வியாழன், 31 அக்டோபர், 2019

மக்களை அவமதிக்கும் செயல்

100 சத திறந்தவெளி கழிப்பிடமில்லா  நாகரிக நிலையை உருவாக்குவது மத்திய- மாநில அரசுகளின் இயல்பான கடமை யாக இருக்க வேண்டும். ஆனால் 2.10.2014 அன்று    நரேந்திர மோடியின் வாழ்நாள் வீர சபதமாக அவராலேயே துவக்கி வைக்கப்பட்டது.
 அதன் சாதனை இலக்கு 2.10.2019 என அவரால் தான் அறிவிக்கப்பட்டது. அதன் வெற்றியாக 2.10.2019 அன்று சபர்மதி ஆசிரமத்தில் ‘ஸ்வட்ச் பாரத் ஆவாஸ்’ அதாவது தூய்மை இந்தியா தினத்தை அவரே துவக்கி வைத்தார். அதில் பேசும்போது 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு டாய் லெட்டுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக அவரே அறிவித்தார்.
இப்படி எல்லாவற்றையும் அறிவித்த அவரே, திறந்த வெளி கழிப்பிடங்களை ஒழிப்பதில் 100 சத வெற்றியை நம்மால் எட்ட முடியவில்லை; இன்னமும் நாம் செல்லவேண்டிய தூரம் உள்ளது என்று தாமாகவே அறிவித்திருந்தால் அது தான் பாபுஜியின் ஆசிரமத்தில் கேட்கப்பட்ட மோடியின் உண்மையான மான் கீ பாத்தாக அமைந்திருக்கும்.
காந்திஜியின் ஆன்மா அன்று மட்டும் உயிர்த்தெழுந்து  மோடிஜியின் அன்றைய பெர்பாமன்சை பார்த்திருந்தால்  திரும்பவும் மீண்டு வராத மோன நிலைக்கு நிரந்தரமாகவே சென்றிருக்கும்.


முகப்பு வெளிச்சத்தில்...
2.10.2019 அன்று காலையில் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்ட இணைய தளத்தை திறந்து பார்த்த போது 35 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி கழிப்பி டமில்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்திய எதார்த்தம் இதற்கு நேர்மாறாக இருந்தது.  தமிழ்நாட்டின் நாமக்கல் லாரி மார்க்கெட்டிலிருந்து உயர் கனரக ஓட்டுநர்கள் வட இந்திய மாநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் சராசரியாக 25 டன் சரக்குகளை ஏற்றிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகா மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ம.பி. உ.பி. பீகார், ஹரியானா உள்ளிட்ட எல்லா மாநிலங்களின் புறநகர்கள், அதையொட்டிய கிரா மங்களில் தங்கள் லாரிகளின் நீண்ட முகப்பு வெளிச்சத்தில் திறந்தவெளியில் மக்கள் காலைக் கடனுக்காக உட்கார்ந்திருப்பதை இப்போதும் காண்பதாக கூறுகிறார்கள்.
2019 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமம் என்ற பலகைகள் எல்லா இந்திய கிராமங்களிலும் அசுர வேகத்தில் நடப்பட்டன. இதில் சோகம் என்னவென்றால் அந்த அறிவிப்பு பலகை அருகா மையிலேயே திறந்தவெளி கழிப்பிடங்கள் இருந்தன.
 நாடாளுமன்றத்திலேயே தவறான அறிக்கைகள் வைக்கப்பட்டன.

