திங்கள், 31 அக்டோபர், 2016

அட விளக்கெண்ணை...தரும் பொலிவு!

 விளக்கெண்ணை  எனப்படும் ஆமணக்கெண்ணை ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணை ஆகும் 
இந்த எண்ணையில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. 
எனவே இத்தகைய எண்ணையை  அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். 
அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை.
அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணையைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணையை விட விளக்கெண்ணையைத் தான் பயன்படுத்தி வந்தனர். 
ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணை, சற்று அடர்த்தியாக இருக்கும். 
மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண்ணை சரியான ஒன்றாக இருக்கும். 
 விளக்கெண்ணைய் பயன்படுத்தினால்கிடைக்கும்  நன்மைகள்.
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணையை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் சீயக்காய்  போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.
தினமும் கைகளுக்கு விளக்கெண்ணை பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். 
மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணையை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
விளக்கெண்ணை கொண்டும் சரும சுத்தம்  செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம்மெதுவாக பிடித்து விட ( மசாஜ்) செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.
குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணை தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.
சுருக்கங்களைப் போக்குவதற்கு விளக்கெண்ணை கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.
பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீயக்காய்  போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
விளக்கெண்ணையில் சோடா உப்பு சேர்த்து கலந்து, மச்சம் உள்ள இடத்தில் தேய்த்து வர, திடீரென்று வந்த மச்சம் மறைய ஆரம்பிக்கும். 
இதனை தொடர்ந்து மச்சம் போகும் வரை செய்ய வேண்டும்.
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணையைப்  பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
காயம்பட்ட இடங்கள்,வெட்டுக்காயங்களுக்குப் போட்ட தையல்கள் அடையாளம் போக   இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணை, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து தழும்பு  உள்ள இடத்தில், 10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் தழும்பு களை போக்கலாம்.
சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். 
அவர்கள், விளக்கெண்ணை கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
======================================================================================
ன்று,
அக்டோபர்-31. 
 • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)

 • இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)

 • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம்(1984)

 • அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)
========================================================================================
1. “ 170 வருட பழமையான சென்னை மத்திய சிறையின் 24வது அறையில் அண்ணா, கலைஞர்  உட்பட பல தலைவர்கள் சிறைவைக்கப் பட்டுள்ளனர் .” 


2. “ அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு நடிகர் நடத்தியது கமல்ஹாசன் தான்! (1985ல் கோவையில்) .” 


3. “ ஆசியாவிலுள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது .” 


4. “ சென்னப்ப நாயக்கர் தான் ஆண்ட பகுதிய 1600களில் 10000ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பெனியிடம் வித்துட்டார்! அதுதான் சென்னை .” 


5. “ இந்தியாவிலேயே மிக மிகப் பழமையான (377+ வருட) மாடர்ன் சிட்டி சென்னை தான்!! இன்னைக்கும் சென்னை மாடர்ன் தான்!! .” 

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

உச்சத்தில் ஒரு ஊழல் பேர்வழி!

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலககபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா உலக சாம்பியன் ஆனது. 


ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது. பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை. 

ஆனால்ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு மற்றொன்று தலைகுனிவு நாட்டுக்கு மட்டுமல்ல. 
உலகுக்கே ஏன்? 
உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவக் கழகம். 
இதில் உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். 112நாடுகளை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள், இதில் அங்கம் வகிக்கின்றன. 

இந்தஉயரிய அமைப்பின் தலைவராக கேத்தன்தேசாய் எனும் இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெருமை தானே என சில தேசபக்தர்கள் சொல்லக்கூடும். 

அப்படி தேர்வு செய்யப்பட்டவர் நேர்மையானவராக, சாதனைகள் புரிந்தவராக, உலகமே மெச்சும் புதிய கண்டுபிடிப்புக்களை செய்து மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மாபெரும் சேவை செய்தவராக இருந்தால் நாடே பெரு விழா எடுத்து அவரை பாராட்டி இருக்கும். ஆனால் தேர்வானவரோ பல ஊழல்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர். 
அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்ட போது கட்டித் தங்கங்களை கண்டு எடுத்தனர். கணக்குக்கே வராத 2500 கோடி ரூபாயை கைப்பற்றினர். 

அதிர்ச்சியாக உள்ளதா? 

