பாடம் கற்றுக் கொள்வோம்

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுஜித் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தமிழகத்தை மட்டு மின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது.
கடந்த 25ஆம் தேதி வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்க 84 மணிநேரத் திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து அந்தக் குழந்தை யை உயிரற்ற நிலையில்தான் மீட்க முடிந்துள்ளது என்பது நமது அறிவியல் தொழில்நுட்பத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
அரசுத் தரப்பில் சுஜித்தை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது என்பது உண்மை.

மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட உயரதிகாரிகள் நடுக்காட்டுப் பட்டியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை ஒருங்கி ணைத்தனர் என்பது உண்மைதான்.
ஆனால் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டமுயற்சி களில் ஒருங்கிணைந்த தன்மை இருந்ததா, காலத்தே உரிய முடிவு எடுக்கப்பட்டதா, ஆழ் குழாய் கிணற்றில் விழுந்தவர்களை உடனடியாக மீட்பதற்கு முன்வந்தவர்களின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டதா என்பதெல்லாம் பல்வேறு கேள்வி களை எழுப்புவதாகவே உள்ளது.

ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உரிய தொழில்நுட்பம் உடனடியாக கண்ட றியப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந் துள்ளது.
இது உடனடி முன்னுரிமைப் பணியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு நிகழும் மரணம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும் ஆகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பா லான பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பியே விவ சாயம் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.
சில நூறு அடிகள் என்ற நிலையைத் தாண்டி சில  ஆயிரம் அடிகள் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் நாளுக்குநாள் அதிர்ச்சிய ளிக்கும் வகையில் குறைந்து வருகிறது.
 எப்படி யாவது விவசாயம் செய்து உயிர் பிழைக்க வேண்டும் என்று விவசாயிகள் பெரும் கடன் பெற்று ஆழ்குழாய் கிணறு அமைக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள் அபாயகர மான முறையில் மூடப்படாமல் இருக்கின்றன என்று வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சிய ளிக்கின்றன.
 இவையனைத்தையும் மூட வேண்டும் என்ற விழிப்புணர்வை சுஜித்தின் மரணம் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆழ்குழாய் கிணறுகளை ஒரேடி யாக மூடுவதற்கு பதிலாக மழைநீர் செறிவூட்டும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்று நிபு ணர்கள் முன்வைக்கும் ஆலோசனையும் புறந் தள்ளக்கூடியது அல்ல.
ஒரு விபத்து நிகழும் போது அதுகுறித்து பரப் பரப்பாக பேசுவதும் பின்னர் அப்படியே விட்டு விடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
 இனி யாவது ஆழ்குழாய் கிணறுகள் குழந்தைகளின் புதைகுழியாவதை தடுக்க அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட வேண்டும்.
இதுதான் சுஜித் நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கும் பாடம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

கைக்கெட்டியது ......

சமீபத்தில் நடந்து முடிந்த, இரண்டு மாநில சட்டசபை தேர்தல்களில், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாததால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெறுவதில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

ராஜ்யசபாவில், மொத்தமுள்ள, 245 இடங்களில், தே.ஜ.,கூட்டணிக்கு, 101 எம்.பி.,க்கள் உள்ளனர். எண்ணிக்கை குறைவுகாங்கிரசைவிட, எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகம் என்றாலும், நியமன எம்.பி.,க்கள் மற்றும் பிற கட்சி எம்.பி.,க்களின் ஆதரவோடு தான், பா.ஜ., முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து வரும் சட்டசபை தேர்தல்களிலும், அது தொடரும்; அந்த வெற்றிகள் மூலம், ராஜ்யசபாவில் கணிசமான அளவுக்கு பலம் பெறலாம் என, அக்கட்சி நம்பியது.

ஆனால், நிலைமை அதற்கு மாறாக உள்ளது. 
கடந்த, 2018ல், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டு, அங்கு எதிர்க்கட்சியாக உள்ளது. 
இதனால், இம்மாநிலங்களில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை குறைந்தது. 

 
இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., அடிவாங்கி உள்ளது
பா.ஜ., அபார வெற்றியைப் பெறும் என, அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறிய நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய அளவுக்கு, பா.ஜ.,வின் வெற்றி சுருங்கிவிட்டது. 
இதனால், இம்மாநிலங்களிலும், எதிர்பார்த்த எண்ணிக்கையிலான, எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்காமல் போய் விட்டனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள், ஹரியானாவில், இரண்டு ராஜ்யசபா, எம்.பி., இடங்களும், மஹாராஷ்டிராவில், ஏழு இடங்களும் காலியாகி, தேர்தல் நடைபெறஉள்ளது. 
இதில், ஹரியானாவில் தற்போதைய தேர்தல் முடிவுகளில் கிடைத்த, எம்.எல்.ஏ.,க்களை வைத்து, ஒரே ஒரு எம்.பி.,யை மட்டுமே, பா.ஜ.,வால் பெற முடியும்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ., -மற்றும் சிவசேனா கூட்டணியால், நான்கு, எம்.பி.,க்களைத்தான்   பெற முடியும்.
இது, ராஜ்யசபாவில் பலத்தை கூட்டும், பா.ஜ.,வின் முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே, ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
 'முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்குவது குறித்து, சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கு பதிலடியாக, ஆட்சியில் சிவசேனாவுக்கு சம பங்கு தருவதாக, முதல்வர் பட்னவிஸ் பேசிய பழைய, 'வீடியோ'வை, சமூக வலைதளத்தில், சிவசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இங்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களை, இந்த கூட்டணி பெற்றாலும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில், 2.5 ஆண்டுகளுக்கு இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது, அமைச்சரவையில், 50:50 சதவீத ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளால், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 
இதனால், ஆட்சி அமைப்பதில் தாமதம் நிலவுகிறது.