வட இந்தியாவும், தென்னிந்தியாவும்
ஹரியானா, குஜராத், சண்டிகர், கேரளா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் உள்பட பதினோரு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் திறந்த வெளி கழிப்பிடங்களை முற்றாக ஒழித்து விட்டதாக மத்திய இணை அமைச்சர் ஜிகாஜிநாகி 8.2.2018 அன்றே நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்திய கிராமங்களின் சமூக வாழ்வியலை தொடர்ந்து எழுதும் வில்லேஜ் ஸ்கெயார் இணையதள சஞ்சிகை, மறுநாளே அதாவது 9.2.2018 அன்று வெளியிட்ட தனது கட்டுரையில் திறந்தவெளி கழிப்பிடமில்லாத கிராமம் என அறிவிக்கப்பட்ட தெற்கு குஜராத் வல்சாத் மாவட்டம்  மேக்வாட் கிராமத்தின் 2160 வீடுகளில் ஒரு வீட்டில் கூட கழிப்பறையில்லை என்பதை அம்பலப்படுத்தியது.
“எவ்வளவோ முறையிட்டும் குஜராத் அரசு கழிப்பறை கள் கட்டிக் கொடுக்கவில்லை.
நாங்கள் அருகில் இருக்கும் தாதர்- நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்திற்கு குடிபெயர விருக்கிறோம் என்று அக்கிராமத்தின் தலைவர் லகானுபாய் கூறியதாகவும் அக்கட்டுரை மேலும் கூறியது.
இது ஒரு வடஇந்திய உதாரணமாகும்.
தெற்கே தமிழ்நாட்டில் மன்னார்குடி 152 ஆண்டுகளைக் கடந்த  நகராட்சியாகும். இந்த புராதன நகரம் 11.3..2019 அன்று திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகரம் என மோடி அரசால்  அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ்.ஆறுமுகம், நகரத்தில் திறந்தவெளி கழிப்பறைகள் பல பகுதிகளில் உள்ளதைப் பற்றி விவரித்து 10.10.2019 அன்று   மாவட்ட ஆட்சியாளரிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார்.
 இந்த செய்தியை பிரசுரித்த தி இந்து ஆங்கில நாளிதழ் (15.10.2019), மன்னார்குடியில் திறந்தவெளி கழிப்பி டங்கள் இருப்பதையும் ஏராளமான பொது கழிப்பிடங்கள் ஒருங்கிணைந்த சுகாதார மையங்கள் பராமரிப்பின்றி, மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் கிடப்பதையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மன்னார்குடி நகரில் குவிந்திருப்ப தையும் அவரது பகிரங்க அறிக்கையை குறிப்பிட்டுக் காட்டி பிரசுரித்திருந்தது.
இது ஒரு தென்னிந்திய உதாரணமாகும்.

இதிலும் சாதிய மதம்

குறிப்பாக 2015 பிற்பகுதியிலிருந்து சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் நேரடி பங்கேற்புடன் வெகுஜன இயக்கமாக  தூய்மை இந்தியா திட்டம் மாற்றப்படா ததால் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற சமூக மனமாற்றம் உருவாகவில்லை.
எனவே தான் தூய்மை இந்தியாவின் உறுதிமொழி தோல்வியடைந்தது.
வட மாநிலங்களில் பாஜக செல்வாக்குள்ள இடங்களில் உயர் சாதிப் பிரிவினரின் ஆதிக்கமே தூய்மை இந்தியா திட்டத்தில் மேலோங்கியிருந்தது. தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும் உயர்சாதி பிரிவினருக்கும் இடையே உள்ள உறவு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மேலும் மோசமடைந்தது என்பதற்கு ஏராளமான தகவல்கள் உள்ளன.
இதன் உச்ச கட்டம் தான், மத்தியப் பிரதேச சிவகுரி மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரோஷினியும் அவினாஷ் என்ற சிறுவனும் திறந்த வெளியில் மலம் கழித்தார்கள் என்பதற்காக 25.9.2019 அன்று ஆதிக்க வெறியர்களால்அடித்தே கொல்லப்பட்ட கொடூர சம்பவமாகும்.
 பில்கேட்ஸ் அறக்கட்டளையின் உலக சாதனையாளர் விருது, கடுமையான சர்வதேச எதிர்ப்புகளுக்கு இடையே நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
மறுநாளே இந்தியாவில் நடைபெற்ற இந்தப் படுகொலை உலக அரங்கில் நாட்டிற்கு நேர்ந்த அவமானகரமான சம்பவமாக மாறியது.
கொல்லப்பட்ட அவினாஷின் தந்தை மனோஜ் வால்மீகி, ‘‘இதற்கு முன்பு சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டோர் எங்கள் குழந்தைகள் அவர்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது’’ என்று கூறியதாக ராய்ட்டர் நிறுவனம் எழுதியது. (ராய்ட்டர் 26.9.2019).

பொது கழிப்பறையை பயன்படுத்து வதற்கு எங்களை உயர்சாதியினர் அனுமதிப்பதில்லை என  ஹரியானாவின் பல்வால் மாவட்டம் அம்ரோலி கிராமத்தின் தலித்  ஒருவர் கூறியதாக எழுதிய டவுன்டுஎர்த் என்ற சுற்றுச்சூழல் அறிவியல் சஞ்சிகை சாதிப்பிரிவினையால்  தூய்மை இந்தியா இயக்கம் தடம்புரள்வதாக தெரிகிறது என்றும் எழுதியது.
கழிப்பறை இல்லாத மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் போது அவர்கள், சாதி ஆதிக்க வெறியர்க ளால் பொதுவிடத்தில் கேமராக்கள் முன்பு சிறுமைப் படுத்தப்பட்டனர்.
தோப்புக்கரணங்கள் போட வைக்கப்பட்ட னர். தடிகளால் அடித்து துரத்தப்பட்டனர்.  திறந்தவெளியி லிருந்து ஒரு நடுத்தர வயது பெண் தரதரவென்று பலாத்காரமாக இழுத்து வரப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது.
அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மாலைமற்றொரு புயல் மகா புயல்உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஒரு முதியவர் தாக்கப்பட்டு அவர் கழித்த மலத்தை அவர் கையால் அள்ளச் செய்த கொடுமை உஜ்ஜயினியில் நடைபெற்றது.
ராஜஸ்தான் பிரதாப்கார் நகரத்தின் ஆணையர் அசோக் ஜெயின் முன்னிலையில், திறந்தவெளியில் உட்கார்ந்திருந்த மூன்று பெண்கள் புகைப்படம் எடுக்கப்பட்டனர். இதை எதிர்த்த சமூக ஆர்வலர் ஜாபர் உசேன் தாக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார்.

