________________________________
நண்பர்களும் 40 திருடர்களும்,

கமல், பிரபு, கிரேஸி மோகன் இந்த மூவர் கூட்டணியில் உருவாகியது 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.'.பெயரைப்போன்றே வசூலிக்கவும் செய்தது.
 இம் மூவர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறது.
இப்படத்தை செய்யாறு ரவி இயக்க, சிவாஜி புரடெக்ஷன்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளது. படத்திற்கு 'நண்பர்களும் 40 திருடர்களும்' என பெயரிட்டு இருக்கிறார்கள்.     
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இப்படம் துவங்க இருக்கிறது. எப்போதுமே ஒரு படத்திற்கு இன்னொரு படத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி விடமாட்டார் கமல்.
'தசாவதாரம்' வெளியீட்டிற்கு நீண்ட நாட்கள் ஆனதால், அதற்குப் பிறகு சீக்கிரம் ஒரு படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்று படபடவென படப்பிடிப்பை நடத்தி வெளியிட்ட படம் 'உன்னைப்போல் ஒருவன்'.
தற்போது 'விஸ்வரூபம்' படம் நீண்ட நாட்களாக துவங்காமல் இருந்தது, இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆகையால் 'விஸ்வரூபம்' வெளியாகி மூன்று மாத கால இடைவெளியில் அடுத்த படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் கமல்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதைதான் 'நண்பர்களும் 40 திருடர்களும்'. 'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இப்படத்தின் மொத்த கதை மற்றும் திரைக்கதைக்காக பணியாற்றி வருகிறார்கள் படக்குழுவினர்.
               
                                                        

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஏட்டிக்குப் போட்டி - “தை” போச்சு,


260 ஜி.பி.சின்ன டிஸ்க்.
                               

சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும்.
"மெம்டோ பிரிண்டிங்" என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது.
மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதனால் இவ்வுபகரமானது பாரிய பங்களிப்புச் செய்யுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சந்தைப்படுத்துவதற்காக லிதுவேனிய நாட்டு நிறுவனமொன்றுடன் இச்சாதனத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
________________________________________________________________
தஸ்லிமாவின் புது சர்ச்சை<>
                                      
 வங்க நாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸீரின்சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நேபாளத்தில் நடக்கவுள்ள இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் தனது நேபாள பயணத்தை ரத்து செய்தார். சர்ச்சைக்குரிய வங்கதேச நாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸீரின் (49). இவரது சர்ச்சைக்குரிய எழுத்தினால் அவரதுசொந்த நாட்டிலிருந்து கடந்த 1994-ம் ஆண்டு வெளியேற்றப்படடார். தற்போது இந்தியாவில் வசிக்கிறார். இந்நிலையில் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் முதன்முறையாக நான்கு நாட்கள் இலக்கிய மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தனது டீவீட்டர் சமூக வளையத்தில் மைக்ரோ பிளாக் மூலம் உலக வரைப்பட பற்றிய விவரம் தெரியாமல், இந்தியாவின் ஒரு பகுதிதான் நேபாளம் என கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நேபாள நாட்டினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இலக்கிய மாநாட்டில் தஸ்லீமா கலந்துகொள்ள வந்தால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவோம், என ஆவேசத்துடன் கூறினர். இது குறித்து நேபாள் நாட்டு இலக்கிய மாநாட்டு அமைப்பாளர்கள் , தஸ்லீமாவை நேபாளம்வர வேண்டாம் எனவும், அது உங்களின்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என யோசனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தஸ்லீமா தனது நேபாள பயணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நேபாளம் செல்வதற்காக டில்லி சர்வதேச விமானநிலையம் வந்த போது, ”நான் எனது சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட்டை கொண்டு வர மறந்துவிட்டதால், நேபாளம் செல்லும் விமானத்தை தவறவிட்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333


மாவீரன் பிரபாகரன் வீட்டை இடித்து தள்ளினர்.


வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டை நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக இராணுவத்தினர் இடித்து அழித்து தரைமட்டமாக்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
                                              
இது தொடர்பாக தகவல் வழங்கிய எம்.கே.சிவாஜிலிங்கம்,
நேற்று இரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை வீட்டை தரைமட்டமாக்கி இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தனர்.
                              
பிரபாகரனின் வீடு ஏற்கனவே இராணுவத்தினரால் இடித்து உடைக்கப்பட்டிருந்தது. தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து வீடு உடைக்கப்பட்டது.
தற்போது வீட்டின் இடிபாடுகள் அத்திவாரத்துடன் கிண்டிக் கிளறி அகற்றப்பட்டுள்ளன.  அந்த இடத்தில் வீடு ஒன்று இருந்ததிற்கான அடையாளமே தெரியாது செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வடபகுதிக்கான காவல்துறை அதிகாரியிடம் 
முறையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
-----------------------------------------------------------------------------------------------------------------------.
 அடுத்த ஏட்டிக்கு போட்டி

 __________________________________
தை மாதத்து முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிமுகப்படுத்திய கடந்த திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து, சித்திரைத் திங்கள் முதல் நாளையே மீண்டும் புத்தாண்டாக அறிவித்து ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது.
அதற்கான மசோதாஅறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும்மசோதா நிறைவேற்றப்பட்டது.
விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
                                            
முதல்வர் ஜெயலலிதா
 
                           
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி,கொண்டுவந்த எல்லாவற்றையுமே ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு அகற்றிவருகிறார், 
தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.
1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
தமிழக்த்தில் மட்டும் தான் தமிழ்மாதங்கள் அனைத்தும் சமஸ்கிருத பெயர்கல்ளைத்தாங்கியுள்ளது.
அதிலிருந்தே தமிழ் மாதங்கள் யாருடைய வசதிக்காக அமைக்கப்பட்டிருந்தது என தெளிவாகிவிட்டது.
 தை அன்றுதான் வேளாண் மக்கள் புது வெள்ளாண்மை கொண்டுவந்து பொங்கலிட்டு ஆண்டை -புது வாழ்க்கையை துவக்கியுள்ளார்கள்.அதை யோட்டியே தமிழறிஞர்கள் மறைமலையடிகள் காலத்தில்  சரியான முறையில் தமிழ் புத்தாண்டு கொணர வேண்டுமென்று முடிவேடுத்து தையை தமிழ்ப்புத்தாண்டு ஆரம்பமாக்க கோரிக்கை விடுத்தார்கள்.
பல ஆண்டுகளுக்குப்பின் கருணாநிதி அதை நிறைவேற்றியுள்ளார்.
ஆனால்  தேவமொழிக்காரர்களின் வழித்தோன்றல்களுக்கு அது பிடிக்காமல் போய் விட்டது.
இப்போது தங்கள் பிரதிநிதி ஆட்சி வந்ததும் முதல் வேலையாக தை தமிழ்ப்பிறப்பை மாற்றிவிட்டார்கள்.
எவ்வளவோ பணிகள் -திட்டங்களை செய்ய வேண்டியிருக்கும் போது இதை ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது காழ்ப்புணர்ச்சி இல்லையா?
விவசாயிகள் நலத்திட்டத்தையே காலியாக்கி விட்டார்.
ஆனால் அதையும் இந்த எதிர்கட்சிகள் ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் ஜெ” பரணியே பாடிக்கொண்டிருக்கின்றன.