இந்த மாமனிதரை பலர் மறந்திருக்கக் கூடும். 
இது போன்ற பல ஊழல்கள் நடந்து கொண்டே இருப்பதால் எதை நினைவில் கொள்வது? அந்த கறை படிந்தகைகளுக்குச் சொந்தக்காரர்தான் கேத்தன் தேசாய்.

யார் இந்த கேத்தன்?
இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள்( ஆங்கில மருத்துவம் பின்பற்றும்) உறுப்பினர்களாக இருக்கும் இந்தியமருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர்.பல மாநிலங்களில் இருக்கும் கிளை அமைப்புக்களின் மூலம் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலின் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். 

அப்படி என்ன இவர்களுக்கு மதிப்பு இருக்கிறது என வினவலாம். இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எத்தனை மருத்துவம் படிப்பதற்கான இடங்கள் இருக்க வேண்டும் என்பதையும், மருத்துவக் கல்லூரி புதிதாக துவக்குவதற்கும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்குவதற்கும், தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கும் இந்த அமைப்பின் (நிர்வாகிகளின் குறிப்பாக ‘தலைவரின்’) ஒப்புதல் பெற வேண்டும். 
இன்று மிகப்பெரிய வணிகமாக மாறியுள்ள மருத்துவ படிப்புக்கு, (தனியார் கல்லூரிகளின் மூலம்) அவர் கையொப்பமே அடிப்படை.

அப்படிப்பட்ட பொறுப்பில் கேத்தன் தேசாய் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் புதிய கல்லூரி துவக்குவதற்கு 2 கோடி(கம்மி தான்) பெற்றார் என்ற ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. 
வருமான வரித்துறை ரெய்டும்நடந்தது. இந்த ஊழல் நடந்தது 2010 ஆம் ஆண்டு. இந்த பெரு ஊழலை செய்த காலத்தில்தான் அவர் பல பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்ததால், அந்த பொறுப்புக்களை அவர் ஏற்கமுடியவில்லை. பொதுவாகவே இது போன்ற அமைப்புகளில் அடுத்து பதவி ஏற்கபோவது யார் என்பதை முன்கூட்டியே தேர்வு செய்துகொள்ளும் நடைமுறை உண்டு.

அந்த அடிப்படையில் கேத்தன் முன்னரே தேர்வு செய்யப்பட்டவர்… தான் இருக்கும் நாட்டில் ஒருவர் மீது ஊழல் விசாரணை நடைபெறும் போதோ, பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், அவரை உயர் பதவிக்கு முன்மொழிவதோ, நியமிப்பதோ இல்லை.

ஆனால் கேத்தன் தேசாய் ஏழு கடல், மலை தாண்டி, எப்படியெல்லாம் சாகசம் செய்யமுடியுமோ அப்படி எல்லாம் திறம்படசெய்து பதவியை கைபற்றியுள்ளார். 
சாதாரண பதவி அல்ல ..உலக பதவி.இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. மருத்துவ துறையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்த பெருமைஇந்த அமைப்புக்கு உண்டு. கடந்த காலங்களில், பல வகையான சட்டத்திருத்தங்கள், நோய்தடுப்பு திட்டங்கள், கடைக்கோடி சாமானிய இந்தியனுக்கும் பலன் அளிக்கும் முன்முயற்சிகள் என பல விஷயங்களை சொல்லி கொண்டேபோகலாம். 

ஆனால் அவை அனைத்தும் கேத்தன் தேசாய் போன்றவர்களால் மறந்தே போனது. இது ஒரு புறம்… இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளால் ஒட்டுமொத்த மருத்துவ சமூகமே வெட்கி தலை குனிய வேண்டிய அவல நிலை. ஏற்கெனவே மருத்துவர் உலகம் மீதிருந்த மதிப்பு வெகுவாக இது போன்ற ஆசாமிகளால் குறைய துவங்கியுள்ளது.

கேத்தன் தேசாய் என்ற தனி நபர் மட்டுமா இந்த ஊழலை செய்திருக்க முடியும். 
இதில் அரசும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. ஒருமருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்றால் முதலில் மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
 உள்கட்டமைப்பு வசதிகள், துவங்கி, பல கட்டங்களை தாண்டி கிடைக்கவேண்டிய அங்கீகாரம் எளிதில் இல்லாத கல்லூரிக்கு கிடைக்கும் மாயம் என்ன? 
ஆக கையொப்பம் இடுபவராக வேண்டுமானால் கேத்தன் தேசாய் இருந்திருக்கலாம். 

