ஏட்டிக்குப் போட்டி - “தை” போச்சு,


260 ஜி.பி.சின்ன டிஸ்க்.
                               

சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும்.
"மெம்டோ பிரிண்டிங்" என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது.
மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதனால் இவ்வுபகரமானது பாரிய பங்களிப்புச் செய்யுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சந்தைப்படுத்துவதற்காக லிதுவேனிய நாட்டு நிறுவனமொன்றுடன் இச்சாதனத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
________________________________________________________________
தஸ்லிமாவின் புது சர்ச்சை<>
                                      
 வங்க நாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸீரின்சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நேபாளத்தில் நடக்கவுள்ள இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் தனது நேபாள பயணத்தை ரத்து செய்தார். சர்ச்சைக்குரிய வங்கதேச நாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸீரின் (49). இவரது சர்ச்சைக்குரிய எழுத்தினால் அவரதுசொந்த நாட்டிலிருந்து கடந்த 1994-ம் ஆண்டு வெளியேற்றப்படடார். தற்போது இந்தியாவில் வசிக்கிறார். இந்நிலையில் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் முதன்முறையாக நான்கு நாட்கள் இலக்கிய மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தனது டீவீட்டர் சமூக வளையத்தில் மைக்ரோ பிளாக் மூலம் உலக வரைப்பட பற்றிய விவரம் தெரியாமல், இந்தியாவின் ஒரு பகுதிதான் நேபாளம் என கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நேபாள நாட்டினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இலக்கிய மாநாட்டில் தஸ்லீமா கலந்துகொள்ள வந்தால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவோம், என ஆவேசத்துடன் கூறினர். இது குறித்து நேபாள் நாட்டு இலக்கிய மாநாட்டு அமைப்பாளர்கள் , தஸ்லீமாவை நேபாளம்வர வேண்டாம் எனவும், அது உங்களின்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என யோசனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தஸ்லீமா தனது நேபாள பயணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நேபாளம் செல்வதற்காக டில்லி சர்வதேச விமானநிலையம் வந்த போது, ”நான் எனது சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட்டை கொண்டு வர மறந்துவிட்டதால், நேபாளம் செல்லும் விமானத்தை தவறவிட்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333


மாவீரன் பிரபாகரன் வீட்டை இடித்து தள்ளினர்.


வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டை நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக இராணுவத்தினர் இடித்து அழித்து தரைமட்டமாக்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
                                              
இது தொடர்பாக தகவல் வழங்கிய எம்.கே.சிவாஜிலிங்கம்,
நேற்று இரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை வீட்டை தரைமட்டமாக்கி இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தனர்.
                              
பிரபாகரனின் வீடு ஏற்கனவே இராணுவத்தினரால் இடித்து உடைக்கப்பட்டிருந்தது. தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து வீடு உடைக்கப்பட்டது.
தற்போது வீட்டின் இடிபாடுகள் அத்திவாரத்துடன் கிண்டிக் கிளறி அகற்றப்பட்டுள்ளன.  அந்த இடத்தில் வீடு ஒன்று இருந்ததிற்கான அடையாளமே தெரியாது செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வடபகுதிக்கான காவல்துறை அதிகாரியிடம் 
முறையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
-----------------------------------------------------------------------------------------------------------------------.
 அடுத்த ஏட்டிக்கு போட்டி

 __________________________________
தை மாதத்து முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிமுகப்படுத்திய கடந்த திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து, சித்திரைத் திங்கள் முதல் நாளையே மீண்டும் புத்தாண்டாக அறிவித்து ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது.
அதற்கான மசோதாஅறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும்மசோதா நிறைவேற்றப்பட்டது.
விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
                                            
முதல்வர் ஜெயலலிதா
 
                           
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி,கொண்டுவந்த எல்லாவற்றையுமே ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு அகற்றிவருகிறார், 
தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.
1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
தமிழக்த்தில் மட்டும் தான் தமிழ்மாதங்கள் அனைத்தும் சமஸ்கிருத பெயர்கல்ளைத்தாங்கியுள்ளது.
அதிலிருந்தே தமிழ் மாதங்கள் யாருடைய வசதிக்காக அமைக்கப்பட்டிருந்தது என தெளிவாகிவிட்டது.
 தை அன்றுதான் வேளாண் மக்கள் புது வெள்ளாண்மை கொண்டுவந்து பொங்கலிட்டு ஆண்டை -புது வாழ்க்கையை துவக்கியுள்ளார்கள்.அதை யோட்டியே தமிழறிஞர்கள் மறைமலையடிகள் காலத்தில்  சரியான முறையில் தமிழ் புத்தாண்டு கொணர வேண்டுமென்று முடிவேடுத்து தையை தமிழ்ப்புத்தாண்டு ஆரம்பமாக்க கோரிக்கை விடுத்தார்கள்.
பல ஆண்டுகளுக்குப்பின் கருணாநிதி அதை நிறைவேற்றியுள்ளார்.
ஆனால்  தேவமொழிக்காரர்களின் வழித்தோன்றல்களுக்கு அது பிடிக்காமல் போய் விட்டது.
இப்போது தங்கள் பிரதிநிதி ஆட்சி வந்ததும் முதல் வேலையாக தை தமிழ்ப்பிறப்பை மாற்றிவிட்டார்கள்.
எவ்வளவோ பணிகள் -திட்டங்களை செய்ய வேண்டியிருக்கும் போது இதை ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது காழ்ப்புணர்ச்சி இல்லையா?
விவசாயிகள் நலத்திட்டத்தையே காலியாக்கி விட்டார்.
ஆனால் அதையும் இந்த எதிர்கட்சிகள் ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் ஜெ” பரணியே பாடிக்கொண்டிருக்கின்றன.

காப்பீடுத் திட்டத்தை எடுத்துவிட்டு புதிதாக செய்யப்போகிறேன்,வீடுகட்டும் திட்டம் புது பொலிவுடன் வரும், என கூறிக்கொண்டே ஒவ்வொரு நலத்திட்டங்களும் குப்பைக்கூடைக்கு போய் விட்டது.108 அவசர ஊர்தியும் முன் போல் இல்லாமல் படுக்கையில் கிடக்கிறது. ஆனால் அவரின் கூட்டணிக்கட்சியினர் இடது சாரிகள்,நடிகர்கள் கட்சிகளான தே.மு.தி.க,,ச.ம.க,
இன்னும் கருணாநிதியை வசை பாடி ஜெயலலிதாவிடம் காரியம் சாதிக்கும் மக்கள் பணியிலேயே மூழ்கியுள்ளனர்.
தங்கள் தலைவர்களையே துதிபாடா மார்க்சிஸ்டுகட்சியினர் ஜெயலலிதா புகழ் பாடுவதை பார்க்க ,கேட்க அரசியல் சாக்கடையில் நனையாதிருந்த அவர்களும் பத்தொடு பதினொன்றாகிவிட்டதை அறிய முடிகிறது.
                              

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?