முதல்வர் பதவியை, இரு கட்சிகளும் சுழற்சி முறையில், 2.5 ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வதாக, தேர்தலுக்கு முன், பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்ததாகவும், தற்போது மறுப்பதாகவும், சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 இதை, பா.ஜ., தலைவர்கள் மறுத்துள்ளனர்.
 இந்நிலையில், முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ், இந்த விவகாரத்தில், முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

முதல்வர் பதவியை சிவேசனாவுடன் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதாக, தேர்தலுக்கு முன், பா.ஜ., தரப்பில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.
 பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவிடம் இது குறித்து பேசினேன். அவரும், இது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என உறுதியாக தெரிவித்து உள்ளார். 
அமைச்சரவையில், 50:50 சதவீத ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல், விரைவில் தெரிய வரும். சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமா என்பது குறித்து, இப்போது எதுவும் கூற முடியாது. சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்கப்படும். 
மஹாராஷ்டிராவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பா.ஜ., நிலையான ஆட்சியை அளிக்கும். 
கூட்டணி கட்சி என்ற முறையில், சிவசேனாவுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படும். இந்த விஷயத்தில் மாற்றுத் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது, கூட்டணி கட்சிகளுக்கு இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும். 
மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வர்; அதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். 
தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு, விரைவில் சுமுக தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பட்னவிசின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, அவர் பேசிய பழைய பேச்சு அடங்கிய வீடியோவை, சிவசேனா கட்சியினர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். 
அதில், 'மஹாராஷ்டிராவில், மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வோம்' என,பட்னவிஸ் பேசுவது போல் உள்ளது.

இது குறித்து, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் கூறியதாவது: நாங்கள் அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்பதில், சில சக்திகள் குறியாக உள்ளன. இந்த விஷயத்தில் முக்கிய முடிவு, விரைவில் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன், இரு தரப்புக்கும் இடையே என்ன விஷயங்கள் பேசப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டதோ, அந்த விஷயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான், எங்கள் ஒரே கோரிக்கை. 
ஹரியானாவில் துஷ்யந்த் சவுதாலா இருப்பது போல், இங்கு யாரும் இல்லை. 
துஷ்யந்தின் தந்தை சிறையில் உள்ளார்.எங்கள் கட்சியைச் சேர்ந்த யாருடைய தந்தையும் சிறையில் இல்லை. 
எனவே, ஹரியானா அரசியல் போல், இங்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. 
சத்தியம், தர்மத்தின் அடிப்படையில் நாங்கள் அரசியல் நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், மாநிலத்தில் அடுத்த அரசு அமைப்பது குறித்து ஆலோசிக்க, பா.ஜ.,வுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ரத்து செய்து விட்டார்.
 'உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்கியே தீருவது என, அந்த கட்சியினர் உறுதியாக உள்ளனர்; இதில், பா.ஜ., தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை.
 'எனவே, மஹாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டு உள்ள இந்த இழுபறி, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ., மூத்த தலைவருமான சஞ்சய் கட்கே கூறியதாவது:சிவசேனா சார்பில், 56 பேர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 
இவர்களில், 45 பேர், பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகின்றனர்.
 ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பதை அவர்கள் விரும்பவில்லை. 
இந்த, 45 எம்.எல்.ஏ.,க்களும், எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
 புதிய அரசில், தங்களை இணைக்கும்படி, எங்களுடன் பேசி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ந்நாளில் ,
 முன்னால்
உலக சிக்கன தினம்

இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
 செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
 இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ISRO-ல் உள்ள காலிப்பணியிடங்கள்

Indian Space Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி

இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------
  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 பயர்பாக்ஸ் உலாவியில் 

புதிய வசதிகள்

முன்னணி இணைய உலாவியான ஃபயர்பாக்ஸ் (Firefox Browser) 70ஆவது பதிப்பை வெளியிட்டுள்ளது. எப்போதும் பயனருக்கு வெளிப்படையான சிறந்த அம்சங்களை வழங்கும் ஃபயர்பாக்ஸ் இப்போதும் அப்படியான புதிய வசதிகளை வழங்கியிருக்கிறது.
புதிய மாற்றங்களுக்கேற்ப லோகோவையும் சற்றே வடிவம் மற்றும் வண்ணம் மாற்றி வெளியிட்டிருக்கிறது.