அரசின் ஆதரவு இல்லாமல் கட்டமைப்பு வசதி எதையும் செய்திருக்க இயலாது. ஆக ஒட்டு மொத்தஅரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்திட வேண்டும்.கேத்தன் தேசாய் போன்ற நபர்கள் எப்படிதொடர்ந்து எந்த ஆட்சி வந்தாலும் செல்வாக்கோடு இருக்கிறார் என்பதே ஒரு பெரிய ஆச்சரியம் தான் என்கிறார் நெறிமுறை மருத்துவத்துக்கான தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அபே சுக்லா.

மேலும் இவர் போன்றவர்கள் இம்மாதிரியான உயர் பொறுப்புக்கு செல்வது மேல்மட்ட சூழ்ச்சி என்றும், மருத்துவத்தை மக்கள் பணியாக நினைக்கும் பலரை அவமானப்படுத்துவதாகும் என்கிறார்.
மத்திய சுகாதார அமைச்சகமே ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது. பசுமை நாயகன் அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போதுபல சாதனைகளை செய்ததாக இன்னும் அவர்கட்சிக்காரர்கள் மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். 
அவர் அமைச்சராக இருந்த போது தான் இந்தியாவின் புகழ்மிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் சுய லாபத்துக்காக பொய்யான காரணங்கள் சொல்லி மூடப்பட்டது என்பதைநாடறியும். அதோடு கேத்தன் தேசாய்க்கும்அன்புமணிக்கும் பெரும் பனிப்போர் அக்காலத்தில் உருவானதும், அதற்கு முக்கியக் காரணம் முறையாக பணப்பரிமாற்றம் நடைபெறாதது தான் என்பதும் நாடறிந்த விவகாரம்.

ஆக இது ஒரு கூட்டு கொள்ளை. இந்த முடைநாற்ற விவகாரங்களையெல்லாம் கொஞ்சம் கூட பார்க்காமல், ஒருமதிப்புமிக்க அமைப்பின் சர்வதேச தலைவராகஒருவர் பொறுப்பேற்கிறார் என்றால் மருத்துவ உலகத்தை லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் கார்ப்பரேட்டுகள் ஊடுருவல் இல்லாமலா இருந்திருக்கும்? 
அறுதியிட்டு சொல்ல முடியும். 
இது அவர்கள் வேலைதான். 

யார் முக்கிய பொறுப்புக்கு வந்தால் தங்கள் நோக்கம் நிறவேறுமோ அவர்களின் மிகப்பெரிய பலத்தோடுதான் இது நடந்துள்ளது.

இந்துத்துவா அஜெண்டா
இந்த விவகாரத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை மத்திய பாஜக அரசு முன்மொழிகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் வழியாக நாக்பூர் மேலிடம் புது திட்டத்தை பேசவைக்கிறது.
நடைமுறையில் இந்திய மருத்துவ கவுன்சில் அகில இந்திய நிர்வாகிகள், மற்றுமுள்ளபொறுப்புக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்தல் எவ்வாறு நடக்கிறதுஎன்பது அதில் நடக்கும் கோளாறுகள் போன்றபல விவகாரங்கள் விவாதிக்கப்படவேண்டியவை. 

அதிலும் வெளிப்படையான தன்மைதேவை என்பது மறுப்பதற்கில்லை. செல்வாக்கை பயன்படுத்துவது, மாநில வேற்றுமைகள் என பல சிக்கல்கள் உண்டு. ஆனாலும்வரையறுக்கப்பட்ட ஜனநாயக முறைப்படிதேர்தல் நடக்கிறது. 
இதற்கு சீர்திருத்தங்களுடன் கூடிய மாற்றங்கள் தேவை. ஆனால் பாஜகதேர்தல் முறைக்கே ஆப்பு வைக்கிறது. தேர்தல்நடைபெற்றால் கேத்தன் தேசாய் போன்றவர்களெல்லாம் பதவிக்கு வந்துவிடுகிறார்கள்.
ஆகவே நியமன முறை தான் சரியானது. 
அதிலும் எல்லோருமே மருத்துவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என மாற்று ஆலோசனை பட்டியல் நீளுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பையே கலைத்து விட்டு புதிதாக தேசிய மருத்துவ கமிஷன் எனும் புது பெயரில் துவக்கலாம் எனவும் முன்மொழிகிறது.
அதற்கான மாதிரி சட்ட முன்முடிவுகளையும் யாரெல்லாம் அதில் முடிவு எடுக்கும் அதிகாரத்திற்கு நியமிக்கலாம் என்பது போன்ற பல ஆலோசனைகளை விவாத பொருளாக்கியுள்ளது. 

