மேலும் உயிர்களை இழப்பதா?


மரண தண்டனைபெற்று தூக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கின்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை புரிந்துள்ளார். 27 வயதுடைய செங்கொடி என்ற இளம் பெண் தனது உடலில்  தீ வைத்துஎரிந்து தனது உயிரை இழந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் காஞ்சிபுரம்வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது. 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ இம்மூவரின் உயிரை காப்பாற்றுவ்தில் எந்தவிதமான பதிலௌம் கூறாமல் வாயை இறுக்க மூடிக்கொண்டிருக்கிறார்.
சீமானோ ஜெயலலிதாவிடம் வலியுறுத்திக் கூறாமல் வக்கற்று கருணாந்தி அவர் ஆட்சிக்காலத்தில் காப்பாற்றியிருக்கலாமே என வசை பாடி கொண்டிருக்கிறார்.
நடக்க வேண்டியதை செய்யாமல் கருணாநிதியை இப்போது கண்டித்து என்ன ஆகப்போகிறது.அவர்தான் ஈழப்படுகொலைக்கு துணை போய்விட்டார் என சீமான் கூறுகிறாரே.பின் ஏன் ? 
இப்போது அதிகாரத்தை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை வற்புறுத்தி குடியரசு தலைவருக்கும் ,மத்திய அரசுக்கும் கடிதங்கலை தமிழக அரசு சார்பிலோ-ஜெ தனிப்பட்ட முறையிலோ தூக்கை எதிர்த்து எழுதக்கூறலாமே.
  இன்னும் சில உயிர்கள் தீயில் வெந்து போகும் அளவு காத்துக்கொண்டிருக்க வேண்டுமா?
முதல்வரால் முடியும் என்கிற போது அவரை வற்புறுத்த வைகோ போல் சீமானும் ,பழ.நெடுமாறனும்,சத்தியராஜ்ம் முயற்சிக்க வேண்டும்.வைகோவை சந்திக்கவே மறுக்கும் ஜெயலலிதா அவரின் ஆதரவாளர்களான மூவரையும் நிச்சயம் சந்திப்பார். அதற்கு முயற்சித்து தூக்கை நிறுத்துங்கள்
தேவையற்ற வீர வசனங்களை பிறகு மேடையில் பேசிக் கொள்ளுங்கள்.
செங்கொடி போன்றவர்களுக்கு “உங்கள் தியாகம் தேவையற்ற வழிகளில் வீணடிக்கப் படக்கூடாது.
உங்களைப்போன்றவர்கள் தீக்குளிப்பதால் தூக்கை நிறுத்து அளவு இளகிய மனதுக்காரர்கள் அல்ல அவர்கள்.
கசாப்,அப்சல் போன்றோர் இருக்கையில் இம்மூவருக்கும் தூக்கு அதுவும் 22 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்தப் பிறகும் எனும் போது அவர்களின் உள்மனது தெரியவில்லையா?
மூன்று உயிரகள் போகக்கூடாது என வாதாடும் போது மேலும் நீங்கள் உயிர்களை இழப்பது என்பது முற்றிலும் தவறு. வேதனையை மேலும் தருவது.
இனி வேண்டாம் தீக்குளிப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?