கேரளாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு?
ஆற்றில் மணல் எடுக்க தடை, மலைகளை குடைந்து குவாரி அமைக்க தடை, தொழிற் சாலை கழிவு, மருத்துவமனை கழிவுகளை அவர்களேசுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.
கோழி, மாட்டிறைச்சிக்கழிவு மற்றும் மீன் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; வனத்திலும், திறந்தவெளி பரப்பிலும் பாலித் தீன் கழிவுகளை பயன்படுத்தக்கூடாது'
கோழி, மாட்டிறைச்சிக்கழிவு மற்றும் மீன் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; வனத்திலும், திறந்தவெளி பரப்பிலும் பாலித் தீன் கழிவுகளை பயன்படுத்தக்கூடாது'
-என, ஏராளமான விதிமுறைகளை வகுத்துள்ளது கேரள அரசு.அதை கேரளா மக்களும் பிறழாமல் கடை பிடிக்கிறார்கள்.
ஆனால் ஆற்று மணலை அரசே ஆளுங்கட்ச்சிக்காரர்கள் மூலம் விற்பனை செய்கிறது தமிழக அரசு.ஆனால் அவர்களோ அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் மணலை தோண்டி ஆறுகளையே காணமால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் மருத்துவ கழிவுகள் பாதிப்பு குறித்து, கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, தமிழக மக்களிடம் இல்லை என்பது சோகம்.
அரிசி, பால், முட்டை, கறிவேப்பிலை, காய்கறி, மணல், மாடு...இவையெல்லாம் இங்கிருந்து அங்கே செல்பவை. இறைச்சி கழிவு, மருத்துவ கழிவு, பாலித்தீன் குப்பை, செருப்புக்கழிவு... இவையெல்லாம் அங்கிருந்து இங்கே வருபவை. தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான பண்ட மாற்று முறை, இப்போதைக்கு இப்படித்தான் இருக்கிறது.
பணத்துக்காக எதையும் செய்யத்துணியும், 'அற்பமான' சில மனிதர்களால், தமிழகத்தி லிருந்து ரேஷன் அரிசி, ஆற்று மணல் என எல்லாம் அத்துமீறி அங்கே செல்கின்றன. அதே பணத்துக்காக, அத்தனை அசிங்கங்களும் இங்கே கொண்டு வரப்படுகின்றன.
சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரும் லாரிகளை சோதனை செய்வதில்லை. வாகனத் தின் தன்மைக்கு ஏற்ப, கறாராக மாமூல் வசூலிப்பதில் மட்டும் கவனமாக செயல்படு கின்றனர். பல நேரங்களில், ஆவணங்களில் கேரள லாரி கிளீனர்களே 'சீல்' வைத்து டேபிளில் அதிகாரிகள் கணக்கிக்கேற்ப கையூட்டை பிச்சை போடுவது போல் பகிரங்கமாக போட்டு விட்டு செல்கின்றனர்.
கேரளாவிலிருந்து அத்துமீறி தமிழகம் வரும் மருத்துவ பல விதமான கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பல தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தாலும் தமிழ் நாடு அரசு இதுவரை எதையுமே கண்டு கொள்ளவில்லை.அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.சோதனையை பலப்படுத்தவும் இல்லை.
மருத்துவ கழிவுகள் என்பது, நகர துப்புரவு கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை விட, பல மடங்கு ஆபத்தானது.அதனால் தான், மருத்துவ மனைகளில் பணியாற்றும், ஊழியர்களுக்கு மருத்துவ கழிவுகளை அகற்ற முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது; பாதுகாப்பு கவசங் களும் தரப்படுகின்றன.
