யார் சீர்குலைத்தது ?

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி கடந்த 80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது.

ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
 நேற்று (அக்.,28) இரவு 10.30 மணிவரை சுமார் 65 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளம் அதன் பிறகு நிறுத்தப்பட்டது.

 பாறையின் தன்மை குறித்து அறிவதற்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளேச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளத்திற்கு அடியில் இருந்து துர்நாற்றம் வந்ததுள்ளது.
இதனையடுத்து, ரிக் இயந்திரத்தைக் கொண்டு மேலும் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு 65 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் இடுக்கி போன்ற கருவிகளைக் கொண்டு துளையிட்டு சிறுவன் சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மீட்கப்பட்டது.

இதனையடுத்து, குழந்தை உயிரிழந்துவிட்டான் என்பதை வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன் பிறகு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுர்ஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
 பின்னர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறுவனின் உடலை சவப்பெட்டியில் வைத்து பெற்றோர் ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரியிடம் ஒப்படைத்தனர்.
சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தை வைக்கப்பட்டு மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுர்ஜித்தின் கல்லறையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தன்னுடைய குழந்தையை மீட்டெடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தவித்து வந்த தாய் கலாமேரிக்கும், தந்தை ஆரோக்கியராஜுக்கும் மட்டுமல்லாமல் ஒட்டொமொத்த தமிழகமே எதிர்ப்பார்த்து காத்திருந்தது.

இந்த நிலையில், குழந்தை சுர்ஜித்தின் உயிரிழந்துவிட்டான் என்ற செய்தி மணப்பாறையை மட்டுமின்றி தமிழகம் கடந்து அனைத்து தரப்பட்ட மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 5 நாட்களாக தொடர்ந்து போராடி வந்தபோதும் பலனளிக்காமல் சென்றுவிட்டதே என்ற அதிருப்தியும் பலர் தெரிவிக்கின்றனர்.
மேலும், சமூக வலைதளத்தில் #SaveSurjith என்ற ஹேஷ்டேக் மட்டுமல்லாமல் #SaveAllSurjith என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
 ஏனெனில், ஆழ்துளை கிணறுகளுக்கு பலியாகும் கடைசி குழந்தையாக சுர்ஜித்தே இருக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று எந்த வயதுடைய சுர்ஜித்துக்களும் சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
 மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை திங்களன்று சந்தித்தார்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாரா ஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 21 அன்று நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 145 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆளும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இந்த கூட்டணியில் 164 இடங்களில் போட்டி யிட்ட பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி  பெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது.
இந்த அணியில் 147 தொகுதிகளில் போட்டி யிட்ட காங்கிரசுக்கு 44 இடங்களும், 121 தொகுதிகளில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன.
பிற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைத் தன.
13 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி  பெற்று இருக்கிறார்கள்.
 புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள் என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், மகாராஷ்டிர பாஜக தலைவரும் தற்போதைய முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவ சேனா கட்சி திவாகர் மாநில ஆளுநரை தனித்தனியே சந்திக்கத் திட்டமிட்டனர்.
இந்நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை  சந்தித்தார்.
பின்னர் திவாகரும் சந்தித்தார்.

104 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும் கூட்டணிக் கட்சி யான சிவசேனையின் 56 எம்.எல்.ஏக்கள் ஆத ரவுடன் தான் ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலையில், சிவசேனைத் தலைவர் உத்தாவ் தாக்கரேயின் மகனான ஆதித்யா வை 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கை யின்படி இரண்டரை ஆண்டுகள் முதல மைச்சராக்க பாஜகவிடம் வலியுறுத்தி யதைத் தொடர்ந்து, கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ்தான் மீண்டும் முதலமைச்சர் என பிரதமர் மோடி அறி வித்துள்ளதால் ஆதித்யாவை 5 ஆண்டு களுக்கும் துணை முதலமைச்சராக்க தயார் என பாஜக தெரிவித்துள்ளது.
இதை ஏற்க சிவசேனை மறுத்து விட்டது.

பாஜகவின் ரிமோட் கண்ட்ரோல்  சிவசேனாவிடம் இருப்பதாக சிவசேனா வின் அதிகாரப்பூர்வமான நாளேடான சாம்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா  சிவசேனை தலைவர்களுடன் அக்டோபர் 30 அன்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் , முன்னால் 

1675 - நுண்கணிதத்தில் (கால்குலஸ்), தொகையீட்டிற்கான (இண்ட்டெக்ரல்) குறியீடாக, நீண்ட எஸ் எழுத்தை, முதன்முறையாக காட்ஃப்ரைட் லெய்ப்னிஸ் பயன்படுத்தினார்.
நியூட்டனுடன் சேர்த்து, நவீன நுண்கணிதத்தை உருவாக்கியவராகக் கொண்டாடப்படும் லெய்ப்னிஸ், ஜெர்மானிய பல்துறை விற்பன்னராவார்.

