மக்களை அவமதிக்கும் செயல்
100 சத திறந்தவெளி கழிப்பிடமில்லா நாகரிக நிலையை உருவாக்குவது மத்திய- மாநில அரசுகளின் இயல்பான கடமை யாக இருக்க வேண்டும். ஆனால் 2.10.2014 அன்று நரேந்திர மோடியின் வாழ்நாள் வீர சபதமாக அவராலேயே துவக்கி வைக்கப்பட்டது. அதன் சாதனை இலக்கு 2.10.2019 என அவரால் தான் அறிவிக்கப்பட்டது. அதன் வெற்றியாக 2.10.2019 அன்று சபர்மதி ஆசிரமத்தில் ‘ஸ்வட்ச் பாரத் ஆவாஸ்’ அதாவது தூய்மை இந்தியா தினத்தை அவரே துவக்கி வைத்தார். அதில் பேசும்போது 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு டாய் லெட்டுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக அவரே அறிவித்தார். இப்படி எல்லாவற்றையும் அறிவித்த அவரே, திறந்த வெளி கழிப்பிடங்களை ஒழிப்பதில் 100 சத வெற்றியை நம்மால் எட்ட முடியவில்லை; இன்னமும் நாம் செல்லவேண்டிய தூரம் உள்ளது என்று தாமாகவே அறிவித்திருந்தால் அது தான் பாபுஜியின் ஆசிரமத்தில் கேட்கப்பட்ட மோடியின் உண்மையான மான் கீ பாத்தாக அமைந்திருக்கும். காந்திஜியின் ஆன்மா அன்று மட்டும் உயிர்த்தெழுந்து மோடிஜியின் அன்றைய பெர்பாமன்சை பார்த்திருந்தால் திரும்பவும் மீண்டு வராத மோன நிலைக்கு நிரந்தரமாகவே சென்றிருக...