நோயாளிகளின் ரத்தம், மலம், சீழ், திசுக்கள், உறுப்புகள்,
அகற்றப்பட்ட புற்று நோய் கட்டி கழிவுகள்
ஊசி, ஊசி குழல்கள், துணிகள், திடக்கழிவுகள்,
எக்ஸ்-ரே, பரிசோதனை மையங்களில் உள்ள, ரசாயன கழிவுகள், ரத்த சேகரிப்பு குழல்கள்
அறுவை சிகிச்சை அரங்குகளில் இருந்து வெளியாகும் கழிவுகள்;
மகப்பேறு மருத்துவ மனை யில் நச்சுக் கழிவுகள், ரத்தம் தோய்ந்த துணிகள்
வார்டுகளில் இருந்து, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குளூக்கோஸ் பாட்டில்கள், டியூப்கள்;மருந்து கொடுக்கும் இடங்களில் இருந்து வெளியேறும் அட்டை பெட்டி உள்ளிட்டவைதான் மருத்துவ கழிவுகள்.
இந்த மருத்துவ கழிவுகளை, முற்றிலும் கிருமி நீக்கம்செய்த பின் விதிகளுக்கு உட்பட்டு, அப்புறப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் அறிவித் துள்ளது. இதன்படி, மருத்துவ கழிவுகளை வகை பிரித்து, எரிக்க வேண்டியதை எரிக்க வேண்டும்; புதைக்க வேண்டிய பொருட்களை, உரிய வகையில் புதைக்க வேண்டும்.
இரும்புகள், பிளேடு, ஊசிகளை அதற்கான இயந்தி ரத்தில் செலுத்தி,சுக்கு நுாறாக்கி,அதன்பின், அப்புறப் படுத்த வேண்டும்கேரளாவில், மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவைக்கும் அதிகமாக, மருத்துவமனைகள், அதிக படுக்கை வசதிகளுடன் உள்ளன.
இதனால், மருத்துவ கழிவுகள் அதிகம். ஒரு நோயாளிக்கு, தினமும், அரை கிலோவில் இருந்து, ஒன்றரை கிலோ வரை, மருத்துவ கழிவுகள் உருவாகின்றன.
கேரள மக்களிடம், இதுகுறித்த, 100 சதவீத விழிப்புணர்வு உள்ளது.
நீர், நிலம், காற்று கூட மாசுபடக்கூடாது என்பதில், தெளிவாக உள்ளனர். பாலிதீன் பைகளை கேரளா மக்கள் வாங்கவே மாட்டார்கள் .
அப்படிபாலிதீன் பைகளை கொடுக்கும் கடைகள் மீது உடனே காவல்துறையில் புகாரும் செய்வார்கள்.
ஆனால் தமிழ் நாட்டில் அந்த விழிப்புணர்வு மிக்க குறைவு ,குறைவு என்ன இல்லை என்றே சொல்லலாம்.
இங்கு கடையில் பாலிதீன் பை கேட்டு அரசு அதிகாரியே சண்டை போட்டதை பார்த்திருக்கிறேன்.
அதனால், அங்கு மருத்துவ கழிவுகளை கொட்ட அனுமதிக்க மாட்டார்கள். நிலப்பரப்பு குறைவு என்பதால், அதற்கான வாய்ப்பும் அங்கு இல்லை.
எனவே, அவர்கள் மருத்துவ கழிவுகளை கொட்ட, கேரள எல்லையோரம் உள்ள, கோவை,கன்னியா குமரி போன்ற பகுதிகளை நாடுகின்றனர். மருத்துவ கழிவுகளின் ஆபத்து தெரியாமல், தமிழகத்தில் உள்ளோர் பலர், நிலத்தை வாடகைக்கு கொடுத்துள் ளனர்.

சாலையோரங்கள், நீர் நிலைகளை ஒட்டியும் கொட்டிச் செல்வது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவ கழிவுகளில், இதய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஸ்டெப்ரோ காகஸ், உடலில் சீழ் பிடிக்கும் வகையிலான தொற்று பாதிப்பை ஏற்படுத்தும், ரத்தம் முழுவதும் தொற்றாக மாறி விடும்.
ஸ்டெப்ரோ காகசில் நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும், நியூமோ காகஸ் இருக்கும்.