 சத்தீஸ்கர் மாநிலத்தில்  நிக்ராணி சமிதி என்னும் கண்காணிப்புக்குழு, ஏழை, எளிய மக்களை இழிவுபடுத்துவதிலும் துன்புறுத்துவதிலும் ஈடுபட்டது.  தரமான ஒரு கழிப்பறை கட்டுவதற்கு சராசரி இந்தியா பணமதிப்பில் குறைந்தது ரூ.40 ஆயிரம் ஆகும்.
ஆனால்  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு வெறும் ரூ.12 ஆயிரத்தை கொடுத்து விட்டு கழிப்பறை கட்டியே தீர வேண்டும் என மிரட்டப்பட்டனர். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்தைவிட காட்டு மிராண்டித்தனமான மனித உரிமை மீறல்கள் பரவலாக உ.பி. ம.பி. ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெற்றன.
 இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாலும் தலித்துகளாக, சிறுபான்மையினராக இருந்தனர்.

கற்பனையான வெற்றி
2015 லிருந்து 2019 வரை ம.பி., உ.பி, ராஜஸ்தான், ஹரியானா, பீகார், குஜராத், கர்நாடகா உள்பட வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு தூய்மை இந்தியாவின் கற்பனையான வெற்றி சங் பரிவாரத்திற்கு தேவைப்பட்டது.
அதற்காகவே மோடியின் இந்திய சாதனை போலவும் அது பிரச்சாரம் செய்யப்பட்டது.
 2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கார்ப்பரேட் நிறுவ னங்களின்  துணையோடு தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றிய புள்ளி விபர புளுகு மூட்டைகள் தாராளமாக அவிழ்த்து விடப்பட்டன.
இந்திய-சர்வதேச அரசியல் வானில் மோடியின் பிம்பத்தை  உயர்த்திக் காட்டுவதற்கும் தூய்மை இந்தியா துடைப்பங்கள் அதிக உயரத்தில் தூக்கிப் பிடிக்கப்பட்டன.
மோடியால் அழைக்கப்படும் தூய்மை இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய நிறைய கேள்விகள் நம்மிடம் உள்ளன.
 கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து ஐந்து ஆண்டு களுக்காவது பயன்படுத்தப்படும் தரத்தில் உள்ளதா?

கழிப்ப றைகளுக்கு  தேவையான தண்ணீர் உள்பட இந்திய குடும்பங்க ளின் சராசரி  தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டதா?
அல்லது அதற்கான புதிய  திட்டங்கள் ஏதும் உள்ளதா?

 கிராமப் புற ஏழைகளின் கழிவறை மண்டிகளை சுத்தப்படுத்தவும் பழுது பார்க்கவும் விடுபட்டுப் போன இந்திய ஏழை குடும்பங்க ளுக்கு தரமான கழிப்பறைகள் கிடைக்கக் செய்வதற்கும் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட கிராம சுகாதாரத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

திறந்தவெளி கழிப்பிடமில்லா உன்னத நிலையை அடைவதற்கு  தேவையான சமூக அமைதியும் நல்லி ணக்கமும் பாதுகாக்கப்படுமா?
இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காத வரை தூய்மை இந்தியாவின் எதிர்காலமும் கேள்விக்குறி தான்.


 நன்றி;தீக்கதிர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 ------------------------------------------------------------------------------------------------------------------------------

 ந்நாளில் ,

 முன்னால்


அக்டோபர் 31, 1984

முன்னாள் பிரதமர் இந்திரா
 உ.பி., மாநிலம், அலகாபாதில், ஜவஹர்லால் நேரு - கமலா தம்பதிக்கு, 1917, நவ., 19ல் பிறந்தார்.
நேரு மறைவிற்கு பின், நாட்டின் மூன்றாவது பிரதமராக, 1966ல் பதவியேற்றார்.