ஒரு தனி நபரின் கீழ் கமிஷனை நியமித்து, அவருக்கு கீழ் இயங்கும்குழுவில் சிறு எண்ணிக்கையில் மருத்துவர்கள், பெரும்பான்மையாக மருத்துவம் சாராதவர்கள், தரவரிசை தீர்மானிப்பவர்கள், அறிஞர்கள் என பல்வேறு நபர்களை உள்ளே போட மோடி அரசு திட்டமிடுகிறது.

ஏற்கெனவே பல துறைகளை காவிமயமாக்க பாஜக எடுத்து வரும் முயற்சிகளை நாம்அறிவோம். மருத்துவத்துறையை வேத காலத்தோடு ஒப்பிட்டு, மோடி உட்பட பலர் பேசி வருவதும், அதை விஞ்ஞானமாக பார்க்காமல் அதிலும் குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக்கூடாது. இருக்கும் நடைமுறையில் உரிய மாற்றங்கள் செய்து, வெளிப்படை தன்மையோடு செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும். 

ஊழல், முறைகேடுகள், தகுதியில்லாதவருக்கு அதிகாரம், செல்வாக்கு மையங்கள் என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமே தவிர பரவலாக்காமல் குவிமையமாக, மருத்துவகவுன்சிலை திருத்தியமைப்பது பலனளிக்காது.கேத்தன் தேசாய் சர்வதேச தலைவராகபொறுப்பேற்றுள்ளது குறித்து பல மருத்துவவர்கள் தங்கள் கண்டன குரலை, எதிர்ப்பை பல வடிவங்களில் தெரிவித்துள்ளனர்.
நிறுவனமயமாகி வரும் ஊழல், அதற்கு துணை நிற்கும் கார்ப்பரேட்டுகள் என சதிவலை பின்னலை, அதில் குளிர் காய்ந்து அரசியல் செய்ய நினைக்கும் பாஜகவை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய அவசியமும் கட்டாயமும் உள்ளது. 
இதனிடையே அகில இந்திய ஹோமியோ மருத்துவ கவுன்சிலின் தலைவர் முறைகேடாக கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் கைது செய்யப்பட்டுள்ளார் எனும் தகவலும், தென்காசிக்கு அருகில் நாட்டுமருந்து சாப்பிட்டு 3 அப்பாவிகள் இறந்ததும் பரப்பரப்பாக விவாதிக்கப்படுகிறது. 
கேத்தன் தேசாய், வழியில் பயணிக்கும் கூட்டம் ஒரு புறம், தனக்கு வந்திருக்கும் நோய்க்குஎளிய, குறைந்த செலவில் மருத்துவம்தேடும்மக்கள் திரள் ஒரு புறம் என இரு வேறுஇந்தியாவாக காட்சியளிக்கும் நம் தேசத்தின் நிலையை மாற்ற வேண்டாமா?

மத்திய சுகாதார அமைச்சகமே ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. கேத்தன் தேசாய்க்கும்

அன்புமணிக்கும் பெரும் பனிப்போர் அக்காலத்தில் உருவானதும், அதற்கு முக்கியக் காரணம் முறையாக பணப்பரிமாற்றம் நடை

பெறாதது தான் என்பதும் நாடறிந்த விவகாரம்.
                                                                                                                                              -என்.சிவகுரு,
நன்றி:தீக்கதிர் .
========================================================================================
ன்று,
அக்டோபர் -30.


 • உலக சிக்கன தினம்

 • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)

 • இந்திய விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)

 •   பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)

 • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)

=========================================================================================
1.“ அஸாமைச் சேர்ந்த 'ஜாதவ் பயேங்' தனியொரு நபராக 1,360 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி யிருக்கார் .” 


2. “ உண்மையில் #Internet என்பது முற்றிலும் இலசவசமானது! நாம் தரும் பணம் இன்டர்நெட்க்கு அல்ல அந்த வசதிக்கான கட்டமைப்பு செலவுக்கான பணமே.” 


3. “ அப்பிள் (Mac) கம்பியூட்டர்களுக்கு அருகில் புகை பிடிப்பவர்களின் கம்பியூட்டர் வாரண்டியை அப்பிள் நிறுவனம் தள்ளுபடி செய்கிறது .” 


4. “ இந்திய நடிகர்களிலேயே கமலஹாசன் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது .” 