நியூட்டனுக்குத் தொடர்பின்றி, அவர் காலத்திலேயே, வகையீடு(டிஃபரன்ஷியேஷன்), தொகையீடு ஆகியவற்றின் தொடர்பினை விளக்கும், ‘நுண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தை’ இவரும் உருவாக்கினார்.
தொகையீட்டின் பயன்பாடுகளுள் ஒன்றான, பரப்பையும், கனத்தையும் கணக்கிடுதல், கி.மு.1820 காலத்தின், எகிப்திய கணிதவியல் தொகுப்பான மாஸ்கோ பாப்பிரசில் காணப்படுகிறது.
கி.மு.நான்காம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் யூடாக்சஸ், வெறுமைப்படுத்துதல் என்ற முறையை உருவாக்கியுள்ளார்.
இதை மேம்படுத்திய ஆர்க்கிமிடீஸ், தொகையீட்டு நுண்கணிதத்தையொத்த ஹ்யூரிஸ்ட்டிக்ஸ் என்ற முறையைக் கண்டுபிடித்தார்.

இதே காலகட்டத்தில் சீனாவிலும் இத்தகையொரு முறை உருவாக்கப்பட்டது.

பத்தாம் நூற்றாண்டில் அரேபிய கணிதவியலாளர் இபின் அல்-ஹேதமும், 14ஆம் நூற்றாண்டில் இந்தியக் கணிதவியலாளர்களும் இத்தகைய சில கணக்கீட்டு முறைகளை உருவாக்கினர்.
நியூட்டனின் பல கருத்துகளை, அவர் வெளியிடுவதற்கு முன்பே லெய்ப்னிஸ் முறையாகத் தொகுத்திருந்ததால், நியூட்டனின் கண்டுபிடிப்புகளை திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், பின்னாளில் லெய்ப்னிஸின் பங்களிப்பு உணரப்பட்டு, கண்டுபிடிப்பாளர்களாக இருவரும் ஏற்கப்பட்டனர்.
தொகையீட்டிற்கு லெய்ப்னிஸ் வழங்கிய நீண்ட எஸ் எழுத்து, வழக்கொழிந்த சிறிய எஸ் எழுத்தாகும். பண்டைய ரோமில் பயன்படுத்தப்பட்ட ரோமன் கர்சிவ்(அல்லது லத்தீன் கர்சிவ்) என்ற சேர்த்தெழுத்து முறையிலிருந்து இந்த நீண்ட எஸ் எழுத்து உருவானது.

சொற்களின் நடுப்பகுதியில் இரண்டு எஸ்  எழுத்துகள் வரும்போது முதல் எஸ் இவ்வாறு நீண்டதாக எழுதும் நடைமுறை இருந்துள்ளது. சொல்லின் இறுதி எழுத்தாக இந்த நீண்ட எஸ் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
 எஃப் எழுத்தின் வடிவத்தை ஒத்திருந்ததால், குழப்பங்களையும் ஏற்படுத்திய இந்த நீண்ட எஸ் பயன்பாடு, அச்சிடும் எந்திரத்தின் வருகைக்குப்பின் குறைந்தாலும், லத்தீன் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தும் மொழிகளில் பயன்படுத்தப்படும், இரண்டு எழுத்துகள் சேர்ந்த அச்சுகளில் காணப்பட்டது.

 ஜான் பெல் என்ற பதிப்பாளர், தற்போதைய சிறிய எழுத்து எஸ்-சை 1788இல் உருவாக்கியதால், நீண்ட எஸ்-சின் முடிவுக்குக் காரணமானவர் என்று குறிப்பிடப்படுகிறார்.

இரண்டுவகை எழுத்துகளை வைத்திருப்பது கூடுதல் செலவென்பதால், அச்சகங்களும் நீண்ட எஸ்-சைக் கைவிட்டாலும், கையெழுத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்த இது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முழுமையாக மறைந்தது.
                                                                                                                                     - அறிவுக்கடல்

வாலி
திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறையில் 1931 அக். 29ல் பிறந்தார் வாலி .
பின் அவரது குடும்பம், ஸ்ரீரங்கத்துக்கு குடிபெயர்ந்தது.
வாலி இயற்பெயர் ரங்கராஜன்.
சென்னை ஓவியக் கல்லுாரியில், ஓராண்டு படித்தார்.
ஓவியர் மாலி போல ஆக வேண்டும் என, தன் பெயரை, வாலியென மாற்றினார்.
எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர், கமல், விஜய், தனுஷ் என, ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் கருத்துகளை, 'நான் ஆணையிட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' உட்பட பல பாடல்கள் வாயிலாக, மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை, கவிஞர் வாலிக்கு உண்டு.
15 ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளார்; 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர்.
வடைமாலை என்ற படத்தை, மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதத்தை கவிதை வடிவில் படைத்தார்.
 சில படங்களிலும் நடித்துள்ள  வாலி 2013 ஜூலை 18ல் காலமானார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய  தலைமை நீதிபதி
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் சரத் அரவிந்த் பாப்டேவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாக்பூரில் பிறந்த பாப்டே, நவம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். இதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பாப்டேவின் பெயரை பரிந்துரைத்தார்.
பாப்டே 18 மாதங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.