 1969 ஜூலையில், வங்கிகளை தேசியமயமாக்கினார்.

1971ல், கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டது.
அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா, இந்திய படைகள் உதவியுடன், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து, வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்தார்.

1984 ஜூனில், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள், பயங்கரவாதிகள் முகாமிட்டனர். கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார், அப்போதைய பிரதமர் இந்திரா.

ராணுவ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், பயங்கரவாதிகள் வீழ்ந்தனர்.டில்லியில் உள்ள தன் வீட்டில், மெய்க் காப்பாளர் சீக்கீயர்களால், 1984, அக்., 31ல், இந்திரா சுட்டு கொல்லப்பட்டார்.
அவர் மறைந்த தினம் இன்று.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

 ‘95 குறிப்புகள்’
1517  கிறித்தவ மறுசீரமைப் பின் தொடக்கமாகக் குறிப் பிடப்படும் ‘95 குறிப்புகள்’ என்பதை மார்ட்டின் லூதர் வெளியிட்டார்.
 ப்ராட்ட ஸ்ட்டண்ட் கருத்தாக்கத்தின் தந்தையாகக் குறிப்பிடப்  படும் லூதர் ஒரு ஜெர்மானிய பல்கலைக்கழகப் பேராசிரி யரும், இறையிலாளரும் ஆவார்.
இறப்புக்குப்பின் சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைவதற்குமுன் ஒரு தூய்மைப் படுத்துமிடம் இருப்பதாகவும், இந்த இடத்தில் பாவங்களுக்கு வேதனைப்பட்டு தூய்மையடைந்து, பின்னர் விண்ணகம் செல்வார்கள் என்றும் கத்தோலிக்க கிறித்தவம் நம்புகிறது.
இவர்களுக்காகப் புவியிலிருந்து பிரார்த்திக்க முடியும் என்றும் குறிப்பிடும் கத்தோலிக்கம், திருச்சபையின் பலன்கள் எனப்படும் பாவத்தண்டனைக் குறைப்பினைப் பெற்று இவர்கள் தூய்மையடைய உதவ முடியும் என்றும் குறிப்பிடுகிறது.

 இயேசு மற்றும் தூயவர்களின் நற்பேறுகளின் பலன்கள் ஒரு கருவூலமாக இருப்பதாகவும், இது தீர்ந்தே போகாமல், மனித குலம் மொத்தத்தையும் பாவங்களிலிருந்து விடுவிக்கக்கூடியது என்றும் கூறும் கத்தோலிக்கத்தில், கட்டணம் பெற்றுக் கொண்டு இந்தப் பலன்கள் சான்றிதழாக அளிக்கப் பட்டன.

இவை பகுதிப் பலன்களாகவோ, நிறைவுப் பலன்களாகவோ அளிக்கப்பட்டன. 1515இல் புனித பீட்டர் பசிலிக்கா கட்டுமானப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, அதுவரை மன்னிக்கப்படாத பாவங்களாக இருந்த கூடா ஒழுக்கம் உட்பட அனைத்துப் பாவங்களையும் தீர்க்க  நிறைவுப் பலன்கள் அளிப்பதாக, திருத்தந்தை பத்தாம்  லியோ (சிறப்பு விற்பனை!) அறிவித்தார்.

பசிலிக்கா என்பது, பண்டைய ரோமில், நிர்வாக அவைகள், நீதிமன்றங்கள் கூடும் கட்டிடத்தின் பெயர்.
 எல்லா ரோமானிய நகரங்களிலு மிருந்த இந்தக் கட்டிடங்களின் வடிவத்திலேயே, ரோம்  கிறித்தவத்தைத் தழுவியபின் தேவாலயங்கள் எழுப்பப்பட்ட தால், இந்த வடிவிலான தேவாலயங்கள் பசிலிக்கா என்றழைக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு விற்பனையில்(!) பலன்களை வாங்கியவர்கள், தங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுமென்றும், அதனால் அவற்றுக்காக வருந்த வேண்டியதில்லை என்றும் கூறத்தொடங்கிய நிலையில்தான், அறிஞர்களின் விவாதத் திற்கு இந்த 95 குறிப்புகளை லூதர் வெளியிட்டார்.