5. “ கத்திரிக்காய் என்பது தமிழ் பெயர் அல்ல! கத்திரிக்காயின் (Brinjal) தமிழ் பெயர் 'வழுதுணங்காய்'!.” 

சனி, 29 அக்டோபர், 2016

கேரளாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு?ஆற்றில் மணல் எடுக்க தடை, மலைகளை குடைந்து குவாரி அமைக்க தடை, தொழிற் சாலை கழிவு, மருத்துவமனை கழிவுகளை அவர்களேசுத்திகரித்துக் கொள்ள வேண்டும். 

கோழி, மாட்டிறைச்சிக்கழிவு மற்றும் மீன் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; வனத்திலும், திறந்தவெளி பரப்பிலும் பாலித் தீன் கழிவுகளை பயன்படுத்தக்கூடாது' 
-என, ஏராளமான விதிமுறைகளை வகுத்துள்ளது கேரள அரசு.அதை கேரளா மக்களும் பிறழாமல் கடை பிடிக்கிறார்கள்.
ஆனால் ஆற்று மணலை அரசே ஆளுங்கட்ச்சிக்காரர்கள் மூலம் விற்பனை செய்கிறது தமிழக அரசு.ஆனால் அவர்களோ அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் மணலை தோண்டி ஆறுகளையே காணமால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் மருத்துவ கழிவுகள் பாதிப்பு குறித்து, கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, தமிழக மக்களிடம் இல்லை என்பது சோகம். 
அரிசி, பால், முட்டை, கறிவேப்பிலை, காய்கறி, மணல், மாடு...இவையெல்லாம் இங்கிருந்து அங்கே செல்பவை. இறைச்சி கழிவு, மருத்துவ கழிவு, பாலித்தீன் குப்பை, செருப்புக்கழிவு... இவையெல்லாம் அங்கிருந்து இங்கே வருபவை. தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான பண்ட மாற்று முறை, இப்போதைக்கு இப்படித்தான் இருக்கிறது. 
பணத்துக்காக எதையும் செய்யத்துணியும், 'அற்பமான' சில மனிதர்களால், தமிழகத்தி லிருந்து ரேஷன் அரிசி, ஆற்று மணல் என எல்லாம் அத்துமீறி அங்கே செல்கின்றன. அதே பணத்துக்காக, அத்தனை அசிங்கங்களும் இங்கே கொண்டு வரப்படுகின்றன.
சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரும் லாரிகளை  சோதனை செய்வதில்லை. வாகனத் தின் தன்மைக்கு ஏற்ப, கறாராக மாமூல் வசூலிப்பதில் மட்டும் கவனமாக செயல்படு கின்றனர். பல நேரங்களில், ஆவணங்களில் கேரள லாரி கிளீனர்களே 'சீல்' வைத்து டேபிளில் அதிகாரிகள் கணக்கிக்கேற்ப கையூட்டை  பிச்சை போடுவது போல் பகிரங்கமாக போட்டு விட்டு  செல்கின்றனர்.
கேரளாவிலிருந்து  அத்துமீறி தமிழகம் வரும் மருத்துவ பல விதமான கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பல தொடர்ந்து செய்திகள்  வெளியாகி வந்தாலும் தமிழ் நாடு அரசு இதுவரை எதையுமே கண்டு கொள்ளவில்லை.அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.சோதனையை பலப்படுத்தவும் இல்லை.
மருத்துவ கழிவுகள் என்பது, நகர துப்புரவு கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை விட, பல மடங்கு ஆபத்தானது.அதனால் தான், மருத்துவ மனைகளில் பணியாற்றும், ஊழியர்களுக்கு மருத்துவ கழிவுகளை அகற்ற முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது; பாதுகாப்பு கவசங் களும் தரப்படுகின்றன.
 நோயாளிகளின் ரத்தம், மலம், சீழ், திசுக்கள், உறுப்புகள், 
அகற்றப்பட்ட புற்று நோய் கட்டி கழிவுகள் 
 ஊசி, ஊசி குழல்கள், துணிகள், திடக்கழிவுகள், 
எக்ஸ்-ரே, பரிசோதனை மையங்களில் உள்ள, ரசாயன கழிவுகள், ரத்த சேகரிப்பு குழல்கள் 
 அறுவை சிகிச்சை அரங்குகளில் இருந்து வெளியாகும் கழிவுகள்;
 மகப்பேறு மருத்துவ மனை யில் நச்சுக் கழிவுகள், ரத்தம் தோய்ந்த துணிகள்
வார்டுகளில் இருந்து, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குளூக்கோஸ் பாட்டில்கள், டியூப்கள்;மருந்து கொடுக்கும் இடங்களில் இருந்து வெளியேறும் அட்டை பெட்டி உள்ளிட்டவைதான் மருத்துவ கழிவுகள். 
இந்த மருத்துவ கழிவுகளை, முற்றிலும் கிருமி நீக்கம்செய்த பின் விதிகளுக்கு உட்பட்டு, அப்புறப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் அறிவித் துள்ளது. இதன்படி, மருத்துவ கழிவுகளை வகை பிரித்து, எரிக்க வேண்டியதை எரிக்க வேண்டும்; புதைக்க வேண்டிய பொருட்களை, உரிய வகையில் புதைக்க வேண்டும்.
இரும்புகள், பிளேடு, ஊசிகளை அதற்கான இயந்தி ரத்தில் செலுத்தி,சுக்கு நுாறாக்கி,அதன்பின், அப்புறப் படுத்த வேண்டும்