காப்பீடுத் திட்டத்தை எடுத்துவிட்டு புதிதாக செய்யப்போகிறேன்,வீடுகட்டும் திட்டம் புது பொலிவுடன் வரும், என கூறிக்கொண்டே ஒவ்வொரு நலத்திட்டங்களும் குப்பைக்கூடைக்கு போய் விட்டது.108 அவசர ஊர்தியும் முன் போல் இல்லாமல் படுக்கையில் கிடக்கிறது. ஆனால் அவரின் கூட்டணிக்கட்சியினர் இடது சாரிகள்,நடிகர்கள் கட்சிகளான தே.மு.தி.க,,ச.ம.க,
இன்னும் கருணாநிதியை வசை பாடி ஜெயலலிதாவிடம் காரியம் சாதிக்கும் மக்கள் பணியிலேயே மூழ்கியுள்ளனர்.
தங்கள் தலைவர்களையே துதிபாடா மார்க்சிஸ்டுகட்சியினர் ஜெயலலிதா புகழ் பாடுவதை பார்க்க ,கேட்க அரசியல் சாக்கடையில் நனையாதிருந்த அவர்களும் பத்தொடு பதினொன்றாகிவிட்டதை அறிய முடிகிறது.
                              

இன்னோரு மகாத்மா?


அன்னா போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்: சையது புகாரி உத்தரவு! 

டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.
நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மதத்தை காரணமாக்கி மனிதர்களைத்துண்டு போடுகிறார்.முசுலிம்களும் இந்திய நாட்டின் குடிமக்கள்தானே.அவர்களையும் ஊழல் மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் முடிவுகள் பாதிக்கத்தானே செய்யும்.
அன்னா இந்துத்துவாவாதியாக இருக்கலாம்.ஆனால் அவர் ஊழலை எதிர்த்து செயல்படும் போது இந்திய மக்கள்,ஊழலை எதிர்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைத்துள்ளார்.அவர் அதற்கு முயற்சித்து உதவியுள்ளார்.அவரை அதற்காக மாகாத்மா என்பதும் இன்னோரு காந்தி என்பதும் சரியல்ல.
அவர் மீது  ஊழல் எதிர்ப்பு தலைமையை மத்திய அரசுதான் தனது பிடிவாதம் மூலம் ஏற்றியுள்ளது.
அவர் ஊழல் எதிர்ப்பின் புள்ளியாக இருக்கிறார்.அவ்வளவுதான்.
இருக்கும் நாட்டின் மீதும்,மொழியின் மீதும் பற்றிள்ளாமல் வெறும் மதத்தின் மீது மட்டுமே பற்றை வைத்துக்கொண்டிருப்பது நடைமுறைக்கு நல்லதல்ல.முசுலிம்கள் தனித்தீவாக இருப்பது சரியல்ல.
ஆனால் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கிரிக்கெட் அணி வென்றால் கொண்டாடும் முறையும் சரியானதாக இல்லை.
மார்க்ஸ் கூறிய மதம் ஒரு அபின்[போதை] என்பது சையத் அகமது புகாரி போன்றோர் பேச்சுகள் மூலம் உறுதியாகிறது. லோக்பால் மசோதா குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தவிர வேறு யாருடனும் பேச மாட்டேன் என அன்னா ஹசாரே கூறியுள்ளார். லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் அறிவித்தார். யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது? என ஹசாரே குழுவினர் கேள்வி எழுப்பினர். ஆன்மீக குரு பையுஜி மஹராஜ், மகாராஷ்டிரா கூடுதல் தலைமை செயலாளர் சாரங்கி ஆகியோர் அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால், இதை வதந்தி என மறுத்தார் கிரண்பேடி. 