லூதருக்கு முன்பே, ஐரோப்பா முழுவதும் பலரும் பலன்களை (பாவமன்னிப்பு) விலைகொடுத்து வாங்குவதுகுறித்து கவலைகளை எழுப்பியிருந்தனர்.
 பாவமன்னிப்பு மட்டுமின்றி, திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபை ஆகியவற்றைப்பற்றியும் லூதர் குறிப்பிட்டிருந்தவை, திருச்சபையின் அதிகாரத்தின்மீது அவர் நடத்திய தாக்குதல்களாகப் பார்க்கப்பட்டதுடன், 1521இல் அவர் மதவிலக்கும் செய்யப்பட்டார்.
ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவு உருவாகக் காரணமான இந்த 95 குறிப்புகள் வெளியிடப்பட்ட அக்டோபர் 31 மறுசீரமைப்பு நாளாக ஜெர்மெனியில் கடைப்பிடிக்கப்படுவதுடன், 2017இல் அதன் 500ஆம் ஆண்டுவிழாவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
 ISRO-ல் உள்ள காலிப்பணியிடங்கள்

Indian Space Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி

இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

ராணுவத்தின் கீழ் செயல்படும் “Border Roads Organisation”-ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்


பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

“Air India Engineering Services Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Supervisor (General Admin/ Finance/ MMD)
காலியிடங்கள்: 170
சம்பள விகிதம்: ரூ.19,570
வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது Aircraft Maintenance/ Computer Science Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து AVIATION துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணயைதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.11.2019. மேலும் காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------
 இந்திய மக்களை அவமதிக்கும் செயல் 
மத்திய அரசு ஐரோப்பிய நாடுளைச் சேர்ந்த வலதுசாரி எம்.பி.க்களை ஜம்மு- காஷ்மீருக்குள் செல்ல அனுமதித்திருக்கிறது.

இது இந்திய இறை யாண்மைக்கும் எதிரான அப்பட்டமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு மாறாக ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தையே சிறை கொட்டடியாக மாற்றி அதன் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியது.
 இன்றோடு 88 நாட்களாக அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முடக் கப்பட்டிருக்கிறது. சந்தைகளும் வர்த்தக நிறுவ னங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியில் நடமாட அனுமதியில்லை.

வீட்டுக் காவலில் சிறையிடப்பட்டு சித்ரவதை.
சமூக ஆர்வலர்களுக்கும் தடுப்புக் காவல்.

கிறிஸ் டேவிஸ்
இந்திய அரசி யலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.
கல்வி, சுகாதாரம், மத உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அப்பட்டமாக மறுக்கும் கொடூரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த மாநில மக்களின் நலன் குறித்து நேரில் பார்வையிட, இந்திய மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கும், இந்திய அரசியல் கட்சி தலைவர்களுக் கும், ஊடகங்களுக்கும் மோடி அரசு அராஜக மான முறையில் அனுமதி மறுத்து வருகிறது.
இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மோடி அரசு அவமதித்து வருகிறது.
உச்சநீதிமன்ற மும் பெயரளவில் தலையிட்டு தள்ளி நிற்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக ளுக்கான ஆணையர் ரூபர்ட் கால்வில்லி,  மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடி யிருக்கிறார்.

 உச்சநீதிமன்றமும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் சுதந்திரமான நடமாட்டம், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு, ஆட்கொணர்வு ஆகியன குறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை மிகவும் மெதுவாக விசாரணை நடத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையிலேயே தனது தவறை மூடி மறைக்க,  பாசிசத்திற்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வலதுசாரி எம்.பி.க்களுக்கு மட்டும்  ஜம்மு- காஷ்மீருக்குள் செல்ல மோடி அரசு அனுமதியளித்திருக்கிறது. அதுவும் இந்த எம்.பி.க்களை  ஏற்பாடு செய்தவர் ஆர்எஸ்எஸ் தொடர்பு டைய சர்வதேச புரோக்கர் மடி சர்மா என்பது தெரிய வந்துள்ளது.
அதே நேரம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள லிபரல் கட்சியின் கிறிஸ் டேவிஸ், மோடி அரசின் இந்த நாடகத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
அதில் அவர் “காஷ்மீரைப் பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட நான் அனுமதி கேட்டிருந்தேன். உடனே எனக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக் கொண்டது.
காஷ்மீரில் நடப்பதை இந்திய அரசு மூடி மறைக்கிறது.
 பத்திரிகைச் சுதந்திரம் மறுக்கப் படுகிறது.
உலகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்” என மோடியின் நாடகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

சொந்த மக்களை வெளியே தள்ளி விட்டு, அந்நியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது பாஜகவிற்கும் மோடிக்கும் வேண்டுமானால்  அழ காக இருக்கலாம்.
ஆனால் இது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
  உங்கள் வீட்டு தங்கத்துக்கு ஆபத்து., 
'ரசீது இல்லாத தங்கத்திற்கு அபராத வரி  மோடி அரசு முடிவு!'