கேரளாவில், மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவைக்கும் அதிகமாக, மருத்துவமனைகள், அதிக படுக்கை வசதிகளுடன் உள்ளன. 

இதனால், மருத்துவ கழிவுகள் அதிகம். ஒரு நோயாளிக்கு, தினமும், அரை கிலோவில் இருந்து, ஒன்றரை கிலோ வரை, மருத்துவ கழிவுகள் உருவாகின்றன. 
கேரள மக்களிடம், இதுகுறித்த, 100 சதவீத விழிப்புணர்வு உள்ளது. 

நீர், நிலம், காற்று கூட மாசுபடக்கூடாது என்பதில், தெளிவாக உள்ளனர். பாலிதீன் பைகளை கேரளா மக்கள் வாங்கவே மாட்டார்கள் .
அப்படிபாலிதீன் பைகளை  கொடுக்கும் கடைகள் மீது உடனே காவல்துறையில் புகாரும் செய்வார்கள்.
ஆனால் தமிழ் நாட்டில் அந்த விழிப்புணர்வு மிக்க குறைவு ,குறைவு என்ன இல்லை என்றே சொல்லலாம்.
இங்கு கடையில் பாலிதீன் பை கேட்டு  அரசு அதிகாரியே சண்டை போட்டதை பார்த்திருக்கிறேன்.
அதனால், அங்கு மருத்துவ கழிவுகளை கொட்ட அனுமதிக்க மாட்டார்கள். நிலப்பரப்பு குறைவு என்பதால், அதற்கான வாய்ப்பும் அங்கு இல்லை.
எனவே, அவர்கள் மருத்துவ கழிவுகளை கொட்ட, கேரள எல்லையோரம் உள்ள, கோவை,கன்னியா குமரி போன்ற பகுதிகளை நாடுகின்றனர். மருத்துவ கழிவுகளின் ஆபத்து தெரியாமல், தமிழகத்தில் உள்ளோர் பலர், நிலத்தை வாடகைக்கு கொடுத்துள் ளனர். 
சாலையோரங்கள், நீர் நிலைகளை ஒட்டியும் கொட்டிச் செல்வது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவ கழிவுகளில், இதய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஸ்டெப்ரோ காகஸ், உடலில் சீழ் பிடிக்கும் வகையிலான தொற்று பாதிப்பை ஏற்படுத்தும், ரத்தம் முழுவதும் தொற்றாக மாறி விடும். 
ஸ்டெப்ரோ காகசில் நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும், நியூமோ காகஸ் இருக்கும். 
மூளை தொற்றை ஏற்படுத்துவதோடு, வலிப்பு நோயை உண்டாக்கி குழந்தைகளுக்கு உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
மெமினோ காகஸ், காச நோய் பாதிப்பை ஏற்படுத்தும். 
இது தவிர, வேறு சில மைக்ரோ பாக்டீரியாக்களும் இருக்கும்.ரண ஜன்னி நோயை ஏற்படுத்தும் டெட்டனஸ், தோல் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சை காளான் கிருமிகளும் இருக்கும். 

எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளிட்ட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், வைரஸ் கிருமிகள், மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உயிர் கொல்லி களான, ஹெபடைடிஸ் - பி வைரஸ்கள் இருக்கும்.
மேலும், சிறுநீர் பாதையில் தொற்றை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயல்இழக்க வைக்கும், சூடா மோனாஸ், கிரசில்லா பாக்டீரியாக்களும் இருக்கும். சிறு குடல்,பெருங்குடலில் பாதிப்பை ஏற்படுத்தும் அமீபியா நுண்ணுயிரி, கர்ப்பபை நோய் உண்டாக்குவதோடு, உடலின் அனைத்து உறுப்புகளில் தொற்று ஏற்படுத்தும், ஈகோலி போன்ற பாக்டீரியாக்களும் இருக்கும்.
சில பாக்டீரியாக்கள், பல ஆண்டுகள் கூட மண்ணில் இருக்கலாம்.ரசாயன கழிவுகளா லும், மண் மலட்டுத்தன்மை ஏற்படும்; விவசாயம் பாதிக்கும். மழைக்காலத்தில், இந்த கழிவுகள் அடித்துச்செல்லப்பட்டு, நீர் நிலைக ளில் கலக்கலாம். நீர் எந்த வகையிலும் பயன் படுத்த முடியாத அளவில் மாறும். மனிதர்கள், விலங்கு களுக்கும் இதனால், பெரும் பாதிப்பு வரும்.
உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தல் படியே, மருத்துவ கழிவுகள் அகற்றப்பட வேண்டும். அத்துமீறி கேரளாவில் இருந்து, மருத்துவ கழிவுகள் வருவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மாநில எல்லைகளில், வணிக வரித் துறையின், 24 மணி நேரமும், செக் போஸ்ட் கள் உள்ளன;போலீஸ் கண்காணிப்பும் உள்ளது. 
சோதனை சாவடி அதிகாரிகளின்,லஞ்ச போக்கு தான்,இத்தகைய மருத்துவ கழிவுகள்,தமிழகத் தில் நுழைய காரணம். இத்தகைய அதிகாரிகள் மீது, பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இதுபோன்ற ஊடுருவலை முற்றிலும் தடுப்பது அவசியம்.
மருத்துவ கழிவுகள் பாதிப்பு குறித்து, கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, தமிழக மக்களிடமும் ஏற்பட வேண்டும். உறக்கத்தில் இருந்து, தமிழகம் விழித்தெழுவது அவசியம். 
அத்துமீறி தமிழகம் வரும் மருத்துவ கழிவு களுக்கு எதிராக தமிழ் நாடு அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கேரளாவில் இருந்து இங்கு கொட்டப்படும்  மருத்துவ கழிவுகளால் ஏற்படும் பேராபத்தில் இருந்து, தமிழகம் தப்பும்.


========================================================================================
ன்று,
அக்டோபர்-29.


 • துருக்கி குடியரசு தினம்(1923)

 • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)

 • கல்கியின்வரலாற்றுக் காவியம்  "பொன்னியின் செல்வன்" தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)

 • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)

========================================================================================
தீபவளி வாழ்த்துகள்?
அதற்கு முன்
தீபாவளி என்றால் என்ன? 

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.இவைகளைக் கொஞ்ச மாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
(பெரியார் எழுதிய "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து)
அனுப்பிய தோழர்: முத்து கணேஷ்வெள்ளி, 28 அக்டோபர், 2016

இந்த "போஸ் "போதுமா?

மனிதன் மட்டுமல்ல.வரவர உலகில் மற்ற உயிரினங்களும் காமிராவுக்கு "போஸ் "கொடுப்பதில் பயங்கர தேற்றம் ஆகி விட்டன.
இதற்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் நம் பிரதமர் சென்று  செல்பி,காமிரா முன் கலக்கியதற்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ.?
இந்த "போஸ் "போதுமா?என்று சவால் விடும் சில புகைப்படங்கள்.

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

சுரன்20161027

வியாழன், 27 அக்டோபர், 2016

என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு...???

வைகோ என்னாச்சி வைகோ...??
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
அனைத்து கட்சி கூட்டம் பார்த்து அலறுறீங்க
அடி வயிற்றில் கை வைத்து பதறுறீங்க
விவசாயிக்காக கூட்டம் கூட்டுவது தப்பா வைகோ
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு......???