 இந்நிலையில் தனியார் டி.வி. சேனலுக்கு ஹசாரே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு சாரா நடுவர்கள் மூலம் லோக்பால் விஷயம் குறித்து பேச முடியாது. மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தாலும், அவர்களுடன் பேசமாட்டேன். பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன். இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.
கசாரே சில சமயங்களில் தன்னை ஊழலுக்கெதிராகப் போராடுபவர்களின் பிரதிநிதி என்பதில் இருந்து விலகி தான் மிகப் பெரியவர், அல்லது காந்தியின் மறு உரு என எண்ணி விடுகிறார்.
அரசு பிரதிநிதிகளுடன் பேசமாட்டேன் பிரதமர் தான் வர வேண்டும் என்பது சற்று அதிகப்படி..
பிரதிநிடிகளிடம் பேசி முடிவு கிடைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம்.பிரதமர் பதவிக்கென்று மக்கள் தர வேண்டிய மரியாதை உண்டு.அம்மரியாதை மன்மோகன்சிங்குக்கல்ல.பிரதமர் பதவிக்கு மட்டுமே.
அதைவிடுத்து தான் ரொம்ப பெரியவன் என மற்றவர் கள் உசுப்பேத்தலில் அவர் அளவுக்கதிகமாக நடப்பது சரியாகப்படவில்லை.
அரசு பிரதிநிதிகள் வருவதே பிரதமர் ஏற்பாடில்தானே.
மக்கள் இப்படிஊர்,ஊருக்குத்திரண்டுவருவது அன்னா கசாரே என்ற ‘மகான்”கூறிவிட்டதால் அல்ல.நாடு முழுக்க பரவியுள்ள மோசமான ஊழல் நோயை ஒவ்வோருவரும் எதிர்த்துதான் .அந்த ஊழல் எதிர்ப்பு மனப்பான்மைதான் அன்னாகசாரே என்ற குறியீடு மூலம் வெளிப்பட்டுள்ளது.அங்கு அன்னா இல்லையென்றாலும் வேறு தகுதியுள்ள ஒருவர் மூலம் அது சற்றுதாமதமாகவாது வெளிப்பட்டேத் தீரும்.
அன்னா காசாரே வை திடீர் மகாத்மாவாக்க ஒரு கூட்டம்[ஊடகங்கலிலும்]முயல்கிறது.அன்னா கசாரே அதற்கு தகுதியானவர்தானா?
குறிப்பிட்ட மதத்திற்கு அவர் துணைபோகக்கூடியவர்.
அவரின் பேச்சுக்களில் பா.ஜ.க.,வாடை வீசுகிறது.
நரேந்திர மோடியை மட்டுமே புகழ்ந்துவருகிறார்.
அறக்கட்டளை  யில் ஏற்பட்ட ஊழல் பாதிப்பால்தான் இன்று ஊழலுக்கு எதிராக முனைந்து நிற்கிறார்.
அவர் ந்மது விவாசாயிகள்-வேளாண்மை சீர்கேடுகளைப் பற்றி எந்த கருத்த்க்கலையும் கொண்டிருக்கவில்லை.அவர்களின் பிரச்னைகளுக்கும்,விலைவாசி உயர்வுக்கெதிராகவும்,பொருளாதார சீர்கேடுகளுக்கெதிராகவும் வாயை திறக்க வில்லை.
நாட்டில் உள்ள் அமற்றைய நிகழ்வுகளில் தனக்கு சம்பந்தமே இல்லை.ஊழலை மட்டுமே எதிர்கிறார்.அதுவும் தான் சொல்லும் முறைகளை மசோதாவில் செர்க்க வேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே உள்ளது. 
அவர் சொல்லும் வழிகளில் ஊழல் ஒழிந்து விடுமா? என்றால் இல்லை .அவர் நோக்கம் பிரதமரியும் மசோதாவரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்பது சரி.ஆனால் சில வரிகளை முழுவதுமாக செயல்படுத்த முடியாதது.
அது எல்லாம் இருக்கட்டும்.மசோதா அவர் கூறியபடியே நிறைவெறிய பின் அவர் என்ன செய்யப்போகிறார்? இதுதான் நம் முன்னே உள்ள கேள்வி?
மற்ற அவலங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவாரா?
மாட்டார்.அப்படியே நடத்தினாலும் இதே போன்ற கூட்டம் வீறு கொண்டு எழுமா?
ஊடகங்களுக்கு ஒரு வேண்டு கோள் அவசரப்பட்டு அன்னா கசாரேவை ”இன்னொரு மகாத்மா”வாக்க முயலவேண்டாம்.அவரின் மறு பக்கம் அதாவது மற்ற கருத்துக்கள் நமக்கு வெளியாகவில்லை.அவைகளும் வரட்டும் வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம்..
மகாத்மா காந்தி பிறந்த நாள்