ஆதார் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் பாப்டே பங்கு வகித்திருக்கிறார்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் .
அமெரிக்காவில், மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஹார்வர்ட்.
லீலேண்டு ஸ்டேன்போர்டு         ஜேன்

அதன் தலைவரை சந்திக்க ஒரு தம்பதியர் வந்தனர்.
 எளிமையான தோற்றம் கண்டு அனுமதிக்கவில்லை.
பெரும் போராட்டத்துக்கு பின் அனுமதி பெற்று, 'இங்கு படித்த எங்கள் மகன், நோயால் இறந்தான், அவனுக்கு, ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வந்தோம்...' என்றனர்.

'ஹார்வர்ட் வளாகத்தில், சிலை போன்ற நினைவு சின்னங்களை எழுப்பினால் கல்லறை தோட்டமாக அல்லவா மாறிவிடும்...' என, கிண்டலாக பதிலளித்தார் தலைவர்.

ஒரு கட்டடம், கட்டித் தர விரும்புவதாக கூறினர்.

மிகவும் அலட்சியமாக, 'சிறிய பிளாக் கட்டவே, பல நுாறு கோடி ரூபாய் செலவாகும்' என்றார்.
நைந்த உடையணிந்திருந்த அந்த பெண், 'இவ்வளவு தான் செலவாகுமென்றால், நாம் ஏன் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க கூடாது...' என, கணவரிடம் கூறினார்.
 இருவரும் வெளியேறினர்.
அது, பெரும் பணக்காரரான லீலேண்டு ஸ்டேன்போர்டும் அவரது மனைவி ஜேனும் தான்.
 உடனடியாக, அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில், மகன் நினைவாக, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தனர்.
-------------------------------------------------------------------------------------------- -------------------------------------

ISRO-ல் உள்ள காலிப்பணியிடங்கள்


Indian Space Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி


இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------
  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்


பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1)
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 யார் ஒற்றுமையை சீர்குலைத்தது ?

ஒற்றுமையே நாட்டின் வலிமை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க வாய்ப் பில்லை.
ஆனால் இதற்காக அவர் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் ஒற்று மையை வலிமைப்படுத்துவதற்கு பதிலாக மக்க ளிடம் வேற்றுமையை அதிகப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

‘மன் கி பாத்’ என்ற பெயரில் பிரதமர் மோடி மாதம் ஒரு முறை வானொலியில் பேசி வருகிறார்.
 இந்த மாத உரையில் தீபாவளியின் பெருமை களை எடுத்துரைத்த அவர், சர்ச்சைக்குரிய அயோத்தி பிரச்சனையில் ஒரு சார்பு நிலை யெடுத்து பேசியுள்ளார்.

“அயோத்தி பிரச்சனையில் 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன் மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும் வகை யிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் பேசி வந்தனர்.
 ஆனால் தீர்ப்பை பல்வேறு தரப்பி னர் அமைதியாக ஏற்றுக் கொண்டனர்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது உண்மைக்கு முற்றிலும் மாறானதாகும்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளாததால்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் பிரதமர் இவ்வாறு திரித்துக் கூறுவது தீர்ப்பு குறித்த முன்னோட்டமா அல்லது வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மிரட்டலா என்று ஐயம் கொள்ள வைக்கிறது.

“ராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் நீண்டகால மாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதி கட்டி டத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்த மானது.
தற்போது ராமர் சிலை வைக்கப் பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்பட வேண்டும்.
தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜென்மபூமி நியாஸ், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகோரா ஆகிய மூன்று தரப்புக்கும் தரப்பட வேண்டும் என்பது தான் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு.
இது ஏற்கத்தக்கதல்ல என்று அப்போதே எதிர்ப்புக் குரல் எழுந்தது. இந்த இடம் யாருக்குச் சொந்தமானது. என்பதுதான் வழக்கு.
ஆனால் தேவையில்லாமல் மதம் மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்தி ருக்கிறது என்று சட்ட நிபுணர்கள் விமர்சித்தனர்.

இப்போது அதை மோடி அந்த வழக்கை மேற்கோள் காட்டுவது ஏன்?
வழக்கு நீதிமன்றத் தில் இருக்கும்போதே சட்ட விரோதமாக மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக பரிவாரம்தான்.
 அது ஒற்றுமையை வளர்க்கும் செயலா?
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும், ஒற்று மையும் சீர்குலைக்கப்பட்டதை மறைக்க முடியுமா?
ஒற்றுமையை சீர்குலைத்துக் கொண்டே ஒற்றுமை குறித்து பேசுவது வெறும் வாய்ஜாலமே.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஈன(சங்கி)ப் பிறவிகள்! மனிதமற்ற கொடூரர்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?