மூளை தொற்றை ஏற்படுத்துவதோடு, வலிப்பு நோயை உண்டாக்கி குழந்தைகளுக்கு உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
மெமினோ காகஸ், காச நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.
மெமினோ காகஸ், காச நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது தவிர, வேறு சில மைக்ரோ பாக்டீரியாக்களும் இருக்கும்.ரண ஜன்னி நோயை ஏற்படுத்தும் டெட்டனஸ், தோல் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சை காளான் கிருமிகளும் இருக்கும்.
எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளிட்ட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், வைரஸ் கிருமிகள், மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உயிர் கொல்லி களான, ஹெபடைடிஸ் - பி வைரஸ்கள் இருக்கும்.
மேலும், சிறுநீர் பாதையில் தொற்றை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயல்இழக்க வைக்கும், சூடா மோனாஸ், கிரசில்லா பாக்டீரியாக்களும் இருக்கும். சிறு குடல்,பெருங்குடலில் பாதிப்பை ஏற்படுத்தும் அமீபியா நுண்ணுயிரி, கர்ப்பபை நோய் உண்டாக்குவதோடு, உடலின் அனைத்து உறுப்புகளில் தொற்று ஏற்படுத்தும், ஈகோலி போன்ற பாக்டீரியாக்களும் இருக்கும்.
சில பாக்டீரியாக்கள், பல ஆண்டுகள் கூட மண்ணில் இருக்கலாம்.ரசாயன கழிவுகளா லும், மண் மலட்டுத்தன்மை ஏற்படும்; விவசாயம் பாதிக்கும். மழைக்காலத்தில், இந்த கழிவுகள் அடித்துச்செல்லப்பட்டு, நீர் நிலைக ளில் கலக்கலாம். நீர் எந்த வகையிலும் பயன் படுத்த முடியாத அளவில் மாறும். மனிதர்கள், விலங்கு களுக்கும் இதனால், பெரும் பாதிப்பு வரும்.
உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தல் படியே, மருத்துவ கழிவுகள் அகற்றப்பட வேண்டும். அத்துமீறி கேரளாவில் இருந்து, மருத்துவ கழிவுகள் வருவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மாநில எல்லைகளில், வணிக வரித் துறையின், 24 மணி நேரமும், செக் போஸ்ட் கள் உள்ளன;போலீஸ் கண்காணிப்பும் உள்ளது.
சோதனை சாவடி அதிகாரிகளின்,லஞ்ச போக்கு தான்,இத்தகைய மருத்துவ கழிவுகள்,தமிழகத் தில் நுழைய காரணம். இத்தகைய அதிகாரிகள் மீது, பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இதுபோன்ற ஊடுருவலை முற்றிலும் தடுப்பது அவசியம்.
மருத்துவ கழிவுகள் பாதிப்பு குறித்து, கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, தமிழக மக்களிடமும் ஏற்பட வேண்டும். உறக்கத்தில் இருந்து, தமிழகம் விழித்தெழுவது அவசியம்.

அத்துமீறி தமிழகம் வரும் மருத்துவ கழிவு களுக்கு எதிராக தமிழ் நாடு அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கேரளாவில் இருந்து இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் ஏற்படும் பேராபத்தில் இருந்து, தமிழகம் தப்பும்.
========================================================================================
இன்று,
அக்டோபர்-29.
========================================================================================
தீபவளி வாழ்த்துகள்?
அதற்கு முன்
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
========================================================================================
இன்று,
அக்டோபர்-29.
- துருக்கி குடியரசு தினம்(1923)
- தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
- கல்கியின்வரலாற்றுக் காவியம் "பொன்னியின் செல்வன்" தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)
- சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)
========================================================================================
தீபவளி வாழ்த்துகள்?
அதற்கு முன்
தீபாவளி என்றால் என்ன?
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.இவைகளைக் கொஞ்ச மாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
(பெரியார் எழுதிய "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து)

அனுப்பிய தோழர்: முத்து கணேஷ்