அட விளக்கெண்ணை...தரும் பொலிவு!

 விளக்கெண்ணை  எனப்படும் ஆமணக்கெண்ணை ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணை ஆகும் 
இந்த எண்ணையில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. 
எனவே இத்தகைய எண்ணையை  அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். 
அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை.
அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணையைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணையை விட விளக்கெண்ணையைத் தான் பயன்படுத்தி வந்தனர். 
ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணை, சற்று அடர்த்தியாக இருக்கும். 
மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண்ணை சரியான ஒன்றாக இருக்கும். 
 விளக்கெண்ணைய் பயன்படுத்தினால்கிடைக்கும்  நன்மைகள்.
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணையை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் சீயக்காய்  போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.
தினமும் கைகளுக்கு விளக்கெண்ணை பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். 
மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணையை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
விளக்கெண்ணை கொண்டும் சரும சுத்தம்  செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம்மெதுவாக பிடித்து விட ( மசாஜ்) செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.
குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணை தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.
சுருக்கங்களைப் போக்குவதற்கு விளக்கெண்ணை கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.
பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீயக்காய்  போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
விளக்கெண்ணையில் சோடா உப்பு சேர்த்து கலந்து, மச்சம் உள்ள இடத்தில் தேய்த்து வர, திடீரென்று வந்த மச்சம் மறைய ஆரம்பிக்கும். 
இதனை தொடர்ந்து மச்சம் போகும் வரை செய்ய வேண்டும்.
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணையைப்  பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
காயம்பட்ட இடங்கள்,வெட்டுக்காயங்களுக்குப் போட்ட தையல்கள் அடையாளம் போக   இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணை, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து தழும்பு  உள்ள இடத்தில், 10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் தழும்பு களை போக்கலாம்.
சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். 
அவர்கள், விளக்கெண்ணை கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
======================================================================================
ன்று,
அக்டோபர்-31. 
  • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)

  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம்(1984)

  • அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)
========================================================================================
1. “ 170 வருட பழமையான சென்னை மத்திய சிறையின் 24வது அறையில் அண்ணா, கலைஞர்  உட்பட பல தலைவர்கள் சிறைவைக்கப் பட்டுள்ளனர் .” 


2. “ அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு நடிகர் நடத்தியது கமல்ஹாசன் தான்! (1985ல் கோவையில்) .” 


3. “ ஆசியாவிலுள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது .” 


4. “ சென்னப்ப நாயக்கர் தான் ஆண்ட பகுதிய 1600களில் 10000ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பெனியிடம் வித்துட்டார்! அதுதான் சென்னை .” 


5. “ இந்தியாவிலேயே மிக மிகப் பழமையான (377+ வருட) மாடர்ன் சிட்டி சென்னை தான்!! இன்னைக்கும் சென்னை மாடர்ன் தான்!! .” 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?