இணையப் பாதுகாப்பு அறிக்கை
இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில், நாம் திறக்கும் இணையதளங்கள், அதில் காட்டப்படும் விளம்பரங்கள், லிங்க்குகள் உள்ளிட்டவற்றில் நம்மைக் கண்காணிக்கும் மற்றும் பின்தொடரும் அம்சங்கள் இருந்தால் அவற்றை தடைசெய்து பாதுகாப்பான இணைய உலாவலை உறுதி செய்திருக்கிறது.
இதுகுறித்த விபரங்களை ரிப்போர்ட் வடிவில் காட்டும் வசதியையும் வழங்கியிருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் மூலமாக நம்மைக் கண்காணிப்பவர்களிடமிருந்து பாதுகாப்பு, மூன்றாம் நபர் விளம்பரதாரர்கள் மற்றும் தகவல் திரட்டுபவர்களிடமிருந்து பாதுகாப்பு, இணைய தள விளம்பரங்கள்,

வீடியோக்கள், பின்தொடரும் நிரல்கள் கொண்ட தளங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, இணைய உலாவி மூலம் உங்கள் கைரேகைகளை டிஜிட்டல்பிரதியாக சேமிக்கும் இணையதளங்களிலிருந்து பாதுகாப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க உருவாக்கப்படும் கிரிப்டோமைனிங் நிரல்கள் ஆகியவற்றைத் தடை செய்யும் பாதுகாப்பு என ஐந்து பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது,
 இது தொடர்பான ரிப்போர்ட்களை பார்க்க உலாவியின் மெனுபாரில் பிரைவஸி புரடெக்சன்ஸ் என்பதைக் கிளிக் செய்து விரிவான விபரங்களைஅறிந்து கொள்ளலாம்.

பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் லாக்வைஸ்
நம்முடைய மின்னஞ்சல் தகவல்கள் இணையத்தில் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அறியும் டேட்டா பிரீச்சஸ் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மற்றொரு வசதியாக லாக்வைஸ் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 நாம் அன்றாடம் இணையதளங்களில் பயன்படுத்தும் யூசர்நேம், பாஸ்வேர்ட்களை பதிவு செய்து வைத்துப் பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் இந்த வசதி விண்டோஸ் கணினி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 கணினி, ஸ்மார்ட்போன், ஐபேட் என எந்த சாதனத்திலும் ஃபயர்பாக்ஸ் லாகின் செய்து நுழையும்போது உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை எளிதாக உள்ளிட இந்த வசதி பயன்படுகிறது.

டாஸ்க் மேனேஜர்
கணினிகளில் மென்பொருள்களின் தற்போதைய செயல்பாட்டை அறிய பயன்படுத்தும் டாஸ்க்மேனேஜர் வசதியைப் போலவே ஃபயர்பாக்ஸ் பிரௌசரில் திறந்துள்ள இணையதளங்கள், ஒவ்வொரு தளமும் பயன்படுத்திய டேட்டா அளவு என்பது போன்ற விபரங்கள் காட்டுகிறது.
 டெஸ்க்டாப் கணினியில் இந்த விபரங்களை ஃபயர்பாக்ஸ் உலாவி மெனுவில் மோர் (More) என்ற பிரிவிலிருந்து பெறலாம்.

சரிசெய்யப்பட்ட ஸீரோ-டே குறைபாடு
பயர்பாக்ஸ் உலாவியில் ஸீரோ-டே (Zero-day) என்னும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்த மோசில்லா நிறுவனம், ஃபயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஃபயர்பாக்ஸ் இஎஸ்ஆர் (Firefox ESR) ஆகியவற்றை பயன்படுத்தும் பயனர்களை அப்டேட் செய்யும்படி எச்சரித்திருந்தது.
இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி வேறு ஒருவர் ஃபயர்ஃபாக்ஸ் பயனரின் கணினியில் உள்ள நிரலை (Code) எளிதில் மாற்ற முடியும் என கண்டறியப்பட்டது.
 ஃபயர்பாக்ஸ் 67ல் இக்குறை சரிசெய்யப்பட்ட பிறகு அடுத்தடுத்த பதிப்புகள் விரைவாக மேம்படுத்தப்பட்டன. தற்போது வெளியிடப்பட்டுள்ளது 70வது பதிப்பாகும்.
 மேற்கண்ட வசதிகளைப் பெறவும், பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஃபயர்பாக்ஸ் உலாவியின் 70வது பதிப்பை அப்டேட் செய்துகொள்ளவும்.
                                                                                                                         என்.ராஜேந்திரன்
-------------------------- --------------------------
 
Abiraminathan GS

#நித்தி யோட #சித்தி யா இருக்குமோ.!? 🙄

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?