பச்சை தலைப்பாகையும் கருப்பு தூண்டுமாய் அலைந்தீர்கள்
பருப்பு வேகாமல் பாதியிலேயே கழட்டினீர்கள்
வல்வெட்டித்துரைப்பற்றி பேசினீர்கள் அங்கே
வாழாவெட்டியாய் பலரை ஆக்கினீர்கள்
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு.....??
பிரபாகரனை பற்றி பேசினீர்கள்
பரிதாபமாக அவரை மாற்றினீர்கள்
கூடங்குளம் பற்றி கொந்தளித்தீர்கள்
கூட நிற்காமலேயே வந்துவிட்டீர்கள்
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....??
மோடி கூட நின்னு ஜோரா முழங்கினீர்கள்
மோசம் போயி விட்டதாக புலம்புனீர்கள்
மோஷன் போன சிறுவனைப்போல கதறுறீங்க
வேஷம் போட்ட கோமாளியாய் பதறுறீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....??
விஜயகாந்தை முதலமைச்சரான அறிவிச்சீங்க
இருக்கும்வரை ஜெயாதான் முதல்வர் என்று கூவுறீங்க
எதிர்க்கட்சி தலைவரா இருந்தவரை
எதிர்காலம் இல்லாமல் ஆக்கிடீங்க
பிரேமலதா பின்னாலே நின்று நீங்க
பிணம்தின்னி கழுகாக மாறுனீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....??
வாசனையும் கூட்டிவந்து சுத்துனீங்க
வாசமில்லா மலராக ஆக்கினீங்க
மோசம் போன வாசனுமே வந்துட்டாரு
வேஷம் போட்ட நீங்க மட்டும் நிக்கிறீங்க
கோசம் போட ஆளில்லாம சொக்குறீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு......??
சேர்ந்தவங்க அனைவரையும் முடிச்சிடீங்க
செல்லாக்காசா நீங்க இப்ப ஆயிடீங்க
காலம் போன காலத்துல வேஷம் வேண்டாம்
கலைஞரின் கரத்தை நீங்க உதர வேண்டாம்
மன நல கூட்டணியும் தேறாது
மன உளைச்சல் எந்நாளும் ஆகாது
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு...???
                                                                                                             

நன்றி
: கவிஞர் .ராஜாத்தி சல்மா.......


மூலநோய்க்குத் தடை

நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. 
இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.


மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.
அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். 
தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. 
இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். 
இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.
=======================================================================================
ன்று,
அக்டோபர்-27.  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
 • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
 • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
ரொம்ப காலமா தனி கொடி தனி ராஜாங்க என்று ஆடசி  செய்து கொண்டிருந்த பகுதிதான் .ஜம்மு காஷ்மீர்..அதுனாலே இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியா கூடவும் சேர மாட்டேன் பாகிஸ்தான் சேராமல்
தனி நாடாக செயல்படுவோம் என ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்டுவந்த ராஜ்புட் ராஜா ஹரிசிங் கூறினார்....
அப்போது அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவோடு இணையவேண்டுமென ஷேக் அப்துல்லா குரலெழுப்பினார்...தனித் திருந்தால் ரஷ்ய..சீன நாடுகளுக்கு அடிமைப்பட நேரிடுமென சந்த் மகாஜன் ராஜாவை எச்சரிச்சார்...அப்போது கபாய்லி மலைவாழ் பகுதியினரின் போரெடுப்பு துவங்கியது...
காஷ்மீரை காக்க ராஜா ஹரிசிங் ஜவஹர்லால் நேருவை வேண்டிக்கொண்டார்...
அப்போது இந்திய படை காஷ்மீர் செல்லும்போது உருவான ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு ஒரு பகுதியாக இணைந்தது... 1947-ம் ஆண்டு இதே நாள் அமர் மாளிகையில், அன்றைய ஆளுனர் மவுன்ட்பேட்டன், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள, மகாராஜா ஹரி சிங் காலத்தில் எழுத்துப் பூர்வமாக இருவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். அப்போது நேரு பிரதமராக இருந்தார்.
இந்த இணக்கத்திற்கான தினத்தினை (accession day) ஜம்மு காஷ்மீர் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவார் களாம். இதில் இருந்தே அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருப்பதை எவ்வளவு விரும்புகின்றனர் என்று தெரிகின்றது.தலைமைச் செயலகத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும், கடைகளிலும் இந்தியக் கொடியை ஏற்றி மகிழ்வர். வருடம் தவறாமல் இந்த தினத்தை கொண்டாடுவதால் இந்தியாவுடன் பிரிக்கமுடியாத உறவை வளர்த்து வருகின்றது ஜம்மு காஷ்மீர்.
ஆந்தை ரிப்போர்ட்டர் இன் படம்.=======================================================================================